Share

Aug 30, 2025

NEW BORN "CUTIE"

பூக்குட்டிக்கு தங்கச்சி பாப்பா
 "க்யூட்டி"
பிறந்திருக்கிறாள்

ஜூலை 30ம் தேதி 

இன்று முப்பது நாள் குழந்தை

 CUTIE is her name 

Aug 28, 2025

Cinema Enum Bootham serial Episodes 184, 185



184, 185 Episodes 
R.P. ராஜநாயஹம் 
"சினிமா எனும் பூதம்"
தொலைக்காட்சி தொடர் 

31.08. 2025  ஞாயிற்றுக்கிழமை 

07. 09. 2025 ஞாயிற்றுக்கிழமை 

முரசு டிவியில் 
காலை எட்டரை மணிக்கு 

கவிஞர் நா. காமராசன் 



கவிஞர் மு. மேத்தா 



‌......

R.P. ராஜநாயஹம்
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 3ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

......

Aug 23, 2025

வேடிக்க - 48 ஞானி

வேடிக்க - 48
- R.P. ராஜநாயஹம் 

அன்னூர் தாண்டி பொகளூர்ல மண்வெட்டியோட ரங்கன். 
"  ஞானியானப்புரம் பேரு பவுல். அஞ்ஞானியாயிருந்தப்ப ரங்கனுங்க. "

" பிதாவோட பிள்ள தான் ஏசப்பா.
ஏசு மகாராஜா. நாங்க இருக்கப்ப நீ எப்டிறா மகாராஜான்னு அயோக்கிய பசங்க சிலுவையில அறஞ்சி கொன்னுட்டானுங்க"

அதிர்ச்சியாகி " என்னது, சிலுவையில அறஞ்சி கொன்னுட்டானுங்களா? நெஜம்மாவா சார்?"

" அட ஆமாங்க. நீங்க பைபிள் படிக்கனும்.
டெவுனுக்கு போய் சர்ச்ல பாருங்க. சிலுவையில ஏசப்பா இருக்காரு. ராஜாவுக்கெல்லாம் ராசா."

அஷ்வத் கிட்ட" டேய் நம்மளும் ஞானியாயிடுவோமாடா"

பவுல் " ஞானியாயிட்டா பரலோகம் கிடைக்குமுங்க. ஆண்டவரோட வீடு தான் பரலோகம். அங்க முழுக்க மரகதமும் கோமேதகமும் வைரமும் தான்."

"ஏ.சி. யிருக்குமா சார்?"

பவுல்" ஏ.சி.ய விட ப்ரமாதமா இருக்கும்."

" டேய் அஷ்வத், ஜாலிடா. நாமளும் ஞானியாயிடுவோம்டா.  எம்பேரு இனிமே கேப்ரியல் அமல ராஜநாயஹம். 
ஓம்பேரு பீட்டர் ஆண்ட்டனி. 
கீர்த்தி பேர் இனிமே 
ஜெபமணி ஜோஸுவா"

பவுல் பரவசமாகி " இங்க்ளீஷ்ல என்ன பேர் வச்சாலும் க்ரிஸ்டின் பேர் தானுங்க. இங்க்ளீஷ் பேர் எல்லாமே க்ரிஸ்டின் தாங்க."

அவரிடம் சீரியஸாக " பவுல் சார். எனக்கு ரொம்ப ரொம்ப வேண்டியவர் ப்ராட்டஸ்டண்டா இருந்தப்ப அவரு பேரு ஜெபமணி ஜோஸுவா. அப்றம் சர்ச்ல ஆர்மோனியம் வாசிக்கிற பாட்டு வாத்தியாரோட சண்ட போட்டப்புறம் 'இந்த வேதக்கோயில் இல்லாட்டி என்ன மாதாக்கோயில் இருக்கு'ன்னு மாறி பீட்டர் ஆண்ட்டனின்னு பேர மாத்திக்கிட்டாரு. அவரோட பேரேல்லாம் தான் இனி என்னோட ரெண்டு பிள்ளைகளுக்கு."

