Share

Sep 30, 2012

ஹாலிவுட் சுவாரசியங்கள் - 2

Oct 6, 2008


ததாஸ்து

உலக யுத்தங்களை கருவாக கொண்டு நிறைய ஹாலிவுட் படங்கள் வெளிவந்தன . இரண்டாம் உலக யுத்தத்தில் நடந்த சம்பவங்களை கருவாக கொண்டு வெளி வந்த "The Great Escape " (1963 )ஒரு அசாதாரண படம் . ஸ்டீவ் மக்வின் கலக்கிய படம் . இந்த படத்தில் இவர் செய்த கதா பாத்திரம் அவருக்கு மீண்டும் "Papillon" ( 1973 )படத்திலும் அதையொத்த கதா பாத்திரம் கிடைக்க காரணமானது.
காந்தி படத்து இயக்குனர் ரிச்சர்ட் ஆட்டேன்பரோ, ஜேம்ஸ் கோபர்ன், சார்லஸ் பிரான்சன், டேவிட் மக்கெல்லம் ஆகியோர் நடித்த த்ரில்லெர்.

சார்லஸ் பிரான்சன்- இந்த படத்தின் தயாரிப்பின் போது மற்றொரு நடிகர் டேவிட் மக்கெல்லம் கூட வந்த அவர் மனைவி "ஜில் அயர்லாந்து "- நடிகை தான் . இந்த படத்தில் நடிக்கவில்லை . ஜில் யை பார்த்து அசந்து போனார் பிரான்சன் . டேவிட் மக்கெல்லம் மிடமே " உங்கள் மனைவி ஜில் ஐ நான் திருடி கொண்டு போக போகிறேன் பாருங்கள் !" என்று சார்லஸ் பிரான்சன் ஜோக் அடித்திருக்கிறார்.

வானத்தில் இருந்து முப்பத்து முக்கோடி தேவர்களும் நெருக்கியடித்து கொண்டு ' ததாஸ்து ' என கூவி விட்டனர் !

1967 ஆண்டு டேவிட் மக்கெல்லம் அவர்களும் ஜில் அயர்லாந்து இம் விவாகரத்து செய்து விட்டனர்.

1968ல் சார்லஸ் பிரான்சன் - ஜில் அயர்லாந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

வானத்தில் இருந்து முப்பத்து முக்கோடி தேவர்களும் நெருக்கியடித்துக்கொண்டு (அவ்வளவு புழுக்கத்திலும் கூட ) பூமாரி பொழிந்தனர் !


.............................................


Aug 14, 2009

க்ளார்க் கேபிள் (Clark Gable)

Gone with the wind (1939 ) படத்தில் நடிகை விவியன் லீ கடைசியில் க்ளார்க் கேபிளிடம் " நீ இல்லாவிட்டால் நான் என்ன செய்வேன் ? எங்கே போவேன் ?" என்று பதற்றத்துடன் வினவும்போது ரொம்ப காசுவலாக , அலட்சியமாக க்ளார்க் கேபிள் “ Frankly, My dear, I don't give a damn!” என்று சொல்லிக்கொண்டே விவியன் லீ யை விட்டு விலகி வெளியேறி விடுவார். Powerful voice!
இந்த “ Frankly, My dear, I don't give a damn!” வசனம் அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிட்யூட் 100 greatest quotes லிஸ்ட் ல் இன்றளவும் முதல் ரேங்கில் இருக்கிறது . படம் பார்த்தவர்கள் காதில் எப்போதும் அவ்வப்போது படத்தில் லேசான சத்தத்தில் சிரிக்கும் அந்த கேபிளின் விஷேசமான சிரிப்பு கேட்டுக்கொண்டே இருக்கும் .

நடிக்க வருவதற்கு முன் கிளார்க் கேபிளுக்கு gay for pay ஆக இருந்த அனுபவம் உண்டு .

59 வயது வாழ்ந்து 1960 ல் அவர் இறந்த போது அவருடைய ஐந்தாவது மனைவி கர்ப்பிணி .அவருடைய கடைசி படம்
The Misfitsஅவருக்கு நடித்ததிலேயே மிகவும் பிடித்தமான படம் வெளியான போது அவர் உயிருடன் இல்லை.அவருடைய ஐந்தாவது மனைவியின் குழந்தை கூட அப்பா இல்லாமல் பிறந்தது. இந்த குழந்தை மூலமாகத்தான் கிளார்க் தன்னுடைய வாழ்க்கையில் முதல்முறையாக தகப்பன் ஆகமுடிந்தது . ( நடிகை லோரட்டா எங் மூலம் கிளார்க்குக்கு பிறந்தவர் நடிகை ஜூடி லூயிஸ் . ஜூடி கிளார்க் கேபிளின் மகள் தான் .ஆனால் கேபிளுக்கு நடிகை லோரட்டா மனைவியல்ல )

படு அபத்தமாக The Misfits படம் ஐரணியாக தலைப்பிடப்பட்டது வேடிக்கை. மரிலின் மன்றோ தான் படத்தில் நாயகி. மரிலின் மன்றோவுக்கும் இந்த படம் கடைசி படம் ! கடைசி நாள் ஷூட்டிங் முடிந்த போது கிளார்க் பெருமூச்சு விட்டு ஆயாசத்துடன் மரிலின் மன்றோவுடன் நடித்த கசப்பான அனுபவம் பற்றி " ஏசுவே ! ஒருவழியா இந்த படம் முடிஞ்சது . அவ எனக்கு கிட்டத்தட்ட ஹார்ட் அட்டாக்கே கொடுத்துட்டா. போதும்ப்பா போதும் போதும் ஓத்த ஓலு " என்று சாமானை சொரிந்து விட்டு எழுந்திரிச்சி சலித்துக்கொண்டார் . அடுத்த நாளே இதய குழாயில் ரத்த அடைப்பு ஏற்பட்டு விட்டது . ஆஸ்பத்திரியில் பத்தாம் நாள் இறந்து விட்டார் .மரிலின் மன்றோ கூட ஒருவருடத்தில் சொந்த வாழ்க்கை துக்கத்தில் தூக்கமாத்திரை அதிகமாக சாப்பிட்டு இறந்தார்.


சமீபத்தில் மறைந்த ஜெய்பூர் மகாராணி தொண்ணூறு வயது காயத்திரி தேவியை அந்தகாலத்தில் தான் சந்தித்த மிக அழகான பெண்களில் ஒருவர் என்று க்ளார்க் கேபிள் ரசனையுடன் குறிப்பிட்டிருக்கிறார் .

ஹிட்லருக்கு மிகவும் பிடித்த நடிகர் கிளார்க் கேபிள் . கேபிளின் மூன்றாவது பொண்டாட்டி விமான விபத்தில் இறந்த போது ஹாலிவுட் வெறுத்துபோய் விமானப்படையில் சேர்ந்து சில சண்டை போட்ட போது ஹிட்லர் இவரை பிடித்து தருபவருக்கு ரிவார்டு தருவதாக அறிவித்தார் . ரிவார்டு யாருக்கும் கிடைக்கவில்லை .

Sep 28, 2012

Loose words are gold coins


 I speak my mind because I have nothing to lose.
வருடம் 1992.

மனோரமா  பேசும்போது சொன்ன ஒரு விஷயம்.
சிவாஜிகணேசனுக்கு  உச்சத்தில் அவர் இருந்த காலங்களில் 1960களில் அவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்தார்கள். ஸ்டுடியோவிலோ,அவுட் டோரிலோ ஷூட்டிங் நடக்கிற நேரங்களிலோ அவரை பார்த்த பரவசத்தில்  ஆர்வத்தோடு ஒரு கும்பலாக,குழுவாக ரசிகர்கள் நெருங்கும்போது தன் அல்லக்கைகளிடம் “டேய், அவனுங்கள என் கிட்ட வர விட்டுடாதீங்கடா,அப்படியே நகத்தி கொண்டு போயிடுங்கடா…” என்பாராம்.

”சிவாஜிக்கு மனுஷ வாடையே பிடிக்காது”- மனோரமா!

.......

08-01-1994
Outspokenness is always a great word to know.




ஜெமினிகணேசன் பேச்சில் எதைப்பற்றியும் சுலபமாக அபிப்ராயம் சொல்பவராய் இருந்தார் என்பது தான் உடனே என் மனதுக்குப் பட்ட விஷயம்.

இரண்டு வருடம் கழித்து  அவ்வை சண்முகியில் நடித்தார்.

நான்கு வருடம் கழித்து தான் ஜுலியானாவை திருமணம் செய்தார்.

Reticence which prevents a man from exploiting his own personalitity is really an inverted egotism.

”உங்க மருமகன் ஜிஜிமாப்பிள்ளை ஸ்ரீதர் ராஜன் படம் ஏதும் பண்றாரா..என்ன செய்றார்?”

ஜெமினி கணேசன் சலிப்பான பதில் : “இருக்கான்…. He is a BLACK MARK in my life…”

ராசுக்குட்டியில் நடித்த ஐஸ்வர்யா பற்றி விசாரித்தார்.

நான் சொன்னேன் “ A spoiled child

ஜெமினி உடனே “ அவ அம்மா லக்‌ஷ்மி … அவ … என் வாயால சொல்லக்கூடாது…”

 கமல்ஹாசன் மனைவிகள் பற்றி “ வாணி… Actually she is elder than him.. very possessive lady.. அவனால முடியல.. இப்ப ஒன்னு கட்டியிருக்கானே.. சரிகா….என் வாயால சொல்லக்கூடாது..என் வாயால சொல்லக்கூடாது…”


டி.வி யில் அப்போது ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”


என் பெரிய மாமனார் S.M.T அங்குராஜிடம் சொன்னார்-
”அங்குராஜ்! உங்க தம்பி மருமகன் ராஜநாயஹம் என்னமா பேசறார்!ஆறு மணி நேரம் போனதே தெரியல”

“ மருமகன் சினிமாவில இருந்தவங்க”
[img118e+blog.jpg]
எனக்கு இப்படி யாராவது என்னைப் பற்றி சொன்னால் எரிச்சல் தான் வரும்.

ஜெமினியும் ரொம்ப  எரிச்சலாகி “இருக்கட்டுமே! சினிமாவில எவன் இல்ல..எவன் எவனோ இருக்கான்.சினிமாவில எவன் தான் இல்ல. இந்த method of speaking எந்த சினிமாக்காரன் கிட்ட இருக்கு.” என்றவர் நான் விடை பெற்றவுடன் சொன்னாராம். “ அங்குராஜ்! உங்க தம்பி மருமகன் ராஜநாயஹம்! டைம் சரியில்ல. இல்லன்னா சினிமால பெரிய ஆளா வந்திருப்பான்!”

மறுநாள் காலை ஆறுமணிக்கு மாடியிலிருந்து கீழே இறங்கி கிச்சனுக்கு வந்து உட்கார்ந்து காபி சாப்பிடும்போது அதே வார்த்தைகள்- “  உங்க தம்பி மருமகன்.. டைம் சரியில்ல. இல்லன்னா ராஜநாயஹம் சினிமால பெரிய ஆளா வந்திருப்பான்!”

