Share

Mar 12, 2015

ஹீரோவுடன் காமெடியன்




சத்யராஜ் – கவுண்டமணி காம்பினேஷன் செம ஹிட்டான சமாச்சாரம்.எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத காமெடி. 

கவுண்டர்,சத்யராஜ் சேரும்போது இருவருமே ஒரிஜினல் சல்லியாகி விடுவார்கள்.

எந்த ரிசர்வேசனும் இருக்காது. இமேஜ் அது இது எல்லாம் கிடையாது.
 “ரூட்ட சொல்லாம அழுதா எப்படி?..”
“ரீல் அந்து போச்சிடா சாமி..”

சத்யராஜ் – மணிவண்ணன் காமெடி பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

 கார்த்திக் – கவுண்டமணி படு ஜோரா க்ளிக் ஆச்சி.
“ஐய்யையோ இதாய்யா இவன் கிட்ட கெட்ட பழக்கம். உடனே எஸ்கேப் ஆயிடுவானே...”
“இப்ப சிரிச்சிச்சே! அது ஒங்கள பாத்து தான்! இந்த பூ கூட உங்களுக்கு தான்!” 

விவேக் – விஜய் நல்லாத்தான் இருந்தது.
விவேக் – தனுஷ் சேர்ந்து செய்த காமெடி ‘பிரமாதம்’ வகையைச்சேர்ந்தது.
 ‘அட்டகாசம்’! 

தனுஷ் திறமை முக்கிய காரணம்.

வடிவேலு கூட இணைந்த ஹீரோக்களில் அர்ஜுன் பற்றி முதலில் சொல்ல வேண்டும். 

காமடியனுடன் நிற்பதால் அர்ஜுன் கொஞ்சமும் அலட்டவே மாட்டார். ஆனால் அதனால் வடிவேலுவின் ஹுயூமர் மிகவும் க்ளாசிக் ஆக சில படங்களில் பதிவாகியது. “ எந்த பக்கம் ‘பால்’ போட்டாலும் ‘கோல்’ போட்டுட்ரானே!” " பிள்ளைப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு மொளைக்கும்னு கனவா கண்டேன்..."


பிரபு தேவா- வடிவேலு, விஜய் – வடிவேலு எல்லாம் சரிதான்.
சத்யராஜ் – வடிவேலு  காமெடி ஜாலியாத்தான் இருந்துச்சி.
சுந்தர்.சி - வடிவேலு கூட செமயான கலக்கல்!
 
படு செயற்கையாக எரிச்சலாக இருந்தது பார்த்திபன் வடிவேலுவோடு செய்தது. இதிலும் வடிவேலுவை குறை சொல்லவே முடியாது. பார்த்திபனின் நெனப்பான நடிப்பு தான் சகிக்காது.



ஜீவா – சந்தானம் இணைந்த காமெடியில் ஜீவாவின் பங்கு அதிகம். 
“டே! மச்சி நானும் வரேன்டா!” “டேய்! கூர்க்காவா!?’’


ஆர்யா – சந்தானம் நல்ல ஃபார்ம்! 



கலக்கலான காமெடி. “நண்பேன்டா!”

உதயநிதி – சந்தானம்  ஒர்க் அவுட் ஆச்சி. உதயநிதியின் நடிப்பு ஆச்சரியமான விஷயம். நாடகத்தனம் இல்லை. முதல் படம் மாதிரியே தெரியவில்லை.

 கதாநாயகர்களின் ஹ்யூமர், டைம் சென்ஸ் தான் சந்தானம் நிற்பதற்கு காரணம்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.