Share

Mar 31, 2015

நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்


சினிமால ஒரு டைரக்டர் கிட்ட அஸிஸ்டண்ட் டைரக்டரா சேரும்போது ஒரு விஷயம் தப்பிக்கவே முடியாது. ’ஒரு கதை சொல்லுங்க’ என்று பிரபல டைரக்டர்கள் அந்தக்காலத்தில் சொல்வாங்க. இந்தக்காலத்தில் எப்படியோ தெரியவில்லை.
இப்படி என்னிடம் கே பாக்கியராஜ் ’ ஒரு கதை சொல்லுங்க’ என்று கேட்டபோது என் பதில் “ வில் வித்தையின் உச்சகட்டம் அம்பை எய்யாமலிருப்பது!” ஜென் பௌத்தம்!
“ வில் வித்தையின் உச்சகட்டம் அம்பை எய்யாமலிருப்பது!”
இந்த ஒற்றை வரி தத்துவம் Capacity,Ultimate Power,Real test,Endurance,Reticence,Humbleness,Maturity,Perfection போன்ற இன்னும் பல பரிமாணங்களை உள்ளடக்கிய விஷயம்.
Never Explain! Never miss a good chance to keep silence!
.................................

பொதுவா அப்பாவுடைய பாடி லாங்க்வேஜ், பேசும் ஸ்டைல், பிள்ளைகளுக்கு பிடிக்காது. இதை ’டிஸ்க்ரேஸ்’ நாவலில் ஜே.எம்.கூட்சீ சொல்வார். எனக்கு ஒரு சந்தேகம். டி.ராஜேந்தர் மகன் சிம்பு’ ஏம்ப்பா இப்படி குரங்கு சேட்டை பண்ணுற.லூசாப்பா நீ. எரிச்சலா இருக்கு எனக்கு’ன்னு சொல்ல மாட்டானா?

.......................................


அந்தக்கால நண்பன்.டீ சாப்பிட காசில்லாமல் டீக்கடையில் பெஞ்சில் அமர்ந்திருப்பான்.(அரை மணிக்கு ஒரு டீ சாப்பிடவேண்டியிருக்கும்போது எவ்வளவு காசிருந்தாலும் மிஞ்சுமா?) நான் அவனருகில் வந்து அமர்வேன்.முகத்தில் எந்த சலனமுமில்லாமல் சோகச்சிலையாக இருப்பான். நான் என் சட்டையில் இரண்டு பட்டனை கழற்றி காலரை இரண்டு பக்கமும் இரு கையால் தூக்கி ஆட்டுவேன். பாக்கெட்டிலுள்ள சில்லறைக்காசுகள் ’ஜல் ஜல் ஜல் ஜல் ’ லென குதிக்கும்.
அவன் முகம் பிரகாசமாகி களை கட்டும். கண்களில் பல்ப் எரியும். காதில் சில்லறைக்காசுகள் விழும் சத்தத்தால் அவன் உடல் சிலிர்த்து விடும். ஒரு கையை காதில் வைப்பான்.மறு கையை நீட்டிசீர்காழி குரலில்கூப்பாடு போடுவான் “தேவ கான ஓசை கேட்டேன்!”
...............................

’நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்’ என்றான் எட்டயபுரத்தான்.
ஆனால் கவிஞர் சமயவேல் சொல்வது போல
“ஏதேனும் ஒரு காரணத்தின் நிமித்தம் திடுமென மனது உறையத்தொடங்குகிறது.”
அந்தக் கவிதை முடிவது இப்படி-”எதிரெதிர் வண்ணங்களின் இழுப்பில் என் தூரிகை நகர்கிறது.”


I am not running out of Writer's Ink.

..............................


கமல் ஹாசன் சொல்லியிருந்தார். “சந்திக்காத நபர்களில் காந்தி,பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் திரு எஸ்.வி.ரங்காராவும் அடக்கம்.”
ரங்காராவுக்கு எப்பேர்ப்பட்ட மகுடம்!


.................................

Things just happen!Things don't happen for a reason!

சமீபத்தில் 'தி இந்து'வில் யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி சொன்ன விஷயம் படிக்கக் கிடைத்தது.

"ஒரு கொசுவை விட, ஒரு வயல் எலியை விட எந்த விதத்திலும் தான் மேலான ஒன்று அல்ல என்ற அப்பட்டமான உண்மையை இந்த மனித குலம் ஒப்புக்கொள்ளாவிட்டால் அது அழிந்து போய் விடும்!"

Regarding life, the wisest men of all ages have judged alike: it is worthless.
- Nietzsche


ஒரு விகடனில் அசோகமித்திரன் பேட்டி.


அசோகமித்திரன் : ”நாம் ஒன்றுமே இல்லை என்பது தான் பெரிய உண்மை.என்னுடைய சாம்பலைக்கூடத் திரும்பிப் பார்க்காதீர்கள் என்று தான் என் குடும்பத்தாருக்கே சொல்லி இருக்கிறேன்.”

எமர்சன் சொன்னான் -“A great man is always willing to be little.”

'Use a humble pen' என்று சொல்லப்படுவதுண்டு. அசோகமித்திரன் வகை எழுத்து அத்தகையது.
.............................................



3 comments:

  1. 'Humble pen' Better u can send this to Jey.Mo

    ReplyDelete
  2. A proud person can learn humbleness,but he will be proud of it!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.