Share

Sep 15, 2012

Art is vice


Sep 4, 2009

'சாந்தி நிலையம் ' படத்தில் நாகேஷிடம் வீட்டுக்கு வந்த விருந்தாளி உற்சாகமாக " மகாலிங்கம் புல்லாங்குழல் கேட்டிங்களா '' என்பார் .
நாகேஷ் பதில் :" கேட்டுப்பார்த்தேன் . தரமாட்டேன்னுட்டார் . இப்பல்லாம் யாருக்கும் தர்றதில்லயாம்."

மாலி புல்லாங்குழல் வாசிப்பு பற்றி அந்தகால ரசிகர்கள் சிலாகித்து சொல்வது :
'மாலி 'காத்து '(காற்று ) யாருக்கும் வராது.'

மாலியின் Eccentricity பற்றி பல கதைகள் உண்டு .
மாலி புல்லாங்குழல் எப்போதும் கேட்கும்போது பிரஞ்சு ஓவியன் எட்கர் டிகா வார்த்தைகள் உடனே ஞாபகம் வரும் .
“Art is vice.You don't marry it legitimately, you rape it.”

மௌனி யின் வரிகள் : விரல்களின்றியும் வீணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும் போலும் . சுருதி ,விலகி நின்று எட்டியா நின்று இடைவிடாது முணுமுணுக்கிறது. சப்தத்தினின்றும் சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய வெளியில் மெளனமாக வியாபகம் கொள்கிறது"

மாலியின் புல்லாங்குழலில் இப்படி பிரமை ஏற்படவே செய்யும். ஆழ்ந்து காது கொடுத்த பின் ஒருநீண்ட பெருமூச்சு வெளிப்படும் .

மைக்கேல் ஜாக்சன் பாடுவதும் , ஆடுவதும் பிரஞ்சு ஓவியனின் இந்த வார்த்தைகளுக்கு பொருந்தும் .“Art is vice.You don't marry it legitimately, you rape it.”

இருபது வருடங்களுக்கு முன்

'Thriller'
'Bad'
'Dangerous'

கேசட்களை கேட்காத நாளே எனக்கு கிடையாது . இன்றைக்கு டி .வி செய்தியில் மைக்கேல் ஜாக்சன் இறுதிச்சடங்கு நடந்தது பற்றி காட்டப்பட்டது .

..


லா .ச .ரா வின் கதையில் அம்மா தயார் செய்யும்
பாயசம் : சமையலறையைக் குங்குமப் பூவின் மனம் தூக்கிற்று. யாகக் குண்டம் போல தொட்டி முற்றத்தில் ஆவி புகைந்தது. முந்திரியும் ,வறுத்த திராட்சை பழங்களும் அத்தனை முழிகளாய் விழித்தன. சேமியா , ஆவியின் அசைவில் நெளிந்தது. அம்மாவின் கூந்தல் முடிச்சிலிருந்து ஒரு மல்லிப்பூ அதில் உதிர்ந்திருந்தது.

..


புதுமைப்பித்தன் ஏழையின் குடிசை வீடு பற்றி :'வறுமையின் இருள் அடித்த கர்ப்பக்கிரகம். '


கோபி கிருஷ்ணனின் "இனிமையான வக்கிரம் "கதை எழுத்துக்கலையின் உக்கிரம் . இவருடைய எல்லா எழுத்தும் உக்கிரம் . அலுப்பு என்பதை பதிவு செய்தார் .
" அலுப்பு " ( Ennui )கோபி கிருஷ்ணனை கலைஞன் ஆக்கிவிட்டது .

Art is vice.

கு .ப .ரா .வின் 'சபரியின் பிரேமை ' சிறுகதை பற்றி கோபி கிருஷ்ணன் சொன்ன விஷயம் நினைவுக்கு வருகிறது -"சபரியின் பிரேமை இயற்கைக்கு எதிராக இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதனால் ஏற்படும் துயரை எடுத்துச் சொல்கிறது ."
கோபி கிருஷ்ணனின் ' இனிமையான வக்கிரம் ' கதையை படித்தால் அந்த நேர் எதிர் 'Child'(!) பற்றி புரிந்து கொள்ளமுடியும் . கோபியின் Black Humour !

...................

Sep 2, 2009மனித மண்டைஓடு

"ஆயிரத்தில் ஒருவன் " எம்ஜியார் படத்தில் மண்டை ஓடு ஒன்றை பார்த்துவிட்டு நாகேஷ் சொல்வார்
" எவனோ ஒருத்தன் சிரிச்சிக்கிட்டே செத்துருக்கான்!"


Human skull is always smiling!


சுஜாதா இருபது வருடங்களுக்கு முன் எழுதினார் " மண்டை ஓடுகள் சிரிப்பதற்கு காரணம் 'சாவின் ரகசியம் ' தெரிந்து விட்டதால்."

தொன்ம ரகசியம் ஒன்று - பரமேஸ்வரன் கழுத்தில் மண்டைஒட்டு மாலை அணிபவர் . அந்த மண்டை ஓடுகள் - அவருடைய பிரிய சகி பார்வதியின் முந்தைய பிறப்புகளின் உடல்களுடைய கபாலங்களை தான் பித்தன் சிவன் மாலையாக கோர்த்து அணிந்துள்ளாராம்.


Human Skull – The Contemplation of Human Mortality.

ஷேக்ஸ்பியரின் ஹேம்லட் கல்லறை ஒன்றில் ஒரு மண்டையோட்டை பார்த்து சொல்கிறான் "Alas, poor Yorick. I knew him ..A fellow of infinite jest".
Yorick was once the court fool.

ஹேம்லட் தன்னை சிறுவனாய் இருக்கும்போது உப்பு மூட்டை தூக்கி விளையாடி, சிரிக்கவைத்து ஆசுவாசப்படுத்திய பால்ய நண்பன் இந்த கோமாளி யோரிக் கின் மண்டை ஓடு கண்டு உணர்ச்சி வசப்படுகிறான்.
A sentimental affection for the deceased jester.
Yorick is a reminder that all of life is not meloncholic and sour, that there was a happier time in even Hamlet's dark, morose life

.............


Aug 22, 2009சாமுவேல் பெக்கெட்- நகுலன் கவிதையில்


No, I regret nothing, all I regret is having been born,
dying is such a long tiresome business I always found.
-Samuel Beckett.

இருத்தலின் குறிக்கோள் அற்ற தன்மை பற்றி பெக்கெட் கவலைப்பட்டவர்.
The futility of man's aspirations!
அவருடைய நாடகம்
“Waiting for Godot” என்ற பெக்கெட்டின்
Absurd Drama காத்திருத்தல் பற்றிய துயரத்தின் உச்சம் .
We're all born mad. Some remain so.
“Waiting for Godot”
Mr. Godot told me to tell you he won't come this evening but surely tomorrow.
இங்கே குறிப்பிட வருவது நகுலனின் ஆங்கில கவிதை :

Death
Also waits
It has
infinite Patience.

இந்த கவிதைக்கு
inspiration பெக்கெட்டின் வரிகள் Dying is such a long tiresome business I always found.

பெக்கெட் பற்றி நகுலன் தன்னுடைய நாவல்களில் எப்போதும் பேசுவார்.
......

1 comment:

  1. புரிந்து கொள்ள தகிங்கிணத்தோம் போட வேண்டும் சார்!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.