Share

Sep 6, 2012

எம்.ஜி.ஆர் பேச்சு


விஜயா கார்டனில்  தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கம் (SIFDA)நடத்திய திரைப்படத்தொழிலாளர் சம்மேளன விழா. எம்.பி.சீனிவாசனின் இசை நிகழ்ச்சியுடன் ஆரம்பித்தது. சீனிவாசன் இசையமைப்பாளர். அக்ரஹாரத்தில் கழுதை படத்தில் எம்.பி.சீனிவாசன் தான் protagonist.

முதல்வர் எம்.ஜி.ஆர் விழாவுக்கு வருகிறார் என்பதால் விஜயா கார்டன் களையுடன் இருந்தது. எம்.ஜி.ஆர் படங்கள் இயக்கிய பல இயக்குனர்கள் உள்பட அப்போது ஃபீல்டில் இல்லாத பல டெக்னீசியன்கள் உட்பட நிறைய கலைத்துறை பிரபலங்கள் ஆஜர்.
எம்.ஜி.ஆர் வந்தார். மேடையேறினார். விஜயாவாஹினி அதிபர் நாகிரெட்டி மேடையேறிவிட்ட எம்.ஜி.ஆரின் காலில் விழ முயற்சி செய்தார். எம்.ஜி.ஆர் காலில் நாகிரெட்டி விழுந்து விடக்கூடாது என்ற  கெட்டியாக பிடித்துக்கொண்டார். விஜயாவாஹினி அதிபரோ எப்படியாவது காலில் விழுந்தே தீர்வேன் என்று கடும் பிரயத்தனம் செய்தார். எம்.ஜி.ஆர் அவர் முயற்சி ஈடேறி விடாமல் தன் கைகளால் lock செய்து விட்டார். எப்படியோ சரிந்து காலில் விழுந்து எழுந்தார் நாகிரெட்டி! எல்லோருக்கும் ஆச்சரியம். எம்.ஜி.ஆர் முதலாளி என்று மரியாதை செய்யும் நபர் காலில் விழுந்தே தீர்வேன் என்று பிடிவாதம் பிடித்ததைக் காண நேர்ந்ததில்! அங்கிருந்த எல்லோரும் மலைத்துப் போய்விட்டார்கள்!

மேடையில் எம்.ஜி.ஆர் செல்லக்கோபத்துடன் ‘என்ன இப்படி? நீங்களுமா? என்று கையை விரித்து சைகையால் கேட்பதை எல்லோரும் காண முடிந்தது. நாகிரெட்டியிடம் தொடர்ந்து ஏதேதோ பேசி மீண்டும் கை  விரித்து என்னமோ சொன்னார். ஸ்டுடியோ அதிபர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.அவர்களுக்குள் Nostalgia எவ்வளவோ இருக்கும் தானே.
எங்கவீட்டுப்பிள்ளை படம் எடுத்தவர் அல்லவா?

எம்.ஜி.ஆர் பேச ஆரம்பித்தார்.
’உங்களுக்கெல்லாம் தெரியும். சென்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்கொண்ட எதிர் பாராத தோல்வியைத்தொடர்ந்து என்னுடைய   மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் என்னுடைய ஆட்சியைக் கலைத்து விட்டார்கள். அந்த நேரத்தில் நாகிரெட்டியாரின் மூத்த புதல்வர் பிரசாத் அகால மரணமடைந்து விட்டார். நான் துக்கம் விசாரிக்க நாகிரெட்டி அவர்களின் வீட்டிற்கு போயிருந்தேன். என்னை கண்டதும் அவர் ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து “உங்கள் ஆட்சியை கலைத்து விட்டார்களே” என்று கதறி அழ ஆரம்பித்துவிட்டார். ( இந்த இடத்தில் எம்.ஜி.ஆர் சற்று நிறுத்தி விட்டார்.) எவ்வளவு உயர்ந்த உள்ளம் பாருங்கள். அவர் பெற்ற பிள்ளை இறந்து விட்டார்.ஆனால் அவர் என்னுடைய ஆட்சியை கலைத்துவிட்டார்களே என்று அழுகிறார். என் மீது அவர் எப்படிப் பட்ட அன்பைக்கொண்டிருக்கிறார் பாருங்கள்.( ’ஆட்சி’ என்ற வார்த்தை எம்.ஜி.ஆர் ’ஆச்சி’ என்றே உச்சரிக்க முடியும்)
நான் இப்போது அவரிடம் மேடையில் ஏதோ கேட்டதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். நான் கேட்டேன். ‘ இன்று எனக்கு ஆட்சி மீண்டும் கிடைத்து விட்டது. ஆனால் உங்களுக்கு உங்கள் மகன்? உங்கள் மகனை என்றென்றைக்குமாக நீங்கள் இழந்தே விட்டீர்கள்.’
( எம்.ஜி.ஆர் குரல் மிகவும் நெகிழ்ந்து தழுதழுத்தது)


