Share

Sep 14, 2019

புலி வால்



ஃபேஸ்புக் ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட் ஐயாயிரம் தாண்டி மூன்று மாதம் ஆகிவிட்டது. யோசிக்காம இந்த மாதங்களில் கையில் அகப்பட்டவர்களை அன்ஃப்ரண்ட் செய்து கொண்டு இருக்கும் போதே தினமும் புது ஃப்ரண்ட் ரிக்வஸட் வந்து கொண்டே தான் இருக்கிறது. ஐயாயிரம் மீ்ண்டும் மீண்டும் நிரம்பி வழிகிறது.

ஐயாயிரம் ஃப்ரண்ட்ஸ் ல நாலாயிரத்து தொள்ளாயிரம் பேர் யாரென்றே தெரியாது. இவர்களில் பெரும் பகுதி dead account என்பதும் தெரிந்தது தானே.

கணக்கிலடங்காத முகவர்களை block செய்தாகி விட்டது.

ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை ஐயாயிரம் லிஸ்டில் வந்து விடுகிறது.

ஆயிரக்கணக்கில் ஃப்ரண்ட் லிஸ்ட் டில் இல்லாதவர்கள் என்னை வாசிக்கிறார்கள். லைக் கொடுக்காமல், கமெண்ட் போடாமல் வாசிக்கிறார்கள். 
படிக்காமலே லைக் கொடுக்கிறவர்கள்.

ராஜநாயஹம் blog hit இருபத்து லட்சம் தாண்டி விட்டது. Blog 24 மணி நேரம் வாசிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ரெண்டாயிரம், மூவாயிரம்.

ட்விட்டரில் படிக்கிறார்கள்

ஃபேஸ்புக் என்பதே

புலி வால புடிச்ச கத.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.