காரில் ஏறி கிளம்பி கிருஷ்ணன் கோயில் அருகே மீண்டும் திருவாய் மலர்ந்தாராம்- “   ராஜநாயஹத்துக்கு டைம் தான் சரியில்ல...”

http://rprajanayahem.blogspot.in/2008/06/blog-post_1413.html

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_25.html


Sep 27, 2012

சீர்காழி கோவிந்தராஜன்

Jul 24, 2009


சீர்காழி கோவிந்த ராஜன் குரலில் மெலடி கிடையாது. முரட்டு குரல்.

டிஎம் எஸ் குரலில் உள்ள 'கனிவு' 'தண்மை' 'குழைவு 'சீர்காழியிடம் அறவே கிடையாது.

பாடும்போது ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு விடுவார்.

நான் பாடுவதில் மேதையாக்கும் என்ற கர்வம் குரலில் வெளிப்படும்.

தமிழ் உச்சரிப்பு சுத்தம். ஆனால் தேவைக்கு மேல் அழுத்தம் கொடுத்து வார்த்தைகளை கடித்து விடுவார்.

அந்த காலத்தில் பல தமிழ் படங்களில் கதாநாயகி கலங்கி தவித்து தக்காளி விக்கும்போது
 சீர்காழி செயற்கை உருக்கத்துடன் "துள்ளி வரும் சூறை காற்று துடிக்குதொரு தென்னம்தோப்பு இல்லை ஒரு பாதுகாப்பு இது தானா இறைவன் தீர்ப்பு......காவல் இல்லா கன்னி என்றால் கண்கலங்கும் வாழ்க்கை உண்டு ''என்று கதறுவார் ." நீதி மத யானை வீதிவழி சென்றதம்மா !" என கேவுவார்.சிகரட் பிடிக்க ,ஒண்ணுக்கு அடிக்க பலரும் எழுந்து போவார்கள்.

சில பாடல்களை சவால் போல பாடி விடுவார்.
டிஎம் எஸ் " முருகா என்றழைக்கவா? முத்துக்குமரா என்றழைக்கவா?...எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன் " என்றுபக்திபாடல் உருக்கமாய் பாடியதற்கு
சீர்காழி எதிர்ப்பாட்டு " முருகா என்றழைத்தால் என்ன ? கந்தா என்றழைத்தால் என்ன? கார்த்திகேயன் என்றால் என்ன?...எப்படியும் அழைக்கலாம்! எங்கிருந்தும் காணலாம் "
இதில் பக்தி கூட வேடிக்கையாக ஆகும்படி கூச்சலாக சீர்காழி ஆக்கியிருந்தார்.

சீர்காழியின் நளினமற்ற அபத்த கூப்பாடு க்கு ஒரு உதாரணம்.
'திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் ' பாட்டில்
டிஎம் எஸ் குரலை அமுக்கி மெலடி இல்லாமல் கூப்பாடு போடுவார்.


என்றாலும் கூட சீர்காழி பல பாடல்களை கணீரென்று தன் வெண்கல குரலில் அற்புதமாக பாடியிருக்கிறார்.
அந்த பாடல்கள் அவருக்கானவை மட்டுமே.அப்படி சில பாடல்கள் கீழே :

1. அமுதும் தேனும் எதற்கு ? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு "

2. பணம் பந்தியிலே ! குணம் குப்பையிலே ! இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே !

3. எங்கிருந்தோ வந்தான் ! இடைச்சாதி நான் என்றான் !

4 . தேவன் கோயில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

5 . ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே.

6.உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா !

7.மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா !

8.ஒற்றுமையாய் வாழ்வதாலே என்றும் நன்மையே

9.தட்டு தடுமாறி நெஞ்சம்
 கை தொட்டு விளையாட கெஞ்சும்
சிட்டு முகம் காதல் கொள்ளும்.
கண் பட்டு மலர் மேனி துள்ளும்.

10. சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி (பக்தி பாடல் )

11 .அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்.

12.கண்ணிலே நீர் எதற்கு காலமெல்லாம் அழுவதற்கு.

13. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா

14. கல்லிலே கலைவண்ணம் கண்டான்

15 .நீயல்லால் தெய்வம் இல்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா ( பக்தி பாடல)


இரண்டு டைட்டில் சாங்க்ஸ். தியேட்டரில் கைத்தட்டு வாங்குவார்.
1.காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாரும் இல்லை

2.வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர் நீச்சல்.

சீர்காழியை முழுமையாக ஒதுக்கவே முடியாது.



Once in a while, A consistency comes forward that is both sublime and foolish!

இந்த வார்த்தைகளை சீர்காழி கோவிந்தராஜன் என்று இல்லை. 'அரசியல்' துவங்கி எந்த துறையிலும் கலை,இலக்கியம், இசை, நடிப்பு என்று எந்த துறையிலும் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்த பலரை பற்றி எண்ணி பார்க்கும்போது சொல்ல வேண்டியிருக்கும்.

 இந்திய திரை பின்னணி பாடகர்களில்
 முழுமையான பி பி ஸ்ரீநிவாஸ்,கிஷோர்குமார் பாடல்கள் பற்றி மட்டுமே மேற்கண்ட மேற்கோளை பிரயோகிக்க முடியாது. (இவர்களில் பிபிஎஸ் ஒருகாலகட்டத்தில் மார்க்கெட்டை இழந்து விட்டவர் என்றாலும் கூட )

Sep 26, 2012

எழுத்து- புரிதல்-தத்துவம்

Sep 6, 2008


எழுத்து- புரிதல்

“Only one man ever understood me…And he didn’t understand me”

ஹெகல் இப்படி சொன்னான். புரிதலை பற்றி இதை விட சொல்ல வேறு என்ன இருக்கிறது.


The eternal mystery of the world is its comprehensibility. - Kant

கான்ட் சொன்னதை புரிந்து கொள்ள சந்திர பாபு வின் பாடல் ஒன்று போதும்.
"ஒன்னுமே புரியலே உலகத்திலே ..
என்னவோ நடக்குது .. மர்மமா இருக்குது "

என்னடா இது கான்ட் சொன்னதை அப்படியே
காப்பியடிச்சி எழுதிட்டாங்களேன்னு புரியும்.

ஆசிரியனுக்கு ஆயுதம் "வார்த்தைகள்" தான். எழுத்தாளனின் உபகரணம் "வார்த்தைகள் ". சரி வார்த்தைகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை.
ஜோசப் கான்ராட் இதற்கு பதில் சொல்கிறான்.
"வார்த்தைகள் என்பது யதார்த்தத்தின் மிகப்பெரிய எதிரிகள் "

எழுத்தாளன் என்பவன் யார் ? இதற்கு ஒரு பதில் Thomas Mann சொல்கிறான்.
எழுதுவது என்பது மற்றவர்களை விட யாருக்கு மிக கடினமோ அவன் தான் எழுத்தாளன்.

ரோலன் பார்த் Pleasure of the text பற்றி சிலாகிப்பதற்கு எட்டு வருடம் முன்பே தீர்மானித்து முடிவு செய்த தியரி - The death of author.

பூக்கோ தன் பங்குக்கு சுத்தமாக எழுத்தாளனை பற்றிய பிரமைகளை உடைத்தெறிந்து விட்டான் .
“What is an Author?
Not a creator of , but a label on a group of statements”


தெரிதாவுக்கு வார்த்தைகள் மீது சந்தேகம் வர காரணமாயிருந்தவன் கான்ராட் தான் என எனக்கு எப்போதும் தோன்றும்.
கான்ராட் தானே அதை Words are the greatest foes of reality என முன்னறிவித்தவன்.

எழுதப்பட்டவற்றை பிரதி ( Text )என பெயரிட்டு,கட்டுடைப்பு செய்ய வேண்டும் என்றான் தெரிதா.

ழாக் லக்கான் "பிரதி" அச்சில் வருவதையே அருவருப்பாக எண்ணினான் . அச்சில் வரும் எழுத்தை "குப்பை " என கேலி பேசினான்.


 ..........

Dec 30, 2009


தத்துவம் கேள்விகளாலானது
Deep-rooted gender biasஎன்பதாக விவாதங்கள் நிறைய நடக்கிறது.
பிலாசபி என்பதில் பெண் தத்துவமேதை என பெரும்பாலும் கிடையாது. ஓரிருவர் இருக்கிறார்கள்.
“Second Sex” எழுதிய பெண் தத்துவவாதியும் பெண்ணியவாதியுமான சிமோன் திபுவோ (Simon de Beauvoir) பால் பிரிவினையையே ஒத்துக்கொள்ள மறுத்தார்.
சிமோன் திபுவோ Female nature என்பதாகவும் Male natureஎன்பதாகவும் கருதப்பட்ட இருமை எதிர்வுகளை நம்பவில்லை.
 மாறாக ஆண்களும் பெண்களும் இந்த உள்ளார்ந்த மனச்சாய்வுகளில் அல்லது இலட்சியங்களில் இருந்து தங்களைத் தாமே விடுவித்துக்கொள்ளவேண்டும் என நம்பினார்.

மனிதன் யார்? மனித இயல்பு என்ன? இதன் மீதான விசாரணை தத்துவ உலகில் காலம் காலமாக நடந்து வருகிறது.

அப்படி 'நிரந்தர மனித இயல்பு ' என்று எதையும் தீர்மானிக்கமுடியாது என நம்பினார் சார்த்தர். “We are condemn to improvise!”மனிதர்கள் மேடைக்கு இழுத்து வரப்பட்ட நடிகர்கள். ஸ்க்ரிப்ட் கிடையாது. இயக்குனர் யாருமே கிடையாது. நாமே தான் நம் கதாப் பாத்திரத்தை தீர்மானிக்கவேண்டும். We are condemn to improvise.அர்த்தமே இல்லாத உலகவாழ்வில் முற்றிலும் அந்நியமாகிப் போகும் மனிதன். இதன் காரணமாக ஒரு ennuiவில் சிக்கிவிடுகிறான். Man has no basic nature to fall back on.

ஜோஸ்டீன் கார்டர் எழுதிய நாவல் Sophie's world ஒரு reference bookஎன்று சொல்லவேண்டும். தத்துவத்துறை பற்றிய வரலாறு Sophie's world.
Who we are? Why we are here?Will there still be something that every body needs?

It is easy to ask philosophical questions than to answer them.
  மாற்றி சொல்வதானால் கேள்விகள் தான் தத்துவம்.
ஆல்பர் காம்யு தன் “The Fall” நாவலில் பல தத்துவக் கேள்விகளை அதனால் தான் வைத்தான்.

