Share

Feb 27, 2017

பழைய கணக்கு


ராஜாஜிக்கு 1930களில் காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தைப்பொருத்தவரை தீரர் சத்தியமூர்த்தி தான் rival. சத்தியமூர்த்தியின் சீடர் தான் காமராஜர் என்பதால் 1950,60களில் எப்போதும் இருவருக்கும் ஏழாம்பொருத்தம் தான்.


காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராயிருந்த போது
ராஜாஜி "காமராஜர் ஆட்சி ஊழல் ஆட்சி" என்றார்.
காமராஜர் அப்போது சொன்னார் " இவர் என்ன பெரிய பரசுராமரா?"
"காமராஜர் திட்டம்" பக்தவத்சலத்தை பின் தமிழக முதல்வராக்கியது.
.................

1967 ல் காங்கிரசை எதிர்த்து ராஜாஜியின் சுதந்திரா கட்சி தி.மு.கவுடன் கூட்டு.
ராஜாஜி சொன்னார் : "பிராமணர்கள் ஒரு கையால் பூணூலை பிடித்து கொண்டு மறுகையால் தி.மு.க வுக்கு ஓட்டு போடுங்கள். "

காமராஜர் பற்றி ராஜாஜியின் கடுமையான தாக்குதல்
”அந்த கறுப்பு காக்காயை வீழ்த்துங்கள்!”

பெரியார் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்தார். காமராஜருக்கு புகழாரம் சூட்டினார் : 'பச்சை தமிழன் காமராஜ்.கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்த பூமியில் தோண்றியிராத அதிசய மனிதர் காமராஜ்! '

தேர்தல் முடிந்து திமுக ஆட்சிக்கு வந்தது. (ஹிந்தி எதிர்ப்பு , காங்கிரஸ் வெறுப்பு என்று காரணம் யாரும் இங்கே தயவு செய்து சுட்டி காட்ட கிளம்பி விட வேண்டாம்.)

கொஞ்ச நாளில் ராஜாஜி சொன்னார்
" திமுக வுடன் தேனிலவு முடிந்து விட்டது."
அண்ணாதுரை விடவில்லை "ஆம். தேனிலவு முடிந்து குடும்ப வாழ்க்கை ஆரம்பமாகியுள்ளது!"

1971ல் அண்ணா இல்லாத திமுகவை எதிர்த்து பெருந்தலைவர் காமராஜரும் மூதறிஞர் ராஜாஜியும் இணைந்து கருணாநிதியை எதிர்த்து மிக மோசமான படு தோல்வியை தழுவினர்.( பங்களா தேஷ் வெற்றி என்று காரணங்களை அடுக்குவது இரண்டாவது பட்சம்.)


எம்ஜியாரின் எழுச்சியில் ஸ்தாபன காங்கிரசும் சுதந்திரா கட்சியும் காணாமல் போனது.


எம்ஜியார் இருக்கும் வரை கருணாநிதி பருப்பு வேகவில்லை. எம்ஜியாரின் மரணம் மீண்டும் கருணாநிதிக்கு ஆட்சி கிடைத்து கொஞ்ச நாளில் மீண்டும் இழப்பு.

மூதறிஞர் ராஜாஜி , காலா காந்திகாமராஜர் இருவரையும் தோற்கடித்த கருணாநிதிக்கு 20 வருடத்தில் ஜெயலலிதாவிடம் 1991ல் மிக மோசமான தோல்வி ஏற்பட்டது .(ராஜீவ் கொலை தான் என்ற காரணம் இங்கு முக்கியப்படுத்த வேண்டியதில்லை.அது உள்ளங்கை நெல்லிக்கனி.)

கருணாநிதியிடம் ராஜாஜி, காமராஜர் தோல்வி மகத்தான சோகம். ஜெயலலிதாவிடம் கருணாநிதி தோற்றது கேலி கூத்து.

வரலாற்றின் குரங்குத்தனம்!
“Hegal remarks somewhere that history tends to repeat itself. He forgot to add: the first time as tragedy, the second time as farce”
-Karl Marx
............................................

http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2012/10/1971.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_3740.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_9319.html

 

Feb 26, 2017

சினிமாவில் நடிக்க ஆசை



டாக்டர் சங்கரன் ’பவுனு பவுன் தான்’ படத்தில் தலை காட்டியிருக்கிறார்.
பாக்யராஜுக்கு இவர் அறிமுகமாகி நண்பராக வாய்ப்பு கிடைத்ததால் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் நடிக்கிற ஆசை இவரை பிடித்துக்கொண்டது.

ராசுக்குட்டி படத்தில் கதாநாயகி ஐஸ்வர்யாவுக்கு அப்பாவாக நடிக்க ஒரு வாய்ப்பு.
சேலத்திலிருந்து தன் சொந்தக்காரில் மேட்டூர் வந்து விட்டார். இரவில் அங்கே படப்பிடிப்பு குழுவினர் தங்கியிருந்த இரு லாட்ஜிலும் அவருக்கு அந்த நேரத்தில் அறை ஏதும் இல்லை.

”பரவாயில்லை. காரில் படுத்துக்கொள்கிறேன். காலையில் எனக்கு வெஸ்டர்ன் டாய்லட் இருந்தால் தான் வசதி. இதற்கு மட்டும் ஒரு ரூமில் உள்ளவர் என்னை அனுமதித்தால் போதும். தயவு செய்து அதற்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்.”
ரோட்டில் காரை நிறுத்தி அதில் படுத்துக்கொண்டார். அதிகாலையில் நான் தங்கி இருந்த அறையின் கதவை வெஸ்டர்ன் டாய்லட்டுக்காக தட்டினார்!
……………………………..


எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு ஜான் ஆபிரஹாமின் அக்ரஹாரத்தில் கழுதை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆசை இருந்தது. ஆனால் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. எம்.பி.சீனிவாசன் தான் நடித்தார்.

”படச்சுருள்” இதழ் ஒன்றில் வெங்கடேஷ் சக்ரவர்த்தி எழுதிய கட்டுரையில் ’அக்ரஹாரத்தில் கழுதை’ பாண்டி பஜார் ராஜகுமாரி தியேட்டரில் மட்டும் ஒரே ஒரு நாள் ஓடியது என்ற தகவலை குறிப்பிட்டிருந்தார்.

சுந்தர ராமசாமி 2002ல் கூட ஏதோ ஒரு மலையாளப்படம் ஒன்றில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக என்னிடம் சொன்னார்.
நான் ’என்ன வேடம், சார்’
சு.ரா. ’கதாநாயகியின் அப்பா வேடம்’
எனக்கு இந்த பதில் திருப்தி தரவில்லை என்பதை முகக்குறிப்பால் உணர்ந்த சுந்தர ராமசாமி தொடந்த வார்த்தைகள் “ ராஜநாயஹம்! வழக்கமான அப்பா ரோல் இல்லை. நல்ல வித்தியாசமான கதாபாத்திரம்.”
அந்த மலையாளப் படம் வெளி வந்ததா? தெரியவில்லை.

………………


இரண்டாம் உலகப்போரைப் பற்றிய ‘ த லாங்கஸ்ட் டே’ படம் தயாரானபோது போரில் ஜெனரல் ஐசனோவராக பங்கேற்றிருந்தவர் அமெரிக்க அதிபர் ஐசனோவராகியிருந்தார். அமெரிக்க அதிபராக அவருக்கு எட்டாவது ஆண்டு..

அப்போது ( 1953 ஜனவரி முதல் 1962 ஜனவரி வரை ஐசனோவர் அமெரிக்க அதிபர் ) ஜெனரல் ஐசனோவராக அதிபர் ஐசனோவரையே நடிக்க வைக்கலாமா என்று ஒரு யோசனை படக்குழுவுக்குத் தோன்றியது.

‘ நானே நானாக நடிக்கிறேனே ‘ என்று ரொம்ப ஆர்வத்துடன் அமெரிக்க அதிபர் ஐசனோவரே ஹாலிவுட் படத்தில் நடிக்க ‘சான்ஸ்’ கேட்ட அதிசயம் நடந்திருக்கிறது!
பலத்த ஆலோசனைக்குப் பிறகு ‘ஜனாதிபதி ஐசனோவரை இரண்டாம் உலகப்போர் காலத்து ஜெனரல் ஐசனோவராக மேக்கப் மூலமாக மாற்றுவது இயலாத காரியம் ‘ என்று முடிவு எடுக்கப்பட்டு ஐசனோவராக நடிக்கிற ‘சான்ஸ்’ நிராகரிக்கப்பட்டுவிட்டது.
சினிமாவில் நடிக்க ஒரு யோகம் வேண்டுமே!
POOR EISENHOWER!

