நிர்மலா சீதாராமன் ராணுவ மந்திரியாக ஆவதற்கு சில தினங்கள் முன் நான் ஒரு சில வார்த்தைகள் குறிப்பிட்டேன். ஒரு வாரத்திற்குள் அவர் ராணுவ அமைச்சர் ஆனார்.
என்னுடைய வார்த்தைகளில் ஒரு ’அறம்’ இருப்பதாக பலரும் அவ்வப்போது சொல்லியிருக்கிறார்கள்!
நாட்டின் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் சென்ற வாரங்களில் கூட மீனவர் சுடப்பட்ட பிரச்னையில் கூட ஏடாகூடமாக பேட்டியளித்திருந்தார்.
நேற்று அவர் ஒரு சானலில் ஒரு இளைஞரிடம் தன் கோபத்தை மீண்டும் காட்டினார். ’சீனாவிலோ சிங்கப்பூரிலோ கேள்வி கேட்க முடியாது’ என சீறினார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை எப்படி மறக்கிறார்?
நான் ஆகஸ்ட் மாதம் அவர் பற்றி எழுதியதை இங்கே மீண்டும் தருகிறேன்.
நிர்மலா சீதாராமன் பேட்டி கொடுக்கும்போது எப்பவும் கோபத்தை அடக்கிக்கிட்டே பேசுற தோரணை.
A Snob!
" எங்க கட்சி , அரசு நிர்வாகம், கொள்கை பற்றி புரியாத உங்கள்ட்ட எனக்கென்ன பேச்சு வேண்டியிருக்குது “ - எள்ளும் கொள்ளும் வெடிக்கும் ஆங்காரம், ஆத்திரம்.
”ஒரு நிமிஷம் டாய்லட் போய்ட்டு வந்து பேட்டி குடுக்க விட மாட்டேன்னுறாய்ங்களே”- எரிச்சல்.
‘Ask me no questions and I will tell you no lies’ பதற்றம்.
........................
https://www.facebook.com/rprajanayahem/posts/2030811133799009
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.