 

Sep 25, 2012

பசுத்தோல் போர்த்திய புலி

Nov 3, 2008


நம்பியார் சுவாமி சினிமாவில் வில்லன். நிஜ வாழ்க்கையில் புனிதர் . இப்படி பலரும் நினைத்துகொண்டிருக்கிறார்கள். அந்த காலத்தில் எம்ஜியார் படங்களில் வில்லன் ஆகியதால் பெண்களின் கடுமையான வசவுக்கும் சாபத்துக்கும் ஆளானவர். பின்னர் பொது மக்கள் மத்தியில் ஐயப்ப பக்தர் என்பதனாலும் பலருக்கும் சினிமாவுலகில் மாலை போட்டவர் என்பதால் ஒரு Saintly Image இவருக்கு உண்டாகி, மேலும் சினிமாவை புரிந்து கொண்ட பெருமையும் சினிமா வில்லன் நிஜ வாழ்க்கையில் உத்தமன் என்பதை உறுதி செய்ய கிடைத்த Role Model ஆக்கி நம்பியாரை தூக்கி பிடித்தார்கள்.


நம்பியாரை பற்றிய நிஜம் ஒன்று. அவர் பேச்சில் ஆபாசம்,விரசம் இருக்கும்.Vulgarity! ஏதோ ஒழுக்க கண்ணோட்டம் கொண்டு நம்பியாரை அளந்து பார்ப்பதாக எண்ணிவிட வேண்டாம். ஆனால் ஐயப்ப விரதம் என்பது சுத்தத்தை அடிபடையாக ஏற்று கொண்டு உணவு, லாகிரி, செக்ஸ் எல்லாவற்றையும் புறந்தள்ளி கடுமையான ஒழுக்க கோட்பாடுகளின் அடிப்படையில் நம்பிக்கை வைத்து மேற்கொள்ளப்படுவது என்பதை நினைவிற்கொள்க. அதோடு இந்த பரிசுத்த நம்பிக்கையின் குருசாமியாகி பலருக்கு மாலை போட்டு தனக்கு ஒரு புனித பிம்பத்தையும் ஏற்படுத்திக்கொண்டு ஏற்றுகொண்ட அனுஷ்டானங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டாமா !

நான் வேலை பார்த்த படத்தில் மனோரமா நடித்தார். கதாநாயகனின் தாயாக. பிரசாத் தோட்டத்தில் அந்த படத்தின் சண்டைகாட்சி எடுக்கப்பட்ட போது மனோரமா வேறொரு ஷூட்டிங்கில் அங்கே அருகில் இருந்தார். அவருடைய ஹேர் ட்ரெஸ்ஸெர் கலா என்பவர் ஆச்சி ஷூட்டிங்கில் இருப்பதை தெரியப்படுத்தி வந்து பாருங்கள் என்றார்.

மனோரமா கோபிசெட்டிபாளையத்தில் இரவு பத்து மணிக்கு நான் சின்ன வாக் போய்க்கொண்டிருந்த போது என்னை அடையாளம் கண்டு தன் காரை நிறுத்தி ' ஏம்பா , காரில் ஏறிக்கொள்ளுங்கள்.ஏன் நடக்க வேண்டும் ' என்று பரிவோடு ஒரு முறை சொன்னார்.
நான் ' இல்லை அம்மா நீங்க போங்க .நான் தூங்கு முன் சின்ன வாக் போகிறேன் .' என்று சொன்னேன்.எல்லோரும் அக்கா என்று தான் அவரை அழைப்பார்கள். நான் அம்மா என்று தான் சொல்வேன்.

ஆச்சியை அந்த ஷூட்டிங்கில் நான் பார்க்க போன போது கயிற்று கட்டிலில் இவருடன் நம்பியார் சாமி மறு பக்கமாக திரும்பி அமர்ந்திருந்தார்.ஆர்க் புரூட் எனும் சக்திவாய்ந்த விளக்கு என் மீது அப்போது தற்செயலாக திருப்பப்பட்டது.

மறு நாள் டப்பிங் தியேட்டர் வேலையின் போது மனோரமா அங்கு வந்தவர் முந்தைய நாள் ஷூட்டிங்கில் நம்பியாரை திட்டியதை சொன்னார் .
' இனிமே இப்படி அசிங்கமா ஆபாசமா பேசுனா அப்புறம் பார்த்துக்குங்க. ஏன் கிட்ட பேசவே வேண்டாம் '

அவருடைய உதவியாளரை கூப்பிட்டு ' என்னப்பா இவரு இப்படி எப்பவுமே அசிங்கமா பேசுறாரே ' ன்னு சொன்னேன். அதுக்கு அந்த ஆள் ' ஐயோ அதை ஏன் கேக்கறீங்க. பூஜையில இவரு ஒக்காந்திருக்கும் போது மகளும் மருமகனும் வந்தாங்க. இவரு ' ரூம்லே போய் வச்சுக்கங்க. இது பூஜை பண்ற இடம். உங்க பூஜையை ஒங்க பெட் ரூம் போய் வச்சுக்கங்க ' ன்னு சொன்னாரு. மகளிடமே அப்படி தான் பேசுறாரு ' ன்னு சொல்றான்.பார்த்துக்கங்க .' என்று சொன்ன மனோரமா உரத்த குரலில் நம்பியார் பற்றி " பசுத்தோல் போர்த்திய புலி " என்றார்.

நம்பியார் விரசமாய் பேசுபவர் என்பது திரைப்பட துறையில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்று தான்.
மனோரமா யாரைப்பற்றியும் தைரியமாக வெளிப்படையாக கம்மன்ட் அடிப்பார். நான் கூட ஆச்சரியப்படுவேன். 'இந்த மாதிரி லூஸ் டாக் செய்பவர் எப்படி திரையுலகில் நிலைத்து நிற்க முடிகிறது '
...


சித்தர்கள் மத அனுஸ்டானம், பூஜை புனஸ்காரம், சாஸ்த்திர சம்பிரதாயங்களை,சமுக கட்டுப்பாடுகளை உதறி வாழ்ந்தவர்கள்.

கெட்ட வார்த்தை,கோபம் நிரம்பிய சாமியார் இலங்கையில் இருந்தார்.யோகர் என்று பெயர்.இவர் பற்றி பிரமிள் சொல்வார்.

யாராவதுயோகர் சுவாமியிடம் தன் கஷ்டத்தை முன் வைத்தால் அவர் பதில் ' ஒரு பொல்லாப்பும் இல்லே. எப்போவோ முடிஞ்ச காரியம்டா புண்டை மகனே ' என்பார்.
பிரமிள் சொல்வார். ' ஆனால் அவர் அருகில் நாம் இருக்கும்போது அருவி சாரல் அருகில் இருப்பது போன்றுஜிலு ஜிலுன்னு இருக்கும்! ரொம்ப விஷேசமான ஆத்மீக அனுபவம்!'

Sep 24, 2012

ஒரு ரகசிய காதல் கடிதம்

Sep 16, 2008

நான் மேட்டூரில் கிருஷ்ணா லாட்ஜில் நடிகர் கல்யாண்குமார் அவர்களிடம் ஆன்மிகம் பற்றி பேசிய விஷயங்கள் பிரமிக்க வைத்ததாக அந்த படத்தில் நடித்த நடிகை ஒருவர்(இவர் சாதாரணமாக என் பேச்சு, பாட்டு,உடை எல்லாவற்றிற்குமே ரொம்ப லயித்து போவார் )மற்றொரு நடிகையிடம் சொல்லிவிட்டார்.

அவர் எனக்கு அடுத்த அறையில் தான் தன் தாயாருடன் இருந்தார்.

நான் என் அறைக்குள் நுழைய போன போது என்னை அவர் அறையிலிருந்து 'சார் சார் ' - கூப்பிட்டார் .
இந்த நடிகை எப்போதுமே சாதாரணமாக என்னிடம் இலக்கியம் தான் பேசுவார். என்னைப்பற்றி யாரோ சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிந்தது.

தி. ஜா வின் கமலம் குறுநாவலை பற்றி என்னிடம் ' என்னமா எழுதுறார் சார் உங்க ஜானகி ராமன் '

'இது என்ன புஸ்தகம் சார் ஒங்க கையிலே.

 

நான் 'அந்த்ராய் தார்கோவ்ஸ்கி பற்றிய புத்தகம் '

 

'நீங்க ஒருத்தர் தான் சார் இங்க வித்தியாசமான ஆள். '



'சார் உங்களை பத்தி ஒன்னு கேள்விப்பட்டேன். ஆன்மிகம் பற்றி பின்னி எடுத்துட்டீங்கலாம். எனக்கு ஒரு குருநாதர் இங்கே ஈரோடு பக்கம் உண்டு சார். அந்த ஆஸ்ரமத்துடைய பத்திரிகை இது. படிச்சி பாருங்களேன்.'

அடடா நம்மை பண்டார சன்னதிகளோடு சேர்த்து நினைக்கிறாரே. சாதாரண உரையாடல் சிலருக்கு எப்படியெல்லாம் அர்த்தமாகிவிடுகிறது ...இருந்தாலும் அவர் கொடுத்த அந்த பத்திரிகை யை கையில் வாங்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்து படுக்கையில் அமர்ந்து புரட்ட ஆரம்பித்தேன்.

அதிலிருந்து ஒரு காகிதம்
கீழே விழுந்தது.


அது ஒரு கடிதம். இந்த நடிகை எழுதியிருக்கிறார். இவர் அறிமுகமான படத்து இயக்குனருக்கு. அவர் மிக பெரிய இயக்குனர்.

 ஏற்கனவே திருமணமாகி குடும்பம் இருந்த நிலையில் பல வருடம் முன் ஒரு சிறந்த நடிகையை திருமணம் செய்து அவர் தற்கொலை செய்து கொண்டு அதனால் பல சிரமங்களுக்கு உள்ளானவர்.


அவரை இவர் பெயர் சொல்லி ஒருமையில் எழுதியிருந்தார். காதல் கடிதம் தான்.
"அன்று ஷூட்டிங் முடிந்து சேலம் ரயில் நிலையத்தில் கிளம்ப காத்திருந்த போது, உனக்கு நினைவிருக்கிறதா. நான் ரயில் நிலையத்தில் தலைக்கு பூ வாங்கி வைத்து கொண்ட போது நீ என்னருகில் வந்து பூவை முகர்ந்து பார்த்தாயே."

எனக்கு அப்போது மறைந்த அந்த நடிகை பற்றியும், இப்போது இந்த நடிகை அதே இயக்குனரிடம் காதல் கொண்டிருப்பது பற்றியும் எண்ணம் எந்த வகையில் என சொல்ல முடியாமல் பல சிந்தனை.





கடிதத்தை எடுத்துக் கொண்டு அவர் அறைக்குள் நுழைந்து ' நீங்க கொடுத்த பத்திரிக்கையில் இருந்தது ' என்று கொடுத்தேன்.

அவர் அம்மா மகளை ஒரு பார்வை பார்த்தார்.
பொதுவாக சினிமாஉலகில் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் பெரிய ரகசியமெல்லாம் கிடையாது. ஒருவேளை அந்த அம்மாவே கூட அந்த இயக்குனருக்கு எழுதப்பட்ட கடிதத்தை மகளுக்கு Dictate செய்திருக்கலாம் . அதனால் என்ன இப்படி கவனக்குறைவாய் இருக்கிறாய் என்ற பார்வை தான் பார்த்தார்.