1962 ம் ஆண்டு வெளியான ‘ த லாங்கஸ்ட் டே’ படத்தில் ஹென்ரி க்ரேஸ் என்ற ஆர்ட் டைரக்டர் ஒருவர் ஜெனரல் ஐசனோவராக நடித்திருந்தார்.
ஹென்ரி க்ரேஸ் நடிகரல்ல என்றாலும் ஐசனோவரைப் போலவே இருந்தார் என்பதால் அந்தப் பாத்திரம் அவருக்கு கிடைத்தது.

……………………………………

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_29.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_13.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_24.html

http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_6.html

Feb 23, 2017

இன்றைய அரசியல் - நேற்றைய இலக்கிய அரசியல்


சில நாட்களுக்கு முன் தமிழக காங்கிரஸ் தலைவர் அப்பர்... ச்சே....சுந்தரரா..சம்பந்தரா.. இல்ல..இல்ல... திருநாவுக்கரசர்
ஒரு பெரிய சந்தேகத்திற்கு விடை சொன்னார்.
”டி.டி.வி தினகரனை அதிமுக துனணைப் பொதுச்செயலாளராக்கியதில் சசிகலாவின் குடும்பத்தலையீடு இல்லை”
”நண்டு வளையில நானும் தான் இருக்கேன்”னு என்ன ஒரு சீர்த்தன்மையோடு மூக்கை நுழைத்து சொன்னார்!
திருவிளையாடல் தருமி : ” ”ஐயோ! ஐயோ! ஆயிரம் பொன்னாச்சே! எனக்கு கிடையாது.. எனக்கு கிடையாது...வேற எவனோ...வேற எவனோ அடிச்சிட்டுப் போகப்போறான்...”
வைகோ, திருநாவுக்கரசர் இருவருமே அதிமுக விற்கு செய்யும் சேவை பற்றி நினைக்கும் போது தியாகப்பிரம்மத்தின் பிலஹரி ராக கீர்த்தனை தான் நினைவுக்கு வருகிறது.
“ தொரகுணா இட்டுவண்டி சேவா”
........................................

இலக்கியம் நம்மை எங்கேயும் கொண்டு போய் சேர்க்காது என்பது தனக்கு அப்போது புரிந்ததாக,எப்போதோ ரொம்ப வருடங்களுக்கு முன் ஜெயமோகன் எழுதிய விஷயம் ஒன்று ஞாபகம் வந்தது.
சி.சு செல்லப்பாவை சந்திக்க போனபோது நடந்ததாக.
ஜெயமோகனிடம் கோபத்துடன் செல்லப்பா சொன்னாராம்
“க. நா.சு உடனடியாக கழுவிலே ஏற்றப்பட வேண்டிய தீய சக்தி”
ந.முத்துசாமியிடம் இதை நான் ஒரு உரையாடலின் போது சொன்னேன். செல்லப்பாவின் இயல்பு அவருக்கு நன்கு தெரியுமாதலால் உடனே மிக அழகாக சொன்னார்.
”அவருக்கு தான் கோபமாய் பேசுபவை வெறும் வார்த்தைகளாக இருந்திருக்கிறது.இந்த வார்த்தைகளில் உள்ள ’வயலன்ஸ்’ செல்லப்பாவுக்கு புரியல.”

Feb 22, 2017

மிக,மிக,மிகப் பிரகாசமான




பெருமை ஒரு முறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!

I will survive anything, even praise, I cheerfully suspect. 

 

நகைச்சுவை நடிகர் சார்லி சில மாதங்களுக்கு முன் என்னிடம் ’செல்’ பேசினார்.

என்னுடைய புத்தகம் ‘ சினிமா பதிவுகள்’ படித்து விட்டு பரவசமாய் சொன்னார் : ”ராஜநாயஹம்! நீங்கள் மிக,மிக,மிகப்பெரிய ஜீனியஸ்! உங்களுக்கு மிக,மிக,மிகப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.”
எனக்கு உடனே மனதில் ஏக்கமும் வேதனை
யும் :
“ மிக,மிக,மிகப் பிரகாசமான நிகழ் காலம்” இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும்!”


Applause – Enjoy it; but never quite believe it!
..................................



 பதிப்பாளர்

ராஜராஜன் பதிப்பகம்,
19, கண்ணதாசன் சாலை,
தியாகராய நகர், சென்னை - 600 017
தொலை பேசி: 044 - 2434 5641 , 044 - 2431 3221
 ....................................................................................................................

http://rprajanayahem.blogspot.in/…/what-piece-of-work-is-ma…

Feb 18, 2017

சட்டியில் இருப்பது அகப்பையிலே


சபாநாயகர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்காதது மிகப்பெரிய துயரம். ரகசிய வாக்கெடுப்பு அவசியம் என்று ஒரு எதிர்கட்சி தலைவர் கேட்கும் போது அதை ஏன் மறுக்க வேண்டும்.
பாரபட்சமே உன் பெயர் தான் தனபாலா? 
ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஸ்டாலின் இன்று சட்டசபையிலும் வெளியிலும் நடத்திய கிழிந்த சட்டை மிகை நாடகம் அவருடைய தந்தையின் கல்லக்குடி போராட்ட நாடகத்தையும், 1989ல் முன்னதாக ஜெயலலிதா சட்டசபையில் திட்டமிட்டு வம்பிழுத்து அதனால் விளைந்த நிகழ்வுகளைக் காட்டி நடத்திய துயிலுரியப்பட்ட திரௌபதியாக நடத்திய சோக வேஷத்தையும் ஞாபகப்படுத்தியது.

மொத்தத்தில்….விரிவாக, விளக்கமாக அல்லது ரத்தினச்சுருக்கமாக சொல்வது என்றால்
ஸ்டாலின் தும்பிக்கய தரையில ஊனி நாலு காலயும் மேல தூக்கி சங்கு சக்கரமா சுத்தினார்! தனபால் மரத்துல வால தொங்கப்போட்டு ஊஞசலாடி விட்டார்!

ஒன்று நிச்சயம். தி.மு.க ஒரு சட்டம் ஒழுங்கு கிளர்ச்சி செய்ய நல்ல வாய்ப்பு.

கவர்னர் இப்படி எடப்பாடியை ஆட்சியமைக்க விட்டிருக்கவே கூடாது.
ரகசிய வாக்கெடுப்புக்கு கவர்னர் உடனே உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் உடனே, உடனே தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்ய வேண்டும்.

ஜனாதிபதி ஆட்சி நடக்கும்போது சில வேடிக்கைகள் நடக்கும்.
மக்கள் செல்வாக்கு சுத்தமாக இல்லாத தமிழக பி.ஜே.பிக்கு தங்களது ஆட்சி வந்து விட்ட பிரமை ஏற்படும் தான். பொன்.ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி ஆட்சியில் தன்னை தமிழக முதல்வராக உணர்வார். தமிழிசை, ஹெச்.ராஜா போன்றோர் தங்களை மந்திரிகளாகவே பாவித்து விடுவர்.

எது எப்படியோ?மறு தேர்தல் நடத்தினால் தி.மு.கவிற்கு முழுக்க சாதகமானது என்பதோடு ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்பதிலும் சந்தேகமேயில்லை.

ஓபிஎஸ், இ.பி.எஸ் எல்லாம் முதல்வராகும்போது ஸ்டாலினுக்கென்ன குறைச்சல்? தங்காத்து!

இவர்களை விட, சசிகலாவை விட, தினகரனை விட  ஆயிரம் மடங்கு ஸ்டாலின் மேலானவர்!

வேற வழியென்ன இருக்கிறது. சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்.

வீட்டில யார் நல்ல பிள்ளை என்ற கேள்விக்கு பதில்: ”கூரையில கொள்ளிக்கட்டைய வச்சி விளையாடுறானே!அவன் தான் நல்லவன்!”

