Share

Apr 29, 2022

சலீம் கௌஸ்

சலீம் கௌஸ் மறைவு கே.ராஜேஸ்வரை எப்படி பாதித்திருக்கும் என்பதை விளக்க வார்த்தைகள் இல்லை.
ஆத்மார்த்தமான நண்பர் என்பதற்கும் மேல் உன்னதமான உறவு.
'சொந்தம் என்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை' கண்ணதாசன் வரி.
இப்படிப்பட்ட நட்பு தான் சொந்தத்திற்கும், 
பந்தத்திற்கும் மேலே.

Shakespearean Actor Salim Ghouse.

கே.ராஜேஷ்வர் கனவுகள் பிரதாப் போத்தனோடும், சலீம் கௌஸோடும் இணைந்து உருவானவை.

என்னுடைய கீழ் கண்ட பதிவில் 
சலீம் கௌஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
 ஒரு கமெண்ட் போட்டிருக்கிறார்.
இப்படி மேலும் சில பதிவுகளிலும் கமெண்ட் அவ்வப்போது செய்திருக்கிறார்.

https://www.facebook.com/100006104256328/posts/2693720307508085

Salim Ghouse's comment - a relevant quote from Hamlet play

"Get you to my lady's chamber and tell her: let her paint an inch thick, to this favour she must come"

R.P.Rajanayahem's reply:

'What a beautiful quote, Salim Ghouse sir.
 I know you are a Shakespearean actor.'

...

Definition for Salim Ghouse Hamlet
Quote:

Hamlet tells Yorick’s skull to tell his mother the Queen that no matter how much makeup she applies to herself, she too will end up like Yorick, dead and her flesh decayed. Hamlet is scorning his mother Gertrude for marrying his uncle so soon after his King Hamlet’s death.

...

ராஜேஷ்வர் திட்டமிட்டிருந்த படங்களில் நடிக்க தீராத ஆசை கொண்டிருந்தார். 'வெற்றி விழா' வில்லன் "ஜிந்தா" பெயரிலேயே 
ஒரு படம். 
'உங்களோட ஒரு ரெண்டு படம் போதும்' என்பாராம்.

" ஏப்ரல் 28ம் தேதி எனக்கு சனி தசை முடிகிறது. அதன் பிறகு என் வாழ்க்கை 'ஓஹோ' என்று ஏறுமுகத்தில் தான்" என்று உற்சாக பெருமிதத்துடன் சொல்லியிருக்கிறார் சலீம் கௌஸ்.
ஏப்ரல் 28ம் தேதி துவங்கியவுடன் மறைந்து விட்டார்.

"Death, a necessary end,
 will come when it will come"
- Shakespeare in Julius Caesar

....

Apr 28, 2022

பெண்மை வாழ்கவென்று


பெண்மை வாழ்கவென்று
- R.P.ராஜநாயஹம்

‘சம்சாரக் கடலில் மூழ்கியுள்ள ஆண் 
தன் திருமண வாழ்க்கை பற்றி பெருமிதமாக “successful married life” 
என்று தான் சொல்வான். 
பெண் அல்லவோ சொல்ல வேண்டும் 
இந்த வார்த்தையை? 
ஆணுக்கு மனைவி அமையத்தான் செய்கிறாள்.  பெண்ணுக்குத்தான் கணவன் அமைவதில்லை’ 
-  ஒரு பெண்மணி இப்படி என்னிடம் சொன்னார். 

ஆஸ்கார் ஒயில்ட் இதை ஒட்டியே தான் சொன்னான்.
” There is nothing in the world like the devotion
 of a married woman. 
It is a thing no married man knows any thing about.”

பிரஞ்சு கவிஞன் பால்சாக்: 
“ In a husband there is only a man.
 In a married woman,
 there is a man, a father, mother and a woman.”

மெஸோக் : அனைத்து நாகரீக மறுமலர்ச்சி யையும் தாண்டி இயற்கையால் படைக்கப்பட்ட முந்தைய நிலை மாறாமல் கலப்படமின்றி அப்படியே தான் இருக்கிறாள் பெண். 

Woman is faithful as long as she loves, 
but you demand that she be faithful without love
 and give herself without enjoyment. 
Who is cruel then, woman or man?

...

கூத்து கலைஞர் அம்மாபேட்டை கணேசன் : ‘அடுக்குல இருக்கறது அரிசியோ, ஆரியமோ உள்ளத கொண்டு பக்குவமா சாதங்கறி வெச்சி பசியாத்தறாங்களே பொண்டுங்க, அவிங்களுக்கு தெரியாத வித்தையா?!’ 

