Share

Jan 18, 2010

ஒரு மரணமும் இன்னொரு தாக்குதலும்

நேற்று ஜோதி பாசுவின் மரணம் விளைவிக்கும் துக்கம் ஒரு புறம்.கம்யூனிஸ்ட்களின் தரம் சகிக்க முடியாத அளவுக்கு தாழ்ந்து போய்விட்ட துக்கம் மறுபுறம்.

சில நாட்களுக்கு முன் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பால் சக்கரியா கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட்களால் தாக்கப்பட்டிருக்கிறார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் உன்னிதான்- ஜெயலக்ஷ்மி கையும் மெய்யுமாக பிடிபட்ட பாலியல் விவகாரத்தில் கைது,வழக்குமீதான பால் சக்கரியாவின் நிலைப்பாடு கம்யூனிஸ்ட்களுக்கு உவப்பானதாக இல்லை. ஒரு முன்னாள் கம்யூனிஸ்ட் எம்.பி. யின் மகன், கம்யூனிஸ்ட் இளைய தலைமுறை சார்பாக சக்கரியாவை தாக்கியிருக்கிறான். இடது சாரி இளைஞர்கள் சக்கரியாவை " தலையை எடுத்துவிடுவோம். கைகால்களை எடுத்து விடுவோம் " என மிரட்டி கழுத்தில் கைவைத்து தாக்கியிருக்கிறார்கள்.
சக்கரியா பேசிய விஷயம் கூட காலம் காலமாக எந்த ஒரு அறிவு ஜீவியும் நம்புகிற சாதாரண விஷயம் தான். ' ஒரு பூட்டிய அறைக்குள் ஆணும் பெண்ணும் இருக்கும்போது நீங்கள் ஏன் அவர்களின் தனிமையில் தலையிட வேண்டும்?'
கம்யூனிஸ்ட்களும் இந்துத்வாவாதிகள் போல, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போல மாறிவிட்டார்கள். சகிப்புத்தன்மையை சுத்தமாக இழந்து விட்டார்கள்.
' ஆண் - பெண் உறவுமுறை' யில் இடதுசாரிகள் முன்பெல்லாம் முற்போக்கு அணுகுமுறையை கையாண்டவர்கள்.இப்போது எல்லாம் தலைகீழாகி விட்டது. மேற்கு வங்கத்திலும் சிந்தனையாளர்களுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே பெரிய பிளவு ஏற்பட்டிருக்கிறது.' என்கிறார் சக்கரியா.
இனி அறிவுஜீவிகளிடம் இருந்து இடதுசாரிகளும் விலகுகிறார்கள்.

A man's dying is more the survivor's affair than his own.
- Thomas Mann.

ஜோதி பாசுவின் மரணம் இவர்களுக்கு ஒரு Retreatஆக அமைந்தால் நல்லது.

Cherished Icon Jyoti Basu!
'நாட்டுக்காக தன் உடல்,பொருள்,ஆவியை அர்ப்பணித்தார்' என்ற வார்த்தை ஒரு cliche . ஜோதி பாசு இறந்தவுடன் தானம் செய்யப்பட்ட கண்கள் டாக்டர்களால் உடலிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது. அவர் மரணத்திற்கான அரசாங்கத்தின் இறுதி மரியாதைக்குப் பின் அவர் உடல் அவர் விருப்பப்படி மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்பட இருக்கிறது.Don’t call him ‘a Saint’. Jyoti Basu should never be dismissed so easily.அவசரமாக வார்த்தைகளை உணர்ச்சி வேகத்தில் அள்ளித் தெளித்து அவரை கொச்சைப்படுத்தி விடாதீர்கள்.

With Jyoti Basu's Death,
The whole Indian Communists stand dwarfed.

5 comments:

 1. நல்ல பகிர்வு சார், எப்பொழுதும் போல. மருத்துவத்துறைக்கு உடல் தானம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  ReplyDelete
 2. A man's dying is more the survivor's affair than his own - Thomas Mann.

  Your quotes are very interesting and are very apt.

  ReplyDelete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 4. சக்கரியா மீது தாக்குதல், ஜோதி பாசு இறப்பு இரண்டையும் அருகருகே வைத்து நீங்கள்... போங்க, ஸார், துக்கம் தாங்கமுடியவில்லை.
  இனி -
  மதிக்கப்படத் தக்க கம்யூனிஸ்ட்டுகளும் இருந்தார்கள்!

  ReplyDelete
 5. மதிக்கப்படத் தக்க கம்யூனிஸ்ட்டுகளும் இருந்தார்கள்!


  எப்போது?

  திருப்பூரில் மதிப்பு மிக்கவர்களாய் இருந்தவர்கள் கூட கொள்ளையடிப்பதில் கூட்டணிப் படையினர் போல ஆகி விட்டார்களே?

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.