Share

Jan 11, 2010

ஷேக்ஸ்பியர்



பல்கலைக்கழகங்களில் படித்திடாதவர்.தன் நாடகங்களில் ஷேக்ஸ்பியர் தானும் நடித்திருக்கிறார்.

ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலத்தில் தான் எழுதிய மகத்தான நாடகங்களை அச்சிலே பார்க்கவே இல்லை.
52 வயதில் ஷேக்ஸ்பியர் இறந்த பின் 36நாடகங்களை அச்சில் கொண்டுவந்தவர்கள் அவருடைய நாடகங்களில் நடித்த ஹெம்மிங்க்ஸ், காண்டல் என்ற இருவர் தான்.
 ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் Cardenio அவர் காலத்தில் மேடையில் நடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நாடகம் தொலைந்து போய்விட்டது.கிடைக்கவே இல்லை.



Racism, Anti-Semitismஎன பல prejudice இவரிடம் தெரியக் கிடைக்கிறது என சுலபமாக குற்றம் சாட்டி பெருமிதம் கொள்ள செக்குமாட்டு விமர்சகனுக்கு வாய்ப்பு நிறைய உண்டு.
Black is the badge of hell, the hue of dungeons and the scrowl of night.
-‘ Love’s Labour Lost’




ஒதெல்லோ ஒரு மூர் ஆப்பிரிக்கன்.ஒதெல்லோ நாடகத்தில் அவன் மீதான வசவுகள் கூட ஷேக்ஸ்பியருக்கு எதிராக திருப்பப் படமுடியும்.
யூத வெறுப்பு தான் Merchant of Venice நாடகத்தில் ஷைலக் என்ற யூதனை கொடூர, இரக்கமற்ற வில்லனாக்க காரணம் என வாதிடலாம்.
தன் நாடகங்களில் தற்கொலை என்பதை 13தடவை பயன்படுத்துகிறார்.ரோமியோவும் ஜூலியட்டும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.ஜூலியஸ் சீசரில் தற்கொலை நடக்கிறது.ப்ரூட்டஸ் மனைவி போர்ஷியாவின் தற்கொலை. ப்ரூட்டஸ் -கேசியஸ் Die by Consensual Stabbing!ஒதெல்லோ தற்கொலை செய்து கொள்கிறான். ஹேம்லெட் ட்டில் ஒபீலியா நீரில் மூழ்கி தற்கொலை. ஆண்டனி அண்ட் கிளியோபட்ராவில் தான் அதிக தற்கொலைகள்.மார்க் ஆண்டனி, கிளியோபட்ரா,சார்மியன்,ஈரோஸ், ஐராஸ்....

"டெம்பஸ்ட்" நாடகத்தில் காணப்பட்ட கதை தன் கருவில் சுதந்திரம், நட்பு, மனம் திரும்புதல், மன்னிப்பு என்பனவற்றை கொண்டிருக்கிறது.

“We are such stuff as dreams

Are made on.”

- The Tempest.



முதல் நாடகம் Henry VI part one இருபத்தைந்து வயதில் எழுதினார். கடைசி நாடகம் The Two Noble Kinsmen எழுதும்போது அவருக்கு 49 வயது.
கிட்டத்தட்ட 1600ம் ஆண்டு 36 வயதில் அவருடைய மிகச்சிறந்த சோக நாடகங்கள் ஹாம்லெட்,ஒதெல்லோ, கிங்லியர், மாக்பெத் ஆகியவற்றை எழுதியிருக்கிறார்!  1616ல் இறந்து விட்டார்.

அவருடைய கவிதைகள் 154 sonnets. நிறைய சர்ச்சை கிளப்பியவை. முதல் 26 கவிதைகள் ஒரு இளைஞன் பற்றியவை. கடைசியில் இரண்டு தவிர முந்தைய 25கவிதைகள் ஒரு கருப்பு பெண் குறித்தவை. 126வது சானட் சொல்வது farewell to“My lovely boy”...Shakespeare .... a BISEXUAL?என ஆராயலாம்!



