Share

Jan 15, 2015

Painting - Silent Poetry


Paul Cézanne's painting “The Boy in the Red Vest” (1888-90)


 ....................,,,,,,,,,,,,,,,,,,,,,


A major Post-Impressionist Vangogh's painting
simpsons -Groundskeeper Willie

 ......................................

Rembrandt's painting
Abraham's Sacrifice of Isaac
http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_8398.html

.................................................................

The Scream by Edvard Munch 

The enormous infinite scream of nature!
"I was walking down the road with two friends when the sun set; suddenly, the sky turned as red as blood. I stopped and leaned against the fence, feeling unspeakably tired. Tongues of fire and blood stretched over the bluish black fjord. My friends went on walking, while I lagged behind, shivering with fear. Then I heard the enormous infinite scream of nature." - Edvard Munch (Norwegian painter)

...............................................


Starry Night by Vincent van Gogh 

The peak of artistic achievements!

There is the night sky filled with swirling clouds, stars ablaze with their own luminescence, and a bright crescent moon.

'I dream of painting and then I paint my dream' - Van Gogh

வானில் இரவில் நட்சத்திரங்கள். இருட்ட ஆரம்பித்தவுடன் ஒவ்வொன்றாய் தெரிய ஆரம்பிக்கின்றன.
லா .ச .ரா உரைநடையே கவிதை தான்.வாசனாதி திரவியங்களை எழுத்தில் கொண்டுவந்தவர்.
" புத்ர" நாவலில் :
" சூரிய சாக்ஷி ஓய்ந்த பின், இரவில் பூமி சகிக்கும் க்ரம அக்ரமங்களைக் கவனிக்க வான் அனந்தம் கண்கள் ஒவ்வொன்றாய்த் திறக்கின்றன."
பாரதி தாசனின் பிரபலமான புல்லரிக்க வைக்கும் கவிதை கீழே :
" மண் மீது உழைப்பார் எல்லாம் வறியராம்.
உரிமை கேட்டால் புண் மீது அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம்.
இதைத் தன் கண் மீது பகலில் எல்லாம் கண்டு கண்டு
அந்திக்குப்பின் விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி!"
சிறுகதையின் திருமூலர் 'மௌனி' தன்னுடைய பிரத்யேக பாணியில் நட்சத்திரங்கள் பற்றி கொள்ளும் அபிப்பராயம் : "யாரோ ஒருவன் தன்னுடைய உன்மத்த மிகுதியில் ஜ்வலிக்கும்,விலைகொள்ளா வைரங்களை கை நிறைய வாரி வாரி உயர வானத்தில் இறைத்தான் போலும். ஆயிரக்கணக்காக அவை அங்கேயே பதிந்து இன்னும் அவன் காரியத்தை நினைத்து மினுக்கி நகைக்கின்றன."
தி ஜானகிராமன் தன் 'மலர்மஞ்சம் ' நாவலில் பார்க்கும் நட்சத்திரங்கள் :
"இந்த ஆழ்ந்த மௌனம் தான்
அதன் திவ்யமான குரல்
வாரித்தெளித்துக்கிடக்கும் இந்த ஒளிகள் தான்
அதன் இளநகை."
'வழி ' சிறுகதையில் புதுமைப்பித்தன் :"வானம் அந்தியந்தமும் கவ்விய இருட்டு . உயர்ந்த இலட்சியங்களை அசட்டுத்தனமாக வாரி இறைத்தது போல கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்."

...................................

'கேரிகேச்சரிஸ்ட் சுகுமார்ஜே' வரைந்த R.P.ராஜநாயஹத்தின் கார்ட்டூன்!
....................................................................................................






1 comment:

  1. --வழி ' சிறுகதையில் புதுமைப்பித்தன் :"வானம் அந்தியந்தமும் கவ்விய இருட்டு . உயர்ந்த இலட்சியங்களை அசட்டுத்தனமாக வாரி இறைத்தது போல கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்."---

    நட்சத்திரங்களைப் பற்றி இதுபோன்று ஒரு எழுத்தாளர் விவரித்து நான் படித்ததில்லை. அருமையான அந்த வரிகளை நினைவூட்டியதற்கு மிகவும் நன்றி.

    அதுபோல வான் கோ வின் ''I dream of painting and then I paint my dream' கவிதையான அழகு. இன்னொரு நன்றி.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.