Share

Oct 31, 2009

குழந்தையும் காலமும்

புதுமைப் பித்தன் கதையொன்றில் ஆற்று நீரில் தன் கால்களை விட்டு விளையாடும் குழந்தை ஒன்று . வானில் சூரியன் தவிப்பான் . குழந்தையின் பாததரிசனம் வேண்டி. குழந்தையின் பாதங்கள் எப்போது நீரில் இருந்து வெளிவரும் என ஏங்கும் சூரியன். அவ்வளவு சுலபமாய் கிடைத்து விடுமா குழந்தையின் பாத தரிசனம் என புதுமைப்பித்தன் கேட்பார்.வெங்கட் சுவாமிநாதன் துவங்கி பலரும் இந்த 'புதுமைப் பித்தன் பன்ச் ' பற்றி மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்.
காலச்சக்கரம் சுற்றியது.காலம் நகர்கிறது , காலம் போய்க்கொண்டிருக்கிறது. காலம் ஓடியது. காலம் ஓடிவிட்டது. காலம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற காலம் Cliché கள் நாம் வாசித்து ,கேட்டு சலித்தவை தான்.
சமீபத்தில் முகுந்த் நாகராஜனின் கவிதை பரவசம் தந்தது
"தயங்கித் தயங்கி
அம்மாவின் கைப்பிடித்து
மெதுவாகப் படி இறங்குகிறது
குழந்தை
சீராகப் போய் கொண்டிருந்த
காலம்
சற்று தயங்கித் தயங்கி
முன்னகர்கிறது "

.....................

பெரியவர்கள் உலகில் உழைக்க உகுக்கப்படும் சிறுவர் சிறுமிகளின் labour பற்றி பிரச்சார சத்தமில்லாத கவிதை ஒன்று -
"தீப்பெட்டியைத் திறந்து
பார்த்தேன்
அத்தனையும் பிஞ்சுக்கரங்கள் "
மறைந்த கந்தர்வன் கவிதை ????
சுஜாதா கூட குழந்தைத்தொழிலாளி பற்றி ஒரு கவிதை முன்னர் எழுதியிருக்கிறார் .
அதில் ஒரு வரி இன்னும் மறக்க முடியவில்லை . ஏனென்றால் வெளியூர் போக நேரும்போது அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிட வேண்டியிருப்பதால் .
" ஹோட்டலில் சாப்டவுடன் இலை எடுப்பாய் "

7 comments:

  1. மூன்றுமே மனதை ஒருவாறு தாக்குகிறது.

    பிஞ்சுக்கரங்கள்
    சாப்டவுடன் இலை எடுப்பாய்
    பாதிப்பு அதிகமாய்.

    ReplyDelete
  2. "தீப்பெட்டியைத் திறந்து

    பார்த்தேன்

    அத்தனையும் பிஞ்சுக்கரங்கள் "

    அருமை.

    ReplyDelete
  3. "தீப்பெட்டியைத் திறந்து

    பார்த்தேன்

    அத்தனையும் பிஞ்சுக்கரங்கள் "

    what poignant words !
    Thanks RPR sir for sharing.

    ReplyDelete
  4. Delightful post. touching poetry.

    ReplyDelete
  5. தீப்பெட்டியைத் திறந்து
    பார்த்தேன்
    அத்தனையும் பிஞ்சுக்கரங்கள்

    வரிகளை படித்தாலே நெஞ்சு சுடுகிறது

    ReplyDelete
  6. தீப்பெட்டி கவிதை வலிக்கிறது

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  7. கவிதை தான் சார். ??? தேவையில்லை

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.