Share

Jan 9, 2010

நெட்டை மரங்களென நின்று ...

ஆக்சிடன்ட் நடந்தா உயிருக்கு போராடுபவருக்கு உதவ யாருமே இல்லாத,நின்று வேடிக்கை பார்க்கும் சமூக அவலம் பற்றி யோசிக்க வேண்டும்.

1997 ல் மே மாதம் ஐந்தாம் தேதி நான் பஸ்ஸில் மணப்பாறையிலிருந்து திருச்சி வரும்போது இரவு ஏழு மணி போல எதிரே வந்த லாரி மீது பஸ் மோதி 13பேர் அந்த இடத்திலேயே இறந்தார்கள். எனக்கு தோள்பட்டை 'காலர் போன்'உடைந்து விட்டது. அன்று இன்னும் கொஞ்சம் அடி பலமாக மட்டும் பட்டிருந்தால் என் தோள் கண்டார் அதற்குப் பின் தோளே கண்டிருக்கமுடியாது. இல்லை அன்றே நான் போய் சேர்ந்திருப்பேன். எலும்புகள் இணைவதற்காக ஒரு மாதத்திற்கு மேல் தோளுக்கு ஜாக்கெட் போட்டுக்கொண்டு சிரமப்படவேண்டியிருந்தது.

அன்றைக்கு விபத்து நடந்த அந்த நேரத்தில் உயிருக்கு மன்றாடிய ரத்தசகதியில் மாடு போல இரைத்துக்கொண்டிருந்த ஒருவரை மற்றொரு பஸ் ஒன்றில் ஏற்ற முயற்சித்தபோது அந்த பஸ்ஸின் டிரைவரும் கண்டக்டரும் கடுமையாக எதிர்த்து மறுத்து விட்டார்கள்."நாங்க எங்க பஸ்ஸில் அடிபட்ட ஆளையே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருவதாக போலீஸ் எங்க மேலேயே பழி போடுவாங்க ''- இது அவர்கள் விளக்கம்.

ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை ஒரு கும்பல் வெடிகுண்டு , அரிவாளால் தாக்கி அவர் உயிருக்கு மன்றாடி தவிக்கும்போது இரண்டு தமிழக மந்திரிகள், கலெக்டர் உட்பட ரோட்டில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். வெட்டிய கும்பல் கடையம் சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியனை வெட்டுவதாக நினைத்து அடையாளக் குழப்பத்தில் வெற்றிவேலை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். அவர்களை விரட்டியும் மந்திரி,கலெக்டர் சூழ வந்த பரிவாரங்களாலும் பிடிக்க முடியவில்லை. உடனே ஒரு காரில் ஏற்றி வெற்றிவேலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகாமல் ஆம்புலன்சுக்காக காத்திருந்து ரோட்டில் வெறுமனே நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.தலைமைப் பண்பு கிஞ்சித்தும் இல்லாத மந்திரிகளும் கலெக்டரும்!வேடிக்கை பார்த்துவிட்டு மிகவும் தாமதமாக இருபது நிமிடங்களுக்குப் பின் ஒரு மந்திரியின் பாதுகாப்பு வாகனத்தில் குற்றுயிராய் இருந்தவரை ஏற்றி, அதன் பின் எதிரில் வந்த ஆம்புலன்சில் மீண்டும் மாற்றி .... வெற்றி வேல் இறந்து விட்டார்.

வெற்றி வேல் ரோட்டில் துடிக்கும்போது , எழமுயன்று தன்னைக் காப்பாற்ற சைகை செய்து இறைஞ்சியிருக்கிறார். ஒரு மந்திரியின் உதவியாளர் தண்ணீர் பாட்டிலை அவரிடம் நீட்டியவர், வெற்றிவேலிடம் இருந்து பொங்கும் குருதிப் புனல் கண்டு, தன் மேல் ரத்தம் தெளித்து விடக்கூடாது என்று ஒதுங்கிக்கொண்டாராம்.

11 comments:

  1. payanilla padipaale manam than kolaiyai marum parvathi- song from Devadass

    ReplyDelete
  2. அரசியல்வாதிகளுக்கும் ஐஏஎஸ்,ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளுக்கும் மானம் மரியாதை,வெட்கம் சூடு சொரணை இல்லாமல் போய் வெகு காலமாகிறது.மனித நேயமும் இல்லாமல் போய்விட்டது என்ற நிதர்சனம் முகத்தில் அறைகிறது.

    அடுத்தது என்ன?கொலையுண்ட குடும்பத்தினருக்கு ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ தரப்படும்.குடும்பத்தில் ஒருவருக்கு ஏதோ பியூன் வேலை கிடைக்கும்.மிஞ்சிப்போனால் அடுத்த ஆண்டு போலீஸ் பதக்கம் வழங்கப்படும்.

    ம்ம்..செத்தவன் தலையில் எத்தனை வண்டி ஏறினாலென்ன!

    ReplyDelete
  3. Sir,
    It is disgusting to see the video in ndtv.
    Tamil society has lost all its sense,as it is evident thro' continuous by-election melas and their result,mute spectatorship to Eelam atrocity.
    The psuedo-tamil culture shown in tv serials,reality shows and cinema are becoming the real things.

    ReplyDelete
  4. உதவியாளர் தண்ணீர் தரவில்லை, தூரத்திலிருந்து தெளித்தார்.

    ReplyDelete
  5. தலைப்பு அருமை.பாஞ்சாலி சபதம்.இதன் அடுத்த வார்த்தை விவாதத்திற்குரியதுதானே."பெட்டைப் புலம்பல்".

