செந்தில்
வேலன் சகோதரியின் பூப்பு நீராட்டு விழாவுக்கு
அன்று என் எதிர்கால மாமனாருடன்
நான் சென்ற போது செந்தில்வேலனின்
அப்பா அர்ஜுனன் ரொம்பவும் நெகிழ்ந்து சொன்னார்.“ நீங்க ரொம்ப மக்னானிமஸ்!
நான் அழைப்பிதழ் தராமலே எங்க வீட்டு
விசேஷத்துக்கு வந்திட்டீங்க.தேங்க்ஸ்.’’ மீண்டும் இதையே சொன்னார்.
அப்போது செந்தில் வேலன் சிறுவன்.
அப்போது செந்தில் வேலன் சிறுவன்.
என்
திருமணப்பத்திரிக்கையை கொடுக்க கேப்ரன் ஹால்
எதிரே இருந்த அர்ஜுனன் வீட்டிற்கு
சென்ற போது பத்திரிக்கையை ஓடி
வந்து செந்தில் வேலன் வாங்கியது இப்போதும்
கண்ணுக்குள் இருக்கிறது.
பட்டாளம் என்று எங்களால் அன்போடு அழைக்கப்படும் சிவசங்கரன் (செந்தில் வேலனின் அப்பாவின் உடன் பிறந்த சகோதரர் சிவசங்கரன் என் மாமனாரின் சகோதரி கணவர்.) இறந்த வீட்டில் நடந்த நிகழ்வு. என் மூத்த மகன் கீர்த்தி அப்போது இரண்டு வயது குழந்தை. எதற்கோ கோபப்பட்டு அழுகையை அடக்கமுடியாமல் அழகாக உதட்டைப்பிதுக்கினான். அதை ரசித்து செந்தில் வேலனின் சகோதரிகள் கீர்த்தியின் அந்த முகபாவத்தை ரசித்தபோது அங்கே சிரித்துக்கொண்டு நின்ற சிறுவன் செந்தில் வேலன்.
செந்தில் வேலனின் அப்பா அர்ஜுனன் மதுரையில் பிரபலமான பொது ஜன தொடர்பு அதிகாரி. அடிக்கடி பத்திரிக்கையில் அவர் புகைப்படம் வரும். எப்போதும் ஒயிட் பேண்ட்,ஒயிட் சர்ட்டில் ஸ்மார்ட்டாக இருப்பார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வந்திருந்த அர்ஜுனன் உடல் நலக்குறைவால் அவருடைய மாப்பிள்ளை குணசேகரன் மனைவியின் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்த போது அவரைப் போய் பார்த்து விட்டு அவருக்கு படிப்பதற்கு இந்தியா டுடே மாகசின் கொடுத்து விட்டு வந்தேன்.
குணசேகரனின் டாக்டர் மனைவியாரின் ஆஸ்பத்திரியில் தான் என் மகன்கள் கீர்த்தி,அஷ்வத் இருவருமே பிறந்தார்கள்!
குணசேகரன் ஸ்ரீவில்லிபுத்தூரில் நான் இருந்த போது என்னுடன் நட்போடு பழகிய நல்ல உறவினர்.
பட்டாளம் சிவசங்கரன் மறைந்த சில வருடங்களில் மதுரையில் செந்தில் வேலனின் அப்பா அர்ஜுனன் திடீர் மறைவு எல்லோருக்குமே அதிர்ச்சி. அப்பாவை இழந்த பிள்ளைகளை ஆசிரியையான அவருடைய அம்மா வளர்த்து ஆளாக்கினார்.

செந்தில் வேலன் எம்.பி.பி.எஸ் படித்ததும் பின் ஐ.ஏ.எஸ் பாஸ் செய்ததும் ஐ.பி.எஸ் தான் வேண்டும் என்று தேர்ந்தெடுத்ததும் எனக்கு செவிவழிச்செய்தி.
காவல்
துறை சாதனைகள் பத்திரிக்கையில் பார்க்க கிடைத்தன. அவருடைய
நேர்மை ரொம்ப பெருமையாயிருக்கிறது.
தூத்துக்குடியில்
செந்தில் வேலன் காவல் துறை
கண்காணிப்பாளராக இருந்த போது என்
சொந்த அத்தை மகனின் மகன்
திருமணம் அங்கே நடந்தது. அத்தை
மகனின் மகளின் கணவர் செந்தில்
வேலனின் மனைவியின் சகோதரர்.
திருமணத்திற்கு வந்திருந்த செந்தில் வேலனை என் அத்தை மகன் சீனிக்குமார் அறிமுகம் செய்த போது அந்த எஸ்.பி.யின் தாயார் என் மனைவியைப்பார்த்து வியந்து சொன்னார். “ சின்ன மலர் எங்களுக்கு எப்போதுமே சின்ன பொண்ணு தான். சின்ன மலர ஒரு பொம்பளயாவே நினைச்சிப்பாக்க முடியல!சின்ன மலருக்குமா வயசாகுது!”
என் மனைவி மலர்விழியை உறவினர்கள் அனைவருமே சின்ன மலர் என்று தான் சொல்வார்கள்.
செந்தில் வேலனின் மாமனார் போஸ் நல்ல கான்வர்சேஸனலிஸ்ட்.
என் தகப்பனார் மறைந்த போது செந்தில் வேலனின் மாமனாரும் மாமியாரும் துக்கம் விசாரிக்க வந்திருந்தார்கள்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.