Feb 17, 2017

பிப்ரவரி 18

1972ல் அக்டோபர் 10ம்தேதி எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்ட போது கருணாநிதியிடம் தான் எம்.எல்.ஏக்கள்.
எட்மண்ட், காளிமுத்து போல இரண்டு மூன்று எம்.எல்.ஏக்கள் எம்.ஜி.ஆரிடம் வந்தார்கள்.
ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான சபாநாயகர் ‘மேதை’ மதியழகன் அப்போது எம்.ஜி.ஆர் ஆதரவாளர்! சபாநாயகர்
இப்படி செய்த அதிசயம் அன்று மிக அபூர்வ நிகழ்வு தான்.
டிசம்பர் 2ம் தேதி தமிழக சட்டசபை ஒரு விசித்திர சரித்திர நிகழ்வைப் பார்த்தது.
சபாநாயகர் மதியழகன் சபையை கொண்டு செலுத்த முயன்ற போது உதவி சபாநாயகர் விருதுநகர் பெ.சீனிவாசன் ப்ரமோஷனில் நான் தான் சபா நாயகர் என்று அவரும் சபையை மு.கருணாநிதிக்கு சாதகமாக நடத்த ஆரம்பித்தார். மதியழகன் செய்ததையெல்லாம் சீனிவாசன் நிராகரித்தார். சீனிவாசன் செய்ததையெல்லாம் மதியழகன் புறந்தள்ளினார். குழப்பம் மிகுந்த நிலையில் மதியழகன் சபையை ஒத்தி வைத்து விட்டு சட்டசபையிலிருந்து வெளியேறினார். உடனே முதல்வர் கருணாநிதி ஒரு தீர்மானத்தை நெடுஞ்செழியனை கொண்டு வரச்செய்து சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கி விட்டார். தற்காலிக சபாநாயகராக சீனிவாசன் ஆக்கப்பட்டார்.
அமளியில் எம்.ஜி.ஆர் மீது செருப்பு வீச்சு.
எம்.ஜி.ஆரின் பிரபலமான வசனம் “ சட்டசபை செத்து விட்டது.”
இந்த விஷயம் செய்தித்தாள்களுக்கு நல்ல தீனி!



எம்.ஜி.ஆர் மறைந்த பின் முதலமைச்சர் ஆக்கப்பட்ட ஜானகியிடம் தான் பெரும்பாலான எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும்.( 98 ேர? 96 ?) 
1988ஜனவரி 28ம்தேதி சட்டசபையில் பி.ஹெச்.பாண்டியன் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றி பெறச்செய்ய எதிரணி எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய்தார். தீர்மானத்தை கவனிக்காமல் சபையை ஒத்தி வைத்தார். Sky is my limit!
அன்று சட்டசபை அதிமுக எம்.எல்.ஏக்கள் அடிதடி. மைக்கை கழட்டி அடித்தவர்கள் உண்டு.
சட்டசபையில் வால்டர் தேவாரம் நுழைந்து, காவல் துறை எம்.எல்.ஏக்கள் மீதே லத்தி சார்ஜ்!
 அன்று ஒரு ஜானகி அணி எம்.எல்.ஏ. சட்டசபையில் பலரை மைக்கால் பதம் பார்த்து விட்டு வேறு யாராவது சிக்குகிறார்களா என்று மைக்கோடு நடக்கிற காட்சி புகைப்படமாக பத்திரிக்கையில் சந்தி சிரித்தது.


காலம் இந்த 2017 பிப்ரவரி 18ந்தேதி சட்டசபையில் எந்த குருஷேத்திரத்தை நிகழ்த்த இருக்கிறதோ?

எம்.எல்.ஏ பென்ஷன் விஷயம் கூட இதில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. ஒன்றரை வருடம் முடிவதற்குள் சட்டசபை கலைக்கப்பட்டால் பென்ஷன் கிடைக்காதாமே!

நாகரீகமான சபையை காண வாய்த்தால் சந்தோஷப்படலாம்.

தி.மு.கவும் காங்கிரஸும் எடப்பாடிக்கு எதிராக வாக்கெடுப்பில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். அப்படி நடக்கும்போது எடப்பாடி அணியில் சிலர் மனம் மாற வாய்ப்பு இருக்கிறது. அது வாக்கெடுப்பில் சிறப்பான விடை கிடைக்க வழி வகுக்கும்.
அதிசயம் நிகழ்த்தும் ரகசிய வாக்கெடுப்பு அவசியம்.
எடப்பாடிக்கு இடர்பாடு அத்தியாவசியம்!

குருஷேத்ர யுத்தம் 18 நாள். ராம ராவண யுத்தம் 18 மாதம்.
சண்டை போடச்சொல்லி பகவானே போதித்த பகவத் கீதையில்
18 கிரந்தங்கள்.

எண் 18க்கான குறியீட்டு சித்திரம் – நிலவில் இருந்து இரத்தம் வடிகிறது. இந்த ரத்தத்தை குடிப்பதற்கு ஒரு நாயும் ஒரு ஓணாயும் போட்டியிட்டு சண்டையிடுகின்றன.

எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் தேதி 18.

A horse! A horse! My Kingdom for a Horse!
- Richard the third
Shakespeare
...............................

Feb 15, 2017

A man called Ove ( 2015 movie)


Swedish movie.
Rolf Lassgard as Ove
Hannes Holm has directed Fredrik Backman’s novel.

இந்த படத்தின் கதையை கேட்டால் கொட்டாவி வரும். சாதாரண கதையை அழகாக படமாக்குவது எப்படி என்பதற்கு உதாரணம்.

சிறுவனாக இருக்கும்போது தந்தையின் அன்பு, இளைஞனாக காதலித்தவளே மனைவியாகிற பாக்கியம்.

பொண்டாட்டியை இழந்த 59 வயதான மனுஷன். அதோடு விரக்தி காரணமாய் அடிக்கடி ஈடேறாத தற்கொலை முயற்சிகள்.

மனைவியின் சமாதிக்கு போய் புலம்புவது… Killing oneself is not so easy, you know.
It’s just chaos when you’re not here.
வயதாகி விட்டதால் வேலையை இழப்பது. He has had enough.
தன் வீட்டை சுற்றி உள்ள குடும்பங்களிடமெல்லாம் சிடு,சிடுவென்று எரிந்து விழுந்து அதனால் Alienation. These people are incompetent.That’s why I am leaving this place for good.
கதை நாயகனாய் வரும் பெரியவர் ஒரு introvert. பக்கத்தில் ஒரு இளம்பெண் கர்ப்பிணி குடி வருகிறாள். அவள் கணவன் இரு குழந்தைகளுடன். அவள் இந்தப் பெரியவரிடம் காட்டும் பரிவும் கனிவும் அவர் வாழ்க்கையை பாலைவனச்சோலையாக மாற்றி விடுகிறது. No one should be all on their own, not even you.
Love and the importance of surrounding yourself with the proper tools.
அன்பிலே கரைந்தே அவரது மறைவு நிகழ்கிறது.

Everything in this life is linked.

"Everything that we call ‘Chance’ today won’t make sense anymore. We are in a world made by rules created by an ‘Intelligence’ and not by ‘Chance’." – Michio Kaku
விஞ்ஞானி மிச்சியோ காக்கு சொன்ன விஷயத்தை
இந்தப் படமும் சொல்கிறது. Everything in this life is linked.

சாதாரண நிகழ்வுகள் திரையில் கவிதையாக விரியுமா?


ரோல்ஃப் லாஸ்கார்ட் நடிப்பு பிரமிக்க வைக்கிறது.

Feb 14, 2017

நல்ல தீர்ப்பு


”சக்கரத்தைஎடுப்பதொரு கணம்
தருமம் பாரில் தழைத்தல் மறுகணம் !”
பாரதி ஏங்கினான்.

 நீதி  ஆமை வேகத்தில் நிலை நாட்டப்படும் சோகம்.



சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மிகப்பெரிய ஆசுவாசத்தை தந்திருக்கிறது! நீதித்துறையின் சுதந்திரத் தன்மை மீது பெரும் நம்பிக்கையும், மரியாதையும் ஏற்பட்டு விட்டது.

