Share

Jun 28, 2024

Gurdjieff and Legion

Gurdjieff and Legion 
- R.P. ராஜநாயஹம் 

Legion.
ஆயிரக்கணக்கானவர்கள். ராணுவ சிப்பாய்கள்?

Legion வார்த்தை எப்போதும் 
Ten Commandments படத்தில்
அவ்வளவு கணக்கற்ற பொது ஜனங்களை பார்த்து பிரமித்துப்போய்,
வழி நடத்தப்போகும் மோசஸ்
 மலைத்துப் போய் சொல்கிற 
"So many! So many!"
 காட்சியை விரித்துக் காட்டும்.

குர்ஜீஃப் சொன்ன தத்துவத்தையும் legion 
நினைவு படுத்துகிறது.
 "Man is a plurality. Man's name is legion."


குர்ஜீஃப் சாயல் ந. முத்துசாமியை கொஞ்சம் ஒத்திருக்கிறதாக தோன்றும்.
மீசை தான் காரணம்.

முத்துசாமி எப்போதும் குர்ஜீஃப் பற்றி நினைப்பவர். சி. மணியின் வெளிவராத குர்ஃஜீப் புத்தகம் அவரை ஆக்ரமித்திருந்தது. குர்ஜீஃப், அவரோட சிஷ்யன் அவ்ஸ்பென்ஸ்கி.

ந. முத்துசாமி பற்றி ஈ.ஆர். கோபால கிருஷ்ணன் " அவரின் கலை, இலக்கிய மேதா விலாசம் கடந்து எனக்குப் பிடித்தது - 'கிழிஞ்சது போக மிஞ்சியது லாபம்' என்கிற Move forward attitude. நான் யார்? கேள்வி அவருடையது."

 R.P. ராஜநாயஹம் பற்றி 
ஈ. ஆர். கோபாலகிருஷ்ணன் 2016ல் 
"I didn't have adequate opportunity to interact with you, but strangely I feel a warmth about you."



அகந்தையான 'நான்' 'நான்' 'நான்' 'நான்'. 

குர்ஜீஃப் Capital letter'I'க்கு பதிலாக small letter 'i' போடுகிறார்.

"Man has no individual 'i'. But there are, instead, hundreds and thousands of separate small "i"s, 
very often entirely unknown to one another"
குர்ஜீஃப் உரை: 
"எத்தனை 'நான்'? எப்படிப்பட்ட 'நான்'.
தன்னையறியா பற்பல 'நான்'கள். பரிச்சயமேயற்ற "நான்"கள்.
ஒன்றிற்கொன்று கடும் பகை கொண்ட,
பரஸ்பரம் பிரத்யேகமான, பொருந்தாத 'நான்'கள்.

ஒவ்வொரு நிமிடமும், கணமும் மனுஷன் சொல்கிறான் 
'நான்'
நினைவில் 'நான்'.

ஒவ்வொரு தடவையும் அவனுடைய 'நான்'
வேறு வேறானவை. 
எண்ணம், ஆசை, உணர்வு, மற்றொரு எண்ணம் ..So on, so on.

மனுஷனுடைய தன்மை என்பது பன்மையானது.
அவனுடைய பெயர் Legion"

பல்கிப்பெருகியவன்.

நம்ம பெருசுக கூட இதத்தான் சொல்லுச்சிகளோ?
"பலவட்டறை"ன்னு.

குரங்கு மனம்.

Multiplex.

......

24. 09. 2009 post

யார் நீ?
- R.P. ராஜநாயஹம் 

"மனித நாகரீகம் மற்றும் மொழி தோன்றிய பின் மனிதனின் நீண்ட வரலாற்றில் சட்டென்று விடை தர முடியாததோர் அசாத்தியமான கேள்வி இந்த " யார் நீ? " எந்த விடையும் பூரணமாக இருக்கமுடியாது ."

- அசோகமித்திரன் 'விழாமாலைப்போதில்'

கரு இல்லாத முட்டையில்லே
குரு இல்லாத வித்தையில்லே
என்றாலும் நீ யார் ? கேள்வி தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது . நதி மூலம் ,ரிஷி மூலம் கண்டுபிடிக்க தவிப்பு தொடர்கிறது .
நான் யாராய் இருந்தால் உனக்கென்ன ?

Question: Who the hell are you?
My reply : Didn't I ever mention it?!

அடையாளம் , அறிமுகம் , Resume, Bio-data இவற்றிற்கு எதிரான துவேசம் எப்படியெல்லாம் வெளிப்படும் ?ஆத்மாநாம் இந்த துவேசத்தை கவிதையாக்கியது இப்படித்தான் !
"நான் யாராய் இருந்தால் என்ன ?
நீங்கள் யாராய் இருந்தால் என்ன ?
அனாவசிய கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல் சும்மா இருங்கள்."

Even Eminence requires a luxurious,deluxe frame to make it presentable.

 பெரிய பிரமைகள் தேவையே இல்லை. 

தத்துவவாதி சோப்பன்ஹீர் யாருடைய துணையும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்தான்.அவனுக்கு துணை ஒரே ஒரு நாய் மட்டுமே . அதற்கு கொஞ்சம் தத்துவார்த்தமாக அவன் ' ஆத்மா ' என்று பெயரிட்டிருந்தான் . யார் அந்த நாய் ? 'ஆத்மா' என்பது தான் பதிலாக இருக்கமுடியும் . ஆனால் அந்த நகரத்தில் இருந்த மனிதர்கள் எல்லோருமே அந்த நாயை " குட்டி சோப்பன்ஹீர்" என்று தான் அழைத்தார்கள் .அவன் அந்த நாயின் பெயர் ' ஆத்மா , ஆத்மா , ஆத்மா ' என்று எவ்வளவோ ,எப்படியெல்லாமோ வற்புறத்தி சொல்லிப் பார்த்தும் கூட அந்த முட்டாள் ஜனங்கள் "குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்" என்றே செல்லமாக அந்த நாயை குறிப்பிட்டார்கள்.

அப்படியானால் சோப்பன்ஹீர் என்பவர் யார் ?
அந்த அசந்தர்ப்பமான மனப்போக்குள்ள ஜனங்கள் இந்த தத்துவவாதி சோப்பன்ஹீர் அவர்களை " பெரிய ஆத்மா " என்று கூட சொல்வார்கள் தானே!
அடையாளச்சிக்கல் கர்ணனுக்கு, ஏகலைவனுக்கு மட்டுமில்லை ..ஆத்மா என்ற நாய்க்கு கூடத்தான் இருந்திருக்கிறது.

......


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.