மெய்வழிச்சாலை என்ற ஒரு மூர்க்கமான மத
அமைப்பு நிறைய தங்க நகைகளை ஆசிரமத்தில் புதைத்து வைத்து கஸ்டம்ஸ்
கலெக்டர் எம்.எஸ்.சுப்ரமண்யம் ரெய்டு நடத்தி சாலை குணாளன்,இன்னும் யார் யாரோ கைது
செய்யப்பட்டு அல்லோலகல்லோலப்பட்டது.
ஆனால் அந்த
நிகழ்வு மெய்வழி அமைப்பினரை கொஞ்சம் கூட அசைக்கமுடிந்ததில்லை. அநியாய
மரணத்திலிருந்து தப்பிக்க வழி சொல்லும் மெய் வழி! கடும் மத வைராக்கியம் கொண்ட
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அசல் முசல்மான் ஒருவர் தான் மெய்வழி மதத்தை நிறுவிய
ஆண்டவர் என்பது ஒரு முரண் நகை.
மதுரையில் ஒரு மெய்வழி விசுவாசி இருந்தார்.
மதுரை A.A. ரோட்டில் பலசரக்கு கடை வைத்திருந்தார்.தங்கத்தில் இளம்பிறை வைத்த
தலப்பா எப்பவும் தலையில் இருக்கும்.
‘மெய்வழி மதத்தை சேர்ந்தவனாக்கும் நான்’ என்ற
பெருமிதமிக்கவர்.
நிலாவில் ஆர்ம்ஸ்ட்ராங்க் இறங்கினான் என்பதையே
ஒத்துக்கொள்ள மாட்டார்.
“ அமெரிக்காக்காரன் பண்ற ஃப்ராடு! இத ஒலகமே
நம்புது. ஆண்டவரோட மெய்வழி மார்க்கத்தில இருக்கறதால எனக்கு இது புரியுது.
நீங்கள்ளாம் நம்புறீங்க. எங்கயோ பாலைவனத்தில எவனையோ நிறுத்தி படம்பிடிச்சி அவன்
காட்டுரான்.அத நம்புறீங்களேப்பு! சரி, நான் ஒன்னு கேக்கறேன். ஆம்ஸ்டாங்க்
நிலாவுக்கு போனான்னு சொல்றியே. நான் ஒன்னு கேக்கறேன். அவன் போன அன்னக்கி
அமாவாசைன்னா எங்க எறங்குவான்? சொல்லு. இல்ல. நான் சவால் விடுறேன்.அமாவாசை அன்னக்கி
அமெரிக்காக்காரன நிலாவுல எறங்க தைரியம் இருக்கான்னு கேளுப்பு.” பெருமையாக தன்னை
குழுமியுள்ள வாலிப பட்டாளத்தைப்பார்ப்பார். “ஆண்டவர் மெய்வழிய எங்களுக்கு
காட்டுனதுன்னால தெரியுது. நீங்கள்ளாம் பாவம் அறியாமைல்ல
முழுகிப்போயிட்டிங்களேப்பு.”
"இன்னொன்னு. உலகம் உருண்டைன்னு பள்ளிக்கூடத்தில
சொல்லிக்குடுக்கரான். அதுவும் வெள்ளக்காரன் எவனோ அள்ளி விட்ட அல்டாப்பு தான? நான்
ஒரு கேள்வி கேக்கறேன்.பதில் சொல்லு. உலகம் உருண்டைன்னு சொல்ற. அது சுத்திக்கிட்டே
இருக்குன்னு சொல்ற. நீ சொல்றத வச்சே உன்ன கேக்கறேன். அதில உலகத்தில மூணு பங்கு
தண்ணின்னு சொல்றீல்ல. உருண்ட சுத்துச்சின்னா அம்புட்டு தண்ணியும் கொட்டிப்பிடாது?”
சுற்றியுள்ள இளவட்டங்களை பார்வையாலேயே அடிச்சிப்பார்ப்பார்.
Convictions are greater enemies of truth than lies.
"Faith" means the will to avoid knowing what is true.
-- Nietzsche
"Faith" means the will to avoid knowing what is true.
-- Nietzsche
...........
பழனியில் இருக்கும்போது குடும்பத்தோடு மருத
மலைக்கு போயிருந்தேன். மலையேறி தரிசனம் முடித்துவிட்டு பஸ்ஸில் ஏறினால் கண்டக்டர்
ஒரு மெய்வழி தலப்பாகட்டு பேர்வழி. பஸ்ஸில் முருகபக்தர்களுக்கு டிக்கட்
போட்டுக்கொண்டே பிரசங்க பாணியில் சொன்னார். “ நல்ல வேள! எனக்கு மெய் வழி ஆண்டவரோட
மார்க்கம் கிடச்சதால தப்பிச்சேன். இல்லன்னா உங்களயெல்லாம் மாதிரி களைதளையாத்தான்
நானும் இருந்திருப்பேன். இப்படி களை தளையா இருக்கீங்களே. இது தான் தலையெழுத்து. “
அன்று பஸ்சில் ஒருவர் கூட அவரிடம் வாதமோ, சண்டையோ
போடவில்லை.
இந்த மெய்வழி கண்டக்டர் வேளாங்கண்ணி பஸ் ஸ்டாண்டிலேயோ, நாகூர் பஸ் ஸ்டாண்டிலேயோ இப்படி பிரசங்கம் செய்ய முடிந்திருக்குமா?
இந்த மெய்வழி கண்டக்டர் வேளாங்கண்ணி பஸ் ஸ்டாண்டிலேயோ, நாகூர் பஸ் ஸ்டாண்டிலேயோ இப்படி பிரசங்கம் செய்ய முடிந்திருக்குமா?
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.