A man is a man untill he can, 
but a woman is a woman till she dies.

...........

பெண்மை வாழ்கவென்று
- R.P.ராஜநாயஹம்

‘சம்சாரக் கடலில் மூழ்கியுள்ள ஆண் 
தன் திருமண வாழ்க்கை பற்றி பெருமிதமாக “successful married life” 
என்று தான் சொல்வான். 
பெண் அல்லவோ சொல்ல வேண்டும் 
இந்த வார்த்தையை? 
ஆணுக்கு மனைவி அமையத்தான் செய்கிறாள்.  பெண்ணுக்குத்தான் கணவன் அமைவதில்லை’ 
-  ஒரு பெண்மணி இப்படி என்னிடம் சொன்னார். 

ஆஸ்கார் ஒயில்ட் இதை ஒட்டியே தான் சொன்னான்.
” There is nothing in the world like the devotion
 of a married woman. 
It is a thing no married man knows any thing about.”

பிரஞ்சு கவிஞன் பால்சாக்: 
“ In a husband there is only a man.
 In a married woman,
 there is a man, a father, mother and a woman.”

மெஸோக் : அனைத்து நாகரீக மறுமலர்ச்சி யையும் தாண்டி இயற்கையால் படைக்கப்பட்ட முந்தைய நிலை மாறாமல் கலப்படமின்றி அப்படியே தான் இருக்கிறாள் பெண். 

Woman is faithful as long as she loves, 
but you demand that she be faithful without love
 and give herself without enjoyment. 
Who is cruel then, woman or man?

...


ராஜா ரவி வர்மா ஓவியம். 
இரவில் தமயந்தியை காட்டில் 
கை விட்டு நழுவும் நளன்.

...

மீள் பதிவு

Apr 26, 2022

யவனிகா கவிதைக்கு புலியூர் தோழர் பின்னூட்டமும் கவிதை

கவிதைக்கு பின்னூட்டமும் கவிதை

"நிலக்கடலைகளை படிக்கு எட்டுபைசாவிற்கென உரிக்கையில் ஆவலில் ஒன்றிரண்டை வாயில் போட்டுக்கொண்ட போதுதான்
கடவுள் இல்லை என்பதை உணர்ந்தேன்"

- யவனிகா ஸ்ரீராம் கவிதை

புலியூர் தோழர் முருகேசன் பின்னூட்டம்:
"வாயில் அதக்கிய ஒன்றிரண்டு கடலைகளையும், 
பிதுக்கித் துப்பச் சொன்ன 
பண்ணை வீட்டுக் கிழவியைப் 
பார்த்த அன்றுதான் சாத்தான் இருக்கிறதென்பதை ஒத்துக்கொண்டேன்."

Apr 24, 2022

யவனிகா ஸ்ரீராம் பார்வையில்

யவனிகா ஸ்ரீராம் இன்று எழுதியுள்ள
பதிவு: 

R.P. ராஜநாயஹமும் கலாப்பிரியாவும்
இடைக்காலத் தமிழின்
கலை இலக்கியத்தில்  வரலாற்றுப் பூர்வமான நியோகிளாசிக் விற்பன்னர்கள்

இருவரும் அடித்தளப் பாமரர் (பாலுறவும் வன்முறையும்)அழகியலின் சர்வதேசத்தன்மைகளை
உணர்ந்த பிராந்திய யதார்த்த வாதிகள்

தீவிர வாசிப்பாளர்கள்

(யமுனா ராஜேந்திரன்
 சரவண  மாணிக்க வாசகம் போன்றோரை இங்கே நினைவில் கொள்கிறேன்)

 மேற்சொன்னவர்களில் ஒருவர் அதை  மக்கள்மயமான குஜிலி யதார்த்தமாக்க முயன்றார்
மற்றவர் அதை நவீன இலக்கிய யதார்த்தமாக்க முயன்றார்

Pandit Mukul Shivputra


'I come from a typical Hindustani music lineage. Learning music in this tradition is the exact opposite of how Carnatic music is taught.’
 - Pandit Mukul Shivputra


Mukul, son of Pt. Kumar Gandharwa.

Mukul Shivputra leant Hindustani from his father Kumar Gandharwa and Karnatic music from our M.D. Ramanathan.
Yes, he learnt Carnatic also.

Lend your ears to Mukul's hindustani Bageshri.


Apr 20, 2022

R.P. ராஜநாயஹம் பற்றி காற்றில் மிதக்கும் இறகு



காற்றில் மிதக்கும் இறகு :


"மனதுக்கு நெருக்கமான நண்பரைச் சந்தித்தது போல ஐயாவின் முகநூல் பக்கம் இருக்கும்.