அந்த நடிகை நன்றியோடு என்னை பார்த்தார்.'தாங்க்ஸ் சார் ...ரொம்ப தாங்க்ஸ் சார் ...'
அவருக்கு தெரியும். என்னை தவிர வேறு யார் கைக்காவது போயிருந்தால் ரகசியம் அம்பலமாகியிருக்கும். கிசுகிசு பத்திரிகை செய்தியாக கூட வந்திருக்கும்.
அந்த நடிகை சின்னத்திரை ரேவதி என பின்னால் பிரபலமானார்!
இப்போது இரண்டு மூன்று வருடம் முன் பாலு மகேந்திரா என் கணவர் தான் என்று பேட்டி கொடுத்த மௌனிகா தான்.பாலு மகேந்திராவும் அவரை தன் இரண்டாவது மனைவி என்றே சொல்லிவிட்டார்.
இப்போது இந்த விஷயத்தை நான் எழுதுவதில் தவறில்லை தானே.



 

Sep 23, 2012

இரும்புமனிதர் மதுரை எஸ்.முத்து


திராவிட இயக்கத்தின் இரும்பு மனிதர் என்றும் அண்ணாவின் முரட்டுப்பிள்ளை என்றும் அறியப்பட்டவர் மதுரை எஸ்.முத்து.


அண்ணாத்துரைக்கு எல்லோரும் தம்பிகள். ஆனால் மூன்று பேர் பிள்ளைகள்.
மதுரை முத்து முரட்டுப்பிள்ளை!
அன்பில் தர்மலிங்கம் செல்லப்பிள்ளை!
மன்னை நாராயணசாமி அழுகினிப்பிள்ளை!

மதுரைமுத்து உடம்பில் உள்ள பல தழும்புகளைப் பற்றி மேடையிலேயே குறிப்பிட்டு கட்சியை வளர்க்க அந்தக்காயங்கள் எப்படிப்பட்ட சூழலில்,எங்கே,எப்போது ஏற்பட்டவை என்பதைப்பற்றி விரிவாக பேசுவார்.பேச்சில் சவடால் இருக்கும்.நகைச்சுவை இயல்பாக இருந்ததற்கு காரணம் இவர் வட்டார வழக்கில் இயல்பாய் பேசியது தான்.


தனிப்பட்டமுறையில் அவர் பிரமுகர்கள்,கட்சிக்காரர்கள்,உறவினர்களுடன் பேசும்போது கூட சட்டையை கழட்டி உடம்பில்,முதுகில் அரிவாள் வெட்டு தழும்புகளைப் பார்க்க சொல்லி நிறைய விவரங்கள் சொல்வார்.
 அரிவாளால் ஒருவன் தேனியில் தன் தலையை குறிவைத்து வெட்ட பாய்ந்த போது மதுரை முத்து தான் கையால் உடனே தடுத்து தன்னைக் காப்பாற்றியதாக எஸ்.எஸ்.ஆர் சொல்லியிருக்கிறார்.
திமுகவை விட்டு ஈ.வி.கே.சம்பத் பிரிந்தபோது மதுரையில் சண்டியர் முத்துவை எதிர்த்து தைரியமாக மாவீரன் பழ.நெடுமாறன் அரசியல் செய்ததைப் பற்றி கண்ணதாசன் வனவாசம் நூலில் எழுதியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு நீக்கப்பட்ட பின் மதுரை திலகர் திடலில் விளக்கக்கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் க.அன்பழகன்,மதுரை முத்து, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராஜாங்கம் வாழ்வு அப்போது சில மணி நேரங்களில் முடிய இருந்தது. இந்தக்கூட்டம் முடிந்து திண்டுக்கல் ரோட்டில் காரில் போய்க்கொண்டிருந்த போது மாரடைப்பில் திடீர் மரணம் அடைந்தார்.அதோடு அவர் இறப்பின் காரணமாக நடந்த இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் பிரமிக்கத்தக்க மிகப்பெரிய வெற்றியை அடைந்தார்.

ராஜாங்கம் தன் மரணத்தின் மூலமே எம்.ஜி.ஆரின் வெற்றி சரித்திரத்திற்கு பிள்ளையார் சுழி போடப்பட இருப்பதை அறியாமலே அன்று பேசிய பேச்சு “ நாம் இது வரை அசமந்தமாக இருந்து விட்டோம். இப்போது தான் கட்சியில் ஒரு விறுவிறுப்பு,சுறுசுறுப்பு ஏற்பட்டிருக்கிறது.
I Like this atmosphere very much. அன்று ப்ரூட்டஸ் சொன்னான். ‘We love Caesar. But we love our country more than Caesar.’ அதையே தான் நானும் சொல்கிறேன். எம்.ஜி.ஆரை விட திராவிடமுன்னேற்றக்கழகத்தை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். பல்ப்  நல்லாத்தான் எரிஞ்சிச்சி. இப்ப ஃப்யூஸ் போயிடிச்சி.அதான் தூக்கியெறிஞ்சிட்டோம்.
எஸ்.எஸ்.ஆரை ப் பார்த்து ஷூட்டிங் போறீங்களா திமுக மீட்டிங் வாறீங்களா என்றால் ’நான் திமுக மீட்டிங்குக்கு வாறேன்’ என்று தான் சொல்வார். ஆனால் எம்.ஜி.ஆரைப் பார்த்து மீட்டிங் வாறீங்களா என்று கூப்பிட்டால் ‘நான் ஷுட்டிங் போறேன்’ என்று தான் எப்போதும் சொல்வார்.

எனதருமை நண்பன் எஸ்.எஸ்.ராஜேந்திரனை திரையுலகை விட்டு விரட்டியதே இந்த எம்.ஜி.ஆர் தான்.’’

கணக்கு கேட்ட எம்.ஜி.ஆர் மேல் மதுரை முத்துவுக்கு கடும்கோபம்.

அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு நீக்கப்பட இரண்டு முத்துக்கள் காரணம் என்றே பத்திரிக்கைகள் எழுதின. ஒருவர் மதுரை முத்து,இன்னொருவர் மு.க.முத்து.கருணாநிதி மகனுக்கு கட்சியில் ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டது. கணக்கு கேட்கிறார் என்றதும் மதுரை முத்து எம்.ஜி.ஆருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவிட்டார். குமுதம் எம்.ஜி.ஆர் சஸ்பெண்ட் ஆனபோது ஒரு கார்ட்டூன் வெளியிட்டது. அந்த கேலிச்சித்திரம் இப்படி- அண்ணா படத்தை எடுத்துக்கொண்டு வெளியேறும் எம்.ஜி.ஆரைப் பார்த்து கருணாநிதி சுவற்றிலிருக்கும் மதுரை முத்து படத்தைக் காட்டி சொல்வார்.”என்னை இந்த அண்ணா காப்பாற்றுவார்.”

எம்.ஜி.ஆர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று செய்தி வந்த மாலைமுரசிலேயே மதுரை முத்து அறிக்கை “ என் உயிர் உள்ள வரை இனி நான் திமுக தான்” - For this relief much thanks என்று அர்த்தம்.

அந்த சூழ்நிலையில் மதுரையில் திமுகவின் முதல் கூட்டம்.

மதுரை முத்து.பேசியது “ டேய்! விசிலடிச்சான். உனக்கு ஒன்னு சொல்றேன். எம்.ஜி.ராமச்சந்திரன் ஒரு கோழை. படத்தில தான் ஒன் ஆளு வீரன். நிஜ வாழ்க்கையில் பயங்கரமான கோழை.போன பொதுத்தேர்தல்ல தேனிக்கு பிரச்சாரம் கிளம்பற நேரத்தில எம்.ஜி.ஆருக்கு ஒரு மொட்டை கடிதாசி.’நீ தேனிக்கு வந்தீன்னா கொல செய்வேன்’ன்னு எவனோ எழுதியிருந்தான். அதைப் படித்து விட்டு பேயடிச்ச மாதிரி எம்.ஜி.ஆர் முகமே விளங்கல. நான் சரி வாங்க தேனிக்கு கிளம்புவோம்னேன். அதுக்கு என்ன சொன்னான் தெரியுமா? கிழட்டுப்பய சொல்றான்யா-”என் ஃப்யூச்சர் என்னாகுறது?’’( இதை சொல்லும்போது முத்து வளஞ்சு நெளிஞ்சு நிற்கிறார் )  மாட்டேன்னுட்டான்ய்யா! இவனை நம்பி நீ திமுகவ விட்டுப்போகாத. எம்.ஜி.ராமச்சந்திரன் ஒரு பயங்கரமான கோழை.

நான் டீக்கடை வச்சிருந்தேன்.இத கிண்டல் பண்ணுறானுங்க.அந்தக்காலத்தில மெஜுரா மில்லில வேல பார்த்தேன். கட்சியில தீவிரமாயிருந்தேன்னு வேலைய விட்டு டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கெ.அப்ப டீக்கடை தான் வச்சிருந்தேன். இல்லங்கல.அன்பழகன் கூட மதுரை வந்தா என் கடையில டீ சாப்பிட்டிருக்காரு.டேய் விசிலடிச்சான் குஞ்சு! ஒனக்கு ஒன்னு தெரியுமா? ஒன் எம்.ஜி.ஆரு கும்பகோணத்தில அவன் மாமன் கடையில க்ளாஸ் கழுவியிருக்கான் அது தெரியுமா ஒனக்கு? க்ளாஸ் கழுவியிருக்கான்டா! (க்ளாஸ் கழுவுவது போல ஆக்சன் செய்து காட்டுகிறார்)
என் கார் மேல கல்ல விட்டா எவனாயிருந்தாலும் ஒன் வீட்டுக்கு வந்து தூக்குவேண்டா.(அப்போதுஅப்படி கல்லெறிந்த ஒரு ஆளை இவரே காரிலிருந்து இறங்கி விரட்டிப்பிடித்தார்!)

டே ராமச்சந்திரா! கணக்காடா கேக்கற. கணக்கு கேக்கறியா? போய் ஜெயலலிதா கிட்ட கேளுடா கணக்கு. இந்தி எதிர்ப்பு போராட்டத்தப்ப நாங்க எல்லாம் ஜெயில்ல இருந்தப்ப இவன் ஜெயலலிதாவோட கோவா வில இருந்தான்யா. (அப்போது ஆயிரத்தில் ஒருவன் பட சூட்டிங்கில் எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார்.)

க.அன்பழகன் அன்று பேசியது “ என் பொண்டாட்டி கூட என்கிட்ட கணக்கு கேட்டதில்ல. என்ன கணக்கு? இனிமே வேட்டிய அவுத்துத் தான் காட்டனும்.”
“மதுரையில் ’புரட்டு’ நடிகர் கட்சியை அழித்தே தீருவேன்,ஒழித்தே தீருவேன்” என்று மதுரை முத்து வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டார். 
’எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றிய வாலிபன் படம் வெளி வந்தால் சேலை கட்டிக்கொள்கிறேன்’ என்று பகீரங்க சவால் விட்டார்.
 உலகம் சுற்றும் வாலிபன் ரிலீசானபோது இந்த திராவிட இயக்கத்தின் இரும்பு மனிதருக்கு பல பார்சல்கள் வந்தன.அவ்வளவும் சேலைகள்!

