நடிகை வாணிஸ்ரீ அந்தக்காலங்களில் பேட்டி கொடுக்கும் போதெல்லாம் தான் நடிகையர் திலகம் சாவித்திரி சாயலில் இருப்பதாக அடிக்கடி சொல்வார். இவரை சிறுமியாக, பதின் பருவத்தில் சாவித்திரி சாயலில் இருப்பதாக சொல்வார்களாம்.
சாவித்திரியே இவரை ஜெமினிகணேசனுக்கு இணையாக நடிக்க வைத்து “குழந்தையுள்ளம்” படத்தை இயக்கியிருக்கிறார். ஜெமினிக்கும் வாணிஸ்ரீக்கும் டூயட் பாடல் “முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு குடி கொண்டதே இன்பத்தேனுண்டு.”
ஆரம்ப கால எஸ்.பி.பி.யுடன் சுசிலா பாடிய பாடல்.
ஆரம்ப கால எஸ்.பி.பி.யுடன் சுசிலா பாடிய பாடல்.
வாணிஸ்ரீயிடம் ஒரு பிரமாதமான தேஜஸ் உண்டு.
சிவாஜி மகன் ராம்குமார் தன் அப்பாவுடன் வாணிஸ்ரீ நடிக்கிற காட்சி படமாக்கப்படுகிறது என்றால் ஷூட்டிங் பார்க்க ஆசைப்படுவாராம்.
சாயல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியில் தோன்றும். இதில் பலரும் விவாதம் செய்வார்கள். அப்படியில்லை என்று.
சுருளிராஜன் ஒரு பேட்டியில் சொன்னதைக்கேட்டால் உடனே யாருக்கும் சிரிப்பு வரும்.
அப்படி என்ன சுருளிராஜன் சொன்னார் - “ என்னைப்பார்த்து பலரும் நான் மலையாள நடிகர் பிரேம் நசீர் மாதிரி இருக்கிறேன் என்று அந்தக்காலத்தில் சொல்லியிருக்கிறார்கள்.”
சுருளிராஜன் ஒரு பேட்டியில் சொன்னதைக்கேட்டால் உடனே யாருக்கும் சிரிப்பு வரும்.
அப்படி என்ன சுருளிராஜன் சொன்னார் - “ என்னைப்பார்த்து பலரும் நான் மலையாள நடிகர் பிரேம் நசீர் மாதிரி இருக்கிறேன் என்று அந்தக்காலத்தில் சொல்லியிருக்கிறார்கள்.”
…………………….
இப்போதெல்லாம் ஆங்கிலப்படங்கள், இந்திப்படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். எப்போதும் இப்படி படங்களை பார்க்காமல் தவிர்த்து விடுவேன். ஆங்கிலப்படங்களை ஆங்கிலத்திலேயே தான் பார்க்க பிடிக்கும்.
அந்தக்காலத்தில் ஆங்கிலப்படங்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்ததில்லை. ஆனால் போஸ்டரில் சில ஆங்கிலப்படங்களுக்கு வினோதமாக தமிழ் பெயர் சூட்டியிருப்பார்கள். வேடிக்கையான தமிழ் தலைப்புடன் சுவரொட்டிகள்.
Panic in Bangkok ஃப்ரன்ச் இத்தாலிய கூட்டுத்தயாரிப்பு எடுக்கப்பட்டு ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு இங்கு ரிலீஸ் செய்யப்பட்டு ரொம்ப பிரபலமான படம்.
Panic in Bangkok – வந்தேன் உதை மாஸ்டர்
Three Musketeers – மூன்று எம்.ஜி.ஆர் வீரர்கள்
Cold Sweat – கொல்லத்தான் நினைக்கிறேன்.
Snake in the Monkey shadow – பாம்பு பிடி , குரங்கு பிடி, மரண அடி
ஹாங்காங் மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் இந்த ’ஸ்னேக் இன் த மங்கி ஷேடோ.’
சென்ற மாதம் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த மு.ரவி (ந.முத்துசாமியின் இளைய மகன்) ’இருபத்தைந்தாவது ஆண்டு திருமண நிறைவு விழா’வில் வேடிக்கையான இந்த ஆங்கிலப்பட போஸ்டர்களை நினைவு கூர்ந்து சிரித்துக்கொண்டிருந்தோம்.
.................................
36 Chamber of Shaolin படத்தின் தமிழ் பெயர்
ReplyDeleteமொட்டைத் தலையர்களின் அட்டகாசங்கள்!
nude bomb படத்தின் தமிழ் பெயர்
நிர்வாண வெடிகுண்டு வெடித்தால் நீயும் நிர்வாணம் நானும் நிர்வாணம்!
(எவ்வளவு நிர்வாணம் வருகிறதோ அவ்வளவு கூட்டம் வரும் என்ற மார்க்கெட்டிங் உத்தியோ!)