Share

Oct 8, 2009

கவி கா.மு.ஷெரிப்

மந்திரி குமாரிபடத்தில் எஸ்.ஏ.நடராஜன் மலைமேலே மாதுரி தேவியிடம் பாடும் பாடல் " வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்" -திருச்சி லோகநாதன் குரல் கொடுத்த பாட்டு!இந்த பாடலை எழுதியவர் கவி கா.மு.ஷெரிப் .
'டவுன் பஸ் ' படத்தில் கண்ணப்பா -அஞ்சலிதேவி வாயசைத்து நடித்த "பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமோ ? துயரம் நிலை தானா ? உலகம் இது தானா ?" பாடலை எழுதியவரும் கவி கா.மு.ஷெரிப் தான்.
எஸ்.எஸ்.ஆர் நடித்த பாடல்கள் " ஏரிக்கரை மேலே போறவளே பொன்மயிலே! என்னருமை காதலியே என்னைக்கொஞ்சம் பாரு நீயே "
" பணம் பந்தியிலே ! குணம் குப்பையிலே ! இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதன் இல்லே !" - எழுதியவர் கா.மு.ஷெரிப் .
சிவாஜி கணேசனுக்கு கா.மு.ஷெரிப் எழுதிய பாடல்கள்
"வாழ்ந்தாலும் ஏசும்,தாழ்ந்தாலும் ஏசும் -வையகம் இது தானடா "
" பாட்டும் நானே ! பாவமும் நானே !"

சினிமாப்பாடல் எழுதியவர் தான் என்றாலும் இவர் ஒரு Man of principles.
யாராவது கொஞ்சம் பெரிய மனுஷன் பழக்கம் இருந்தா அதை வைத்து எப்படி
Exploit
பண்ணலாம்னு தவிக்கிற உலகம் இது . மந்திரிகுமாரி படத்தினால் கருணாநிதி ,எம்ஜியார் , பாட்டெழுதிய ஷெரிப் ...எவ்வளவு காலப்பழக்கம்!



ஒரு முறை கருணாநிதி முதல்வராய் இருந்த போது கவி கா .மு .ஷெரிப்பின் மனைவி பார்க்கப்போயிருந்தார் . B.E. படித்த தங்கள் மகனுக்கு, அப்போது வேலையில்லாததால் கோபாலபுரத்திற்கு போயிருக்கிறார் .கருணாநிதி அன்போடு வரவேற்று உபசரித்திருக்கிறார் . மகனுக்கு வேலை வேண்டும் என்று கேட்ட தாயைப் பார்த்து சொன்னாராம் : " நான் சிபாரிசு பன்றதை கவிஞர் விரும்பவே மாட்டார் . சிபாரிசு செஞ்சா ரொம்ப வருத்தப்படுவார் .அவரிடம் ஒரு கடிதம் வாங்கிட்டு வந்தீங்கன்னா நான் சிபாரிசு பன்றேன் "
இந்த அம்மா வீட்டுக்கு வந்து கணவரிடம் நடந்ததை சொன்னாராம் ." ஏன் நீ அங்கே போனே ?"ன்னு கடுமையா கோபப்பட்டிருக்கிறார் கா .மு .ஷெரிப். " அவர் முதல்வர் பதவி வகிக்காத போது மட்டும் தான் நானே அவரைப் பார்ப்பேன் . நீ இப்படி செய்யலாமா ? பையன் அவனா வேலை தேடிக்கட்டும்"என்றாராம் !
"பூவாளூர் சந்தையிலே ஒங்க பொட்டி யோட என் பொட்டி ஓரசிக்கிச்சே .. ஞாபகம் இல்லையா !"ன்னு ஈ ன்னு இளிச்சி ஈசிண்டு உறவு கொண்டாடி ஓட்டப்பார்க்கிற உலகத்திலே இப்படி ஒரு பைத்தியக்கார பிரகிருதி !

12 comments:

  1. ”சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா”வும் அவர் எழுதியதுதான்.

    தமிழ் திரைஉலகில் அவர் காலகட்டத்தில் நம்பர்.1 ஆக இருந்திருக்க வேண்டியவர். வாய்ப்புகள் அவரை ஆக்ரமித்த நேரத்தில் திருத்தணி மீட்புப் போராட்டம்,நாஞ்சில் மீட்புப் போராட்டம் என தொடர்ச்சியாக தமிழகப் பகுதிகளை மீட்க வேண்டிப் போராடி சிறையில் அடைபட்டுவிட்டார்.

    தலைவர் கலைஞரை திருவாரூரில் இருந்து அழைத்து வந்து தான் பணிபுரிந்த மார்டன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்துவிட்டவர் கவி.கா.மு.ஷெரீப்.
    ஆதாரம்-நெஞ்சுக்கு நீதி.

