விஜயா கார்டனில் சுதாகர் – சுமலதா நடித்த 'அழைத்தால் வருவேன்' பட பாட்டு ஷூட்டிங். “சொந்தங்கள் திரும்பத் திரும்ப பிறக்கும். அது எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்’. நான் அசிஸ்டண்ட் டைரக்டர்.
அதே விஜயா கார்டனில் இன்னொரு பக்கத்தில் விஜயனின் சொந்தப்படம் ‘மலர்களே மலருங்கள்’ பாடல் காட்சி ஷூட்டிங். ‘இசைக்கவோ நம் கல்யாண ராகம்’ பாட்டு.
https://www.youtube.com/watch?v=xAE13y9nKgI
இங்கே ‘கட்’ சொன்னால் சுதாகர் அங்கே ஓடிடுவான். அங்கே கட் சொன்னால் ராதிகா இங்கே ஓடி வந்துடும். ஒவ்வொரு முறையும் நான் ஓடிப்போய் அங்கேயிருந்து சுதாகரை இழுத்து வரவேண்டும்.
‘அழைத்தால் வருவேன்’ அஸோசியேட் டைரக்டர் செவுடன் தண்டபாணி
“ ரெண்டு பேரும் லவ் பண்றாங்கப்பா.”
திருச்சிஃபெமினாவில் ரிசப்ஸனிஸ்ட் வேலை பார்க்கும்போது பிரதாப் போத்தனை டைவர்ஸ் செய்து விட்ட ராதிகா இரண்டாவது திருமணம் செய்து ரேயானின் வெள்ளக்கார அப்பாவோடு வந்ததைப்பார்த்திருக்கிறேன். ஹவுஸ் கெஸ்ட். ஃபெமினா முதலாளி ராதிகாவுக்கு ஃப்ரண்ட். அதே சில நாளில் சரத்குமார் ஃபெமினாவில் கெஸ்ட்டாக வந்ததையும் பார்த்திருக்கிறேன்.
என் பெரியப்பா மகன் எனக்கு ஒரு தடவை சர்ப்ரைஸ் கொடுப்பதாக நினைத்து திருச்சி யானைக்கட்டி மைதானத்தில் ஒரு வீட்டுக்கு கூட்டிபோய் “ பாலாஜி!” என்று குரல் கொடுத்தான். ஒரு அம்மாள் வெளியே வந்து அன்போடு ‘பாலாஜி இல்லயேப்பா. உள்ள வா’ என்றார். ‘இருக்கட்டும்மா.அப்புறம் வர்றேன்’ என்று அவன் சொல்லி விட்டு நாங்கள் திரும்பும்போது தான் சொன்னான். ‘இந்தம்மா நடிகர் ரவிச்சந்திரன் மனைவி விமலா. ரவிச்சந்திரன் மூத்த மகன் பாலாஜி கேம்பியன் ஸ்கூலில் என்னோடு படித்தான்.’
நேற்று ஒரு சானலில் ‘இதயக்கமலம்’ ஒரு பட பாடல்கள். ஆஹா.. பி.பி.எஸ் “ தோள் கண்டேன்,தோளே கண்டேன்,” “ நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன், போ,போ,போ”, சுசிலாவின் “மலர்கள் நனைந்தன பனியாலே”,“உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல”., கே.ஆர்.விஜயா அந்தக்காலத்தில் தான் நடித்துப்பிடித்த படமாக இதயக்கமலத்தை தான் பேட்டிகளில் குறிப்பிடுவார். சுசிலாவுக்கு பிடித்த பாடல் “உன்னைக் காணாத கண்ணும் கண் அல்ல.”
இதயக்கமலம் ஒரு படப்பாடல்களில் கடைசியாக “ என்ன தான் ரகசியமோ இதயத்திலே, நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே” உற்சாகமாக ஷீலா ஆடிப்பாடும்போது ஒட்டாமல் ரவிச்சந்திரன் ‘உர்’ என்று அவரை முகம் சுண்டிப் பார்ப்பார். கே.ஆர் விஜயா தான் வேண்டும்.சரணங்களில் ‘ மலர் பஞ்சனை மேலே உடல் பள்ளி கொள்ளாது’ ‘ முதல் இரவு வந்தது. இன்ப உறவு வந்தது. நீ அருகில் வந்ததும், நான் உருகி நின்றதும்’ – கே.ஆர்.விஜயா பாடுவதாக வரும்போது முகம் மலர்ந்து விடும்.
https://www.youtube.com/watch?v=xAE13y9nKgI
கௌரி கல்யாணத்தில் கூட ரவிச்சந்திரனுக்கு ஷீலா ஜோடி கிடையாது.ஜெயலலிதா தான் ஜோடி.
நான் அனேகமாக பல பழைய படங்களை நூற்றுக்கணக்கில் மதுரை தத்தனேரி மாருதி, விளாங்குடி ரத்னாவில் தரை டிக்கட்டில் அமர்ந்து பார்த்திருக்கிறேன். அப்படி ‘மூன்றெழுத்து’ ஜெயலலிதா,ரவிச்சந்திரன் நடித்த படம் பார்த்த போது அந்த பட த்தில் வரும் ஷீலா ஒரு காட்சியில் ரவிச்சந்திரனைப்பார்த்து “அண்ணா” என்று சொல்லும்போது தரை டிக்கட் ரசிகர்கள் “ என்னம்மா! அத்தான பாத்து அண்ணங்கிறே!” என்று கத்தினார்கள்.
Passage of time! இந்தப்படங்களில் நடித்த காலங்களில் ரவிச்சந்திரனுக்கு இரண்டாவது மனைவியாக ஷீலா ஆகியிருக்கவில்லை.
சில வருடங்களுக்கு முன் ஒரு டி.வி. ரியாலிட்டி ஷோவில் டி.வி நடிகர் ஒருவர் தன் தகப்பனாரைப்பற்றி பேசி தேம்பி அழுத போது அவரைத் தேற்றும் ஜார்ஜும் (நடிகை ஷீலா மகன்) அழுததைப்பார்க்க நேர்ந்தது. தன் தாயையும் தன்னையும் எப்போதோ பிரிந்து விட்ட தகப்பன் ரவிச்சந்திரனை நினைத்துத் தான் அழுதிருக்கவேண்டும்.
...........
http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_291.html
http://rprajanayahem.blogspot.in/2012/11/blog-post.html
http://rprajanayahem.blogspot.in/…/a-ridiculous-beginning.h…
http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_21.html
http://rprajanayahem.blogspot.in/2013/02/blog-post_26.html
சார் நீங்க திருச்சியா இப்ப எங்க இருக்கீங்க
ReplyDeleteஇப்ப திருப்பூர்.
ReplyDelete