Share

Oct 18, 2009

சில கோணங்கி ராகங்கள்

எம் .எஸ் பாடிய ' இகனைன ' கீர்த்தனை .கர்நாடக சங்கீத ரசிகர்களுக்கு பரிச்சயமானது . திருப்பதி நாராயணசுவாமி இயற்றியது . புஷ்பலதிகா ராகம் . இந்த புஷ்பலதிகா ராகத்தில் தூரன் இயற்றிய கீர்த்தனை 'புவன மோகன '. ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் ' பவ்பாச ' கீர்த்தனை கூட உண்டு . இந்த புஷ்பலதிகா ராகம் ஒரு பச்சோந்தி ராகம் . சில சமயம் ஸ்ரீராகம் போல தோன்றும் . (எந்தரோ மகானுபாவலு ஸ்ரீராக பஞ்சரத்ன கீர்த்தனை எல்லோரும் கேட்டிருப்பார்கள் ) புஷ்பலதிகா பாடும்போது கொஞ்ச நேரத்தில் மத்யமாவதி ராகம் மாதிரியும் தோன்றும் .( மத்யமாவதி என்றதும் ஊத்துக்காடு " ஆடாது அசங்காது " தியாகய்யரின் "அடிகி சுகமு '' கீர்த்தனை , புரந்தர தாசரின் " பாக்யதலக்ஷ்மி " கீர்த்தனை எல்லாம் Music lover நினைவில் எழும் ) புஷ்பலதிகா ஆலாபனை கேட்டால் மணி ரங்கு ராகம் போல தோன்றும் .( மணி ரங்கு ராகம் என்றதும் வேதநாயகம் பிள்ளையின் " சித்தம் இரங்கி" கீர்த்தனையாய் இருக்குமோ என்று ரசிகர் குழம்ப நேரலாம் .)

தர்மவதி பாடும்போது வித்துவான் உஷாராக இருக்க வேண்டியிருக்கும் . " அம்பா ப்ரோவவே" தர்மவதி ராகம் . மைசூர் வாசுதேவாச்சாரியாரின் " பஜன செயராதா " தர்மவதி ராக கீர்த்தனை . தர்மவதி தடுக்கி விழுந்தால் கல்யாணி ராகமாகி விடும் .

ரீதி கௌளை ராகத்தை சாரீர வளம் உள்ளவர்கள் தான் பாட முடியும் . சாரீர வளம் இல்லாதவர்கள் தப்பித்தவறி பாடினால் ஆனந்த பைரவி வந்து நிற்கும் . இல்லாவிட்ட்டால் ஸ்ரீ ரஞ்சனி வந்தாலும் வந்து விடும் . என்ன காரணம் என்றால் ரீதிகௌளை ஆரோகணத்தில் மத்யமத்திலிருந்து நிஷாதத்திற்கு Quantum Jump செய்ய வேண்டும் . ஒரே தாவாக தாவ வேண்டும் .

மதுரை மணிஅய்யர் குரலில் ரீதிகௌளை பாபநாசம் சிவனின் 'தத்வமறிய தரமா'.

செம்மங்குடி பாடிய ரீதிகௌளை டாக்டர் சுப்பராய சாஸ்திரி இயற்றிய " ஜனனி ".

ரீதிகௌளை கீர்த்தனைகள்

ஊத்துக்காடு இயற்றிய ' என்ன புண்ணியம் '

தியாகய்யரின் ' ஜோ ஜோ ஜோ ராமா '

பாலமுரளியின் ஒரு சினிமாப்பாட்டு ரீதிகௌளையை கொஞ்சம் ஞாபகப்படுத்தும் .

" சின்னக்கண்ணன் அழைக்கிறான். ராதையை,பூங்கோதையை, அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி "

2 comments:

  1. Definitely not to pick on your nice writings, but isn't பாக்யாதலக்ஷ்மி பாரம்மா of purandharadhasa set in ஸ்ரீ ragam? Is there a madhyamavathi version too?

    Cheers,
    Arunn

    ReplyDelete
  2. ஒரிரு நாட்கள் முன்பு, மியூசிக் அகாடெமியில் சங்கீத கலாநிதி வேதவல்லி அவர்கள் ஒத்த ராகங்களைப் பற்றி (about allied ragas) ஒரு லெக்டெம் கொடுத்தார். இந்த ராகங்களுக்குண்டான scale கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும், ஸ்வரங்களுகிடையேயான கமகங்களும், காலப்ரமாணங்களுமே ஒத்த ராகங்களை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

    - சிமுலேஷன்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.