Share

Oct 16, 2009

தவறறு முயற்சி??

அர்ஜெண்டினா பெண் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் தாஜ் மகாலைப் பார்த்து ரசித்து விட்டு எல்லோரையும் போல அதன் முன் நின்று நேற்று சந்தோசமாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார் .தினமலரில் இன்று பார்த்தேன் . இப்படி பல நாட்டு அதிபர்கள் , பிரதமர்கள் , மந்திரிகள் யாராயிருந்தாலும் இந்திய விஜயத்தின் போது தாஜ் மகாலுக்கு வந்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள் . டார்க் ப்ரௌன் பேன்ட் , ஆஷ் கலர் ஷர்ட் போட்டுக்கொண்டு பில் கிளிண்டன் கூட எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போதும் நினைவில் நிற்கிறது.

காதலர்களின் சின்னம்,உலக அதிசயம் தாஜ்மகால் அளப்பரிய பெருமுயற்சியின் சாதனை என கருதப்படுகிறது .ரஷ்யாவிலிருந்து அந்தக் காலத்தில் குருச்சேவ் வந்த போது அவருக்கு பெருமையாக தாஜ்மகாலைக் காட்டியபோது அவர் முகம் சுண்டிப்போய் விட்டது ." அய்யோய்யோ ! ச்சே ! இந்த நினைவுச்சின்னத்தை நிர்மாணிக்க மேற்கொண்ட கடும் முயற்சியில் எத்தனை அடிமைகள் உயிரை விட்டார்களோ " என்று நொந்து நூடுல்ஸ் ஆகிப்போய்விட்டார்.

நம் நாட்டு உலக அதிசயம் தவறறு முயற்சி அல்ல என்கிற யதார்த்தமும் பலரால் சுட்டப்பட்டே வருகிறது.எவ்வளவு வரிப்பணம் மக்களிடம் இருந்து நிர்பந்தமாக பிடுங்கப்பட்டிருக்கும், கொள்ளையடிக்கப்பாட்டிருக்கும் .உலக அதிசயங்கள் பலவற்றின் பின்னும் இப்படித்தான் .

ராஜ ராஜ சோழன் தஞ்சைப்பெரிய கோவிலை கட்டும் முயற்சியின் போது பல தேவதாசிகளை நரபலி கொடுத்திருக்கிறான் என்பது சரித்திரம் .

4 comments:

  1. dear sir

    title super. please try to post every day

    ReplyDelete
  2. பாரதியின் வார்த்தை இது . பாரதி உபயோகப்படுத்திய சொற்கள் மிகவும் சக்தி பெற்று விடும். நான் அதனால் பல தலைப்புகளுக்கு பாரதியின் சொற்களை பயன்படுத்தியுள்ளேன். முக்கிய விஷயங்களை ஒரே வார்த்தையில் சொல்ல பாரதி மிகவும் உதவுவார் !

    ReplyDelete
  3. அன்புள்ள ராஜநாயஹம்:

    உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

    பாரதி மணி

    ReplyDelete
  4. Thank you Bharathi Mani Sir!
    wish you the same.
    sorry sir.... Belated wishes!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.