Share

Jan 31, 2015

விஜயகுமார் – ஜெய்கணேஷ்





சினிமாவில் இருமை எதிர்வுகள் என்று காலாகாலமாக நடிகர்கள் இருவர் உண்டு.
தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா
எம்.ஜி.ஆர் – சிவாஜி
ஜெய்சங்கர் – ரவிச்சந்திரன்
கமல் ஹாசன் – ரஜினி காந்த்
விஜயகுமார் – ஜெய்கணேஷ்
பாக்யராஜ்- டி.ராஜேந்தர்
விஜயகாந்த் – சத்யராஜ்
கார்த்திக் - பிரபு
விஜய் – அஜீத்
சிம்பு – தனுஷ்
இதில் ஒரு நடிகரின் ரசிகர்களும் அந்த மற்றொரு நடிகரின் ரசிகர்களும் பரம வைரிகள்.
 பல நடிகர்கள் இருந்தாலும் தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள். எம்.ஜி.ஆர் சிவாஜி சகாப்தமாக கொடி கட்டிய  நேரத்தில்  இரண்டு கதாநாயகர்கள் ஜெய்சங்கர் – ரவிச்சந்திரன் இருவரும் அப்படி பேசப்பட்டார்கள்.
(முத்துராமனும் ஏவிஎம் ராஜனும் பற்றி அப்படி சொல்லப்பட்டதில்லை.)
1970களில் வந்தவர்களில் எம்.ஜி.ஆர் சிவாஜி ரேஞ்ச் அந்தஸ்து 
கமல் ஹாசன் – ரஜினி காந்த் இருவரும் எட்டினார்கள்.
கமல் ஹாசன் மாணவன், குறத்தி மகன் இரண்டிலும் தலையை காட்டி விட்டு அரங்கேற்றத்தில் பாலச்சந்தரிடம் வந்து சேர்ந்த பின் அடுத்து சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் வில்லனாகி அடுத்த அவள் ஒரு தொடர்கதை படத்தில் ஒரு நல்ல ரோல், அடுத்த அபூர்வராகங்களில் கதா நாயக அந்தஸ்து கிடைத்த போது அதில் சுருதி பேதமாக அறிமுகமாகிய ரஜினிக்கும் பாலச்சந்தர் தான் வாழ்க்கை கொடுத்தார். மன்மதலீலையில் கமலை கலர்ஃபுல் ஆக அறிமுகப்படுத்தி ‘மூன்று முடிச்சி’ல்’ ரஜினியை வில்லனாக்கி தொடர்ந்து ‘அவர்களி’லும் கமல் நடிக்க ரஜினிக்கு வில்லன் ரோல் தான். இந்த அளவில் ரஜினி பிரபலமாகிவிட்டார்.

விஜயகுமார் – ஜெய் கணேஷ்  இருவருமே அதே காலத்தில் தான் வருகிறார்கள்.

விஜயகுமார்  நடிக்க முயற்சி 1960 களின் பின்பகுதியில் ஆரம்பித்தவர். ஒரு காட்சியில் மட்டும் தலை காட்டினார். பஸ்ஸில் ஒரு புதுப்பெண் மாப்பிள்ளையை காட்டுவார்கள்.அதில் புது மாப்பிள்ளை  விஜயகுமார்!
ஏ.பி. நாகராஜனின் ‘கந்தன் கருணை’ முருகனாக 1967ல்அறிமுகமாகி யிருக்க வேண்டியவர். வாய்ப்பு தட்டிப்போய்விட்டது. 
சிவகுமார் குறைவில்லாமல் கந்தனாக நடித்திருப்பார்.சிவாஜி தான் வீரபாகுவாக வந்தவுடன் குண்டியை நெளித்து நடந்து, குசு போட்டு, புருவத்தை நிமிர்த்தி, மூக்கை விடைத்து ஓவர் ஆக்சன் செய்து.....

1973ல் சொல்லத்தான் நினைக்கிறேனில் கமல் கலக்கினார். அதே வருடம் விஜயகுமார் பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் அறிமுகம். பட்டுக்கோட்டைக்கார விஜயகுமாருக்கு அந்தப்படத்தில் டப்பிங் குரல்!
தெலுங்கு நடிகர் போல இருக்கு என்று தான் ரசிகர்களே அபிப்ராயப்பட்டார்கள். 
அவள் ஒரு தொடர்கதை படத்தில் ரங்கமன்னார் என்று ஒரு நடிகரை கேன்சல் செய்து விட்டு அந்த ரோலை விஜயகுமாருக்கு பாலச்சந்தர் கொடுத்தார்.

அதே அவள் ஒரு தொடர்கதையில் தான் ஜெய்கணேஷ் (தெய்வம் தந்த வீடு பாடல்) அறிமுகம்.

