வேடிக்க - 47
கோவை மசக்காளி பாளையம் ரோடு.
கடையில் வாங்கிய பொருளுக்கு முப்பது ரூபாய் தரவேண்டி இருந்தது.
"சார், கூகுள் பே பண்ணிடுறேன்"
கடைக்காரர் " என்னது? ஒங்க கிட்ட முப்பது ரூபாய் இல்லையா?"
" ஆமா சார், சில்லற முப்பது ரூபாய் இல்ல. ஜீபே பண்ணிடுறேன் சார்."
கடைக்காரர்"'என்னங்க, ஒங்களுக்கு எவ்வளவு ரூபாய்க்கு சில்லற வேணும். தர்றேன்.ஐநூறு ரூபாய்க்கு வேணாலும் நான் தர்றேன்"
"இல்ல சார். பணமே இல்ல சார்."
" பணமில்லாம எப்டி வர்றீங்க. பணமேயில்லாம வர்றீங்களா"
மனசேயில்லாம ஜீபேக்கு கடைக்காரர் அனுமதி தந்தார். ஆள் பார்க்க funnyயான தோற்றம்.
இப்படி கடைக்கு யாரும் போக மாட்டார்கள். என்னா ஔமானம்னு வேற கடைக்கு தான் அப்புறம் போவார்கள்.
ஆனா இந்த வேடிக்க ரொம்ப பிடிக்குமே.
மறுமுறை கடைக்கு போனபோது " சார் நூறு ரூபாயா இருக்கு. பேலன்ஸ் எழுபது ரூபா இருக்குமா சார்"
கடைக்காரர் தோரணையாக " நூறு ரூபாயா இருந்தா என்ன? எரநூறு ரூபாயா இருந்தா என்ன? குடுங்க."
" சார், நீங்க தான் ஐநூறு ரூபாயா இருந்தா கூட சில்லற குடுப்பீங்களே. கூகுள் பே தான் சார்வாளுக்கு பிடிக்காது"
இனிமே ஐநூறு ரூபாய்க்கு சில்லற வாங்கனும்னா இவர்ட்ட வந்துடலாம்.
" சார் வர்றேன் சார். தேங்க்ஸ் சார் "
தலைய ஆட்டி அனுமதி தந்தார்.
கிட்காட் சாக்லேட் கொடுத்தேன். திகைத்தார். ஆனால் சந்தோஷமாக வாங்கிக்கொண்டார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.