 திண்டுக்கல் இடைத்தேர்தலில் அண்ணாதிமுக அமோக வெற்றி பெற்ற போது கருணாநிதி “ மதுரை மாவட்ட திமுக தலைமை, வேட்பாளர் தேர்வில் தவறு செய்து விட்டது” என்றார். பொன்முத்து ராமலிங்கம் பிரமலை கள்ளர் வகுப்பைச் சேராதவர். வெற்றி பெற்ற அண்ணாதிமுக வேட்பாளர் மாயத்தேவர் பிரமலை கள்ளர். இது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் செல்வாக்குக்கு கிடைத்த வெற்றி என்பதை மறைக்க கருணாநிதி இப்படி சொன்னார்.
மதுரை முத்துவுக்கு இதன் பிறகு கருணாநிதியோடு பிணக்கு ஏற்பட்டுவிட்டது.

மதுரை முத்து சிவகங்கையில் எம்.ஜி.ஆரை சந்தித்து அண்ணா திமுகவில் சரணடைந்தார்.எம்.ஜி.ஆர்  கட்டிப்பிடித்து அணைத்து முத்தண்ணனை  வரவேற்றார்.
கருணாநிதியிடமிருந்து விலகி நெடுஞ்செழியன்,மாதவன்,க.ராஜாராம்,பண்ருட்டி ராமச்சந்திரன்,எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்று கடுமையாக எதிர்த்தவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆரிடம் சரணடைந்தார்கள்!

நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்” என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரி இப்படி பலித்தது.

எம்.ஜி.ஆரை எந்த அளவு கடுமையாக சாடினாரோ அதை விடவும் கடுமையாக மதுரை முத்து அதன் பின் கருணாநிதியை சாடினார்.

முத்தண்ணன் அப்படி சாடிப்பேசும்போது எம்.ஜி.ஆர் சிரிப்பை அடக்க முடியாமல் தவிப்பார்.

தீப்பொறி ஆறுமுகம் மதுரைமுத்து பற்றி “ நான் மதுரை முத்துவை மதிக்கிறேன். அந்த ஆளு சண்டியரு.ஆனா சிகரெட் கிடையாது, குடிப்பழக்கம் கிடையாது,சீட்டு விளையாட்டு கிடையாது..பொம்பளை விசயத்திலயும் சுத்தமான ஆளு…ஆனா ஒன்னு…அடுத்தவன் பாக்கெட்டுல பணம் இருக்கறது தெரிஞ்சா எப்படியாவது லவட்டிடுவான்!”

மதுரை மாநகரின் முதல் மேயர். அதன் காரணமாக மதுரைக்கு திமுகவின் முதல் மேயர். மீண்டும் இரண்டாவதாக மேயராகவும் மதுரை முத்து தான் பதவியேற்றார். அதன் காரணமாக மதுரைக்கு அண்ணாதிமுகவின் முதல் மேயரும் இவரேயென்றானது.
ஆனால் அவரது கடைசி காலத்தில் அண்ணாதிமுகவிலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை.கட்சியில் புதிதாய் சேர்க்கப்பட்டு கொள்கை பரப்பு செயலாளராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்ட ஜெயலலிதா இவருக்கு show cause notice அனுப்பினார்.
இலங்கைப்பிரச்னையில் எம்.ஜி.ஆருடன் கருத்து வேறுபாடு.

பழ.நெடுமாறனோடு மேடையில் முத்து.
’இலங்கைத் தமிழர்களுக்கு உதவ தயங்கும் மத்திய மாநில அரசுகளை ஓடஒட விரட்டவேண்டும்’ என்று இந்திராகாந்தி,எம்.ஜி.ஆர் இருவரையும் மதுரைமுத்து கடுமையாக தாக்கியபோது மேலமாசி வீதியில் கரகோஷம் விண்ணைப்பிளந்தது.
இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சில நாட்களில் மதுரை முத்து மறைந்தார்.அப்போது எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் ப்ரூக்ளின் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தார்.ராஜ வைத்தியம்!
கா.காளிமுத்து இரங்கல் அறிக்கையில் “ எம்.ஜி.ஆர் உடல் நலம் பெற்று அமெரிக்காவிலிருந்து வந்த பின் “முத்தண்ணன் எங்கே?” என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்?” என்று வருத்தப்பட்டிருந்தார்.

ஒரு விஷயம்.


 என்னுடைய திருமணம் மதுரைமுத்து தலைமையில் தான் நடந்தது!

என்னுடைய திருமணம் மட்டுமல்ல. 
அதற்கும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் என் மாமனார் திருமணமும் கூட இந்த திராவிட இயக்கத்தின் இரும்பு மனிதர் தலைமையில் தான் நடந்தது!
 .....................................



ேற்றுப்பேசும் என் மாமார்

............................. 
என் மாமனாரும் அப்பாவும் மேயர் முத்துவுடன்
 



என் திருமணத்தின் போது என் தகப்பனாருடன் மதுரை முத்து!

...................................

http://rprajanayahem.blogspot.in/2008/08/ssr.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_05.html

Sep 22, 2012

இரண்டு நடிகைகள்

Nov 1, 2008

சரோஜா தேவி

சரோஜா தேவி! The most poetic Actress!

எஸ் எஸ் ஆர் சமீப குமுதம் ஒன்றில் சரோஜா தேவி அவருடைய திருமண பத்திரிகை கொடுக்க வந்த போது ' என்ன சரோஜா ? நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம் என்று இருந்தேன். இப்படி செஞ்சிட்டியே !' என்று ஜோக் அடித்ததாக குறிப்பிட்டிருந்தார் .

இது பரவாயில்லை.சிவாஜி கணேசன் சரோஜா தேவியின் மாப்பிள்ளையிடமே " நான் சரோஜாவை கல்யாணம் செய்யலாம் என்று நினைச்சிகிட்டு இருந்தேன். நீங்க முந்திட்டீங்க " என்று விவஸ்தையில்லாமல் ஜோக் அடித்து இருக்கிறார். இதை சரோஜதேவியே ஒரு பேட்டியில் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

டி ஆர் ராமண்ணா கூண்டுக்கிளி , புதுமைபித்தன் படங்களில்
தான் இயக்கிய பி.எஸ் சரோஜாவை இரண்டாவது திருமணம் செய்தார்.

பின்னர் தன் படத்தில் நடித்த இ.வி சரோஜாவை மூன்றாவது மனைவியாக்கி கொண்டார்.

அடுத்து ராமண்ணா 'மணப்பந்தல் ' படத்தில் சரோஜா தேவியை கதாநாயகியாக புக் செய்தவுடன் அவருடைய அக்கா டி ஆர் ராஜகுமாரி பதறி போய் ' டே உனக்கும் சரோஜா என்ற பேருக்கும் ரொம்ப வில்லங்கம் உண்டு . இவளையும் கல்யாணம் பண்ணிடாதே. சத்தியம் செய் ' என்று சொன்னதாக சொல்வார்கள்.

சரோஜா தேவி என்ற புனை பெயரில் யாரோ ஒரு ஆள் ஆபாச கதைகள் எழுதி அந்த காலத்தில் "சரோஜா தேவி புத்தகம் " ரொம்ப பிரபலம் .சிறுவனாய் இருக்கும்போது நீதி போதனை வகுப்பில் 'வாடாமல்லி ' என்ற சரோஜாதேவி புத்தகம் படிக்கும் போது நீதி போதனை ஆசிரியரிடம் மாட்டிகொண்டேன்.

பின்னர் அதே ஆண்டு பள்ளியிறுதி ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழாவில் நான் ' நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ! நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே !' பாடலை ஆர்கெஸ்ட்ரா வில் பாடினேன்.
  வில்சன் சார் 'டே, நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே' பாட்டை பாட நம்ம ஸ்கூல்லே வேற பயலே இல்லையாடா? என்னடா இவன் பாடுறான். devil quoting the bible!' என்று விழா முடிந்தவுடன் கிண்டல் பண்ணினார்.


சரோஜா தேவி கொஞ்ச நாள் முன் முன்னாள் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா விஷயத்தில் ஏன் பயங்கரமாக மூட் அவுட் ஆகி அழுது அழுது கண்ணீர் வற்றி சிரமப்படவேண்டியிருந்தது.
கிருஷ்ணாவின் இதயம் நிறைந்த இங்கித நினைவுகளில் சரோஜாதேவி!
  எவ்வளவோ வதந்திகள் நடிகைகள் பற்றி வரத்தான் செய்யும். இவர் அதைப்பற்றி ரொம்ப வேதனை பட்டிருக்க தேவையில்லை.

சாவித்திரியை மயிரிழையில் மிஞ்சி விட்டவர் சரோஜாதேவி. இவருக்கு கிடைத்த சான்ஸ் அப்படி.

எம் ஜி ஆர் கூட நடித்தவர்களில் எல்லோரையும் விட பொருத்தமாய் அமைந்த நடிகை சரோஜா தேவி மட்டுமே. நாடோடி மன்னன் துவங்கி அரசகட்டளை வரை.

சிவாஜியின் மணியான அத்தனை படங்களிலும் 'பாக பிரிவினை ' துவங்கி ஆலயமணி ,புதிய பறவை என்று எத்தனை படங்கள்.

ஜெமினி கணேசன் படங்கள் 'கல்யாண பரிசு ' முதல் ' பணமா பாசமா ' வரை.ஜெமினியை 'அண்ணா' என அழைப்பார் சரோஜா தேவி.

இப்படி Platform சரோஜா தேவி தவிர பிற நடிகைகளுக்கு கிடைக்கவில்லை. அதனால் ஏனைய நடிகைகளின் பொறாமைக்கும் உள்ளானவர்.
 சாவித்திரி பல சிக்கல்களை தன் வாழ்வில் சந்தித்து சிரமத்திற்கு உள்ளாகி தன் முடிவுகள் பலவற்றினால் தொழிலில் பிரச்னைகளை ஏற்படுத்தி கொண்டதால் அவரை சரோஜா தேவி ஓவர் டேக் செய்தார்.

சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா மூவரும் தமிழ் திரையின் குறிப்பிடத்தக்க சாதனையாளர்கள். நடனம் அவ்வளவாக தெரியாவிட்டாலும் தங்கள் நளினமான பாவனைகளால்,நடிப்பால் பத்மினியையே மிரட்டியவர்கள்.

பத்மினியின் நடிப்பில்மிகை, செயற்கை தனம் இருந்தது.

அறுபதுகளை தமிழ் திரையுலகில் முழுமையாக ஆக்கிரமித்தவர் சரோஜா தேவி. அதற்கு பின்னர் இவர் அளவுக்கு வேறு யாருக்கும், எந்த நடிகைக்கும் மேடை கிடைத்ததில்லை.
அபிநய சரஸ்வதி, கன்னடத்து கிளி.

