Share

Sep 26, 2012

எழுத்து- புரிதல்-தத்துவம்

Sep 6, 2008


எழுத்து- புரிதல்

“Only one man ever understood me…And he didn’t understand me”

ஹெகல் இப்படி சொன்னான். புரிதலை பற்றி இதை விட சொல்ல வேறு என்ன இருக்கிறது.


The eternal mystery of the world is its comprehensibility. - Kant

கான்ட் சொன்னதை புரிந்து கொள்ள சந்திர பாபு வின் பாடல் ஒன்று போதும்.
"ஒன்னுமே புரியலே உலகத்திலே ..
என்னவோ நடக்குது .. மர்மமா இருக்குது "

என்னடா இது கான்ட் சொன்னதை அப்படியே
காப்பியடிச்சி எழுதிட்டாங்களேன்னு புரியும்.

ஆசிரியனுக்கு ஆயுதம் "வார்த்தைகள்" தான். எழுத்தாளனின் உபகரணம் "வார்த்தைகள் ". சரி வார்த்தைகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை.
ஜோசப் கான்ராட் இதற்கு பதில் சொல்கிறான்.
"வார்த்தைகள் என்பது யதார்த்தத்தின் மிகப்பெரிய எதிரிகள் "

எழுத்தாளன் என்பவன் யார் ? இதற்கு ஒரு பதில் Thomas Mann சொல்கிறான்.
எழுதுவது என்பது மற்றவர்களை விட யாருக்கு மிக கடினமோ அவன் தான் எழுத்தாளன்.

ரோலன் பார்த் Pleasure of the text பற்றி சிலாகிப்பதற்கு எட்டு வருடம் முன்பே தீர்மானித்து முடிவு செய்த தியரி - The death of author.

பூக்கோ தன் பங்குக்கு சுத்தமாக எழுத்தாளனை பற்றிய பிரமைகளை உடைத்தெறிந்து விட்டான் .
“What is an Author?
Not a creator of , but a label on a group of statements”


தெரிதாவுக்கு வார்த்தைகள் மீது சந்தேகம் வர காரணமாயிருந்தவன் கான்ராட் தான் என எனக்கு எப்போதும் தோன்றும்.
கான்ராட் தானே அதை Words are the greatest foes of reality என முன்னறிவித்தவன்.

எழுதப்பட்டவற்றை பிரதி ( Text )என பெயரிட்டு,கட்டுடைப்பு செய்ய வேண்டும் என்றான் தெரிதா.

ழாக் லக்கான் "பிரதி" அச்சில் வருவதையே அருவருப்பாக எண்ணினான் . அச்சில் வரும் எழுத்தை "குப்பை " என கேலி பேசினான்.


 ..........

Dec 30, 2009


தத்துவம் கேள்விகளாலானது
Deep-rooted gender biasஎன்பதாக விவாதங்கள் நிறைய நடக்கிறது.
பிலாசபி என்பதில் பெண் தத்துவமேதை என பெரும்பாலும் கிடையாது. ஓரிருவர் இருக்கிறார்கள்.
“Second Sex” எழுதிய பெண் தத்துவவாதியும் பெண்ணியவாதியுமான சிமோன் திபுவோ (Simon de Beauvoir) பால் பிரிவினையையே ஒத்துக்கொள்ள மறுத்தார்.
சிமோன் திபுவோ Female nature என்பதாகவும் Male natureஎன்பதாகவும் கருதப்பட்ட இருமை எதிர்வுகளை நம்பவில்லை.
 மாறாக ஆண்களும் பெண்களும் இந்த உள்ளார்ந்த மனச்சாய்வுகளில் அல்லது இலட்சியங்களில் இருந்து தங்களைத் தாமே விடுவித்துக்கொள்ளவேண்டும் என நம்பினார்.

மனிதன் யார்? மனித இயல்பு என்ன? இதன் மீதான விசாரணை தத்துவ உலகில் காலம் காலமாக நடந்து வருகிறது.

அப்படி 'நிரந்தர மனித இயல்பு ' என்று எதையும் தீர்மானிக்கமுடியாது என நம்பினார் சார்த்தர். “We are condemn to improvise!”மனிதர்கள் மேடைக்கு இழுத்து வரப்பட்ட நடிகர்கள். ஸ்க்ரிப்ட் கிடையாது. இயக்குனர் யாருமே கிடையாது. நாமே தான் நம் கதாப் பாத்திரத்தை தீர்மானிக்கவேண்டும். We are condemn to improvise.அர்த்தமே இல்லாத உலகவாழ்வில் முற்றிலும் அந்நியமாகிப் போகும் மனிதன். இதன் காரணமாக ஒரு ennuiவில் சிக்கிவிடுகிறான். Man has no basic nature to fall back on.

ஜோஸ்டீன் கார்டர் எழுதிய நாவல் Sophie's world ஒரு reference bookஎன்று சொல்லவேண்டும். தத்துவத்துறை பற்றிய வரலாறு Sophie's world.
Who we are? Why we are here?Will there still be something that every body needs?

It is easy to ask philosophical questions than to answer them.
  மாற்றி சொல்வதானால் கேள்விகள் தான் தத்துவம்.
ஆல்பர் காம்யு தன் “The Fall” நாவலில் பல தத்துவக் கேள்விகளை அதனால் தான் வைத்தான்.

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.