விஜயகுமார் கதாநாயகனாக  நடிக்கும்போது இரண்டாவது கதா நாயகனாக ரஜினி நடித்திருக்கிறார். (மாங்குடி மைனர், ஆயிரம் ஜென்மங்கள்)
படங்களில் தன் பெயருக்கு முன்னால் “புரட்சிகலைஞர்” பட்டம் போடப்படவேண்டும் என்று விஜயகுமார் வற்புறுத்திய காலம் உண்டு.
 அதிமுகவில் இணைந்து " அண்ணா நீங்க நினைச்சபடி நடந்திடுச்சி, புரட்சித்தலைவர் கையில் நாடிருக்கு" என்ற பாட்டுக்கு நடித்தார்.
சி.என்.முத்து டைரக்ட் செய்த ‘சொன்னது நீ தானா’ என்ற படத்தில் புரட்சிகலைஞர் பட்டம் போடப்படவில்லை என்று விஜயகுமாருக்கு வருத்தம். 1980களில் இந்தப்பட்டம் விஜயகாந்துக்கு போய்விட்டது.

ஜெய்கணேஷ் முத்தான முத்தல்லவோ கதாநாயகன். 

கமல் ரஜினி மாதிரி விஜயகுமாரும் ஜெய்கணேஷும் கூட “தென்னங்கீற்று” போல சில படங்களில் இணைந்து  நடித்திருக்கிறார்கள். 

விஜயகுமார் சிவாஜியுடன் தீபம் படத்தில் நடித்த போது ஜெய்கணேஷ் அண்ணன் ஒரு கோவிலில் நடித்தார். விஜயகுமார் எம்.ஜி.ஆருடன் ‘ இன்று போல் என்றும் வாழ்க” படத்தில் வருவார்.

விஜயகுமார் மஞ்சுளாவை இரண்டாவது பெண்டாட்டியாக்கிக்கொண்டபோது ஜெய்கணேஷ் சுமித்ராவுடன் கிசுகிசுக்கப்பட்டு இவரும் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்வார் என்று தான் எதிர்பார்க்கப்பட்ட து. ஆனால் மலையாள நடிகர் ரவிகுமாரை சுமித்ரா கல்யாணம் செய்தார். பின்னால் இந்த கல்யாணம் நிலைக்கவில்லை.



இன்றைக்கு நடிகர் விஜயின் அப்பாவுக்கு (அப்போது எஸ்.சி.சேகர்!) முதல் படம் 
“அவள் ஒரு பச்சைக்குழந்தை’ கதாநாயகன் விஜயகுமார்.

ஆட்டுக்கார அலமேலுவில் ஜெய்கணேஷ் வில்லன்.



கமல்,ரஜினியை டைரக்டர் ஸ்ரீதர் “ இளமை ஊஞ்சலாடுகிறது” படத்தில் இயக்கிய பின் அடுத்தவருடம் ரிலீஸ் செய்தது விஜயகுமார் ஜெய்கணேஷ் நடித்த “அழகே உன்னை ஆராதிக்கிறேன்.”
 
வணக்கத்துக்குரிய காதலியே - திருலோகசந்தர் படத்தில் ரஜினி, ஸ்ரீதேவியுடன் விஜயகுமாரும் ஜெய்கணேஷும் நடித்திருந்தார்கள்.

'பகலில் ஒரு இரவு' படத்தில் விஜயகுமார் ஸ்ரீதேவியுடன். 
ஐ.வி.சசியின் ‘காளி’ படத்தில் ரஜினி கதாநாயகன்.அதில் விஜயகுமார் உண்டு.
ஜெய்கணேஷ் ‘இமயம்’ பட்டாக்கத்தி பைரவன் என சிவாஜி படங்களில்   நடித்தார்.
பாண்டியராஜனின் மாமனார் இயக்கிய ‘வேடனைத் தேடிய மான்’ ஜெய்கணேஷ் கதாநாயகன்.

ஜெய் சங்கர் ரவிச்சந்திரன் இருவரில் வாய்ப்பைப் பொருத்தவரை அதிர்ஷ்டக்காரர் என்றால் ஜெய்சங்கர் தான். அது போல விஜயகுமார் அதிர்ஷ்டம் ஜெய்கணேஷுக்கு கிடையாது.

விஜயகுமார் கதாநாயகனாக சாதிக்காததை பின்னால் குணச்சித்திர நடிகராக சாதிக்க முடிந்தது. அக்னி நட்சத்திரம், கிழக்கு வாசல், கிழக்கு சீமையிலே’

ஜெய் கணேஷுக்கு பாக்யராஜின் சின்ன வீடு, ஆராரோ ஆரிரரோ
ஒரு  டி.வி.சீரியலில் பானுப்ரியாவுக்கு மாமனாராக ஜெய்கணேஷ்.
.............

http://rprajanayahem.blogspot.in/2014/07/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2014/10/blog-post_10.html

..............................................................



1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.