இவருக்காக ஐம்பதுகளில் திரைப்பட சான்ஸ் தேடிய பத்மா சுப்ரமணியத்துக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். சில முயற்சிகள் சீரிய முயற்சிகள் என காலம் காட்டுகிறது !

....................

Oct 6, 2009



நடிகை விஜயகுமாரி

நடிகை விஜயகுமாரி பேட்டி சமீபத்தில் கலைஞர் டி வி யில் பார்க்க நேர்ந்தது . இளமை இவரிடம் எப்படி இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
அவர் காலத்து சரோஜா தேவியை விட இப்போது ரொம்ப அழகாக தெரிகிறார்.
 கே ஆர் விஜயா தொப்பையும் ,தோற்பையுமாக கழன்று போய்விட்டார்.
பின்னால் வந்த ஜூனியர் நடிகை 'கலர்' காஞ்சனா இப்போது முழுக்கிழவி. ராஜஸ்ரீ யும் உருக்குலைந்து போன நிலை.
இவ்வளவு ஏன் இவர் கதாநாயகியாய் நடித்த ஜீவனாம்சம் படத்தில் அறிமுகமான லக்ஷிமியை இப்போது கமலின் ' உன்னைப்போல் ஒருவன் ' படத்தில் காண சகிக்கவில்லை.
 இன்று கடந்த சிலவருடங்களுக்கு முன் வந்த நடிகைகளே எத்தனை பேர்
குண்டி, கை,நெஞ்சி,மூஞ்சி சுருங்கி வத்திப்போய் அல்லது ஊதிப்பெருத்து யாளி போல விகாரமாக தோற்றமளிக்கிறார்கள்.

ஆனால் விஜய குமாரி அப்படியே இளமையுடன் இருக்கிறார்!

'எங்க வீட்டுக்காரர் ' என்று எஸ்.எஸ். ஆர் பற்றி இன்னமும் குறிப்பிடுவது சோகம் தான். அவர் எப்போதோ முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இவரை விட்டு விட்டு தாமரை செல்வி என்ற பெண்ணை மணந்து பிள்ளை குட்டி என்று ஒதுங்கி விட்டார். அல்லது விஜயகுமாரி ஒதுங்கிகொண்டதால் மூன்றாவது திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார் என்று கூட சொல்லலாம்.
 இலட்சிய நடிகருடன் வாழ்வு கசந்து பிணக்கு ஏற்பட்டதை, பின்னால் பிரிவு தவிர்க்கமுடியாதது என்பதை அவருடைய தலைவர் சி.என். அண்ணாத்துரையிடம் நேரில் தான் விளக்கியதைப்பற்றி அந்த காலத்தில் ஒரு பேட்டியில் நடிகை விஜய குமாரி கூறியிருந்தார்.

விஜயகுமாரி மகன் ரவி நடிகர் விஜயகுமார் மூத்த மகளை (மஞ்சுளா மகள் அல்ல)திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார்.

நிம்மதி இல்லை என்று நடிகைகள் எப்போதும் சொல்வதை டி வி பேட்டியில் விஜயகுமாரி அடிக்கடி சொன்னார் .'தலையில் குத்து ,முதுகில் குத்து , நெஞ்சில் ஏகப்பட்ட குத்து 'என்று அதை அப்படி தன் கையால் குத்தி செய்து காட்டினார்.
பிரச்னைகள் !The intray is never finished. யாருக்குமே தான் உயிர் உள்ளவரை!

சினிமாவில் செயற்கைத்தனம், நாடகத்தனம் விஜயகுமாரியிடம் உண்டு. இயல்பாக துருதுருப்பு,படபடப்பு அதிகம் உள்ளவர் என்பதால் கொஞ்சம் மிகை நடிப்பு. பத்மினி கூட கொஞ்சம் மிகையாகத்தான் நடிப்பார்.

பூம்புகார் படம் பற்றியும் கண்ணகி சிலைக்கு மாடல் தான் தான் என்பதிலும் விஜயகுமாரிக்கு மிகுந்த பெருமிதம்.


இவர் பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர்.
ஸ்ரீதர் " கல்யாண பரிசு ".
கே .எஸ் . கோபாலகிருஷ்ணன் முதல் படம் " சாரதா " விஜயகுமாரி படங்களில் மாஸ்டர் பீஸ்!

பி . மாதவன் முதல் படம் " மணியோசை " யில் விஜயகுமாரி தான் கதாநாயகி .

ஆரூர் தாஸ் இயக்கிய முதல் படம் "பெண் என்றால் பெண் " படத்திலும் நடித்துள்ளார்.

அன்று பேட்டி கொடுக்கும்போது அவர் நினைவில் வர மறுத்த படம் "ஜீவனாம்சம் ". மல்லியம் ராஜகோபால் இயக்கிய முதல் படம் . அதிலும் இவர் கதாநாயகி.

இன்னொன்று இவர் நடித்த கதாப்பாத்திரங்கள் பெயர் அப்போது படங்களின் பெயராக வைக்கப்பட்டிருக்கிறது.

சாரதா,
சாந்தி,
ஆனந்தி,
பவானி
போன்ற படங்கள்.

கற்பகமும் இவருக்கு வந்தது தான். ஆனால் எஸ் எஸ் ஆர் தனக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே கற்பகமாக விஜயகுமாரி நடிக்க அனுமதி தரமுடியும் என்று பிடிவாதம் பிடித்ததால் கே.ஆர். விஜயா என்ற நடிகை கற்பகமாக தமிழ் திரையில் அறிமுகமானார் !
கே எஸ் ஜி " இந்த விஜயா இல்லாவிட்டால் இன்னொரு விஜயா " என்று சவால் விட்டு கே ஆர் விஜயாவை நடிக்க வைத்தார்.

எம்.ஜி.ஆருக்கு காஞ்சித்தலைவன் படத்தில் தங்கையாக நடித்திருக்கிறார்.
விஜயகுமாரியுடன்  ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்த போது எம்.ஜி.ஆர் மறுத்தார். அவர் சொன்ன காரணம் “ விஜயகுமாரி என் தம்பியின் மனைவி. அதனால் ஜோடியாக நான் நடிக்கக்கூடாது.”


இலட்சிய நடிகை என்ற பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள விஜயகுமாரி கொடுத்த விலை இப்படி மிக அதிகம்.


சாவித்திரி, சரோஜாதேவி, பத்மினிபோன்றவர்கள் பிறமொழியில் இருந்து தமிழுக்கு வந்து அளப்பரிய சாதனை புரிந்தார்கள். அவர்களிடையே தமிழை தாய் மொழியாக கொண்ட நடிகை விஜயகுமாரி ஓரளவு சாதனை புரிந்தவர்.


மனோரமா எப்போதும் தமிழக முன்னாள் இந்நாள் முதல்வர்களுடனான தன்னுடைய rapport பற்றி பெரிதாக சொல்லிக்கொள்வார்.
ஆனால் விஜயகுமாரி தான் இப்படி பெருமைப்பட்டுக்கொள்ளும் முதல் தகுதி கொண்டவர்! வி. என்.ஜானகி யின் கிச்சன் கேபினட் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர். எஸ்.எஸ்.ஆர் அவர்களின் அப்போதைய அரசியல்,சினிமா அந்தஸ்து காரணமாக அண்ணாத்துரை, கருணாநிதி, ஜெயலலிதா அனைவரும் இவர் வாழ்வில் முக்கியமானவர்கள்.

பல வருடங்களுக்கு முன் மணியனின் 'இதயம் பேசுகிறது ' வாரப் பத்திரிகையில் இவர் தன் வாழ்க்கை தொடரை பரபரப்பாக எழுதினார் . அப்போது அவர் நெஞ்சில்,தலையில்,முதுகில் விழுந்த குத்துகள் பற்றி நிறைய குறிப்பிட்டார். பகீரங்கமாக.
அவற்றில் ஒன்று : எஸ் . எஸ் .ஆர் எடுத்த மணிமகுடம் திரைப்படம் பற்றியது . வெளிப்புற படப்பிடிப்புக்கு கொடைக்கானல் சென்ற
எஸ். எஸ்.ஆர். இவரை அந்தப்படத்தில் நடித்த போதும் சென்னையில் ஒதுக்கி விட்டு விட்டு அந்த படத்தில் நடித்த மற்றொரு நடிகையுடன் சென்றார் என்கிற விஷயம்.



Sep 21, 2012

டூரிங் டாக்கீசும் அமெரிக்கன் சென்டரும்

Feb 18, 2009

 

  டூரிங் டாக்கீஸ் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். கழுத்தில் தங்க செயின்,மோதிரம், உடை - ஜீன்ஸ் பேன்ட்,டி ஷர்ட் தரை டிக்கெட்டில் மணலில் உட்கார்ந்து தான் பார்ப்பேன். டூரிங் டாக்கீஸ் என்றாலே மணலில் திரை முன்னால் பக்கத்தில் அமர்ந்து பார்ப்பது தான் சுகம். அப்படி ஒரு முன்னூறு தடவை கல்லூரி நாட்களில், அதன் பின் கூட பல பழைய படங்கள் தத்தனேரி மாருதி, விளாங்குடி ரத்னா டூரிங் டாக்கீஸ் ரெகுலர் தரை டிக்கெட் கஸ்டமர் நான்.

ஒரே ப்ரொஜெக்டர் தான் என்பதால் மூன்று முறை இடைவேளை!


அப்படி விளாங்குடி ரத்னா தியேட்டர் ' அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ' படம் பார்க்க போயிருந்தேன்.
இந்த படம் ஏற்கனவே பலமுறை பார்த்த படம் தான்.

பழைய படங்களில் வருகிற துணை நடிகர்கள் சாதாரணமாக மக்களுக்கு தெரியாத நடிகர்களை கூடயார் எவர் என நன்கு நான் தெரிந்து வைத்திருப்பேன். உதாரணமாக பூபதி நந்தாராம் அந்த அலிபாபா படத்தில் ஒரு துணை வில்லன். இவர் பின்னால் 'லாரி டிரைவர்' என்ற ஆனந்தன் நடித்த படத்தில் கூட துணை வில்லன். அப்போது நான் விளாங்குடி தியேட்டர் போயிருந்த போது 'இவர் உயிருடன் இல்லை. இவர் மகன் சுரேந்தர் என்பவர் 'சுதாகர் ' போன்ற நடிகர்களுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தார்' என்பது வரை எனக்கு தெரியும்.

தரையில் அமர்ந்து படம் பார்த்துகொண்டிருந்த போது அப்போது அறுபது வயது மதிக்க தக்க பெரியவர் ஒருவர் என்னிடம் அந்த படத்தின் காட்சிகள் பற்றி விளக்க ஆரம்பித்தார்.
 சாதாரணமா ' சும்மா பேசாம படத்தை பாரு பெருசு. நாங்க பார்த்த படம் தான். எங்களுக்கே கதை சொல்றியா போய்யா ' என்று தான் மற்றவர்கள் சொல்லியிருப்பார்கள். ஆனால் நான் அந்த பெரியவரை கனப்படுத்த விரும்பி விட்டேன்.

