கவிஞர் வைத்தீஸ்வரனும் மாமியும் முதியோர் இல்லத்தில். மாதம் அறுபதாயிரம் பெற்றுக் கொண்டு சேவை செய்யும் முதியோர் இல்லம்.
தனியாக அபார்ட்மெண்ட் வீடு தருகிறார்கள். வசதியான முதியோர்களுக்கான இல்லம்.
பழம் பெரும் நடிகர் சகஸ்ரநாமத்தின் தங்கை மகன் வைத்தீஸ்வரன் என்பது தெரிந்ததே.
ந.முத்துசாமியும் ஞானக்கூத்தனும் மாயவரம் பள்ளியில் வகுப்பு தோழர்கள்.
பள்ளியிலேயே முத்துசாமி தி.மு.க.
ஞானக்கூத்தன் தமிழரசுக் கழகம்.
ஞானக்கூத்தன் இறந்த போது துக்க வீட்டில் ந. முத்துசாமியிடம் வைத்தீஸ்வரன் சொல்லியிருக்கிறார்.
"அடுத்து நாம தான் போகணும்"
முத்துசாமி கூத்துப்பட்டறையில் ராஜநாயஹத்திடம் பேசும் போது நினைவு கூர்ந்தார்: "வைத்தீஸ்வரன் அடுத்து நாம தான் போகணும்னு சொன்னார்.
நான்
'நீங்க வேணா போங்க. நான் வரல'ன்னு மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டேன்."
முத்துசாமி மறைந்த அன்று அஞ்சலி செலுத்தும் போது வைத்தீஸ்வரன் கண்ணீர் விட்டு தேம்பினார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.