இங்கே நிறைய ஸ்டீபனோக்கள்

தமிழர்கள் பாக்கியசாலிகள்.

நல்ல பல அரசியல் விதூஷகர்கள் அவ்வப்போது தங்கள் விஷேச விசித்திர வித்தைகள் மூலம் தமிழர்களை மகிழ்விக்கிறார்கள் .
தமிழக கல்வெட்டு ஒன்று ஒரு எதிர் கால சரித்திர உண்மையை பூடகமாக சொல்கிறதாம்." மிக,மிக,மிக ஆடம்பரமாக திருமணம் செய்துகொண்டவர் தான் எதிர்காலத்தில் தமிழ் நாட்டை ஆளப் போகிறார் " இந்த கல்வெட்டு செய்தி சின்ன எம்ஜியார் சுதாகரனை மிகவும் உற்சாகப் படுத்திவிட்டது. " வேறு யார்! அப்ப நான் தான் எதிர்கால முதல்வர் " என தேவர் ஜெயந்தி அன்று கூட்டம் சேர்த்து அஞ்சலி செலுத்தி கலக்கி விட்டார் என கொஞ்ச வாரங்கள் முன் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை மூலம் அறிய நேர்ந்தது .
அய்யா திண்டுக்கல் சர்தார் அவர்கள் கல்வெட்டு ஆராய்ச்சிக்காக நிறைய நேரம் தன் வாழ்வில் அர்ப்பணிப்பு செய்து வருபவர் . அவருக்கு சின்ன எம்ஜியார் சுதாகர் கல்வெட்டு செய்தி பற்றி தெரியுமோ என்னவோ!
சின்ன எம்ஜியார் தான் எதிர்கால முதல்வர் என்றால் கருப்பு எம்ஜியார் கதி அதோ கதி தான். ஓஹோ! அதனால் தான் கருப்பு, 'மக்கள் - ஆண்டவன் கூட்டணி' வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு இனி அடுத்து வரும் பொதுத் தேர்தலில், ஏனைய அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஐக்கியமாகி தமிழக துணை முதல்வர் ஆகிவிடும் முடிவுக்கு வந்திருக்கிறார் போலும் .
தாமரைக்கனி மகன் இன்பத்தமிழன் சென்ற மாதம் தன் தவறுகளுக்கு வருந்தி திமுகவிலிருந்து விலகி 'அம்மா தான் தெய்வம் ' என்று அண்ணா திமுகவில் இணைந்து ஒரு resurrectionல் இருக்கிறார்.
சின்ன எம்ஜியார்,கருப்பு எம்ஜியார்,ரித்தீஷ், என்.கே.கே.பி.ராஜா,இன்பத்தமிழன் என இன்றைய குறுநில மன்னர்கள் தான் தலைவர்கள்.
ரித்தீஷ், என்.கே. கே. பி.ராஜா, இன்பத்தமிழன், சின்ன எம்ஜியார் சுதாகரன் போன்றவர்கள் சகவாசம் சின்னக்கல்லை எடுத்து குண்டி துடைக்கிற வேலைக்கு ஒப்பானது என்பது திமுக, அண்ணாதிமுக தலைமைக்கு அனுபவப் பூர்வமாக தெரிந்த விஷயம். வெட்ட வெளியிலே வெளிக்கி போயிட்டு சின்னக் கல்லை எடுத்து குண்டி துடச்சா நரகல் கையிலே தானே ஒட்டும்! ஆனா இந்த சின்னத்தனமான ஆளுங்களுக்கு நல்ல டிமாண்டு. இன்பத் தமிழன் மாதிரி ஒரு சின்னக்கல்லு ஒரு கட்சியை விட்டு கோவிச்சுக்கிட்டு போனா இன்னொரு கட்சி உடனே,உடனே சேர்த்துக்குவாங்க! கையிலே ஒட்டுனா பரவாயில்ல!நாளைக்கு என்.கே.கே.பி ராஜா வை அண்ணா திமுக விலே கட்டாயம் சேர்த்துக்குவாங்க. கருப்பு எம்ஜியார் தே.மு.தி.க கட்சிய கூட்டணியில சேர்க்க திமுக, அண்ணா திமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பிஜேபி எல்லா கட்சியுமே போட்டி போடுவாங்க!
இந்த தேசத்தலைவர் கார்த்திக் சிதம்பரம் பிறந்தநாள் மிகவும் பிரமாதமாக கொண்டாடப்படுகிறது.
ஷேக்ஸ்பியரின் Tempestல் வரும் பட்லர் ஸ்டீபனோ போன்ற விதூஷகத் தலைவர்கள்.
இளைய தளபதி விஜய் ரசிகர்கள் வேறு தவிப்பில்
On your marks..Get set... என தயாராய் இருக்கிறார்கள்!
'டெம்பஸ்ட் ' நாடகத்தில் ஸ்டீபனோவை கடவுளாக கொண்டாடும் காலிபன் எனப்படும் "ரசிக தொண்டன்" பித்தம் தெளிந்து சொல்வான்.


"What a thrice-double ass was I to take this drunkard for a god,
and worship this dull fool.

I will be wise hereafter, And seek for grace."

6 comments:

 1. Saravanan said...:

  what about actor vijay!!!!!!

 1. thiru said...:

  "I will be wise hereafter, And seek for grace"
  -Shall this soon come true for Tamil fan mobs !!

 1. Ravi said...:

  will I be wise ever, and seek for grace? - tamil fan mobs.

 1. epowerx said...:

  ." மிக,மிக,மிக ஆடம்பரமாக திருமணம் செய்துகொண்டவர் தான் எதிர்காலத்தில் தமிழ் நாட்டை ஆளப் போகிறார் " - it could be Shivaji's grand daughter too. i am sure Sudhakaran never thought of it that way.

 1. Arun said...:

  Sir,'Supreme Star' is a notable omission!!!

 1. ..//அய்யா திண்டுக்கல் சர்தார் அவர்கள் கல்வெட்டு ஆராய்ச்சிக்காக நிறைய நேரம் தன் வாழ்வில் அர்ப்பணிப்பு செய்து வருபவர் . அவருக்கு சின்ன எம்ஜியார் சுதாகர் கல்வெட்டு செய்தி பற்றி தெரியுமோ என்னவோ!//

  நன்றாகச் சொன்னீர்கள் போங்கள்!எனது துர்பாக்கியம் அந்தக் கல்வெட்டைக் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Post a Comment

Followers