Share

Dec 4, 2017

அறிவாலயத்தில் ஒரு திருமணம்


அறிவாலயத்தில் ஒரு திருமணம். 

உறவினர் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் (ஷேணி) ஒரு முன்னாள் எம்.பி. 

அவர் மகன் மனு சுந்தரம்
கல்யாணத்திற்குப் போயிருந்தேன்.




பழைய நண்பர்கள் பலரையும் பார்க்க முடிந்தது. அப்படியிருந்தும் அந்தத் திருமணத்திற்கு வந்திருந்த என் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் R.நெடுமாறனை நான் அன்று சந்திக்க முடியாமல் போனது என் துரதிர்ஷ்டம். 

உறவினர்களிடம்
’தொர வந்திருக்கான் பார்த்தியா” என்று என்னைப் பற்றி சொல்லும் ஷேணி, அமெரிக்கன் கல்லூரி நண்பர்களிடம்
“கேபி வந்திருக்கான் என்றார். 
நானும்
ஷேணியும்
சென்னையில் தங்கியிருந்த எம்.இ.எஸ். ஹாஸ்டல் நண்பர்களிடம் என்னை அடையாளப்படுத்த “ டைரக்டர் வந்திருக்கார்!” என்றார்.

பொண்ணு மாப்பிள்ளையுடன் புகைப்படம் எடுக்கும்போது ஷேணி என்னிடம் “ உனக்கு உடம்பு சரியில்லாமப் போனப்ப அபுபக்கர் என்ன கொடுத்தார்னு எனக்கு ஞாபகம் இருக்கு” என்றார். அபு பக்கர் வெள்ளந்தியாய் சிரித்தார். 



அபு பக்கர் தலைசிறந்த மனிதாபிமானி. எல்லோரும் ஹாஸ்டலை விட்டுக் கிளம்பிய பின் எனக்கு போரடிக்கக்கூடாதே என்று படங்களுடன் கூடிய பிரமாதமான ஒருசெக்ஸ் புக்’ கொடுத்து விட்டு ஆபீஸ் கிளம்பியவர். 

ஐகோர்ட் ஜட்ஜ் அக்பர் அலி. 
செங்கல்பட்டு ஜட்ஜாயிருக்கும்போது காஞ்சி சங்கராச்சாரியாரைத் தூக்கி உள்ளே வைத்தவர் இவர் தான்!

என் ஹாஸ்டல் மேட்.
  இவரும் கலாமும் எம்.இ.எஸ் ஹாஸ்டலில் ட்வின்ஸ் போல சேர்ந்தே தான் இருப்பார்கள். 

என்னைப் பார்த்துவிட்டு பக்கத்தில் இருந்த  நண்பரிடம் உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி சொன்னார். 
 I meet this BOY after thirty years!
அவருக்கு இவ்வளவு காலம் கழிந்தபின்னும் இப்போதும் நான் பையனாகவே தோற்றம் தருகிறேன் என்பது சற்று வித்தியாசமாக, சந்தோஷம் தருவதாக இருந்தது. காலயந்திரத்தில் ஏறி பின்னோக்கி பயணம் செய்த சந்தோஷம்!

.............................................................

https://rprajanayahem.blogspot.in/2012/11/blog-post_9.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.