ஓபிஎஸ் அணி இதற்கு குதூகலிப்பது என்பது Height of IRONY! ஜெயலலிதா குற்றவாளி என்பதை மடையர்கள் கூட மறக்க முடியுமா!

 அதிமுகவில் மன்னார்குடி குடும்பப் பிடி தளர்ந்து விட்டது(?!) என்றே  நம்பி
('அதிசயம்’ என்பதன் இயல்பே அது ‘ரொம்ப அபூர்வம்)’ சந்தோஷப்படும் மக்களே!
வெட்ட வெட்ட சிந்தும் ரத்தத்தில் இருந்து துளிர்க்கும் ராட்சஸர்கள் மன்னார்குடி கூட்டம்! 

 தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க கட்சிகளில் குடும்பப்பிடி தளர வாய்ப்பே கிடையாது தெரியுமா?
’குடும்பத்திடம் இருந்து கட்சியை மீட்க வேண்டும்’ – இந்த வார்த்தைகள் அ.தி.மு.க அரசியல் உள் விவகாரம் பற்றி இன்று நொடிக்கு நொடி உரக்க பேசப்படுகிறது. 
ஆனால் இந்த உச்சாடனம்
தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க ஆகிய கட்சிகளுக்கு சிலாக்கியமானதாக, உவப்பானதாக ரசிக்கும்படியானதாக இல்லாமல் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.


இடைத்தேர்தல் தான் முடிவு என்பதை இரண்டு நாட்களுக்கு முன் நான் சொல்லி விட்டேன்.
பெங்களூர் கீழ் கோர்ட் நீதிபதியாயிருந்த மைக்கல் குன்ஹா ஒரு மஹான்!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,




...........................................

Feb 12, 2017

Confusion’s Masterpiece


சசிகலா பொதுச்செயலாளர் ஆன போது மக்கள் எதிர்ப்பு கிடையாது. ஆனால் முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட போது தான் மக்கள் எதிர்ப்பு ஏற்பட்டது என்பதாக பன்னீர் செல்வம் தந்தி டிவி பேட்டியில் சொல்லியிருந்தது உண்மைக்கு எதிரானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
ஏனெனில் ஜெயலலிதா இறந்த பின் சசிகலா பொதுச்செயலாளர் ஆனதிலிருந்தே அதிருப்தி மிகப்பெரிய அளவில் எல்லா மட்டத்திலும் ஏற்பட்டு விட்டது. அத்தோடு அப்போதே முதல்வராவது தான் அவரது உடனடி இலக்கு என்பதும் தெரிந்தே இருந்தது.

பன்னீர் தன்னை அவமானப்படுத்தி விட்டார்கள் எனபதே மிகப்பெரிய ஜோக். எப்பய்யா உன்ன அதிமுகவில கனப்படுத்தியிருக்காங்க!?
சீவி சிங்காரிச்சு, சிங்காரிச்சு மூக்கறுத்துக்கிட்டே தானே இருந்தாங்க.
கருப்பட்டி குடுத்துட்டு, செருப்பால அடிச்சிக்கிட்டே தான்.... 


ஒரு கல்யாண வீட்டில் பந்தி நடக்கும்போது பெண்ணின் அப்பாவின் ஒரு புறத்தில் மாப்பிள்ளையின் உறவினர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார். இதை கவனிக்காமல் மறு புறத்தில் உட்கார்ந்திருக்கும் தன் நண்பரிடம் பாமர மாப்பிள்ளை வீட்டார் பற்றி திட்டிக்கொண்டே இருப்பார். இங்க பாருய்யா சரியான காட்டுமிராண்டி கூட்டம்யா இது என்று இரண்டு கையாலும் சாப்பிடும் ஒருவனை சுட்டிக்காட்டுவார். அப்பளத்தை அடுக்கி கையால் குத்தும் ஒருவனை காட்டி பொருமுவார். ’இப்படி தரமில்லாத இடத்தில் பொண்ணை கொடுத்துட்டேனே.. என்னய்யா என் தலையெழுத்து…’. அதை மாப்பிள்ளை உறவினர் நன்கு கேட்டுக்கொண்டே “ இரு, உன்னை வச்சிக்கிறேன்” என்ற சைகையுடன் பெண்ணின் அப்பாவைப் பார்த்து கறுவிக்கொண்டே, பரிமாறுபவர்களிடம் ”யோவ் சாம்பார ஊத்துய்யா” ”யோவ் நெய் ஊத்துய்யா” “ ரசம் ஊத்துய்யா” “அப்பளம் இன்னொன்னு கொடுய்யா” “கூட்டு இன்னும் வை” ”மோர் கொண்டாய்யா” “ பாயாசம் எங்கய்யா” வேக, வேகமாக சாப்பிட்டு விட்டு இலையை மூடி விட்டு பெண்ணின் அப்பாவின் அருகிலிருந்த மாப்பிள்ளை வீட்டு ஆள் எழுந்து சொல்வான் “யோவ்! மாப்பிள்ளை வீட்டு ஆள் அவ்வளவு பேரும் எந்திருங்கய்யா. என்னய்யா மானங்கெட்ட சாப்பாடு வேண்டிக்கிடக்கு. நானும் பந்தியில உக்காந்ததுல இருந்து பாத்துக்கிட்டு இருக்கேன் மாப்பிள்ளை சொந்த பந்தத்தை கண்ட படி இந்த பொண்ணாட அப்பா திட்டிக்கிட்டே இருக்கான். அவ்வளவு பேரும் எந்திரிங்கய்யா. இன்னக்கி ரெண்டுல ஒன்னு பாக்கணும்”


ஜெகஜீவன் ராம் இருபத்தைந்தாண்டுகள் அரசாங்க உத்தியோகம் பார்ப்பது போல காங்கிரஸில் இருந்து மந்திரி உத்தியோகம் பார்த்தவர். எமெர்ஜென்சி காலத்திலும் மத்திய மந்திரியாய் இருந்து விட்டு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கடைசியில் கட்சியை விட்டு வெளியேறி
'Congress for Democracy ' கட்சி ஆரம்பித்து ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து இந்திரா காந்தியை எதிர்த்தவர்.
அப்போது " இந்தியாவின் பிரதமர் ஆவீர்களா?" என நிருபர்கள் கேட்ட போது பவ்யமாய், அடக்கமாய் சொன்னார் : “I never shirk any responsibility this country wants me to shoulder.”
முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமாரின் தந்தை!
இந்த பாபு ஜெகஜீவன் ராம் ஞாபகம் வருகிறது ’பவ்யம் பாவ்லா’ பன்னீர் செல்வத்தை பார்க்கும் போது.

’இப்பவாவது கலகம் செய்யனும்னு பன்னீருக்கு தோண்றியதே’ என்ற ஆசுவாசத்திற்கு இடையில் இதெல்லாம் நினைக்க வேண்டியிருக்கிறது.

வீரமணியும், சுப்ரமண்ய சுவாமியும், திருமாவளவனும் சொல்வது “உடனே சசிகலாவை ஆட்சி அமைக்க கவர்னர் கூப்பிடனும்”
கவர்னர் இப்படி தாமதப்படுத்துவது நல்லது தான். கூவத்தூர்(ஊர் பெயரே தமிழக அரசியலை பகடி செய்கிற metaphor போல இருக்கிறது!) இதனாலாவது அதிமுக எம்.எல்.ஏக்கள் புழுக்கம் தாங்காமல் வெளியேற வாய்ப்பு இருக்கிறது. அங்கே இருந்து அவர்கள் வெளியேறி ஒரு ‘சிதறல்’ நடந்தால் நல்லது.
கவர்னர் உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதே மிகச் சிறந்த நிர்வாக நடவடிக்கையாக இருக்க முடியும்.
சசிகலாவுக்கு எதிரான மன நிலையில் ஒட்டு மொத்த தமிழகமும் இருக்கிறது.

சசிகலாவின் பதற்றம் – “ சீக்கிரம் என்ன மனையில தூக்கி வைங்களேன். இதுகள எத்தன நாள் என்னால கட்டி மேய்க்க முடியும்”

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு...

ஜில்ப்பு ஜிப்பான் ஜிப்பான் ஜலாபத்ரி ரெய்டு. ’குப்பு, குப்புன்னு வேர்க்க விடுறாய்ங்களே தவிர கொஞ்சம் கூட காய விடவே மாட்டேங்கிறானுங்களேம்மா..’