1980களில் வந்த படங்கள் குறித்த தன் அதிருப்தியை தொடர்ந்து எம்.ஜி.ஆர் வெளிப்படுத்திய விதம் கீழ் வருமாறு:

”’இதயக்கனி’ படம் வெளிவந்திருந்தபோது நான் என் ரசிகர் ஒருவரிடம் படம் பற்றி கேட்டேன். அவர் எனக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னார். நான் அவர் சொன்னதைக் கேட்டு திருப்தியடைந்துவிடவில்லை.” உன் தாயார் இதயக்கனி படம் பார்த்தார்களா? அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று மீண்டும் கேட்டேன். அவர் சற்று தயங்கினார். “ தயவு செய்து அவர் சொன்னதை அப்படியே சொல்” என்றேன். என் ரசிகர்  மெதுவாக சொன்னார். ”வர வர எம்.ஜி.ஆர் படம் கூட இனி பார்க்க முடியாது போலிருக்கிறதே என்று என் தாயார் வேதனைப்பட்டார்.” இடி இறங்கியது போல நான் துடித்துப்போய் விட்டேன். அந்த படத்தில் நான் ராதா சலூஜாவுடன் நெருக்கமாக நடித்து விட்டேன் என்று பலரும் பேசியதை அறிய வந்தேன். மீண்டும் நானே எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து அப்படிப்பட்ட காட்சிகளை நீக்கினேன். மீண்டும் படத்தை வெளியிட்டேன். அதற்கே அப்படி என்றால் இப்போது நடப்பது என்ன? எவ்வளவு ஆபாச காட்சிகள். எப்படியெல்லாம் கற்பழிப்பு காட்சிகள். இது தான் திரையுலகம் காணும் பண்பாடா? இது நியாயமா? நான் மிகுந்த பணிவோடு எச்சரிக்கிறேன். தயவு செய்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுங்கள்.உங்களை கை கூப்பி வேண்டிக்கேட்கிறேன். தயவுசெய்து கண்ணியம் மீறாதீர்கள்.வளர்ச்சியில் தான் மலர்ச்சியை காண்கிறோம். அதே நேரம் மலர்ச்சியில் வளர்ச்சியைக் காண்கிறோம்.”
.....

 ஒரு தேர்தல் பொதுக்கூட்டம். எம்.ஜி.ஆர் பேசுகிறார்.

”கருணாநிதி யார்? ராமச்சந்திரன் யார்?  ராமச்சந்திரன் தன் வாயால் சொல்லமாட்டான். இங்கு கூதியுள்ள தாய்மார்களைக்கேட்டால் அவர்கள் சொல்வார்கள்.
ராமச்சந்திரன் நல்லவனா? கருணாநிதி நல்லவனா? (சற்று நிறுத்தி) ராமச்சந்திரன் தன் வாயால் சொல்லமாட்டான். இங்கு கூதியுள்ள தாய்மார்களைக் கேட்டால் அவர்கள் சொல்வார்கள். கருணாநிதி ஒரு தீய சக்தி என்று ராமச்சந்திரன் தன் வாயால் சொல்லமாட்டான்.”

”ராமச்சந்திரன் உயிரோடு இருக்கும் வரை இங்கு கூதியுள்ள தாய்மார்கள் யாரும் பத்தினியாயிருக்க விட மாட்டான்.. அண்ணா மீது ஆணை!’’


“கூடியுள்ள ”, ”பட்டினி” போன்ற வார்த்தைகளை உச்சரிப்பதில் அவருக்கு சிரமம் இருந்தது.

எள் போட்டால் எள் எடுக்கமுடியாது என்கிற அளவுக்கு ஜனங்கள். பெண்கள் எப்போதும் போல மிகவும் அதிகம்.
கூட்டத்தில் தன் பேச்சை முடிக்கு முன் சொன்னார்: ”தயவு செய்து தாய்மார்கள் இங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு சென்று விடுங்கள். நான் ஆண்களிடம் தனியாக கொஞ்சம் பேசவேண்டியிருக்கிறது. தாய்மார்கள் செல்லலாம்.”
பெண்கள் கூட்டம் முற்றிலும் வெளியேறி சென்று விட்டதை அறிந்த பின் எம்.ஜி.ஆர் சொன்னார்.”இப்போது ஆண்கள் செல்லலாம்.”



5 comments:

  1. RP Sir, last line is really touching.

    ReplyDelete
  2. சூப்பர் போஸ்ட் சார்,சிரிப்பை அடக்க முடியலை!!!

    ReplyDelete
  3. கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழி எம்ஜியாருக்கு பிடிக்காத பழமொழியாக இருக்கக்கூடும்!

    ReplyDelete
  4. இவரல்லவோ எம்ஜிஆர்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.