Share

Apr 3, 2024

பாக்யராஜ் பேசினார்

இயக்குநர் பாக்யராஜ் அவர்களிடம்
ஜெய்ரிகி பதிப்பாளர் அசோக் சாய் ரமணா அன்பளிப்பாக 
R.P. ராஜநாயஹம் நூல்கள்
தழல் வீரம், காரணச்செறிவு இரண்டின் பிரதிகளை தந்திருக்கிறார்.

Thank you so much Sai Ramana.

இரவு ஒன்பது மணி போல் இயக்குநர் பாக்யராஜ் மொபைலில் அழைத்துப் பேசினார்.
காரணச்செறிவில் படித்தது பற்றி பேசினார். பின் அட்டை படம் பார்த்தவுடன் ராஜநாயஹம் பற்றி ஞாபகம் வந்து விட்டது என்றார். 
32 வருடங்களுக்கு முன் ஐந்து மாதங்கள் ராசுக்குட்டி பட அனுபவம்.

1992 டிசம்பர் 13ம் தேதி அவரை கடைசியாக வீட்டில் சந்தித்தேன்.

இப்போது 2024 ஏப்ரல் 2ம் தேதி நீண்ட உரையாடல். நாற்பத்தைந்து நிமிடங்கள்.  ஈடுபாட்டுடன் விசாரித்து கேட்கிற குண இயல்பு அசாதாரணம்.

வீட்டிற்கு அவசியம் வரச்சொல்லி வற்புறுத்தினார். அடையாருக்கு வீடு மாற்றிய பின் கட்டாயம் வள்ளுவர் கோட்டம் ஐந்தாவது க்ராஸ் வீட்டிற்கு சந்திக்க வர வேண்டும் என்றார்.

நடிகர் ராஜேஷ் கூட ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' வாசித்துக் கொண்டிருக்கும் போதே மொபைலில் அழைத்து பாராட்டிப் பேசினார். சில மாதங்களுக்கு முன்.
 " என்னை சந்திக்க வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை" 
யாரையும் தேடிப் போய் பார்க்கும் இயல்பு இல்லை என்பதை சொல்ல வேண்டியிருந்தது. 

வருகிற பத்தாம் தேதி சரத் பாபு, ராஜேஷ் 
பற்றி சினிமா எனும் பூதம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஷூட்டிங்.  ( இயக்குநர் நடிகர் பாக்யராஜ் பற்றி போன வருடமே சினிமா எனும் பூதம் நிகழ்ச்சியில் பேசி விட்டேன்.)
தெரிவித்த போது " உங்கள் முகமே எனக்கு தெரியாதே. உடனே சந்திக்க வாருங்கள்."

ஆர்ட் டைரக்டர் ஓவியர் JK அன்போடு கேட்டார்.
" நாம் சந்திப்போமா? "

ஏப்ரல் 15 அடையார் போனபின் 
நெறைய பார்க்க இருக்கிறது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.