1/13/2010

ஒரு பார்வையில்

'உலகின் ஒரே நகரம் நியுயார்க் ' என போத்ரியார் சொன்னதாக நாகார்ஜுனன் ப்ளாகில் படித்த ஞாபகம்.

ஆழ்ந்த பிரக்ஞை பூர்வமான முடிவு. இது பிடிவாதமல்ல.

" ஒரு பார்வையில் சென்னை நகரம்" என்ற அசோகமித்திரனின் நூலைப் படித்தபோது போத்ரியாரின் வார்த்தைகள் தான் நினைவில் வந்தது.கவிதாப் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம் " ஒரு பார்வையில் சென்னை நகரம்". ரொம்ப சின்னப் புத்தகம் தான். விலை நாற்பது ரூபாய்.

மனிதனின் வேர்கள் அவன் வாழும் சூழலில் ஊன்றிவிடுகிறது.

" தெரியாத அதிசயங்களைத் தன் கர்ப்பத்தில் சுமக்கின்ற மகா சமுத்திரங்களை விட எனக்குத் தெரிந்த என் நிளா நதியைத் தான் நான் நேசிக்கிறேன்" என்பார் எம்.டி.வாசுதேவன் நாயர்.

கிரா நேர் பேச்சில் என்னிடம் சொன்னார் : "எவரெஸ்ட் பெரிய சிகரம் தான். இருந்தாலும் குருமலை தானே எனக்கு முக்கியம்."

ஷெல்லி சலித்துப் போய் “Hell is a city much like London” என்றான்.

ஆல்பர் காம்யு -“Paris is a dingy sort of town.” என்று ‘The Outsider’ நாவலில் முகம் சுழிப்பான்.

என்னைக் கேட்டால் நான் சொல்வேன்.

“Hell is a city much like Tiruppur”.
“Tiruppur is a dingy sort of town”

6 comments:

Kannan said...

I have spent 6 yrs in Tpr and understand what you are saying :), but it is a town of opportunity.

Wish you Happy Pongal.

Saravanan said...

for me Madurai is my dream city. my successful and unsuccessful loves happened there only. Now I can't love any girl or woman (true love?????). But the girls of my youth are still coming in my dreams and thoughts. Will they know still i am remembering them? Where are you girls??????

Gopalan Ramasubbu said...

திருப்பூரின்மேல் அப்படியென்ன சார் கோபம் உங்களுக்கு? :)

காளிராஜ் said...

romba adiyooda anupavamum patturukkeenga polla irukae.. :)

adhiran said...

happy pongal sir. how are you?

THE WISE FOOL said...

The dry pond and its banks in my town - Sivakasi - attracts me more than the sea shore elsewhere.