ஜெய சித்ரா தான் கமல்ஹாசனுடன் நடித்த முதல் நடிகை
எனலாம்.
( மாணவன் படத்தில் விசிலடிச்சான் குஞ்சுகளா பாட்டில் கமலோடு ஆடிய குட்டி பத்மினி ஆட்சேபிக்கவில்லையென்றால்! )
குறத்திமகனில் ஜெயசித்ரா மாஸ்டர் ஸ்ரீதருடன் டூயட் பாடி நடித்த போது கூட கமல் ஒரு ஓரமாக இருந்தார்.

அடுத்து அரங்கேற்றத்தில் கண்ணுக்கு
தெரிகிற மாதிரி வந்த போது அவருடைய சகோதரியாக ‘மூத்தவள் நீ கொடுத்தாய்’ ஜெயசித்ரா
பாடியிருக்கிறார்.
சொல்லத்தான் நினைக்கிறேன் -- சிவகுமாரை காதலித்தாலும் தன்னை கற்பழிக்கும் கமலை கல்யாணம் செய்வதாக அவரோடு நெருங்கி வந்தார்.
சொல்லத்தான் நினைக்கிறேன் -- சிவகுமாரை காதலித்தாலும் தன்னை கற்பழிக்கும் கமலை கல்யாணம் செய்வதாக அவரோடு நெருங்கி வந்தார்.
அதன் பிறகு கமலுடன் சினிமா பைத்தியம், மாலை சூடவா, பட்டாம்பூச்சி,
குமாரவிஜயம்.....
இப்படி கமலோடு
ஆரம்பத்தில் இணைந்து நடித்த Colleague.
ஸ்ரீப்ரியாவின்
முதல் படம் முருகன் காட்டிய வழி. அவர் பிரபலமானது அவள் ஒரு தொடர்கதை.
கமல் ஆரம்ப கால கதாநாயகிகளாக
பிரபலமானவர்களில் ஸ்ரீப்ரியாவை ஜெயசித்ராவுக்கு அடுத்து ஜூனியராகவும்,
ஸ்ரீதேவிக்கு சீனியர் எனவும் கொள்ளலாம்.
ஸ்ரீப்ரியா கமல்
ஜோடி ‘தங்கத்திலே வைரம்’ தொடங்கி பொருத்தமாய் இருந்தது.
ஜெயசித்ரா,
ஸ்ரீப்ரியா இருவருமே “ இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் மறக்கமுடியாதபடி நடித்திருந்தார்கள்.
அவள்
அப்படித்தான் ஸ்ரீப்ரியா காவிய நாயகி என்றே சொல்லவேண்டும்.
ஜெயசித்ரா,ஸ்ரீப்ரியா இருவரின் நடிப்பிலும் Humour sense அதிகம். காமெடி நடிப்பில் தூள் கிளப்புவார்கள்.
ஜெயசித்ரா,ஸ்ரீப்ரியா இருவரின் நடிப்பிலும் Humour sense அதிகம். காமெடி நடிப்பில் தூள் கிளப்புவார்கள்.
கமலின் ஆரம்ப
கால நடிகைகளில்,ஜெயசுதாவை தீபாவை,சுஜாதாவை ஏன்
சொல்லவில்லை என கேட்கவேண்டாம். இங்கே ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா இருவரைப் பற்றி தான்
சொல்ல வரும் விஷயம்.
ஜெயசித்ரா 1980களின்
முன் பகுதியிலும் ஸ்ரீப்ரியா கடைசியிலும் சிக்கி சிக்கலான காதல் விவகாரங்கள்.
சுதாகர்
திருமணச்செய்தி வந்தவுடன் ஜெயசித்ரா பொங்கிவிட்டார். சுதாகர் மீது தன் காரை
எடுத்துக்கொண்டு போய்விட்டதாக போலீஸ் புகார் கொடுத்து ரொம்ப ரசாபாசமாக முடிந்த
முறிந்த காதல்.
ஜெயசித்ரா மனதை
தேற்றிக்கொண்டு கும்பகோணம் கணேஷை மணந்துகொண்டார்.
சோலைக்குயில்
படத்தில் தன்னுடன் நடித்த ராகினியை கார்த்திக் திருமணம் செய்து கொண்ட போது
ஸ்ரீப்ரியா பொங்கி எழுந்தார். கார்த்திக் நடித்துக்கொண்டிருந்த ஒரு படத்தின்
செட்டுக்கே சென்று சண்டை போட்டு மயங்கி விழுந்து, இனி செய்வதற்கு ஒன்றுமில்லையென்ற
நிலையில் கரிசனத்துடன் ஸ்ரீப்ரியா டயலாக் ‘அவரு நல்லாயிருக்கணும்’
ஸ்ரீப்ரியா
மனதைத் தேற்றிக்கொண்டு லதாவின் தம்பி ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.