தமிழ்பட தயாரிப்பு செலவுகள் மிக கடுமையாக உயரே போயிருப்பது குறித்து நடிகர்,தயாரிப்பாளர் பாலாஜி தான் இறப்பதற்கு முன் ஜெயா டி வி பேட்டியில் தார்மீக ஆவேசத்துடன் கண்டனம் தெரிவித்திருந்தார். கேரவன், கதாநாயகன் சம்பளம், ஆடம்பர படப்பிடிப்பு செலவுகள் குறித்து கடும் அதிருப்தியை தெரிவித்திருந்தார் . இதே ஜெயா டி வி யில் தான் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது பஞ்சு அருணாச்சலமும் இந்த அதிருப்தியை வெளியிட்டார்.
குருதத் பற்றி ஒரு செய்தி நம் Princely,luxuriousகதாநாயக நடிகர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். 'பியாசா' கதாநாயகன் குருதத்.
ஒருமுறை ஒரு ஷூட்டிங் செட்யூல் நடக்கும்போது குருதத் அதற்கு செல்லமுடியவில்லை. ஏனென்றால் அவரிடம் இரண்டே இரண்டு பேன்ட் தான் இருந்த நிலை. அதில் ஒன்று மிகவும் அழுக்காக இருந்தது. இன்னொன்று லாண்டரியில் இருந்தது.
குரு தத் பற்றி எழுத ஆசை தான். ஆனால் அபத்தப் பின்னூட்டங்கள் பற்றிய பயம் காரணமாக இத்துடன் நிறுத்துகிறேன் . ஏனென்றால் ஒரு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரத்திடம் " குருதத் கதாநாயகனாக நடித்த பல படங்களின் இயக்குனரும் அவரே தான் " என்றேன் . உடனே அவர் " நம்ம ஊரு பாக்யராஜ் , பாண்டிய ராஜன் மாதிரி தானே!" என பதிலடி கொடுத்து விட்டார் .இந்த எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரர்கள் பனங்கொட்டையை கரடி முட்டை என்பார்கள்.
.......
குருதத்துடன் 'பியாசா ' , 'காகஸ் கே பூல்' , ஆகிய படங்களில் நடித்த ஹிந்தி நடிகை வகிதா ரஹ்மான் தமிழ் படங்களில் கூட அதற்கு முன் நடித்திருக்கிறார் . எம்ஜியார்,பானுமதி,பி.எஸ். வீரப்பா நடித்த ' அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் .
ஜெமினி கணேஷ், அஞ்சலி தேவி, எஸ்.வி. சுப்பையா நடித்த ' காலம் மாறிப்போச்சு ' படத்தில் " ஏரு பூட்டி போவாயே ! அண்ணே சின்னண்ணே !" என்ற பாட்டுக்கு நடனம் ஆடி அப்போது பிரபலமாய் ஆனவர் வகிதா ரஹ்மான். இவர் செங்கல்பட்டு ,தமிழ்நாட்டில் பிறந்த பெண் . ஆனால் இவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்,ராஜமுந்திரியை சேர்ந்தவர் என்றே பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நானும் அப்படி குழம்பித்தான் தவறுதலாக எண்ணிக்கொண்டு இருந்திருக்கிறேன்.
பாரதி மணி said...
இது சுயதம்பட்டமல்ல.
குருதத் எனும் மாமேதையுடன் பழகியிருக்கிறேன் என்பதில் எனக்குப்பெருமை.
அறுபதுகளில் தில்லிக்குவரும் குருதத்தை போய் பார்ப்பேன். என் ஆபீஸ் தொலைபேசி எண் அவரது டைரியில் இருந்தது.
ஒருதடவை, அவர் யமுனை நதியில் மீன் பிடிக்க ஆசைப்பட்டார். தெரிந்த நண்பர்கள் மூலமாக விலையுயர்ந்த தூண்டில், மண்புழு சகிதம் அதிகாலையில் ஓக்லாவுக்கு போனோம். தான் பிடித்த மீனை ஹோட்டலுக்கு கொண்டுவந்து, அசோகா ஹோட்டல் பெங்காலி Chef-இடம் அவைகளை எப்படி சமைக்கவேண்டுமென்று சொல்லிக்கொடுத்தார். அவர் மட்டுமே அவைகளை சாப்பிட்டார். ஏனெனில் நான் ஒரு Pure Vegetarian! Not even an 'Egg'itarian!!
தன் ஸ்டேட்டஸுக்கு குறைந்த நண்பர்களிடம் எப்படி பழகவேண்டுமென்பதை மறைந்த தமிழ்நாட்டு நடிகர்கள் அவரிடம் கற்றுக்கொண்டிருக்கவேண்டும்!