பதினெட்டு வயது ஷேக்ஸ்பியர். இருபத்தாறு வயது ஆன்னி ஹேத்தவே.தன்னைவிட எட்டு வயது மூத்த ஆன்னி ஹேத்தவே என்ற பெண்ணை மணந்து மனஸ்தாபத்தோடு எட்டு பிள்ளைகள் பெற்றார் ஷேக்ஸ்பியர்.Anne Hathaway hath a way!
இந்த எட்டில் ஒரு ட்வின்ஸ் உண்டு. இந்த ட்வின்ஸ் இருவரில் ஹேம்நெட் வாழ்க்கை 11வயதில் முடிந்தது. இன்னொரு ஜூடித் 77வயது வரை வாழ முடிந்தது. ஷேக்ஸ்பியரின் சொத்துக்களை அனுபவித்த சூசன்னா 66 வயதில் மறைந்தார். ஷேக்ஸ்பியரின் உயில் படி மூத்த மகளுக்குத்தான் சொத்து கிடைத்தது.மனைவி ஹேத்தவேக்குகிடைக்கவில்லை.ஷேக்ஸ்பியரின்Second-best bed இரண்டாவது படுக்கை ...Marriage Bed தான் ஹேத்தவேக்கு கிடைத்தது!



'வறுமையும் புலமையும் ' என்று ஷேக்ஸ்பியர் பற்றி சொல்ல முடியாது . 18வயதிலேயே சொத்து வாங்க ஆரம்பித்து விட்டார். மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கி குவித்தவர் ஷேக்ஸ்பியர்.அவருடைய சொந்த ஊர் ஸ்ட்ராட்போர்டில் உள்ளூர்க்காரர்கள் ஷேக்ஸ்பியரை ஒரு பக்கா பிசினெஸ் மேன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்களாம்.
ஷேக்ஸ்பியரின் அம்மா கூட செல்வசீமாட்டி எனும்படியானவரே. செல்வந்தரின் மகள்!
ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்,கிங் லியர், மேக்பெத் போன்ற ஏழு நாடகங்கள் பால் இல்லிட்ஜ் என்பவரால் நாவல்களாக எழுதிப் பார்க்கப்பட்டிருக்கிறது.

SIR FRANCIS BACON தனக்கு SHAKESPEARE என்ற புனைபெயரை வைத்துக் கொண்டு நாடகங்கள் எழுதினார் என்று ஒரு தியரி உண்டு.
SIR FRANCIS BACON WROTE SHAKESPEARE PLAYS !
டோனலி, பிரான்சிஸ்கேர், மார்க் ட்வைன் ஏன் நீட்ஷே கூட SHAKESPEARE AUTHORSHIP பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
ஒரு வேடிக்கையான ஓவியம் ஒன்று பார்க்கக் கிடைத்தது. 'ஒரு அறை. சுவரில் ஷேக்ஸ்பியரின் படம் மாட்டப்பட்டிருக்கிறது. மேஜையில் SIR.F.BACON என்ற பெயர்ப்பலகை. நாற்காலியில் ஒரு பன்றி அமர்ந்து மேஜையில் உள்ள ஒரு தாளில் எழுதுகோலால் HAMLET என்று சீரியஸாக சிந்தித்து எழுதிக் கொண்டிருக்கிறது.
( BACON என்றால் பன்றி இறைச்சி)
 ஓவியத்தின் கீழே எழுதப்பட்டுள்ளது. 'ஷேக்ஸ்பியரை நம்பாத புலவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்தப் படம் சிறந்த பரிசு. அந்தப் பன்றி 'ஹேம்லட்' என்று தான் எழுதிக் கொண்டிருக்கிறது'.


1 comment:

  1. //முதல் நாடகம் Henry VI part one இருபத்தைந்து வயதில் எழுதினார். //

    ????????????

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.