    ReplyDelete
  2. எனது ஆழ்மனதில் புதைந்துபோன நினைவுகளைத் தட்டி எழுப்பி விட்டீர்கள் நண்பரே!

    பூவா மரமும் பூத்ததே
    பொன்னும் மணியும் சுமந்ததே
    ஜீவ அமுதும் கிடைத்ததே-பெரும்
    செல்வம் பெருகியே சேர்ந்ததே

    --திரைப்படம்=நான் பெற்ற செல்வம்

    அதை விடுங்கள்.அதே படத்தில்
    அந்தக் காலச் சமுதாயத்தைச் சாடி ஒருபாடல் புனைந்திருக்கிறாரே-
    வாழ்ந்தாலும் ஏசும்
    தாழ்ந்தாலும் ஏசும்
    வையகம் இது தானடா
    வையகம் இது தானடா

    ஹ!இன்றைய கால கட்டத்திற்கும் எவ்வளவு அழகாய் ஒத்திருக்கிறது பாருங்கள்!

    அம்பிகாபதி(சிவாஜி நடித்தது)படத்தில் அனைத்துப் பாடல்களையும் இவர் தான் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.-ஒரே ஒரு பாடலைத் தவிர
    அப்பாடல்-
    கண்ணிலே இருப்பதென்ன
    கன்னி இள மானே
    காவியமோ ஓவியமோ
    கன்னி இள மானே
    என்று வரும்.அது மட்டும் கண்ணதாசன் எழுதியது.

    கவிஞர் கா.மு.ஷெரிப்-ஒரு ஜீவ கவி

    இப்பதிவிற்காகவே உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி

    ReplyDelete
  3. 'பூவாளூர் சந்தையிலே...' என்னா குசும்பு போங்க! என்னங்க பண்றது அம்புட்டுத் தத்தளிக்கிறோம்?

    சரி, கவிஞர் விரும்ப மாட்டார், இவரு(கருணாநிதி) ஏதாவது செஞ்சாரா இல்லையா - ஒளிச்சு மறைச்சாவது?

    - ராஜசுந்தரராஜன்

    ReplyDelete
  4. RPR sir your blog is a veritable cornucopia of interesting information on all things under the sun. Keep posting, I am glued to your posts.

    ReplyDelete
  5. எத்தனை எளிதான சுருக்கத்தில். வியப்பின் உச்சம்.

    ReplyDelete
  6. அப்துல்லாவின் அபூர்வதகவல்களுக்கு என் நன்றி .

    சர்தார் சார்! விரிவான பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி !அம்பிகாபதியில் கே .டி .சந்தானம் எழுதியிருக்கிறார். அவரே என்னிடம் சொன்ன தகவல் . அப்போது பஞ்சு அருணாசலம் சந்தானத்தின் சந்தம் பற்றி வியந்ததை நான் கே .டி .சந்தானம் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன் . அம்பிகாபதி படத்தில் தம்பி பட்டுக்கோட்டைக்கு தான் வாய்ப்பளித்ததைப்பற்றி கண்ணதாசன் பூரிப்புடன் குறிப்பிட்டிருக்கிறார் .

    ராஜ சுந்தரராஜன் சார் ! நான் பதிவிலேயே எழுத விரும்பிய விஷயத்தை நீங்க கேட்டுவிட்டீர்கள் ! ஒளிச்சி மறைச்சாவது செஞ்சாரா ?

    கிருஷ்ணன் !
    You have a very good command in English!
    I feel immensely happy to read your comments always.

    ReplyDelete
  7. RPR!
    இந்த வார உயிர்மையில் (திரையிசைப் பாடல்கள் சீரழிந்து போனதைப் பற்றிய கட்டுரை) சாரு கா.மு.ஷெரீஃபையும், இந்த சம்பவத்தையும் உதாரணம் காட்டியிருந்தார். தங்களது பெயரையும் குறிப்பிட்டிருந்தார். தகவலுக்காக!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  8. கவி. கா,மு,ஷெரீப் அவர்களுக்கென ஒரு வலைப்பதிவே தொடங்கி இருக்கிறேன். அவரைப் பற்றிய மேலும் தகவல் இருந்தால் தெரிவிக்கவும். பதியலாம்

    ReplyDelete
  9. http://kavikamu.wordpress.com/

    கவி.கா.மு.ஷெரீப் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட வலைப்பூ இது

    ReplyDelete
  10. நானும் இவர் பாடல்களைகேட்டு வியந்து பின்னரே இவைகள் இவர் எழுதியது என்று அறிந்திருக்கிறேன். அபார ஞானம் வேண்டும எளிமையாய் நச்சென்று எழுத. இன்னொரு கண்ணதாசனேதான்...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.