Tuesday, 27 October, 2009
களிமண்ணாக இருந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இப்போது பிளாஸ்டிக் பொம்மைகள் போல ஆகிவிட்டனர். சினிமாவில் இவர்கள் தான் கடுமையான உழைப்பாளிகள் என்று மேடைக்கு மேடை ஒரு ஜால்ரா மூலம் தங்களை விளம்பரபடுதிக்கொண்டு, சினிமாவின் உண்மையான உழைப்பாளிகளின் வியர்வையில் சுகம் காணுகின்றனர். இவர்களை நினைக்கும்போது நினைவில் வரும் ஒரு தமிழ்சினிமா வசனம்: " என்னதான் மானுக்கு உடம்பு முழுவதும் கொம்பு முளைத்தாலும் அதனால் புல்லைத்தான் திங்கமுடியும். சிங்கத்தை போல வேட்டையாடமுடியாது."
ReplyDeleteஎம். ஆர். ராதா அவர்கள் மலேசியாவில் மேடையில் தமிழ் ஹீரோக்களின் இமேஜ்'ஐ பந்தாடி இருப்பார்.
ReplyDelete"கூத்தாடி கூத்தாடி வந்தவன் தான் கலைஞன்" என்று அவருக்கே உரிய முறையில் நகைச்சுவை கலந்து சொல்லி இருப்பார்.
அவரை பார்க்க வந்த மக்களை பார்த்து "எங்களை எல்லாம் எதுக்கு பார்க்க வர்றீங்க? அறிவாளிகளை பார்க்க போக கூடாதா? " என்று மேடையிலேயே கேள்வி எழுப்புவார்.
http://www.youtube.com/watch?v=jUouWbkep1c&feature=ரேலடேது
மூன்று பகுதிகள். கட்டாயம் பார்க்க வேண்டியது.
அன்புடன்
ஸ்ரீதர்
Annae RPR Annae! You made me search for my most favorite song. By lord, i got it at last.. here is the youtube link:
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=9RJfMjq3fcU
Thank you so very much.
தமிழ் சினிமாவின் தயாரிப்புச் செலவு அதிகரித்ததைப் போல அதனுடைய விற்பனை வீரியமும் அதிகரித்துள்ளதே,சார்.
ReplyDeleteலாபம் இல்லை என்றால் யார் சார் படம் எடுப்பார்கள்?
It is all in the speculation game.
இது சுயதம்பட்டமல்ல. குருதத் எனும் மாமேதையுடன் பழகியிருக்கிறேன் என்பதில் எனக்குப்பெருமை.
ReplyDeleteஅறுபதுகளில் தில்லிக்குவரும் குருதத்தை போய் பார்ப்பேன். என் ஆபீஸ் தொலைபேசி எண் அவரது டைரியில் இருந்தது.
ஒருதடவை, அவர் யமுனை நதியில் மீன் பிடிக்க ஆசைப்பட்டார். தெரிந்த நண்பர்கள் மூலமாக விலையுயர்ந்த தூண்டில், மண்புழு சகிதம் அதிகாலையில் ஓக்லாவுக்கு போனோம். தான் பிடித்த மீனை ஹோட்டலுக்கு கொண்டுவந்து, அசோகா ஹோட்டல் பெங்காலி Chef-இடம் அவைகளை எப்படி சமைக்கவேண்டுமென்று சொல்லிக்கொடுத்தார். அவர் மட்டுமே அவைகளை சாப்பிட்டார். ஏனெனில் நான் ஒரு Pure Vegetarian! Not even an 'Egg'itarian!!
தன் ஸ்டேட்டஸுக்கு குறைந்த நண்பர்களிடம் எப்படி பழகவேண்டுமென்பதை மறைந்த தமிழ்நாட்டு நடிகர்கள் அவரிடம் கற்றுக்கொண்டிருக்கவேண்டும்!
If I correct you that Waheeda Rahman is from Rajamundhry and not from Hyderabad would you deride me as 'ellam therinja Ekambaram'? :-)
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/Waheeda_Rehman
ReplyDeleteBorn May 14, 1936 (1936-05-14) (age 73)
Chengalpattu, Tamil Nadu, India
I have been reading you blog for sometime now. Comments on Guru Dutt are inadequate. When you can write about so many things or persons, it is injustice to the man who redefined hindi commercial cinema. Atlest you should have brought out the importantane of Guru Dutt's work. The one song in 'Pyasa'- What if you have won this world,- will set it apart, artiste's view on artiste
ReplyDelete