இவருடைய மொத்த முகநூல் பதிவுகளையும் முழுமையாகப் படித்து முடித்து விட வேண்டும் என்பது 
தீராத ஆசை.

 ஒரு மனிதன் இந்த வாழ்வின் அர்த்தங்களையும் மனித மனதின் ஒளியையும் இருளையும்
 ஒரே நேரத்தில் தரிசிக்கும் அனுபவத்தையும்
நமக்குத் தந்து விடுவார்.

இலக்கியம் திரைத்துறை சாமான்ய மனிதர்கள் என்று ஞாபக அடுக்குகளில் இருந்து எத்தனை எத்தனை காற்றில் மிதக்கும் நினைவுகளாய்  பதிவுகள்.
படிக்க படிக்க விரியும் வியப்பு 
இந்த நிமிடம் வரை மறையாது..

எத்தனை நுண்ணிய ஞாபகங்கள்..  எங்கிருந்து எதையோ இணைக்கும் புள்ளிகள்..

தமிழ் அறிவுச் சமூகத்தின் பொக்கிஷம் R.P. ராஜநாயஹம்  ஐயா அவர்கள்.

என் நிறைய நேரங்களை உங்கள் பதிவுகளே எடுத்துக் கொள்கின்றன.
வாசிப்பவன் என்ற முறையில் சொல்கிறேன் வாழிய நீங்கள்!"

Raghunandan Panshikar's Bhoop Raag


Raghunandan Panshikar
vocalist, belonging to the Jaipur gharana
Kishori Amonkar's student
Sings Raag Bhoop

Bhoop is similar to our Carnatic Mohanam.

Pure Bliss.
Kishori Ji in a Male voice??!

A mesmerising Bhoop after 
Kishori Ji!

Raghunandan Panshikar's
Absorbing, Elevating Rendition.
https://m.youtube.com/watch?v=2m1mnxIzRaI&feature=youtu.be

https://m.facebook.com/story.php?story_fbid=3305129663033810&id=100006104256328


Apr 18, 2022

R.P. ராஜநாயஹம்



பேராசிரியர் சு. வேணு கோபால் :

"தீப்பொறி ஆறுமுகம் குறித்து அவ்வளவு அழகாக எழுதி இருந்தது உடனே நினைவிற்கு வருகிறது. நலம் பெறுவார்."

நந்தகுமாரன் ராஜா:

"உன்மத்ததை எந்த வடிவியலிலிலும் அடக்கி கொண்டு செல்லக் கூடாது என்பதில் அவருக்கு இருக்கும் consciousness மிக அபாரமானது - எப்போதும் போல ராஜநாயஹம் நலம் பெறுக.
 அவர் மூலம் நமக்கு நலம் விழைக.                                      அவர் ஒரு geographical bliss"

Ganesh Bragadeeswaran :

This is just a tip of the ice berg Sir!! U have great places to go without making much efforts (as the efforts were already done) and it is the time for just the reward and recognitions!! All the best wishes from your life time fan!!

Kayal S :

உங்களுக்கு ரொம்ப சாதாரணமாக                   ஒரு 250 வயதிருக்கும் போல.
எவ்வளவு அனுபவங்கள்!!!

Jeyandan Natarajah :

"I like to read your posts because it gives the feel of reading a film script.As a scene ends ,it ends with a twist !!! The twist itself a poetic one!

Karthikkeyan Viswanathan:

 "I can understand who you are, from your writings alone. You are a man of experiences, expressions, witness of events, writer, story teller, actor and especially a monster of memories."

Apr 17, 2022

எல்லாம் அமஞ்சிகற்து தான், வாச்சிக்கற்து தான்


Anthony Quinn

86 வயது வரை ஆந்தணி க்யின் கொண்டாட்டமான வாழ்க்கை.

 12 குழந்தைகள் இவருக்கு. 

அவருடைய செக்ரெட்டரி காத்தரினுக்கு கூட இரண்டு குழந்தைகள் கொடுத்தார்.
 இதில் முதல் குழந்தை பிறக்கும் போது ஆந்தணி க்யினுக்கு 78 வயது. 
81 வயதில் அடுத்த குழந்தைக்கு தகப்பனாகி விட்டார்.


http://rprajanayahem.blogspot.com/2016/10/zorba-greek.html?m=0

Apr 14, 2022

அருணா சாய்ராம் பாடிய வலஜி


 சகோதரி வழக்கறிஞர் சுமதி             அடையாளம் காட்டிய வலஜி 
அருணா சாய்ராம் பாடிய தேனிசையாக.