கூந்தல விரிச்சிப்போட்டு, செலம்ப ஒடச்சி “ அத்தனையும் மாணிக்கப்பரல்டா டேய்!”
ஒத்த மொலய பிச்சி வீசி.. பத்திக்கிட்டு எரியுது!



கவர்னருக்கு பகீரங்க மிரட்டல்”ஓரளவுக்கு பொறுமை காப்போம். பிறகு செய்ய வேண்டியதை செய்வோம்”
கவர்னரை வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு போய் அப்பல்லோவில் அட்மிட் பண்ண மாஸ்டர் பிளான் ஏதாவது வைத்திருக்கிறார்களோ என்னமோ?


ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தாமல் உடனே தேர்தல் வைத்தால் தான் விமோசனம்.
ஜனாதிபதி ஆட்சி என்றால் ஆறு மாதம் பா.ஜ.க அதிகார ஆர்ப்பாட்டம் இருக்கவே செய்யும். ’தமிழகத்தில் தேர்தலுக்கான சூழ்நிலை இல்லை’ என்று சொல்லி ஆறு மாதம் கழித்தும் மீண்டும் ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்படாது என்பது என்ன நிச்சயம்? ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தித்தான் ஆக வேண்டும் உடனே, உடனே தேர்தல் நடத்த சட்ட சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும்.

"Confusion has made it's masterpiece now"
- Shakespeare in Macbeth (Macduff's popular dialogue)

………………………………………………..

http://rprajanayahem.blogspot.in/2017/01/cakewalk.html

Feb 11, 2017

Venkatesh Chakravarthy with R.p. Rajanayahem.


சில நாட்களுக்கு முன் என்னை அலுவலத்தில் சந்தித்த நண்பர், எழுத்தாளர் கூத்துப்பட்டறை R.P. ராஜநாயஹம், என் நெஞ்சில் உறங்கி கொண்டிருந்த பல நினவுகளை எழுப்பிவிட்டார். காரணம், இறக்கும் நிலையில் இருந்த எனது தாய்வழி பாட்டியை அவர் அடிக்கடி மதுரை ஜி.எச்சில் சந்தித்திருக்கிறார். 


எனக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லை. எத்தைனையோ ஆண்டுகள் கழித்து மதுரைக்கு செல்லும் வாய்ப்பு கிட்டிய போது, நண்பர்கள் சுந்தர் காளி, பாபு போன்றவர்களுடன் மதியம் மூன்று மணி அளவில் ஹார்வே மில்ஸ்க்கு பக்கத்திலுள்ள கல்லரை தோட்டத்திற்கு சென்று என் பாட்டி, தாத்தா மற்றும் பதினெட்டு வயதிலேயே எல்லோரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தி மறைந்து போன எங்கள் இளைய சித்தி மேரி அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மெழுகுவத்திகளை ஏற்றி வணங்கிவிட்டு திரும்பினேன். மறுபடியும் அதை செய்யும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.
என் தாத்தா எக்மூரிலுள்ள கலைகல்லூரியில் படித்தவர். ஆனால் அவர் காலத்தில் அது கவர்மெண்ட் ஸ்கூல் அஃப் இண்டஸ்டிரியல் ஆர்ட்ஸ் என்றே அழைக்கப்பட்டது. இயந்திரங்களின் மீது அவருக்கு அதிக ஈர்ப்பு இருந்ததால் அங்கு மெக்கானிக்கல் டிராப்ஃட்ஸ்மென் துறையில் டிப்லோமோ பெற்று மதுரைக்கு அவர் திரும்பியதும் அவருக்கும் அவருடய தந்தைக்கும் பிரச்சனைகள் வலுத்ததால் பிரிட்டிஷ் இராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்துவிட்டார். அது, முதல் உலக மகாயுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்த காலம் என்பதால் அவருடய குழு மத்திய கிழக்கில் போரிட இன்று இராக்கிலுள்ள பாஸ்ரா என்ற நகரத்துக்கு அனுப்பபட்டது. ஆனால் அங்கு அவர்கள் கப்பலிலிருந்து இறங்கிய சில நாட்களில் அந்த யுத்தம் முற்று பெற்றது. இதனால் அந்த குழு இந்தியாவிற்கு உடனே திரும்பி செல்லவேண்டுமென்று கட்டளை பிரப்பிக்கப்பட்டது. ஊர் திரும்ப விரும்பாத என் தாத்தா தனது ஆங்கிலேயே காப்டனை சந்தித்து நிலமையை விவரித்து அங்கு எதாவது ஒரு வேலையில் சேர்த்துவிடும்படி அவரிடம் மன்றாடினார். ஒரு சிப்பாய்க்கு இங்கு யார் வேலை குடுப்பார்கள் வேறு எதாவது தகுதி இருந்தால் பரிந்துரைக்க முடியும் என்று அவர் சொன்னவுடன் தனது டிப்லமோவை அவரிடம் காட்டினார். அதை கண்ட அந்த ஆங்கிலேயர் அங்கிருக்கும் எண்ணை கம்பெணிக்கு ஒரு சிபாரிசு கடிதம் எழுதி குடுக்க என் தாத்தாவிற்கு அங்கு வேலை கிடைத்தது.
பிறகு அங்கு அவருக்கு கிடைத்த நண்பர்களின் மூலம் வெகு விரைவில் திரைப்பட ப்ரொஜெக்டரை இயக்கும் முறையையும் அவர் அறிந்து கொண்டதால் அலுவலக பணிகளுக்கு பிறகு அங்கிருக்கும் ஒரு தியேட்டரில் மாலை நேரங்களில் ஒரு ஆப்பரேட்டாராகவும் பணிபுரிந்தார்.
அதே சமயத்தில் அவர் ஒரு தீவிர கிறுத்தவர். அவரிடமிருந்து எண்ணற்ற பைபில் கதைகளை கேட்டிருந்தாலும் அந்த தீவிரம் ஏற்படுத்திய விபரீத விளைவுகளும் அதன் மேல் என் அன்னைக்கு ஏற்பட்ட கோபமும் மறக்கமுடியாத ஒன்று. இதை பற்றி வேறொரு தருணத்தில் எழுதுவதே சரி.
இப்படி அந்த ஊரில் செட்டில் ஆகிவிட்டவருக்கு ஒரு பாதிரியாரின் நட்பு ஏற்பட அங்கேயே ஒரு பெண்ணை மணமுடித்து நிரந்திரமாக தங்கிவிடுவதே தனது விருப்பம் என்று அவரிடம் கூற அங்கு சிறுபான்மை இனத்தை சார்ந்த ஒரு கால்டியன் கிறுத்துவ குடும்பத்து பெண்ணான எனது பாட்டியை சந்திக்கும் வாய்ப்பை அந்த பாதிரியார் ஏற்படுத்தி குடுத்தார். அந்த சந்திப்பு திருமணத்தில் முடிய எனது அன்னையும் அதற்கு பிறகு நான்கு சித்திகளும் ஒரு மாமனும் அங்கு பிறந்தனர்.
எனது பாட்டிக்கு இரண்டே மொழிகள் மட்டுமே தெரியும். ஓன்று பாரசீகம், மற்றொன்று ஒரளவுக்கு ஆங்கிலம். இறுதிவரை அவர் புடவை உடுத்தியது கிடையாது. மதுரை ஆங்கிலோ இந்தியர்களை போல் ப்ஃராக் அணிவதே அவருக்கு பிடிக்கும். ஏதோ ஒரு கட்டத்தில் என் தாத்தாவிற்கு வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டதால் தான் இறந்தால் மதுரையில் தான் இறப்பேன் என்று பிடிவாதத்துடன் எல்லோரையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். பிறகு ஒரு சண்டையில் எல்லோருடய இராக்கிய பாஸ்போர்ட்டுகளையும் எரித்துவிட்டார்.
இப்படி முன்பின் தெரியாத ஊருக்கு புலம் பெயர்ந்துவிட்ட எனது பாட்டிக்கு இரண்டு விதமான நண்பர்கள் மட்டுமே இருந்தனர். ஒன்று மதுரை இரயில்வே காலனியில் இருந்த ஆங்கிலோ இந்தியர்கள், மற்றொன்று அன்று மதுரையில் இருந்த ஒரு சீன பல் மருத்துவரின் குடும்பம். எப்படியோ அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தின் மூலம் இந்த நண்பர்கள் அவருக்கு கிடைத்தனர். ஆனால் கோபம் வந்தாலோ அல்லது பேர குழைந்தகளான நாங்கள் மிகவும் சேட்டை செய்தாலோ அவர் பாரசீக மொழியில் திட்டுவது வழக்கம். குறிப்பாக எங்களை அப்போது பர்பூகா என்று அழைப்பார். அதன் பொருள் பிள்ளைப்பூச்சி.
அவருடய சமையலில் மிகவும் பேர்போனது அவருடய பன்றிகறி ரெசிப்பியே. எங்கள் எல்லோருடய பேஃவரெட். ஒரு முறை கேரளாவில் அதே ரெசிப்பியில் தயாரித்த கறியை ஒரு சிரியன் கிறிஸ்டியன் நண்பர் எனக்கு குடுத்ததும் அதிர்ந்து போனேன். பிறகு சில தரவுகளை தேடிய பிறகே கால்டியன் கிறிஸ்டியனுக்கும் சிரியன் கிறிஸ்டியனுக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகள் புரிந்தன.
கீழே என் பாட்டியை பற்றி நண்பர் ராஜநாயஹம் அவர் ப்ளாகில் எழுதிய குறிப்பு:
வெங்கடேஷ் சக்ரவர்த்தி
- R.P.ராஜநாயஹம்