    ReplyDelete
  6. 108 அவசர வாகனத்தை வைத்து 'கலைஞருக்கு நன்றி' என தனக்குத் தானே அரசின் பணத்தில் ஊடகங்களில் விளம்பரப்படுத்திக்கொள்ள நினைக்கும் முதல்வர் இருக்கையில் இந்த அமைச்சர்களின் பொறுப்பின்மையை எவன் தட்டிக்கேட்பான்.

    கொத்துக்தொத்தாக ஈழத்தில் மக்கள் சாதல் கண்டும் கொலைக்கரங்களோடு கைகோர்த்த இவர்களுக்கு வெற்றிவேல் எனும் ஒரு மனிதனின் உயிர் அவ்வளவு முக்கியமா என்ன?

    காவல்துறை நண்பர்களே உங்களை ஏவல் நாயாகப் பயன்படுத்தும் இவர்கள் உங்கள் மீது கொண்டிருக்கும் அக்கறையைப் பார்த்திர்களா?

    ReplyDelete
  7. Ironically, the good thing happened is the video recording of the entire incident. It exposed the qualities of these people!

    The government announced 7 lakhs aid (hitting people with money!)

    ReplyDelete
  8. பல ஆண்டுகள் முன்பு ஒரு மார்ச் மாதம் சென்னையிலிருந்து நானும் என் துணைவியாரும் வெள்ளை நிற வாடகைக்காரில் காஞ்சிபுரம் சென்றோம். கேரளத்தைச் சேர்ந்த என் துணைவியர்காஞ்சிபுரம் காண்பது முதல் முறை. கைலாசநாதர் ஆலயம், திருப்பருத்திக்குன்றம் சமண ஆலயம் ஆகியவற்றின் ஃப்ரெஸ்கோ ஓவியங்களைக் கண்டுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தோம்.

    நெடுஞ்சாலையில் ஒரு சைக்கிள் பயணி அடிபட்டுக் கிடந்தார. அவர் வேட்டி, அருகே சென்ற என் துணைவியாரின் அரக்குப்புடவையைத் தொடுமாறு காற்றில் படபடத்தது. எழுந்து எங்களிடம் பேசுவார் என எதிர்பார்ததேன். சுற்றிப் பல நிறங்களில் ஸூட்கேஸ்கள். எடுத்துச்சென்று கிராமங்களில் விற்க வேண்டும் போலும்.

    மதியம் நெருங்க உச்சிவெயில். என் சட்டையின் கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தம் உறைந்து விட்டதால், நாங்கள் ஓவியங்களைக் கண்டு ரசித்த அதே அரை மணி முன்பு நடந்திருக்க வேண்டும். நிற்கவில்லை யாரும். கோபால்ட் நீலத்தில் தூய வான்வெளி. ஒரு மேகமில்லை. அருகில் அதே நீல நிறம் பூசிய பெரும் இரும்புக்கிராதிகள் கொண்ட தொழிற்சாலை. அங்கிருந்து யாரும் வரப்போவதில்லை என்றார், வெள்ளைச்சீருடை அணிந்த எங்கள் ஓட்டுனர்.

    திரும்பக் காஞ்சிபுரம் வந்து காவல் நிலையத்தில் அரசாங்கத்தின் பழுப்புக்காகிதத்தில் புகார் எழுதிக்கொடுத்து, அவர்களுடன் இணைந்து பிரத்யேகக் கறுப்பு வண்டியுடன் நெடுஞ்சாலைக்குத திரும்பி, அதில அவரைக் கிடத்தி,
    மருத்துவமனை சென்று, பச்சை நிறச் சுவர்கள் கொண்ட அறையில் ஐஸ் கட்டிகள் அருகே விட்டுவிட்டு வந்தோம்.

    சாலையில் சைக்கிளும் ஸூட்கேஸ்களும் இன்னும் கிடந்தன. காலியாக இருந்த இடத்தில் மஞ்சள் சாக-பீஸ் வைத்து வரைந்திருந்தார்கள். அப்போது வரை எங்கள் ஓட்டுநர் வண்டியோட்ட மறுத்துவிட்டதால் சீருடை அணியாமலேயே வாடகைக்கார் ஓட்டுநராகப் பணியாற்றினேன். "நம்ப இடிச்சு இப்படி ஆச்சுன்னு சொல்லுவாங்களா சார்" என்று எச்சரிககையுடன் கேட்டிருந்தார்.

    திரும்பும்போது மேலும் சொல்லிக்கொண்டே இருந்தார். "நம்ம யாருக்கும் இதுதான் கதி. இந்தக் காக்கிச்சட்டைக் காரங்க எவ்வளவு பேரை இப்படிக் கொண்டுபோயிருப்பாங்க, இவங்களுக்கும் இதேதான் சார் கதி."

    மேலை வானில் மாலைச்சூரியன் வீழ, என்னை வசீகரித்த அந்த மஞ்சள் கோட்டில் வண்டியைச் சற்றே நிறுத்தினேன்.

    ReplyDelete
  9. Naan SM a velai parthappa trichy aruge Pudur station la Vaigai Exp la
    podhai la adipattu kidantha oru trespasser vethanai la ketta varthaigala munaki kondirukka ... naan Trichy stationai rly phone la kooppittu rly police idam vivaram solla rly police kaetta kelvi "uyir irukkaa?".
    Naan pathattamudan "Irukku"
    TRP: "sethaudan sollunga Sir"...Phone cut.
    Pin en personal risk la avanai "sea horse" hospitalla admit panni
    uyir kakka avan relatives stn thaedi vanthu "Nanri" sonnathu thani kathai.

    ReplyDelete
  10. Evulavu vali ulla oru sambavam , illaya sir, :) samudhayamum apdi iruku, help panravanukke padhagam nadakkudhu, ellarum bayapaduraanga :) yara solradhunnu puriyala, atleast nammala name mathikanum :) adhu dhan edho konjam mana amaidhiku vali vagukum

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.