அப்போது கே.பாலச்சந்தர் நாடகங்கள்
இயக்கிக்கொண்டிருந்தார்.ஜெமினி கணேஷ் தான் எப்படியாவது இந்த திறமைசாலிக்கு
திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றுத்தரவேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன்
முயன்று கொண்டிருந்தார்.
அந்த முயற்சியின் ஒரு பகுதி பற்றிய விஷயம் இது.
1960களில் 'நீர்க்குமிழி' இயக்குவதற்கு முன் நடந்த நிகழ்ச்சி.
ஜெமினி கணேஷ் சொல்லி
ஹிண்டு ரங்கராஜனை பாலச்சந்தர் சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருக்கிறார்.
சமீபத்தில் குமுதத்தில் கமல் ஹாசனை
பாலச்சந்தரிடம் ஜெமினி கணேஷ் அறிமுகம் செய்து வாய்ப்பு தரச்சொல்லி வற்புறுத்திய
விஷயம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். இது பற்றி கமல் ஏற்கனவே பல முறை
சொல்லியிருக்கிறார்.
பாலச்சந்தருக்கு வாய்ப்பு பெற்றுத்தரவும் ஜெமினி
கணேஷ் மெனக்கிட்ட விஷயம் பலருக்கு புதிதாயிருக்கலாம்.
அப்போது ஹிண்டு ரங்கராஜன் திரையுலகில் மிகுந்த ஆர்வம்
கொண்டிருந்த இளைஞர். ஹிண்டு ரங்கராஜன் மனது வைத்தால் பாலச்சந்தர் படம்
இயக்க ஒரு தயாரிப்பாளர்
கிடைத்து விட்டதாகக் கொள்ளலாம்.
கிடைத்து விட்டதாகக் கொள்ளலாம்.
ஹிண்டு ரங்கராஜன் அவசரமாக மீனம்பாக்கம்
ஏர்போர்ட் செல்ல இருந்த போது ஜெமினி கணேசன் தன் கமிட்மெண்ட்களுக்கு இடையில்
பாலச்சந்தரை அழைத்துக்கொண்டு ஹிண்டு ரங்கராஜன் வீட்டுக்கு வந்து விட்டார். திட்டம்
என்னவெனில் விமான நிலையத்திற்கு காரில்
செல்லும்போது பாலச்சந்தர் தன் சினிமாவிற்கான கதையை ரங்கராஜனிடம் சொல்ல வேண்டும்.
காரில் ஏறி உட்கார்ந்தவுடன் ‘உங்க கிட்ட இருக்கற
கதையை ரங்கராஜனிடம் சொல்லுங்க’ என்று தான் ஜெமினி சொல்லியிருக்கிறார்.
இது போன்ற சமயங்களில் இயக்குனராக வாய்ப்பு தேடி
தவிப்பவரின் நிலை என்ன என்று யோசித்துக்கொள்ளுங்கள்.
நிச்சயமாக மிகுந்த படபடப்புடன் தான் பாலச்சந்தர்
கதை சொல்ல ஆரம்பித்திருப்பார்.
ஆனால் ஜெமினி கணேசன் ஒரு hyper sensitive person. ஹிண்டு ரங்கராஜனோ அரச மனோபாவம் கொண்டவர்.
பாலச்சந்தர் கதை சொல்ல ஆரம்பித்தவுடன் ஜெமினியும்
ரங்கராஜனும் ஆங்கிலத்தில் சுவாரசியமாக உரையாடத் துவங்கி விட்டார்கள். பாலச்சந்தர்
எவ்வளவு முயற்சி செய்த போதும் ஜெமினியும் ரங்கராஜனும் தங்கள் உரையாடல் மீதே
முழுக்கவனமும் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
விமான நிலையம் வந்து விட்டது.
‘பாலச்சந்தர் கதை சொல்லும் நிகழ்வு’ அம்பேல். அவருக்கு அங்கு நிகழ்ந்தது
பெருத்த அவமானம்.
வர்ஜனம். புறக்கணிப்பு. விமான நிலையம் வந்து
விட்டது.
இந்த நிகழ்வு கே.பாலச்சந்தர் மனத்தில் ஆறாத
வடுவை ஏற்படுத்தி
விட்டது. பாலச்சந்தர் வைராக்கியமாக இதைப்பற்றி
உறுதி கொண்டிருக்கிறார். ‘ இந்த ஜெமினி கணேசனை நான் நிச்சயம் இயக்குவேன்! ’
அது நடந்தேறியது. ஜெமினி கதாநாயகனாக நடித்த
சிறந்த படங்கள் ‘தாமரை நெஞ்சம்’, 'இருகோடுகள்', 'காவியத்தலைவி', 'புன்னகை', 'கண்ணா நலமா?',
'வெள்ளி விழா', 'நான் அவனில்லை' எல்லாம் கே.பாலச்சந்தர் கைவண்ணத்தில் உருவானவை.
To kick the ball is always very difficult.Once you kick it,
it will go on rolling!
சினிமா என்றில்லை. எந்தத்துறையிலும் சாதித்து மேலே வருவது என்பது இப்படித்தான்.
To kick the ball is always very difficult.Once you kick it,
it will go on rolling!
சினிமா என்றில்லை. எந்தத்துறையிலும் சாதித்து மேலே வருவது என்பது இப்படித்தான்.
இது போல கமலஹாசனுக்கு ஹிண்டு ரங்கராஜனுடன்
ஏற்பட்ட அனுபவம். கமல் பாலச்சந்தர் மூலம் அரங்கேற்றம்,சொல்லத்தான் நினைக்கிறேன்
படங்களில் நடித்திருந்த நேரத்தில் ஹிண்டு
ரங்கராஜன் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்து ஜெமினியை அப்பாவாகவும் கமலை மகனாகவும்
நடிக்க வைக்க ஒப்பந்தம் நடந்திருக்கிறது. கமலுக்கு ஜெமினியின் சிபாரிசு தான் என்று
சொல்லித்தெரியவேண்டியதில்லை.அதில் கமல் ஹாசனுக்கு வெள்ளை பேண்ட், ஒயிட் சர்ட் தான்
காஸ்டியூம். ஆனால் அந்த ட்ரஸ் ரெண்டு செட் கமல் சொந்த செலவில்
தைத்துக்கொள்ளவேண்டும்.
ஹிண்டு ரங்கராஜன் சிவாஜியை வைத்து “கௌரவம்”
ப்ரொட்யூஸ் செய்து படம் ஹிட் ஆகியிருந்த நேரம்! கமல் உற்சாகமாகி ரெண்டு செட்
தைத்து, ஒரு செட் டிரஸை அணிந்து கொண்டு வந்து ஹிண்டு ரங்கராஜனிடம்
காட்டியிருக்கிறார். ஆனால் அந்தப்படம் தயாரிக்கப்படவில்லை.கேன்ஸல்!
பின்னால் 1977ல் சிவாஜி,ஜெமினி,கமல் நடித்த 'நாம் பிறந்த மண்' ரங்கராஜன் தயாரித்தார்.ஓடவில்லை.
............................................
பின்னால் 1977ல் சிவாஜி,ஜெமினி,கமல் நடித்த 'நாம் பிறந்த மண்' ரங்கராஜன் தயாரித்தார்.ஓடவில்லை.
............................................
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.