Aug 22, 2025

வேடிக்க - 47

வேடிக்க - 47

கோவை மசக்காளி பாளையம் ரோடு.

கடையில் வாங்கிய பொருளுக்கு முப்பது ரூபாய் தரவேண்டி இருந்தது.
"சார், கூகுள் பே பண்ணிடுறேன்"

கடைக்காரர் " என்னது? ஒங்க கிட்ட முப்பது ரூபாய் இல்லையா?"

" ஆமா சார், சில்லற முப்பது ரூபாய் இல்ல. ஜீபே பண்ணிடுறேன் சார்."

கடைக்காரர்"'என்னங்க, ஒங்களுக்கு எவ்வளவு ரூபாய்க்கு சில்லற வேணும்.  தர்றேன்.ஐநூறு ரூபாய்க்கு வேணாலும் நான் தர்றேன்"

"இல்ல சார். பணமே இல்ல சார்."

" பணமில்லாம எப்டி வர்றீங்க. பணமேயில்லாம வர்றீங்களா"

மனசேயில்லாம ஜீபேக்கு கடைக்காரர் அனுமதி தந்தார். ஆள் பார்க்க funnyயான தோற்றம்.

இப்படி கடைக்கு யாரும் போக மாட்டார்கள். என்னா ஔமானம்னு வேற கடைக்கு தான் அப்புறம் போவார்கள்.

ஆனா இந்த வேடிக்க ரொம்ப பிடிக்குமே.

மறுமுறை கடைக்கு போனபோது " சார் நூறு ரூபாயா இருக்கு. பேலன்ஸ் எழுபது ரூபா இருக்குமா சார்"

கடைக்காரர் தோரணையாக " நூறு ரூபாயா இருந்தா என்ன? எரநூறு ரூபாயா இருந்தா என்ன? குடுங்க."

" சார், நீங்க தான் ஐநூறு ரூபாயா இருந்தா கூட சில்லற குடுப்பீங்களே. கூகுள் பே தான் சார்வாளுக்கு பிடிக்காது"

இனிமே ஐநூறு ரூபாய்க்கு சில்லற வாங்கனும்னா இவர்ட்ட வந்துடலாம்.

" சார் வர்றேன் சார். தேங்க்ஸ் சார் "

தலைய ஆட்டி அனுமதி தந்தார்.

கிட்காட் சாக்லேட் கொடுத்தேன். திகைத்தார். ஆனால் சந்தோஷமாக வாங்கிக்கொண்டார்.

Aug 19, 2025

வேடிக்க - 46 ஔமானம்

வேடிக்க - 46    ஔமானம் 

வெட்ட வெளியில் முக்கி முக்கி வெளிக்கி போகும் போதே வெள்ளரிக்காய் சாப்பிட்டுக்கொண்டே இருந்தவனைப் பார்த்த பெரியவர் முகம் சுழித்து தன் தலையில அடிச்சி
" யோவ் என்ன கருமம்யா ச்சே..வெளிக்கிப் போகும் போது வெள்ளரிக்கா சாப்பிட்றியேய்யா. Don't eat anything when you shit "ன்னாராம்.
அந்த அயோக்கியன் எரிஞ்சி விழுந்தானாம்
 " வெள்ளரிக்காய்ல பேண்டதத் தொட்டுக்கிட்டு கூட சாப்பிடுவேன். ஒனக்கென்னய்யா..
ஊசி மூஞ்சி மூடா, 
ஒஞ்சோளி மயித்த பார்த்துக்கிட்டு போய்யா"

அசிங்கம் அநியாயம் கண்டாக்க கொந்தளிச்சி பொங்கல் வச்சா ஔமானம்.

