ஸ்கூட்டரில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஆற்காட்
ரோட்டில் வந்து கொண்டிருந்த போது சாலி கிராமத்தில் ட்ராஃபிக் போலீஸ் மூன்று பேரில்
ஒருவர் நிறுத்த சொன்னார். ஏற்கனவே சிலர் பிடிக்கப்பட்டு நின்று கொண்டிருந்தார்கள்.
”எடுங்க டாகுமெண்ட், லைசன்ஸ், இன்சுரன்ஸ்
காப்பி”
எல்லாவற்றையும் எடுத்துக்கொடுத்தேன்.
செக் செய்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர் சொன்னார்
“ கை கொடுங்க”
கூட இருந்த கான்ஸ்டபிள் இருவரும் கூட கை
நீட்டினார்கள்.
“ பாராட்டுக்கள். நாங்க இது வரை இன்னக்கி
செக் பண்ணவர்களில் நீங்கள் தான் எல்லாமே கரெக்ட்”
நான் பள்ளியில் படிக்கும் போது, சைக்கிளில்
லைட் இல்லாமல் நண்பனுடன் டபுள்ஸ் போகும்போது
போலீஸிடம் பிடிபட்டிருக்கிறேன். பதறி பதறி பயந்து கொண்டே அப்போதெல்லாம் சைக்கிளில்
லைட் இல்லாமல் டபுள்ஸ் போன அனுபவம் நிறைய.
………………………………………..
சுப்புரத்தின தாசன் உவமைக்கவிதை ஒன்று
”தென்னையிலெ இரண்டு இளநீரைக் காணவில்லை.
தேடித்தான் பாருங்களேன் அத்தான்!”
……………………………………………
Deification
ஒரு குறிப்பிட்ட திரை, அரசியல், இலக்கிய ஆளுமையின் மிகத்தீவிர ரசிகர்களிடம், தொண்டர்களிடம் வாதிடுவது தேவையேயில்லாதது. பதில் சொல்வது முட்டாள்தனமானது.
................
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.