Share

Jan 26, 2015

Fickle and Elusive Popularity

 1965  இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் பிரபலமான மாணவர்கள் என்று  அரசியல் உலகில் கொடி கட்டியவர்கள் பலர்.

பெ.சீனிவாசன்,எல்.கணேசன்,(சசிகலா)எம்.நடராஜன், துரைமுருகன்,வை.கோ,கே.காளிமுத்து, நா.காமராசன், ராஜாமுகமது என்று உடனே சிலர் ஞாபகத்திற்கு வருவார்கள். 

ஆனால் அன்று இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் மாணவர் தலைவர் ரவிச்சந்திரன் என்பவர்.  அந்த நேரத்தில்  போராட்ட கதாநாயகன். அன்றைக்கு தினத்தந்தியில் தலைப்பு செய்தியில் இவர் புகைப்படம் தான் இடம் பெறும்.   
எல்.கணேசன், பெ.சீனிவாசன், துரைமுருகன் எல்லாரும் இந்த ரவிச்சந்திரன் பின்னால் நின்றவர்கள் தான். அன்று இவர்கள் யாரும் பிரபலமில்லை. ரவிச்சந்திரன் தான் மிகவும் பாப்புலர்.

"சாஸ்திரி உன் வாயில் என்ன? ப்ளாஸ்திரி?"
லால் பகதூர் சாஸ்திரி அப்போது பிரதமர். 

"பக்தவத்சலக்குரங்கே! பதவியை விட்டு இறங்கு!"
பக்தவத்சலம் தமிழக முதலமைச்சர்.

" கக்கா நீ சுட்டுத் தள்ள நாங்கள் என்ன கொக்கா?"
கக்கன் போலீஸ் மந்திரி.

 
ஒரு அரசியல் அதிசயம். இப்படி பிரபலமான ரவிச்சந்திரன் எப்படி தி.மு.க. வில் இணையவில்லை. அல்லது இவரை எப்படி தி.மு.க கண்டு கொள்ளாமல் விட்டது.  

 நிச்சயம் ரவிச்சந்திரன் 1967 தேர்தலில் சட்டமன்ற தி.மு.க.வேட்பாளராக சுலபமாக போட்டியிட்டிருக்க முடியும்.

 இவர் வக்கீல் பட்டப்படிப்பு தான் படித்திருக்கிறார். வக்கீல் தான் அரசியலுக்கு மிகவும் உகந்த தொழில். அப்படி இருந்தும் இவர் அரசியலுக்கு வரவில்லையா? சரி வக்கீலாகவாவது பிரபலமானாரா என்றால் அப்படியும் தெரியவில்லை.
இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அகில இந்திய அளவில் பிரபலமான ஒரு போராளி அதன் பிறகு  தமிழக வரலாற்றில் இருந்தே காணாமல் போன விஷயம் மிகவும் விசித்திரமாயிருக்கிறது.

முடிந்து போன விஷயம். It’s over, but it happened this way.  We know his name, not his story.

...........................................................

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_9319.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_11.html
 

2 comments:

  1. இன்று வெளி வந்திருக்கும் குமுதம் ( 23- 2.2015) தேதியிட்டது) இதழில் தமிழருவி மணியன் சொல்வது:
    " 1965ல் ஆங்கிலத்தை விலக்கிட்டு இந்தி மட்டுமேன்னு சொல்றாங்க. போராட்ட உணர்வு தலை தூக்க, தி.மு.கவுக்கு அரசியல் பண்ண ஒரு பெரிய விஷயம் கிடைக்கிறது. மாணவர்களை போராட தூண்டி விட்டாங்க. போராட்டம் வன்முறை பக்கம் திரும்பியதும் சிலர் கைது செய்யப்பட்டபோது, " இந்த போராட்டத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை' என்று நீதிமன்றத்திலேயே தி.மு.க. வாக்குமூலம் தந்திருக்கு. போராட்டத்தின் விளைவுகளை சந்திக்க திராணியில்லை. ஆனா பலன்களை அறுவடை பண்ணத் துடிச்சாங்க.இன்னிக்கு வரை பெருமை பேசிட்டிருக்காங்க. எவ்வளவு பெரிய பித்தலாட்டம்?"
    இப்படி தெளிவாக சொல்லும் தமிழருவி மணியன் நினைவுக்குழப்பமாக "அப்போது நேரு பாராளுமன்றத்தில் " இந்தி பேசாத மாநிலங்களில் மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் இருக்கட்டும்."னு உறுதி தந்தார் " என்று தவறாக கூறுகிறார். நேரு 1964ல் மறைந்து விட்டார். லால் பகதூர் சாஸ்திரி தான் அப்போது பிரதமர்.

    ReplyDelete
  2. Its very sad to understand the ugly realities of Anti-Hindi agitations. When I was growing up I felt DMK was the only iyakkam to save Tamil in TN.Unfortunately I am wrong. Looking back post 1965 I feel that we as people are still under these feces who reaped harvest from our emotions. We could not establish best Institute for Tamil Language. The spirit of inculcating one's language is going day by day. English has some standard (DICTIONARY(OXFORD) ,GRAMMAR(WREN & MARTIN)) books to refer. We don't have any such institutes in TN or such books for Tamil. Mozhikkana Kattamaipugale illathathu varutham thara kudiya vishayamaga irukirathu.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.