Share

Feb 4, 2017

இப்படி அப்படி



’சோழமண்டல்’ நிர்மாணிக்க அந்தக் காலத்தில் முயற்சி எடுத்த போது அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் பயமுறுத்துவதற்காக, கலைஞர் கே.சி.எஸ். பணிக்கர் அவர்களிடம்“இந்த இடத்தில் பதினொரு மோகினிகள் இருக்கின்றன.” என்று மிரட்டியிருக்கிறார்.


அதற்கு பணிக்கர் பதில் சொல்லியது இவ்விதம் - “ நாங்க எட்டு பேர் இருக்கிறோம்!”
பெரிய இடத்தை வளைக்கிறார்கள். பயமுறுத்தினால் வேறு இடம் பார்த்து போய் விடுவார்கள் என்று நினைத்த பஞ்சாயத்து தலைவருக்கு ஏமாற்றம்!


…………………..



அசோகமித்திரனின் ’ தண்ணீர் ‘ நாவல் மறுபதிப்பாக கிழக்கு பதிப்பகம் மூலமாக வந்திருப்பதை புரட்டிப்பார்த்தேன். ந.முத்துசாமியின் முன்னுரை அதில் இல்லை.

சி.எல்.எஸ் வெளியீடாக வந்திருந்த போது முத்துசாமி தான் முன்னுரை எழுதியிருந்தார். பின் க்ரியா இரண்டாவது பதிப்பாக ’தண்ணீர்’ வெளிவந்த போதும் முத்துசாமி முன்னுரை இடம் பெற்றிருந்தது.
 அந்த முன்னுரையை ஏன் நீக்கவேண்டும்?

Not every friendship is meant to last a lifetime.



......................................

http://rprajanayahem.blogspot.in/…/not-every-friendship-is-…

http://rprajanayahem.blogspot.in/2016/01/blog-post_26.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.