Share

Mar 4, 2015

Did we just become best friends?





ராமதாஸ் தன் மகன் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது பயங்கர காமெடி என்று தான் சிரிப்பீர்கள். 
ஆனால் ராமதாஸ் அறிவிப்பு ஒரு பெருமலையை புரட்டிப்போட்டுவிட்டது.
கருணாநிதி தனக்கு மீண்டும் முதல்வராக ஆசை கிடையாது என்று முக்கி முனக  நேர்ந்ததற்கு பாட்டாளி ராமதாஸ் அறிவிப்பு தான் காரணம். 

ஸ்டாலினுக்கு பெரிசு வழி விட்டு விட்டதாக தி.மு.க தரப்புக்கு சூசக தகவல்!


எவ்வளவு சின்ன வயதில் ஃபரூக் அப்துல்லா,முலாயம் சிங் பிள்ளைகள் அனுபவித்த ‘முதலமைச்சர் பதவி சுகம்’ அறுபத்து இரண்டு வயது ஸ்டாலினுக்கு 2016லும் எட்டாக்கனியாகவேயிருக்கிற இந்த நிலையில் கூட (ஜெயலலிதாவை ஜெயிக்க வேண்டும். அது நடக்கிற காரியமா?) கருணாநிதியால் முழுமனதாக ஸ்டாலினுக்கு வழி விட மனமில்லை.

ராமதாஸே தன் பிள்ளைக்கு வாயில லட்டு சுட்டு விட்ட பின் இவர் எங்கள் கட்சி வேட்பாளர் ஸ்டாலின் தான் என அறிக்கை விட்டிருக்க வேண்டாமா?

காஷ்மீர் ஃபரூக் அப்துல்லாவின் அப்பா ஷேக் அப்துல்லா பற்றி ஒரு வதந்தி அந்தக்காலத்தில் உண்டு. 
காஷ்மீர சிங்கம் ஷேக் அப்துல்லா இங்கே கொடைக்கானல் கோஹினூர் பங்களாவில் சிறைவைக்கப்பட்டவர் என்பதால் தமிழ் நாட்டுக்கு ரொம்ப நெருக்கமானவர்.
இவர் மீதான அந்த வதந்தி 1960களில் ரொம்ப பிரபலம்!

.”ஜவஹர்லால் நேருவின் Step brother தான் ஷேக் அப்துல்லா. மோதிலால் நேருவின் வைப்பாட்டி மகன்” 


 இதை உண்மை போலவே தான் 1970களிலும் பேசிக்கொள்வார்கள்.  


 
ஷேக் அப்துல்லாவுக்கு  ஒரு Step brother    யாரோ உண்மையில்  ஒருவர் இருந்திருக்கிறார். அந்த அண்ணன் இவருடைய அம்மாவை வறுமையில் தள்ளியிருக்கிறார்.

ஷேக் அப்துல்லாவின் குடும்பமும் காஷ்மீர பிராமண குடும்பம் தான். ஆனால் அவர் பிறப்பதற்கு கிட்டத்தட்ட இருநூறு வருடங்களுக்கு முன் இவருடைய பிராமண முப்பாட்டன் யாரோ ஒருவர் முஸ்லிமாகியிருக்கிறார். 
ஷேக் அப்துல்லா அவருடைய அப்பா யாரோ ஒரு ஷேக் முகமது இப்ராஹிம் இறந்த பதினோறாவது நாளில் பிறந்தவராம்.

............................................................................



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.