" Now let it work. Mischief, thou art afoot.
Take thou what course thou wilt "
William Shakespeare 
Julius Caesar 

Aug 17, 2025

வேடிக்க - 45 ஆலபாட

குறிப்பிட்ட தெரு வழியாக
 குருவி மண்டையன் சகாக்கள் ( மொட்டயன், சட்டி மண்டையன், 
ஒத்த காதன், தொல்ல, ஆட்டு மூக்கன், மண்ட மூக்கன்) சமேதராக செல்ல நேரும் போதெல்லாம், முனையில் உள்ள வீட்டை நிமிர்ந்து பார்த்து சத்தமாக கூப்பாடு போடுவான் "ஆலபாட பவனம்".
எப்போதும் இப்படி ஆலபாட பவனம் தான்.
ஆலபாட பவனம்னு கத்துவதற்காகவே சைக்கிளில் அந்த தெரு வழியாக போவதுண்டு.
சலித்துப்போய் வீட்டு ஓனர் வெளியே வந்து
 " இந்தாப்பா எங்க வீடு ஆல்பர்ட் பவனம்ப்பா'

குருவி மண்டையன்" இல்லயே. ஆலபாட பவனம்னு தான எழுதியிருக்கு. ஆ..ல..பா..ட பவனம் "

அந்த வீட்டுக்காரர் " புள்ளி கழண்டு விழுந்துடுச்சி..."
தொடர்ந்து தெருவே கேட்கும்படி அவரும் கூப்பாடு கூவினார் 
"ஆல்பர்ட் பவனம் ஆல்பர்ட் பவனம்
 ஆல்பர்ட் பவனம்"

.....

சினிமா எனும் பூதம் நிகழ்ச்சி ரிக்கார்டிங் ஒர்க். கோவையில் இருந்து முதல் நாள் வந்து தங்கி காலை சாப்பிட போன ஹோட்டல் பார்த்ததும் பழைய ஞாபகம்.


ஹாட்டல் ஆ ந்தா 

HOTEL   NAND

.....

Aug 14, 2025

Episodes -182, 183

Episodes - 182, 183 

R.P. ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம் 

முரசு டிவியில் 
ஞாயிற்றுக்கிழமைகளில் 
காலை எட்டரை மணிக்கு 

வருகிற ஞாயிறுகளில் 

எடிட்டர் - டைரக்டர் B. லெனின் 

நடிகை நளினி

Aug 12, 2025

வேடிக்க - 44 Silly Mischief



வேடிக்க - 44


Silly Mischief 

11.08.2025
Evening 
Satapti Express 

சுவிட்சர்லாந்திருந்து டூரிஸ்ட் ஃபேமிலி.
தம்பதியர். மூத்த சிறுமி. இளைய சிறுவன்.
இந்த பையன்  மூக்கிற்குள் விரலை ஆழமாக விட்டு துழாவி booger எடுத்து வாயில் அதே விரலை விட்டு சப்பி, மீண்டும் அடுத்த மூக்கில் விரலை விட்டு துழாவி அந்த விரலை வாயில் வைத்து சப்பி, இப்படி மீண்டும் மீண்டும்...

ஸ்விட்சர்லாந்து அழகான நகரம்.
இனி ஸ்விட்சர்லாந்தை நினைக்கும் போது 
மூக்குப்பீ ஞாபகம் வருமே.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் ஒன்னுக்கு இருந்து அதயே குடிக்கலியா? Urine therapy.

கோமிய தெய்வீகம்?

வீட்டில இருக்கும் போது கைலியோட ரிலாக்ஸ்டா மூக்குல விளக்கமாத்து குச்சிய விட்டு விட்டு நோண்டி, தும்மல் போட்டுக்கிட்டே பேசுற கவர்ன்மென்ட் ஆஃபீஸர் உண்டு.

Associate memory - நாற்பது வருடங்களுக்கு முன் பெரியகுளத்தில் இருந்து மதுரைக்கு பஸ்ஸில் வரும் போது முன் வரிசையில் அமர்ந்திருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் மூக்கு பொடி போட்டு விட்டு மூக்கில் விரல் விட்டு துழாவி ப்ரௌன் கலர் சளியை எடுத்து பஸ்ஸில் ஜன்னல் கம்பியில் அதை ஒட்டி, சளி குதித்து குதித்து விழுவதைப் பார்த்து ரசித்து, கம்பியில் இருந்து விழுந்தவுடன் மீண்டும் விரல் விட்டு booger எடுத்து , கம்பியில் ஒட்டி, அது பஸ் ஓட்டத்தில் குதித்து குதித்து அந்து விழுவதை ரசித்து மீண்டும், மீண்டும் இதே.