மதுரையில் ராஜாஜி மருத்துவமனையில் என் மாமா அட்மிட் ஆகியிருந்தார். அதே வார்டில் வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் பாட்டி பேஷண்ட். வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் சகோதரி குட்டி பத்மினி. இவர்களின் தாயார் ராதாபாய் (ரூத்) அவர்களின் தாயார் தான் ஹாஸ்பிடலில்.
குட்டி பத்மினியின் பாட்டி என்பதால் அங்கே அவருடைய பிரபலம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
மாமா என் அத்தை கணவர் என்பதால் தினமும் நான் ஜி.ஹெச். போய் விடுவேன்.
.ஒரு நாள் கூட குட்டி பத்மினியின் பாட்டியை பார்க்காமல் இருக்க மாட்டேன்.” You are a very kind boy!”என்பார். புன்னகையுடன் கூடிய முகம்.
முதுமைத்துயரமும், பிணியும் அவர் முகத்திலிருந்த மலர்ச்சியையும், புன்னகையும் கொஞ்சமும் குறைக்கவே முடிந்ததில்லை.
அவர் கால் விரல்கள் வெட்டப்பட்டன. அவருடைய கால் கூட வெட்டப்பட்டது. அப்போதும் அவர் புன்னகைத்துக்கொண்டே இருந்தார்.
மதுரையில் ஆரப்பாளையம் க்ராஸில் ஜிம்மி ஸ்டோர் மிகவும் பிரபலம். வெங்கடேஷ் சக்ரவர்த்தி, குட்டி பத்மினியின் தாய் மாமாக்கள் கடை அது.
நெஞ்சில் ஓர் ஆலயம், குழந்தையும் தெய்வமும் போன்ற படங்கள் குட்டி பத்மினியை மிகவும் பிரபலப்படுத்தியவை.
கமால் ஜேம்ஸ் அவர்களை என் அப்பா எனக்கு அறிமுகப்படுத்தி
“ குட்டி பத்மினியின் தாய் மாமா இவர்” என்று சொன்னது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது.
நேற்று பிரசாத் ஸ்டுடியோவில் வெங்கடேஷ் சக்ரவர்த்தியை சந்தித்தேன்.
இதையெல்லாம் வெங்கடேஷ் சக்ரவர்த்தியிடம் சொன்னேன்.
அவரும் தன் பாட்டி, தாய்மாமாக்கள் நினைவில் மூழ்கி சொன்னார்.
“ நீங்கள் பேசும் இது போன்ற விஷயங்களை என்னிடம் நடிகர் ராஜேஷும் பேசியிருக்கிறார்.”
பாட்டியின் பெயர் மெட்டில்டா. பதினொரு குழந்தைகளின் தாயார். இவருடைய கருப்பை எஃதால் ஆனது? எஃகாலா?!
’ திருதராஷ்ட்ரன் மனைவி காந்தாரி, குசேலன் மனைவி இருவரின் கருப்பையும் எஃதால் ஆனது? எஃகாலா?’ என ’காமரூபம்’ கவிதைத்தொகுப்பில் தமிழ் நாடன் கேட்டார்.
மூத்த மகள் ரூத்! திரையுலகில் நடிகை ராதாபாய். சாவித்திரி, தேவிகா, சரோஜாதேவி, கே.ஆர் விஜயா ஆகிய பிரபலங்களுக்கு அன்று வெவ்வேறு கால கட்டங்களில் ஹேர் ட்ரஸ்ஸர் வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் தாயார் தான்!
அடுத்தவர் முன் முன். சிம்புவின் பாட்டி. ஸ்வர்ணமுகி, உஷா ராஜேந்தர் இருவரின் தாய்!
பாட்டியின் ஏனைய பிள்ளைச்செல்வங்கள் ஐரின், லீனா, டெர்ரி, ஆல்பர்ட், ஜமால், ஜான், நேசமணி, கமால், மேரி ஆகியோர்.
பாட்டியின் தாய் நாடு ஈராக். கணவர் ஜேம்ஸ் தமிழர்.

.................................
 

Feb 10, 2017

சிவாஜியின் சரித்திர புராணப்படங்கள்


( ’அந்தி மழை’ பிப்ரவரி 2017 இதழில் பிரசுரமாகியுள்ளது)

அப்போது பராசக்தி பட வேலை முடிந்திருந்தாலும் ரிலீஸ் ஆகியிருக்கவில்லை. எம்.ஜி.ஆர் நடித்த” அந்தமான் கைதி” படம் தோல்வி. சமூகப்படம்.
சிவாஜி கணேசனின் திருமணம் சுவாமி மலையில் நடந்தது.திருமணத்திற்கு தாமதமாக வந்த எம்.ஜி.ஆர் பந்தியில் அமர்ந்திருக்கும் போது புதுமாப்பிள்ளை சிவாஜி ஏதோ எம்.ஜி.ஆரை உற்சாகப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு சொல்லியிருக்கிறார்.
“ நீங்க ஏன்னே கோட்டும் சூட்டும் போட்டு ஆக்ட் பண்றீங்க. நீங்க கத்திய எடுத்து சுழட்டுனா ரசிகர்கள் கை தட்டுவாங்களே’’

திரும்பிச்செல்லும்போது அரங்கண்ணலிடம் எம்.ஜி.ஆர்
‘கணேசு என்னைப் பார்த்து என்ன கேட்டது பார்த்தீங்களா? இருக்கட்டும்.. பாத்துக்கறேன்.”
பின்னால் ஃபுல் சூட்டில் மாடர்னாக எப்படியெல்லாம் புரட்சி நடிகர் கலக்கினார்.

தமிழ்த்திரையில் எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவரும் இணைந்து நடித்த சமூகப்படம் கூண்டுக்கிளி ராமண்ணா இயக்கத்தில் வெளியான அதே வருடத்தில் சிவாஜி சரித்திரப்படங்களிலும் நடிக்கத்தான் செய்தார்.

“மனோகரா”. பராசக்தி சமூகப்படத்திற்கு வசனம் எழுதிய கருணாநிதி வசனம் எழுதிய சரித்திரப்படம். எல்.வி.பிரசாத் இயக்கியிருந்தார்.
வாள் வீச்சு விஷயத்தில் எம்.ஜி.ஆரை மிஞ்ச முடியாது என்பதால் கணேசன் சரித்திரப்படங்களில் கனல் தெறிக்க வாய் வீச்சு தான் செய்தார். “குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே”

தூக்கு தூக்கி – ’கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொடுத்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர்காப்பான் தோழன்’ சிவாஜிக்கு மட்டுமல்லாமல் கூண்டுக்கிளி படத்தில் ‘சரியா தப்பா’, தூக்குத் தூக்கியின் பாடல்கள் டி.எம்.சௌந்தர்ராஜனை பிஸியான பின்னணி பாடகராக நிறுத்தி வைத்தன.

