இதிலிருந்து ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் இரண்டு வருடங்களுக்கு முன் நிக்சன் – எல்விஸ் பிரிஸ்லி, ரீகன் – மைக்கல் ஜாக்ஸன், குருச்சேவ்- மர்லீன் மன்ரோ ஆகியோர் சந்தித்த நிகழ்வுகள் பற்றி எடுத்துப்போட்டிருந்தார்கள்.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் நிக்சன் ஆர்வத்துடன் பிரிஸ்லியின் கஃப்லிங்க்ஸை பார்க்கிறார்!
அமெரிக்க அதிபர் ரீகனை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருகை தரும் ஜாக்ஸன். புல்வெளியில் மீடியா உலகத்தினர், வெள்ளை மாளிகையில் வேலை பார்ப்பவர்கள் கூடிய ஒரு நிகழ்வில் கௌரவத்தை ஏற்றுக்கொண்டு
பின் வெள்ளை மாளிகையில் ரீகனுடன் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றிற்காக ஹாலில் நுழைந்து குழந்தைகளைக்காணவில்லையே என்று மிரண்டு ஒரு அறையில் நுழைந்து கதவை சாத்திக்கொள்கிறார். “அந்த ஹாலில் குழந்தைகள் வேண்டும்.பெரியவர்களை வெளியேற்றவேண்டும்” என்று பிடிவாதம் செய்யும் ஜாக்ஸன்.
குழந்தைகளுடன் அளவளாவும் மைக்கல் ஜாக்சனைப் பார்த்து ஜாக்சனின் உதவியாளரிடம் நான்ஸி ரீகன் “ டயானா ரோஸ் மாதிரி தோற்றம் தனக்கு வேண்டும் என்று ஜாக்ஸன் ஆசைப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவளை விட மிகவும் அழகாய் இருக்கிறான். ஒரு பையன் இப்படி பெண்பிள்ளை போல இருப்பதும், கிசுகிசுப்பாக பேசுவதும்,ஒரு கையில் மட்டும் க்ளவ்ஸ் மாட்டிக்கொள்வதும், எந்த நேரமும்,எப்போதும் சன் க்ளாஸ் போட்டுக்கொண்டிருப்பதும் ரொம்ப விசித்திரம்! இதை என்னவென்று சொல்வது? எனக்குத்தெரியவில்லை.”
ரஷ்ய அதிபர் குருச்சேவ் அமெரிக்க விஜயம்.ட்வெண்டித் செஞ்சுரி ஃபாக்ஸ் ஸ்டுடியோவிற்கு தன் மனைவியுடன் வருகை தரும் குருச்சேவைப் பார்க்க எந்த ஆர்வமும் மரிலீன் மன்ரோவிற்கு இருந்திருக்கவில்லை.
ஆனால் ஸ்டுடியோவிலிருந்து அவளுக்கு தெரியப்படுத்தப்பட்ட தகவல் குருச்சேவ் வருவதைப்பார்க்க அவளைத் தூண்டுகிறது. அந்த தகவல் “ ரஷ்யர்களுக்கு அமெரிக்கா என்றாலே கோகா-கோலாவும் மரிலீன் மன்ரோவும் தான்”
ஸ்டுடியோவில் ஒரு கச்சிதமான அறை. Everyone who is anyone is there in that room! எலிசபெத் டெய்லர், பாப் ஹோப், டோனி கர்ட்டிஸ், ஜீடி கார்லண்ட் (Somewhre over the rainbow!) கிர்க் டக்ளஸ், ஃப்ராங்க் செனட்ரா....மரிலின் மன்ரோ..
குருச்சேவ் பீற்றிக்கொள்கிறார். ‘‘ 'பேலே' டான்ஸ்னாலே ரஷ்யா தானேய்யா..அமெரிக்கான்னு சொல்லுவியா?’’
‘’நான் ‘டிஸ்னிலேண்ட்’ போகக்கூடாது என்று இங்கே சொல்லிவிட்டார்கள்..ஏன்?’’ எரிச்சல் படுகிறார்.
ஃப்ராங்க் சினட்ரா நடிக்கும் ‘Can-Can’ பட ஷூட்டிங் பார்க்க அங்கே ஒரு செட்டுக்குப் போகும்போது மர்லின் மன்ரோவை அவருக்கு காட்டி அறிமுகப்படுத்துகிறார்கள். மன்ரோ சம்பிரதாய வரவேற்பு வார்த்தைகளை சொல்கிறாள். குருச்சேவ் ‘ You are a very lovely young lady!” மன்ரோவின் கைகளைப் பிடித்து ‘குலுக்கு குலுக்கு’ என்று பிழிந்து விடுகிறார்.
தன் வேலைக்காரி லெனாவிடம் சொல்கிறாள்: “குருச்சேவ் அசிங்கமான குண்டன். சிடு,சிடுன்னு எரிஞ்சி விழுறாரு. அந்தாளுக்கு என்ன ரொம்ப பிடிச்சிருந்தது. ரொம்ப சிரிச்சாரு. என் கைய குலுக்கும் போது ரொம்ப நேரம் பிழிஞ்சிட்டாரு! கையை உடச்சிருவாரோன்னு நினைச்சேன். ஆனா ஒன்னு! அந்தாளுக்கு முத்தங்கொடுக்கறதுக்கு கை குலுக்கறது எவ்வளவோ மேல். "
(1959ல் அன்று குருச்சேவ் கலந்து கொண்ட ஹாலிவுட் நிகழ்வில் மரிலின் மன்ரோ! )
http://rprajanayahem.blogspot.in/2012/09/art-is-vice.html
http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_29.html
http://rprajanayahem.blogspot.in/…/well-nobody-is-perfect.h…
.............................................................
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.