 தங்கவேலு வரும்போது பாமரன் போல ' இவன் நம்பியாரா ' என்பேன் . அவர் குஷியாகி விட்டார் . 'இல்லே. இவன் சிரிப்பு நடிகர் தங்கவேலு ' என்று எனக்கு அறிவுறுத்தினார்.


வீரப்பாவை  ' இந்த ஆள் யார் ' என்பேன். அவர் புளகாங்கிதமாக ' இவனை தெரியாதா. வில்லன் வீரப்பா. நீ வஞ்சிகோட்டை வாலிபன் பார்த்ததில்லையா ? நாடோடி மன்னன் பார்த்ததில்லையா ?' மடையனை பார்ப்பது போல என்னை கேட்டார்.

வீரப்பாவுக்கும் எம்ஜியாருக்கும் ஒவ்வொரு முறை சண்டை வரும்போதும்  பதட்டத்துடன் ' எம்ஜியார் செத்துடுவாரா ?அயோக்கியன் எம்ஜியாரை கத்தியால குத்திடுவானா ' என அவரிடம் என் சந்தேகத்தை கேட்டுக்கொண்டே தான் இருந்தேன்.
அவர் ' எம்ஜியார் எப்பவுமே சாக மாட்டார். கடைசியா வில்லனை கொன்று விடுவார். கவலைபடாதே . பேசாம படத்தை பார் ' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் கதையை முன்னதாக சொல்லிகொண்டிருந்தார்.

பானுமதியை 'யார் ஜெயலலிதாவா இது ?' -நான் அவரை வினவினேன். அவர் ரொம்ப குஷியாகி எனக்கு பல பாலபாடங்கள் சொல்ல ஆரம்பித்தார்.

சக்ரபாணி எம்ஜியாரின் கூட பிறந்த அண்ணன் என அவர் சொன்ன போது நான் 'அப்படியா கூட பிறந்த அண்ணனே படத்திலும் அண்ணனா வர்றாரே!' என அதிசயப்பட்டு ஆச்சரியப்பட்டு கதை சொன்ன பெரியவருக்கு ஜென்ம சாபல்யம் கொடுத்து விட்டேன்.

தியேட்டரின் மூன்று இண்டெர்வெல் போதும் அவருக்கு கடலை மிட்டாய், முறுக்கு,டீ வாங்கிக்கொடுத்து படத்தின் கதையின் போக்கு பற்றி என் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்கொண்டே தான் இருந்தேன்.

என் கூட வந்த நண்பர்களுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை.
நான் ' காரியத்தை கெடுத்து விடாதீர்கள் . அவருக்கு இந்த சந்தோசம் தருவது இன்று என் கடமை ' என்று எச்சரிக்க வேண்டியிருந்தது.

க்ளைமாக்ஸில் ' எம்ஜியார் செத்துடுவாரா ' என்று மீண்டும் பதற ஆரம்பித்தேன். ' சாக மாட்டார். இப்ப வேடிக்கையை பாரு. வீரப்பா ஆள் காலி! ' பெரியவர் தேறுதல் சொன்னார்.

படம் முடிந்தவுடன் விளக்கை போட்டவுடன் பெருமையாக என்னை பார்த்தார். அவர் தான் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தை தயாரித்து இயக்கியவர் போல அவர் முகத்தில் பெருமிதம்! " நான் இல்லையின்னா உனக்கு இன்னைக்கு இந்த படம் தலையும் புரிந்திருக்காது. வால் கூட தெரிஞ்சிருக்காது."
வெளியே வரும்போது சொன்னார் " பழைய படம் நிறைய பார்த்தேன்னா புது படங்களே பார்க்க மாட்ட "

அதற்கு மறு நாள் சென்னை சென்றேன்.
அமெரிக்கன் சென்டெரில்  ஹாலிவுட் நடிகை கோல்டி ஹான் நடித்த  Steven Spielburg இயக்கிய The Sugarland Express என்ற நகைச்சுவை படம் இரண்டாம் நாள் பார்க்க கிடைத்தது. அந்த படத்தையும் என்னால் இன்று வரை மறக்க முடியாது. ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த சினிமா பின்னணி பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் தற்செயலாக எனக்கு அடுத்த சீட்டில் அமர்ந்து The Sugarland Expressபடத்தை பார்த்தார் என்பதால்.

அவர் பாடிய "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favorite song! கல்லூரி காலங்களில் ,அதன் பின் கூட பல திருமண மேடைகளில் ஆர்கெஸ்ட்ராவில் ஒரு நூறு தடவையாவது பாடியிருக்கிறேன்.அமெரிக்கன் கல்லூரிமரத்தடி,வைகையாற்று மணல், பூங்காக்கள்இவற்றில் 'நண்பர்களுக்காக இந்த பாடலை சிலநூறு தடவை பாடியுள்ளேன். இந்த "காதல் நிலவே " பாடல் எங்காவது கேட்கும்போது என் ஞாபகம் வருகிறது என நண்பர்களும் உறவினர்களும் இன்று கூட சொல்கிறார்கள்.

பி பி ஸ்ரீநிவாஸ்பாடிய "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favorite song என்பதை நான் அவரிடமே அன்று அமெரிக்கன் சென்டரில் படம் ஆரம்பிக்கும் முன் சொன்ன போதுபுன்னகையுடன் ரொம்ப சந்தோசமாக " Thank You!Thank You!"என்றார்.
படம் பார்க்கும்போது அவர் என்னிடம் அதிகம் பேசவில்லை.The Sugarland Express படத்தை பார்ப்பதில் இருவருமே ஒன்றி போய்விட்டோம் என்பது தான் உண்மை.
.......

Sep 20, 2012

ஜெயந்தன்


ஜெயந்தன்  எழுத்து பற்றி கரிசல் இலக்கிய மன்னர் கி.ரா பரவசமாகச் சொன்னார்:"வசமான கை!"

’சம்மதங்கள்’,‘அரும்புகளை’ போன்ற சிறுகதைத்தொகுப்புகள், ’பாவப்பட்ட ஜீவன்கள்’ நாவல்.’முறிவு’ என்று ஒரு குறு நாவல்.

ஜெயந்தனின்’நினைக்கப்படும்’ நாடகத்தில் குழந்தைக்கு பாலூட்டும் ஒரு பெண் சொல்வாள் : அப்பனும் மகனும் மொடாக்குடியனுக!


ஜெயந்தன் ’குணா’ என்று ஒரு சிறுகதை குமுதத்தில் எழுதினார். அதில் அசோகமித்திரனின் ‘உண்மை வேட்கை” சிறுகதைத் தொகுப்பை பற்றி எழுதியதை படித்து விட்டு அந்த புத்தகத்தை உடனே வாங்கி முதன் முதலாக நான் அசோகமித்திரனை படிக்க ஆரம்பித்தேன்.

இன்றைக்கு இருபத்து நாலு வருடங்களுக்கு முன்(14-12-1988) ஜெயந்தன் எனக்கு எழுதிய கடிதம் மீண்டும் வாசித்த போது வெகுநேரம் செயலோயச் செய்துவிட்டது.

மறைந்த ஜெயந்தனை நான் அந்தக்காலத்தில் சித்தப்பா என்று தான் அழைப்பேன். சொந்தக்காரரோ என்று நினைத்து விடவேண்டாம்.இன்று அப்படி ஒரு வாசகன் உறவு கொண்டாடமுடியுமா என்று தெரியவில்லை.

ஜெயந்தன் எப்படி ராஜநாயஹம் பற்றி மதிப்பிட்டார்: ’வாசீக கலாநிதி’ என்ற ஒரு பட்டம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் உண்மையில் அதன் பொருள் தெரியாது. ஆனால் உங்களுக்கு ‘ வாசகக் கலாநிதி’ என்ற பட்டம் கொடுப்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை.மனுஷன் இப்படியா படித்திருப்பீர்கள்! அவ்வளவு விபரம் கொண்டவராகக் கருதப்படாத என் முதலாளியம்மா கூட (உலக வழக்கில் இந்த முதலாளியம்மாவை என் மனைவியென்று சொல்வார்கள்.உங்கள் அருமை சித்தி தான்!) வியந்து போய்,”இவரென்ன இவ்வளவு படித்திருக்கிறார்,பேசாமல் பத்திரிக்கைகளுக்கு எழுதச்சொல்லுங்கள்,அல்லது புத்தகம் போடச்சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். நான் தான் ”வேண்டாம் வேண்டாம்,அது ஏற்கனவே குதிக்கிற சாமியாக இருக்கிறது, நாம் வேறு சாம்புராணி போட்டு விடவேண்டாம்.முதலில் வாழ்க்கையில் செட்டில் ஆகட்டும். அப்புறம் எழுதட்டும்.இவ்வளவு படிப்பும் சிந்தனையும் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் தன் உருக்கொள்ளாமல் எப்படிப் போகும்” என்று சொல்லி விட்டேன்.’

தன்னுடைய அந்தரங்கமான விஷயங்களைக்கூட என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
“மனசுக்கு புத்தியில்லை.
ஓடி ஓடிப்போகிறது
அவள் பின்னால்.
மூளை கூப்பிடக் கூப்பிட.
இழுத்து வந்து
செருப்பால் அடித்து
கட்டிப் போடுவதே இங்கு
தொழிலாய்ப் போச்சு”

’மேலே உள்ள கவிதை கூட  சமீபத்தில் என் சிறுகதை வகுப்புக்கு வந்த அம்மாள்-மாணவி ஒருவரின் உபயம் தான்.(வெட்கக்கேடு,வெளியே சொல்லி விடாதீர்கள்)’

அவர் அன்று எழுதினார்-” நமது ஒழுக்க நியதிகள் இயற்கையோடு ஒட்டியிருக்கவில்லை.எதிர்நீச்சல் போடப்பார்க்கின்றன. எதிர்நீச்சல் எந்தவகையிலும் புத்திசாலித்தனம் அல்ல.நமது எல்லா தோல்விகளுக்கும் துயரங்களுக்கும் இது தான் காரணம்.குறைந்த பட்சம் நாம் நமது ஒழுக்க நியதிகளை ‘இயற்கையை ஒட்டி’ என்கிற அளவுக்கு குறைத்துக்கொள்ளவேண்டும்.”


