நாதசுர சக்கரவர்த்தி டி. என்.ராஜரத்தினம் அவர்கள் கச்சேரி சுதந்திரமாக செய்ய விரும்புவது வழக்கம் . மனோதர்மப்படி நாக ஸ்வரம் அவர் விரும்பிய கீர்த்தனைகளை வெளிப்படுத்தும் . கச்சேரியில் சீட்டு எழுதி அனுப்புவதை அவர் ரசிக்க மாட்டார் . ராமேஸ்வரத்தில் ஒருமுறை ஒருவர் தோடி ராஜரத்னத்திடம் " 'மகுடி ' வாசிக்க சொல்லி அனத்தினார் . வித்துவான் கொஞ்ச நேரம் சட்டை செய்யாமல் இருந்து பார்த்தார் . மனோதர்மப்படி தான் விரும்பிய கீர்த்தனைகளை வாசித்துக்கொண்டிருந்தார் . ' மகுடி ' அனத்தல் அதிகமாகியது . உடனே நாகசுரத்தை மகுடி கேட்ட ரசிகரிடம் கொடுத்து அவரையே மகுடி வாசித்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டார் !
பாலமுரளி கிருஷ்ணா மேடையில் கச்சேரியில் உட்கார்வார் . ரசிகர்கள் சீட்டுகள் பல மேடைக்கு பறக்கும். இந்த பாடல் பாடுங்க .. அந்த பாடல் பாடுங்க ..தொண்டையை லேசாக செருமுவார். சுற்றுமுற்றும் பார்த்து விட்டு சொல்வார் :
“Lend thy ears! This is Balamurali music! Don't ask for this and that. Lend thy ears! ”இதை ஏன் சொல்லவேண்டியிருக்கிறது எனில் எனக்கும் இப்படி விருப்பசீட்டுகள், அனத்தல்கள் வருகின்றன! இவரைப்பத்தி எழுதுங்க .. அவரைப்பத்தி எழுதுங்க ..அதைப்பத்தி எழுதுங்கன்னு ..இதைப்பத்தி எழுதுங்க ..
Don't annoy continually or chronically.
lol! What else can you expect from us Tamils?
jokes aside, i pray to the almighty to not dirupt your blogging as it happened on previous occassions.