நானே ராஜா என்ற ஒரு சரித்திரப்படம்.’ மேகத்திரை பிளந்து, மின்னலைப் போலே நுழைந்து வில்லினிலிருந்து வெளிப்பட்ட அம்பு போலே அங்கே போகுது பார் வெண்புறா!’ சிவாஜிக்கு தம்பியாக வில்லன் பாத்திரத்தில் எஸ்.வி.சுப்பையா நடித்திருந்தார்.

தெனாலிராமன் கதையும் திரையில் வந்திருக்கிறது. பி.எஸ்.ரங்கா இயக்கத்தில் கிருஷ்ண தேவராயராக என்.டி.ராமாராவ் நடித்தார். அப்பாஜியாக வி. நாகையாவும் ராஜகுருவாக நம்பியாரும் பங்காற்றினார்கள். பானுமதியும் ஜமுனாவும் நடித்திருந்தார்கள். “உலகெலாம் உனதருளால் மலரும் கிருபாகரியே, மஹேஸ்வரியே” விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில்.

ராஜாராணி சரித்திரப்படமல்ல. ஆனால் அதில் சேரன் செங்குட்டுவனாக மேடையில் நடிக்கும் சிவாஜியின் வசனம்
“காவிரி தந்த தமிழகத்து புதுமணலில் களம் அமைத்து சேர, சோழ, பாண்டிய மன்னர், கோபுரத்துக் கலசத்திலே யார் கொடி தான் பறப்பதென்று போர் தொடுத்துக்கொண்டிருந்த காலமது,” என ஆரம்பித்து நான்கரை நிமிடங்களுக்கு ஒரே ஷாட்.

தங்கமலை ரகசியம் “ அமுதைப் பொழியும் நிலவே” என்று கு.மா.பாலசுப்ரமண்யம் எழுதிய பாடலுக்கு ஆடிப்பாடிய ஜமுனா பாடல் காட்சி முடியும் போது காட்டுமிராண்டியாக சிவாஜியைப் பார்த்து அலறும் காட்சி.

வணங்காமுடி படத்தில் ’பாடுடா’ என்று நம்பியார் அதிகாரமாக தங்கவேலுவிடம் வற்புறுத்துவார்.தங்கவேலு திகைத்து தவிக்கும் போது நம்பியார் ஒரு அடி பலமாக கன்னத்தில் அறைவார். அடுத்த நொடியில் சிவாஜி பாடுவதாக ” பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் பயன் தருமா- ஓங்காரமாய் விளங்கும் நாதம்” இதில் சிவாஜி கணேசனின் தொண்டை நரம்பு புடைக்கும். எந்த பாடலாயிருந்தாலும் தானே பாடுவதான பிரமையை உண்டாக்கிய நடிகர்.

’அம்பிகாபதி’ பாடல்கள் எஸ்.ராமனாதன் இசையால் ஜீவிதத்தன்மை பெற்றன. ’சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே’
இந்தப் பாடலை சிவாஜி பாடுகிற காட்சியில் அந்தப் பாடல் வரிகளை ஏ.கருணாநிதி உடனே பதிவெடுப்பதாக இருக்கும். பாடல் வரிகளை கவனித்து உடனே எழுதும்
ஏ. கருணாநிதியின் gesture, expression! ஆஹா! குழந்தைத்தனமான காமெடியன்! பக்கத்தில் டனால் தங்கவேலு! பானுமதி, எம்.கே.ராதா, நம்பியார்.
”மாசிலா நிலவே நம் காதலை மாநிலம் கொண்டாடுதே, கண்ணே’'

டி.பிரகாஷ்ராவ் இயக்கிய ’உத்தமபுத்திரன்’ பி.யு.சின்னப்பா நடித்த படத்தின் ரிமேக்.

காத்தவராயன் மற்றுமொரு சின்னப்பா பட (ஆரியமாலா) ரீமேக். ” வா கலாப மயிலே, ஓடி நீ வா கலாப மயிலே…. ஆரியமாலா! ஆரியமாலா!”
சாவித்திரியும் சிவாஜியும் காதல் பார்வை பரிமாறிக்கொள்ளும் காட்சி ஒன்று உண்டு. அதனால் தான் இவர் நடிகையர் திலகம்! அவர் நடிகர் திலகம்!

சம்பூர்ணராமாயணம் பார்த்த ராஜாஜி பாராட்டு “பரதனை மிகவும் ரசித்தேன்”

எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.

சின்ன அண்ணாமலை சிவாஜி ரசிகர் மன்றங்களை வழி நடத்தியவர்.
’சொன்னால் நம்ப மாட்டீர்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அதில் ஒரு சுவாரசிய நிகழ்வை எழுதியிருக்கிறார்.
இவர் காரில் வந்து கொண்டிருந்திருக்கிறார். ஒரு தியேட்டரில் ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்திருக்கிறது. படம் ’வீரபாண்டிய கட்டபொம்மன்.’ இவர் காரிலிருந்து இறங்கி பார்த்திருக்கிறார். எல்லோரும் கவலை தோய்ந்த முகத்துடன் நடந்து வந்து கொண்டிருந்திருக்கிறார்கள். இவர் ரொம்ப சோகமாய் வந்து கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி ’படம் எப்படி இருக்கு?’ என்று கேட்டிருக்கிறார். அந்த ரசிகர் உடனே ரொம்ப வேதனையுடன் சொல்லியிருக்கிறார் “ என்னங்க படம் இது. சிவாஜி சரியில்லீங்க. இதுவே எங்க எம்.ஜி.ஆரா இருந்தா சண்டை போட்டு அவ்வளவு வெள்ளைக்காரனுங்களையும் அடிச்சி விரட்டியிருப்பாரு! பானர்மேன தூக்குல தொங்கவிட்டுருப்பாரு! இப்படி சிவாஜி மாதிரி தூக்குல தொங்கியிருக்கவே மாட்டாரு.”


குறவஞ்சி படத்தில் கணேசனின் குமுறல்“ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்.”

சிவாஜி நடித்தும் ஒரு ‘ஸ்ரீவள்ளி’ வந்திருக்கிறது.

அரிச்சந்திரா ஜி.வரலட்சுமியின் கணவர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கத்தில் சிவாஜி நடித்த புராணப்படம். பல வருடங்களாக தயாரிப்பில் இருக்கவேண்டியிருந்ததும்
மனைவியையும், மகனையும் ஏலம் விடுகிற காட்சியில் “ இந்த உலகம் அறியாத புதுமை, என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது இந்த உலகம் அறியாத புதுமை”. Classic Situation! சிவாஜியின் வழக்கமான பீறிட்டுகொப்பளிக்கும் சோகத்தை இதில் பார்க்க முடியாது. மிக நேர்த்தியாக உள்ளடக்கிய துயரத்தை காட்டியிருந்தார்.

கப்பலோட்டிய தமிழன் பார்த்த வ.உ.சி.யின் மகன் விம்மினார். “என் அப்பாவை மீண்டும் பார்த்தேன்”

சரித்திர நிகழ்வுகள் பற்றிய சரியான, முறையான புரிதல் தன்மையின்றி தான் இந்தப்படம்.

பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் படங்களுக்குப் பிறகு -
ஒரு ஸ்டுடியோவில் சிவாஜி ஒரு படப்பிடிப்பில் இருக்கிறார்.
மேக் அப்புடன் ஒரு மரத்தடியில்.
பக்கத்தில் பந்துலு வருகிறார்.
' யோவ்! என்ன அத்திப்பூத்தாப்பலே.... காத்து இந்தப்பக்கம் அடிக்குதா... '
பந்துலு ' பவ்யம் பாவ்லா ' எதுவும் செய்ய மாட்டார். மரக்கிளை ஒன்றில் பார்வை நிலைத்துள்ள நிலையில் சிரித்துக்கொண்டே உட்கார்வார்.
பந்துலு மெதுவாக வேறுபக்கம் பார்த்துக்கொண்டே சொல்வார் ''புதுசா ஒரு படம் பண்ணப்போறேன் . ''
சிவாஜி " என்ன கதை "
பந்துலு " மகாபாரதத்திலே இருந்து ''
சிவாஜி '' படத்து பேர் என்னவோ "
பந்துலு " கர்ணன் "
சிவாஜி கொஞ்சம் முகத்தை சுருக்கி கொஞ்சம் இடைவெளி விட்டு
" யாரு ஹீரோ ?"
பந்துலு வானத்தை தற்செயலாக பார்த்தவாறு விட்டேத்தியாக " சிவாஜி கணேசன் யா "
சிவாஜி கண்ணை விரித்து , மூக்கை விடைத்து , குரலை செருமி விட்டு ஒன்றும் சொல்லாமல் இருக்கும்போதே பந்துலு எழுந்து விடுவார் .
" நாளைக்கு பூஜை ."
மறு நாள் அதிகாலை,
சூரியன் உதிப்பதற்கு முன்பே
முழு மேக் அப்புடன்
பந்துலு பட பூஜையில் சிவாஜி ஆஜர் !