அந்த ஸ்விட்சர்லாந்து குடும்பத்தினர் பேசுவது என்ன மொழி? 
குடும்பத் தலைவர் சொன்னார் 'ஸ்விஸ் ஜெர்மன்'.
ஆனால் ஜெர்மனியில் உள்ள ஜெர்மானியர்களுக்கு இந்த 'ஸ்விஸ் ஜெர்மன்' புரியாதாம். 
ஏன்? Accent? Diction?

குட்டிப்பயல் கவனத்தை திசை திருப்ப KitKat சாக்லேட் கொடுத்தேன்.

Aug 2, 2025

கோவை எக்ஸ்பிரஸ் - திருநங்கை 2019 பதிவு சமீபத்திய பின்னூட்டங்கள்

'கோவை எக்ஸ்பிரஸ் - திருநங்கை' (லிங்க் கமெண்ட் பாக்ஸில்)
2019 பதிவுக்கு இங்கே சில க்ரூப்களில் காணக்கிடைத்த 
சமீபத்திய பின்னூட்டங்கள்

ராஜநாயஹம் reaction குறித்து 

1. பிச்சைக்காரர் னு சொல்லவேண்டாம்.
யாசகப்பிரியர் னு சொல்லுங்க

2. பெயருக்கேற்ற நடைமுறை
Loganathan

3. முதலில் கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் பாவம் புண்ணியம் தர்மம் ஒழுக்கம் மானம் வெட்கம் அன்பு பாசம் கண்ணியம் இரக்கம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை இவைகளை கடைப்பிடிப்பதால் அல்லது மீறுவதால் எந்த சரி தப்பும் இல்லை. மனிதர்கள் சட்ட திட்டங்களை சுயமாக வகுத்து விடவில்லை. முன்னரே ஏதோ ஒன்றின் வழியாக தெளிவாக வகுத்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படையில் தான் மனிதர்கள் தங்கள் வசதி நடைமுறைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள். கண்ணை மூடிக் கொண்டு கடவுள் இல்லை என்று கூறிவிடுவது பகுத்தறிவு ஆகாது நாம் அறியாத ஒன்றை இல்லை என்று கூறுவது அறியாமையே. இவர்கள் தரும் 2 ரூபாய் செல்வத்தை கொண்டு வரும் என்பது மூட நம்பிக்கை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர்களின் அறியாமை. அவர்களுக்கு என்று எந்த வரைமுறை வழிகாட்டுதல்கள் இல்லை. அவர்கள் பணம் ஈட்டுவதற்கு இவ்வாறு கூறிக் கொள்கின்றனர். கடவுள் இல்லை என்று கூறும் உங்கள் போன்றவர்கள் உயிர்களின் படைப்பு படிப்பின் நோக்கங்கள் போன்றவைகளின் கோட்பாடுகளை விவரிக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.
Abu Khalid Mdr

4. மூடநம்பிக்கை என்று நினைக்காமல்
மனதார சொல்லும்
மானசீக மந்திர சொல்லாக
நினைத்து மனிதாபிமானத்தோடு
மதிப்பளித்து
பாதுகாத்திருக்கலாம்.

வேறொரு பத்து ரூபாயை அடுத்து வந்தவருக்கும் அளித்திருக்கலாம்
Mohanasundaram

5. கர்ணன் விழுந்ததற்கு காரணமே அவன் கொடுத்த தர்மம் தான்
Raja Kumar

.....


கோவை எக்ஸ்பிரஸ் - திருநங்கை 

https://www.facebook.com/100006104256328/posts/2793152844231497/?app=fbl