வேடிக்க - 48
- R.P. ராஜநாயஹம்
அன்னூர் தாண்டி பொகளூர்ல மண்வெட்டியோட ரங்கன்.
" ஞானியானப்புரம் பேரு பவுல். அஞ்ஞானியாயிருந்தப்ப ரங்கனுங்க. "
" பிதாவோட பிள்ள தான் ஏசப்பா.
ஏசு மகாராஜா. நாங்க இருக்கப்ப நீ எப்டிறா மகாராஜான்னு அயோக்கிய பசங்க சிலுவையில அறஞ்சி கொன்னுட்டானுங்க"
அதிர்ச்சியாகி " என்னது, சிலுவையில அறஞ்சி கொன்னுட்டானுங்களா? நெஜம்மாவா சார்?"
" அட ஆமாங்க. நீங்க பைபிள் படிக்கனும்.
டெவுனுக்கு போய் சர்ச்ல பாருங்க. சிலுவையில ஏசப்பா இருக்காரு. ராஜாவுக்கெல்லாம் ராசா."
அஷ்வத் கிட்ட" டேய் நம்மளும் ஞானியாயிடுவோமாடா"
பவுல் " ஞானியாயிட்டா பரலோகம் கிடைக்குமுங்க. ஆண்டவரோட வீடு தான் பரலோகம். அங்க முழுக்க மரகதமும் கோமேதகமும் வைரமும் தான்."
"ஏ.சி. யிருக்குமா சார்?"
பவுல்" ஏ.சி.ய விட ப்ரமாதமா இருக்கும்."
" டேய் அஷ்வத், ஜாலிடா. நாமளும் ஞானியாயிடுவோம்டா. எம்பேரு இனிமே கேப்ரியல் அமல ராஜநாயஹம்.
ஓம்பேரு பீட்டர் ஆண்ட்டனி.
கீர்த்தி பேர் இனிமே
ஜெபமணி ஜோஸுவா"
பவுல் பரவசமாகி " இங்க்ளீஷ்ல என்ன பேர் வச்சாலும் க்ரிஸ்டின் பேர் தானுங்க. இங்க்ளீஷ் பேர் எல்லாமே க்ரிஸ்டின் தாங்க."
அவரிடம் சீரியஸாக " பவுல் சார். எனக்கு ரொம்ப ரொம்ப வேண்டியவர் ப்ராட்டஸ்டண்டா இருந்தப்ப அவரு பேரு ஜெபமணி ஜோஸுவா. அப்றம் சர்ச்ல ஆர்மோனியம் வாசிக்கிற பாட்டு வாத்தியாரோட சண்ட போட்டப்புறம் 'இந்த வேதக்கோயில் இல்லாட்டி என்ன மாதாக்கோயில் இருக்கு'ன்னு மாறி பீட்டர் ஆண்ட்டனின்னு பேர மாத்திக்கிட்டாரு. அவரோட பேரேல்லாம் தான் இனி என்னோட ரெண்டு பிள்ளைகளுக்கு."
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.