Share

Jan 6, 2015

Ifs and Buts


யாதோன் கி பாராத் படத்தை அந்த நேரத்தில் தமிழில் யார் எல்லாம் முக்கிய மூன்று பாத்திரங்களில் நடித்திருந்தால் ஓரளவுக்கு நன்றாயிருந்திருக்கலாம்.
தர்மேந்திரா பாத்திரத்திற்கு எஸ்.எஸ்.ஆர்,
விஜய் அரோரா ரோலுக்கு ஜெய்சங்கர், 

டாரிக் செய்த guitar singer ஆக கமல் ஹாசனும் 
நடித்திருந்தால் படம் சகிக்கும்படியாக இருந்திருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆர் டபுள் ரோல் செய்து மற்றொரு தம்பி ரோலுக்கு தெலுங்குநடிகர் சந்திரமோகன் நடித்திருந்தார்.

“பொய்க்கால் குதிரை” படம் எஸ்.வி.சேகர் கதாநாயகனாக நடித்திருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும்.பாலச்சந்தர் அதில் ராமகிருஷ்ணன் என்ற கன்னட நடிகரை நடிக்க வைத்தது தவறு – எனக்கு இப்படி ஒரு எண்ணம் உண்டு.

பொய்க்கால் குதிரை வந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு திருச்சியில் ஃபெமினா ஹோட்டலில் நான் ரிஸப்சனிஸ்ட் ஆக இருக்கும்போது அங்கு வந்திருந்த எஸ்.வி.சேகரிடம் இதை சொன்னவுடன் அவர் மனதில் இந்த விஷயம் மிகுந்த ஏக்கத்தை ஏற்படுத்திய விஷயம் என்பது வெளிப்பட்டது. உடனே ஆதங்கத்துடன் உணர்ச்சிவசப்பட்டு
“ நான் எவ்வளவோ பாலச்சந்தரிடம் சொன்னேன் சார். ஆனா அவர் ‘போடா, இந்த ரோல் செய்றதுக்கு டான்ஸ் தெரிஞ்ச நடிகர் தான்டா சரியாயிருக்கும்’ னு பிடிவாதம் பண்ணிட்டாரு.”

சில விநாடிக்குப்பின் தொடர்ந்து வேகமாக என்னிடம் “ சார்! நான் ராம நாராயணன் படத்திலயெ டான்ஸ் ஆடியிருக்கேன். எங்கிட்ட பாலச்சந்தர் பொய்க்கால் குதிரைக்கு டான்ஸ் தெரிஞ்ச நடிகர் தான் வேணும்னு சொன்னாரு.”
எஸ்.வி.சேகர் அந்த ரோல் கேட்டு பாலச்சந்தரிடம் கெஞ்சியிருக்கிறார் என்பது தெரிந்தது.
........


ஜெமினி கணேசனிடம் நான் சொன்னேன். “அபூர்வராகங்களில் கமலுக்கு அப்பாவாக மேஜருக்கு பதிலாக நீங்கள் தான் நடித்திருக்கவேண்டும். அந்த ரோல் ஜெயசுதாவால் விரும்பப்படுவதற்கு ஜெமினி என்றால் ஏற்புடையதாயிருந்திருக்கும். அத்தோடு கமலுக்கு அப்பா என்பதும் கச்சிதமான விஷயம். அபூர்வ ராகங்கள் இன்னும் enrich ஆக இருந்திருக்கும்.”
ஜெமினிக்கும் அந்த ஏக்கம் இருந்திருக்கும்போல.
இதை நானும் கண்டு சொன்னதானது அவருக்கு ரொம்ப இதமாயிருந்தது. அவர் முகம் பிரகாசமாகியது. அது குறித்து எந்த பதிலும் சொல்லவேயில்லை. சில நிமிடங்கள் என்னையே உற்றுப்பார்த்துவிட்டு புன்னகைத்தார். அப்புறம் மெதுவாக “அவ்வளவு தான்” எனும்படி தலையை ஆட்டி மீண்டும் புன்னகைத்தார்.


If "ifs and buts" were candy and nuts , we would all have a merry christmas!
- Don Meridith

.......................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.