என்னுடைய ப்ளாக்கில் இது ஆயிரமாவது பதிவு
"என் நினைவில் பதிந்த முதல் மரம் பாதாம் மரம். நான் படித்த
எலிமெண்டரி ஸ்கூலில் ஒரு வாதா மரம் இருந்தது. பாதாம் பருப்பு கிடைக்குமோன்னு உடைச்சி,உடைச்சி
பார்ப்போம். பெரிசா ஒன்னும் இருக்காது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மரம்” இப்படி
ந.முத்துசாமி என்னிடம் சொல்லியிருக்கிறார்.
ந.முத்துசாமி எலிமெண்டரி ஸ்கூல் சிறுவனாயிருக்கும் போது தர்மபுர
ஆதீன தோட்டத்தில் ஒரு மாமரம். அந்த மரம் பற்றியும் சொல்லுவார். அந்த மரமாம்பழம் பாதிரி
பழம். பறித்த பிறகு தோல் சுருங்கிக்கிட்டே இருக்கும். சிவப்பாய் இருக்கும். அழுகாது.
ரொம்ப ருசியாய் இருக்கும்.
இப்போது நான் குடியேறியுள்ள ஆலப்பாக்கம் வீட்டின் ஃப்ரன்ச்
விண்டோவை ஒட்டி ஒரு பாதாம் மரம். அணில்கள் அந்த வாதா மரத்தில் இருந்து பாதாம்பழம் பழுக்கு
முன்னே துருவித்துருவி தின்னும் அழகை தினம் பார்க்கக்கிடைக்கிறது.
…………………………………..
1970களில் இலக்கிய அரசியல் காரசாரமாகவே இருந்திருக்கிறது.
ஒரு சாம்ப்பிள்
ஞானக்கூத்தன் : தூக்கிக்காட்டுறேன்..தெரியுதா பாரு
ந.முத்துசாமி: இவருக்கென்ன தங்கத்திலா தொங்குது?
………………………………………
’Neither – Nor’
Said
To ’Either – Or’
From here
Where do we go?
- Nakulan's English poem in
his small booklet of poems " Non - Being"
நகுலன் ஒரு சின்னஞ்சிறிய ஆங்கிலக்கவிதை இப்படி எழுதியிருக்கிறார்.
"What is right?
What is left."
…………………
பல வருடங்களுக்கு
முன் டி.வி. நிகழ்ச்சியில் கேள்வி.
”நீங்கள்
நன்றி சொல்ல விரும்பும் ஒருவர் யார்?”
நடிகர் சுரேஷ் பதில் : ”ஜான். என் முன்னாள் மனைவி
அனிதாவின் இன்றைய கணவர். எனக்கும் அனிதாவுக்கும் பிறந்த குழந்தையை தன் பிள்ளையாய் ஏற்றுக்கொண்டு
வளர்ப்பதற்கு ஜான் எப்போதும் என் நன்றிக்குரியவர்.”
……………………………….
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.