பந்துலு -சிவாஜி நட்பும் தொழில் பங்களிப்பும் இப்படித்தான் இருந்திருக்கிறது.



சிவாஜியாகவே கர்ணன் பாத்திரம்.


தமிழ் திரை கண்ட அசுர நடிகன் சிவாஜியின் நடிப்புப் பாணிக்கு மிகைத்தன்மை கொண்ட புராண அதீத கதாபாத்திரங்கள் தேவையாகத்தான் இருந்தன.

...................

ஏ.பி. நாகராஜன் – சிவாஜி பிணைப்பு புராணங்களை திரையில் காட்சிப்படுத்தியதில் முக்கிய பகுதியெனச் சொல்ல வேண்டும்.

பரம சிவனாக நடித்த ’திருவிளையாடல்’ உள்ளடக்கிய நட்சத்திரக் குவியல் பிரமிக்க வைக்கிறது. சாவித்திரி, கே.பி.சுந்தராம்பாள், டி.எஸ்.பாலையா, நாகேஷ், டி.ஆர்.மஹாலிங்கம், தேவிகா, முத்துராமன், ஒ.ஏ.கே.தேவர் இவர்களோடு நக்கீரனாக ஏ.பி. நாகராஜனும்.
’சரஸ்வதி சபதம்’ கல்வியா? செல்வமா? வீரமா?
நாரதராகவும், சரஸ்வதி அருள் பெற்று பெரிய அறிவாளியாக மாறிய ஒரு மூட ஊமையாகவும் இரண்டு வேடம்.
அலைமகள் கிருபையால் மகாராணியாக மாறிய பரம ஏழைப்பெண்ணாக கே.ஆர் விஜயா. “ ராணி மகாராணி, ராஜ்ஜியத்தின் ராணி, வேகவேகமாக வந்த நாகரீக ராணி”
சரஸ்வதியாக சாவித்திரியும் பார்வதியாக பத்மினியும்.
எபிசோட் பாணியை அதிக பட்சமாக தன் படங்களில் திரளான நட்சத்திர நடிகர்களை வைத்து ஏ.பி.என் திறம்பட செய்து காட்டிய இயக்குனர்.

’திருவருட்செல்வர்’- தொகையறா முடிந்து பல்லவியின் முதல் வரி ’மன்னவன் வந்தானடி’க்கு ஒரு நடை நடக்கும் போது தியேட்டரில் பரவச ஆர்ப்பரிப்பு.
காஞ்சி பெரியவரை இமிடேட் செய்து முதிய அப்பராக சிவாஜி நடித்து பாராட்டு பெற்ற படம் திருவருட்செல்வர்.
”இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத்தங்கமே” பாடலுக்கு ஜெமினி கணேசன். ஒரு சிறிய பாத்திரத்தில் சாவித்திரி. முத்துராமனின் மனைவியாக. தான் நடித்த படங்களில் இதில் தான் ஊதிப்பெருத்துப் போய் தோற்றம் தந்தார் நடிகையர் திலகம்.

’திருமால் பெருமை’ ஆழ்வார்களாக சிவாஜி. ’மலர்களிலே பல நிறம் கண்டேன், திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்’ ’பச்சை மாமலை போல் மேனி, பவளவாய் கமலச் செங்கண், அச்சுதா, அமரரேறே, ஆயர்தம் கொழுந்தே…’ ‘கோபியர் கொஞ்சும் ரமணா, கோபால கிருஷ்ணா’


’கந்தன் கருணை’ ஜெமினி,சாவித்திரி,அசோகன், சிவகுமார் எல்லோரும் நன்றாகவே நடித்திருப்பார்கள்.
சிவாஜி தான் வீரபாகுவாக வந்தவுடன் குண்டியை நெளித்து நடந்து, குசு போட்டு, புருவத்தை நிமிர்த்தி, மூக்கை விடைத்து ஓவர் ஆக்சன் செய்து.....


சிவாஜி நடித்த சரித்திர, புராண படங்களில் தில்லானா மோகனாம்பாள் பற்றியும் குறிப்பிடுவது சரிதானா?
1968ல் வெளி வந்த இந்த படம் பாரம்பரியமிக்க கலைகள் சம்பந்தப்பட்டது. ஆனந்த விகடனில் தொடராக கொத்தமங்கலம் சுப்பு எழுதினார். வாசகர்கள் சிக்கல் சண்முகசுந்தரத்தையும்,
மோகனாம்பாளையும் மிகவும் நேசித்து படித்தார்கள்.
நாயகன் – நாயகி இருவரும் கல்யாணம் செய்து கொள்வதாக அழகான கல்யாண பத்திரிக்கையே ஆனந்த விகடனில் இணைத்த போது நிறைய வாழ்த்து தந்திகள் பத்திரிக்கை அலுவலகத்தில் குவிந்தனவாம்.

கதை நடக்கும் காலம் 1940களில் இருக்கலாம். ஏ.பி. நாகராஜனின் மாஸ்டர் பீஸ் என்று தில்லானா மோகனாம்பாளை சொல்ல வேண்டும். ’சங்கராபரணம்’ எடுத்த கே.விஸ்வநாத் வரிசையில் வைத்து மதிக்கப்பட வேண்டிய இயக்குனர் நாகராஜன்.
நாகேஷ் செய்த வைத்தி பாத்திரம் விசேசமானது. (திருவிளையாடலில் தருமி) பாலையாவின் தவில் வித்வான் பாத்திரம். சிவாஜிக்கும் பத்மினிக்குமே மிக முக்கியமான படம் தில்லானா மோகனாம்பாள்.


இதற்கு அடுத்த வருடம் பிரமாண்ட எதிர்பார்ப்புகளுடன் வெளி வந்த ஸ்ரீதரின் சிவந்த மண் கூட பீரியட் பிக்சர் வகை தானே. சரித்திரப்படமா அல்லவா என்பது பற்றிய குழப்ப தன்மையை கொண்ட விசித்திர தன்மை.
’தர்மம் எங்கே’ இயக்கியவர் சிவாஜிக்கு மிகவும் பிடித்த ஏ.சி.திருலோக்சந்தர். ஜெயலலிதா, முத்துராமன், நம்பியார், நாகேஷ் நடித்திருந்தார்கள்.
’சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்’
’வீரமென்னும் பாவை தன்னை கட்டிக்கொள்ளுங்கள். வெற்றி எனும் மாலை தன்னை சூடிக்கொள்ளுங்கள்’ விசேஷமாக சொல்ல ஏதுமில்லை.

’சித்ரா பௌர்ணமி’ தான் சரித்திரக் கதை வகை படங்களில் கடைசியாக நடிகர் திலகம் நடித்த படம்.
’வந்தாலும் வந்தான்டி ராஜா,அவன் வந்த பின்னே நானும் கூட ராஜா’
’என்னடி சின்னக்குட்டி போட்ட புள்ளி சரிதானா?’
பி.மாதவன் இயக்கத்தில் ஜெயலலிதா, முத்துராமன், விஜயகுமாரி, சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர் நடித்திருந்தார்கள். தோல்வியடைந்தது.

சிவந்த மண் போல தர்மம் எங்கே, சித்ரா பௌர்ணமி இரண்டிலும் அநியாய சர்வாதிகார ஆட்சிக்கெதிரான புரட்சிக்காரன் கதை தான். எல்லாவற்றிலும் முத்துராமனுக்கும் எப்படியாவது முக்கியமான வேலை இருந்தது.