அப்போது அவர் எழுதிக்கொண்டிருந்த ‘மனுஷி’ நாவல் பற்றி எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட விஷயம்:
“Extra Marital relationship க்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன- காதலில் இருந்து-why not என்ற கேள்வி வரை. ஒரு சுவாரசியமான விஷயம். எனது அவ்வளவாக படிக்காத கதாநாயகி இந்த why not என்ற கேள்வியை எப்படிக் கேட்பாள்?
 அசோகமித்திரன் அவர்களோடு பேசும்போது சொன்னேன்:அவள் சொல்கிறாள்,”அதா...அதென்னா பெரிய விஷயம் கொழுந்தனாரே.”
அசோகமித்திரன் கொஞ்சம் வியந்து போன மாதிரி தான் இருந்தது.’அப்படியே சொல்றாளா?’என்றார். பின்பு ‘எழுதுங்கள்.இது ஒரு யுனிவர்ஸல் தீம் என்றார்.அதோடு ஒரு யோசனையும் சொன்னார்.’இனிமேல் இந்தக் கதையை யாரிடமும் சொல்லவேண்டாம்.ஏனென்றால் ஒரு கதையை இரண்டு மூன்று தடவை சொன்னீர்கள் என்றால் அவ்வளவு தான் கதையென்று உங்களுக்குள் தீர்மானமாகி விடும். இந்த நாவலில் நிறைய in roadsற்கு வழியிருக்கிறது.அவ்வளவையும் எழுதுங்கள் ‘ ”

அவர் ‘உட்கார்ந்து ‘ எழுதிய கவிதை ஒன்று பற்றி எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்-”அது நான்காயிரத்து நானூறு வரிகள் கொண்டது, ஒரு நவ காவியம். புதுக்கவிதையில் மிக நீண்ட படைப்பு இதுவே என்று நண்பர்கள் சொல்கிறார்கள்.எழுதி சரியாக மூன்று வருடமாகிறது. திலீப்குமார்,பரிக்‌ஷா ஞாநி,புவியரசு (புவியரசு முன்னுரை தந்திருக்கிறார்) எல்லாம் அதைப் பிரசுரம் செய்யலாம் என்று சொல்லியும் எனக்குள் ஏனோ தயக்கம்.இன்னும் அதை சரியாகச் செய்ய வேண்டுமோ என்று.ஆச்சு, 3 வருஷம் ஆகிவிட்டதால்,அதை எழுதும்போதிருந்த ஜெயந்தன் இப்போது இல்லாததால்,இப்போது என்னால் அதை மூன்றாவது மனிதன் படைப்பாக பார்க்க முடியும் என்பதால்...”

ஜெயந்தனுக்கு  பழனியில் கா.தங்கத்துரை என்று ஒரு தீவிர வாசகர் இருந்தார்.
அந்த நேரத்தில் தங்கத்துரை  என்னிடம் சொல்வார்.”அவருக்கு சாகித்ய அகாடமி விருது விரைவில் கிடைக்கும். அப்போது தான் ஜெயந்தனை நேரில் சந்திப்பேன்.”




http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_10.html

Sep 19, 2012

மாவீரன் லல்லுபிரசாத் யாதவ்


Sep 11, 2009

லல்லுபிரசாத் யாதவ் இந்திய பிரதமரிடம் சொன்னார் -
'' பல வகைகளில் என் திறமையை என்னால் நிரூபிக்க முடியும்.''

ஜெகஜீவன் ராம் இருபத்தைந்தாண்டுகள் அரசாங்க உத்தியோகம் பார்ப்பது போல காங்கிரஸில் இருந்து மந்திரி உத்தியோகம் பார்த்தவர். எமெர்ஜென்சி காலத்திலும் மத்திய மந்திரியாய் இருந்து விட்டு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கடைசியில் கட்சியை விட்டு வெளியேறி
'Congress for Democracy ' கட்சி ஆரம்பித்து ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து இந்திரா காந்தியை எதிர்த்தவர்.
அப்போது " இந்தியாவின் பிரதமர் ஆவீர்களா?" என நிருபர்கள் கேட்ட போது பவ்யமாய், அடக்கமாய் சொன்னார் : “I never shirk any responsibility this country wants me to shoulder.” இன்றைய பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமாரின் தந்தை.

அந்த காலத்தில் ஜெகஜீவன் ராம் சொன்ன அந்த வார்த்தைகளையும் ஆங்கிலத்திலேயே லல்லு மனப்பாடம் செய்து பிரதமரிடம் ஒப்பித்தார். :
“I never shirk any responsibility this country wants me to shoulder.”

கேபினெட் மந்திரி பதவி தனக்கு வேண்டும் என்ற தீரா அவா காரணமாக லல்லு மன்மோகன் சிங்கிடம் அடிக்கடி அழுத்தமாக இந்த வார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருந்தார். 'தேசத்திற்காக பதவி என்னும் பாரமான சிலுவையை சுமக்க ஆயத்தமாய் இருக்கின்றேன்.தங்கள் சித்தம் என் பாக்கியம் '

ராகுல் காந்தியிடம் லல்லுவின் இந்த அனத்தலை எப்படி சமாளிப்பது என பிரதமர் கலந்து ஆலோசித்தார். ராகுல் காந்தி பதில் :'மூன்று போட்டிகளில் லல்லு ஜெயித்தால் நாம் அவரை காபினெட் மினிஸ்டர் ஆக்கி விடலாம். அவர் சாதனை செய்த ரயில்வே துறையையே அவருக்கு தந்து விடலாம். '

போட்டி பிஹாரில் பிஹாரிகள்முன்னிலையில்.
பிஹாரிகள் பல்’லாயிரக்கணக்கில் கூடிவிட்டனர. எப்படியாவது லல்லு ஜெயித்து மத்திய மந்திரி ஆகிவிடவேண்டுமே!

மூன்று கூடாரங்கள். மூன்று போட்டி. மூன்றிலும் லல்லு வென்றாக வேண்டும்.
1 .முதல் கூடாரத்தில் ஒரு மது பாட்டில் . காக்டைல் சரக்கு.கடுமையானது. ஒரு மூன்று அவுன்ஸ் குடித்தாலே பயங்கரமாக ஏறிவிடும் . ஆனால் இந்த பாட்டிலில் முப்பது அவுன்ஸ். விஸ்கி,ரம்,பிராந்தி, எல்லாம் கலந்த மது பாட்டில். அந்த மது கலவையை raw ஆக மிச்சம் வைக்காமல் முழுதாக குடித்து விடவேண்டும்.
2. இரண்டாவது கூடாரத்தில் ஒரு சிங்கம் . பல்வலியால் துடிக்கிறது. அதன் சொத்தை பல்லை பிடுங்க வேண்டும்.
3.மூன்றாவது கூடாரத்தில் ஒரு வீராங்கனை. கராத்தேயில் பல மெடல்கள் வாங்கியவள். அவளுடன் உடலுறவு கொள்ளவேண்டும். ஆனால் அவள் சம்மதிக்கவே மாட்டாள். எங்கணமாயினும் அந்த பெண்ணை புணர்ந்து விடவேண்டும்.

கவனமாக மூன்று போட்டிகளையும் லல்லு மூளையில் ஏற்றிக்கொண்டார்.
பொதுவாக என் மனசு தங்கம்! ஒரு போட்டியின்னு வந்து விட்டா!

லல்லு முதல் கூடாரத்தில் நுழைந்து முழு பாட்டிலையும் காலி செய்ய இருபது நிமிடங்கள் ஆயிற்று.
கூடாரத்தை விட்டு வெளியே வந்தார். பிஹாரிகள் ஆரவாரம் விண்ணை பிளந்தது என்றால் மிகையாகாது.
பயங்கர போதையில் சிறுமூளை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கையை அசைத்து பாராட்டுக்களை லல்லு பெற்றுக்கொண்டு இரண்டாவது கூடாரத்திற்குள் தைரியமாக நுழைந்தார்.

சிங்கம் கர்ச்சனை.
" டே அயோக்கியா !" கோபமாக சிங்கம் போராடும் சத்தம்.
" என்னை விடுறா " சிங்கத்தின் பயங்கர கூப்பாடு.
"கொலை வெறி ஆயிடுவேண்டா "
" ச்சீ .. ச்சீய் .. அசிங்கம் பிடிச்சவனே ..விடுறா என்னை ..
உங்கொப்பன் மகனே நான் ஆம்பள சிங்கம்டா "

பிஹாரிகள் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்கள்.

'' அவசரத்துலே அன்டாக்குள்ளேயே கை போகாது. சிங்கம் வாய்க்குள்ளே சொத்தைப் பல்லு. நல்ல போதையிலே கவனமா எப்படி புடுங்கப் போறாரோ தெரியலெயே.லல்லுவுக்கு உயிராபத்து ஏற்பட்டு விடக்கூடாது கடவுளே! பொல்லாத சிங்கம் அவரை கொன்று விடக்கூடாது.''

கடைசியில் பல நிமிடங்கள் நிசப்தம். ஒரே சஸ்பென்ஸ்.கூடாரத்தினுள் என்ன ஆயிற்று..?
முப்பது நிமிடம் கடந்தது. லல்லு இரண்டாவது கூடாரத்தில் இருந்து ரொம்ப களைப்பாக தள்ளாடியவாறு வெளியே வந்தார். பிஹாரிகள் கரகோஷம் மீண்டும் விண்ணைப் பிளந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ!

லல்லு வணங்கிய பாவனையில் தலைகுனிந்து ,கையை கூட்டத்தை நோக்கி ஆட்டி விட்டு குழறியவாறு கேட்டார் " அந்த பல்லு பிடுங்கவேண்டிய பொம்பளை எங்கே ? "


அந்தோ! மத்திய மந்திரி பதவி கை நழுவி விட்டது.
A slip between the cup and lip!
அறியப் படும் நீதி : குடி போதையில் குழப்பமில்லாமல் முக்கிய காரியங்களை, சவால்களை திட்டமிடுதல் மிகவும் சிரமம். வெற்றிகரமாக சவால்களை ஜெயிப்பதும் துர்லபம்.

ராகுல் காந்தி   முதல் போட்டியாக மது பாட்டிலை வைத்தது அதனால் தான். என்ன ஒரு மாபெரும் திருப்பம் எனில், முதல் கூடாரத்திலேயே லல்லு flat ஆயிடுவார்னு தப்பு கணக்கு ... ம்ம் ..ராகுல் தப்புகணக்கு நிறைய போடக்கூடிய ஆள் தானே!

.....

இந்த' பல்லு புடுங்க வேண்டிய பொம்பளை ' ஜோக் ரொம்ப ரொம்ப பழசு. ஓஷோ ரஜ்னீஷ் சொன்னது.ஆனால் மறைந்த சுஜாதா சில வருடங்கள் முன் இந்த ஹைதர் காலத்து அரத பழசை பெரிய பத்திரிகையில் எழுதி மகிழ்ந்திருந்தார்.

இப்போது இங்கே என்னால் 'இந்திய அரசியல் சாயம்' பூசப்பட்டு வேற்றுரு கொண்டு விட்டது . Art Buchwald இந்த பாணியில்தான் அந்தக்காலத்தில் அமெரிக்க அரசியல் பற்றி எழுதுவார்.


அவமானம் தாங்க முடியாமல் குன்றிப்போய்,தன் கற்பை காப்பாற்ற போராடிய சூழ்நிலையில், லல்லுவை நோக்கி கர்ஜித்த சிங்கத்தின் கோப ஆவேச வசனங்கள் ரீப்ளே :-
" டே அயோக்கியா !"
" என்னை விடுறா "
"கொலை வெறி ஆயிடுவேண்டா "
" ச்சீ .. ச்சீய் .. அசிங்கம் பிடிச்சவனே ..விடுறா என்னை ..உங்கொப்பன் மகனே நான் 'ஆம்பள' சிங்கம்டா "