Share

Feb 3, 2015

ஔவை யார்?



சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று பால கந்தன் கேட்டானே! அப்படி கேட்டது புராண கால ஔவையாரிடம்.


சங்க கால ஔவையார் கிழவியல்ல. இளம்பருவப்பெண்ணாம்! 
அதியமானைப் புகழ்ந்து பாடிய சங்ககால புறநானூற்று ஔவையார்.
ஆனால் நெல்லிக்கனி பெறும் ஔவை கிழவியாகத்தான் தெரிகிறார்!


ஆத்திச்சூடி,கொன்றை வேந்தன், நீதி நூல், மூதுரை, நல்வழி முதலியவையெல்லாம் சோழர்கால ஔவையாரால் பாடப்பெற்றவை என்று சொல்கிறார்கள்.
தாயொடு அறுசுவை போம், தந்தையோடு கல்வி போம் என்று தனித்திரட்டு  பாடியவர் வேறொருவர். அவர் இடைக்கால ஔவையார்.
வினாயகர் அகவல், ஞானக்குரல் போன்றவற்றை இயற்றியவர் பிற்கால ஔவையார்.
 'கான மயிலாட கண்டிருந்த வான் கோழி' பாடலை எழுதிய பிற்கால ஔவை பதினாறாம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட காலத்தை சேர்ந்தவராக இருக்கலாம். ஏனெனில் வான் கோழி ஐரோப்பியர் மூலம் அப்போது தான் இந்தியாவிற்கு வந்ததாம். என்னன்னவோ சொல்கிறார்கள்!


சண்டாளி,சூர்ப்பனகை, தாடகையைப்போல் வடிவு கொண்டாளை பெண் என்று கொண்டாயே ...நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்.
...விருந்து வந்ததென்று விளம்ப - வருந்தி ஆடினாள்; ஆடிப்பழமுறத்தால் சாடினாள் ஓடோடத்தான்.
..ஐயயோ அன்பிலால் இட்ட அமுது 
 பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கூடி இருக்கலாம்- சற்றேனும் ஏறுமாறாக இருப்பாளே ஆமாயின் கூறாமல் சன்னியாசம் கொள் 
இப்படியெல்லாம் பாடிய ஔவையார் ஒரு பெண் தான். 
இவர் Misogynist(One who hates women)மாதிரி தெரிகிறதே என்று Feminism பேசுகிற குசும்பன் ஒரு நாள் என்னிடம் வந்து சந்தேகம் கேட்டான். ஔவை பற்றி ஆண்டாள் போல தன் தடமுலைகளை எந்த ஆணுக்குமே கொடுக்க விருப்பமில்லாத misogamist (a marriage-hater)   என்பதாகவும்  misandrist (one who hates men )
என்ற அளவிலும் தான்  இது வரை நினைத்திருந்தானாம்.


http://rprajanayahem.blogspot.in/2009/11/blog-post_20.html

http://rprajanayahem.blogspot.in/2009/08/carnal-thoughts-22.html


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.