சினிமா பாடல்களில்
"பொட்டு வைத்த முகமோ?
கட்டி வைத்த குழலோ?"
வலஜி ராகத்தின் மெட்டுகளில் ஒன்று என என் அபிப்ராயம். 
சுமதி  'இல்லை சார்' என்கிறார்.

வலஜி ராக மெட்டுகளில் இன்னும் கூட சினிமா பாடல்கள் நினைவிற்கு வருகிறது. 

" கேள்வி பிறந்தது அன்று 
நல்ல பதிலும் கிடைத்தது இன்று"

"பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை
தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை"

இதெல்லாம் கூட..

ஒவ்வொரு ராகத்திற்கும் பற்பல மெட்டுகள் உண்டு.

வலஜியிலேயே "பாதமே துணை பரமசிவா"விலும்
"கார்த்திகேய கமலேசன சிவ சுதே"விலும் துவங்கும் போதே மெட்டு வேறுபடுவதை காண முடியும்.

கல்யாணி ராகத்தில் "எதாவுனரா"
"வாசு தேவயனி" இரண்டு கீர்த்தனைகளும்
வெவ்வேறு மாதிரியானவை

72 மேளகர்த்தா ராகங்களுக்கும் அப்படி பார்த்தால் கணக்கிடவே முடியாத அனந்த கோடி மெட்டுகள்.

..

Apr 13, 2022

சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத்




சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத்
கர்நாடக இசை & பரதநாட்டிய கலைஞர்

புரிந்தர தாசரின் சிந்து பைரவி கீர்த்தனை

"வெங்கடாச்சல நிலையம்
வைகுண்டபுர வாசம்"

M.L. வசந்தகுமாரி பாடி பிரபலப்படுத்திய பஜன்.

சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத் குரலில் கூட
M.L.V. தெரிகிறார்.



D.K. ஜெயராமன் பாடிய வலஜி

பட்டம்மாள் தம்பி
D.K. ஜெயராமன்
பாடியுள்ள 'வலஜி'

"பாதமே துணை பரமசிவா"

பாபநாசம் சிவன் சாகித்யம்

D.K. ஜெயராமன் சிறுவனாயிருக்கும் போதே அருமையாக பாடுவார்.
கோபாலகிருஷ்ண பாரதியின் காம்போஜி "திருவடி சரணம்" ரொம்ப அழகாக பாடுவாராம்.

பெரியவர்கள் சிறுவன் ஜெயராமனை
 " மிஸ்டர் திருவடி சரணம்" என்றே அழைப்பார்கள்.




Apr 9, 2022

பிரபா ஆத்ரேயும் சுமதியும்

டாக்டர் பிரபா ஆத்ரேயே. இந்த வருடம்
பத்மவிபூஷன் விருது பெற்றுள்ள ஹிந்துஸ்தானி கிரானா கரானா பாடகி.

சகோதரி கஸ்தூரி சுமதி மகத்தான சங்கீத ரசனை கொண்டவர்.


பிரபா ஆத்ரேயை புனா போய் பேட்டி 
எடுத்து தமிழின் பிரபல வார இதழில் பிரசுரமாகியதுண்டு.

வழக்கறிஞர், பேச்சாளர், எழுத்தாளர் சுமதி.
டாக்டர் பிரபா ஆத்ரேயே. இந்த வருடம்
பத்மவிபூஷன் விருது பெற்றுள்ள ஹிந்துஸ்தானி கிரானா கரானா பாடகி.

சகோதரி கஸ்தூரி சுமதி மகத்தான சங்கீத ரசனை கொண்டவர்
சுமதியின் தந்தை கஸ்தூரி அவர்கள் S.V. சகஸ்ரநாமம் சேவா ஸ்டேஜ் நடிகர்.
பாஞ்சாலி சபதம் முழுமையாக சரளமாக, தங்கு தடையின்றி
 நடித்துக் காட்டக்கூடிய திறமையான நடிகர்.

விருது பெற்ற'கல் மண்டபம்' என்ற சுமதியின் நாவலை இப்போது கூட சரவணன் மாணிக்கவாசகம் விமர்சித்திருக்கிறார்.

சுமதி அனுப்பிய பிரபா ஆத்ரேயேயின்
சந்திரகௌன்ஸ் 
கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

இந்த சந்திரகௌன்ஸ் ராகம் 
பிரபா ஆத்ரே பாடக்கேட்ட பின் இறந்தே விடலாம் என்று சுமதி சொல்வது ஏதோ மிகையானதல்ல என்பதை நான் உணர்கிறேன்.
நேற்று இரு முறை கேட்டேன். இன்றும் இரு முறை. நாளையும் கேட்பேன்.


Apr 7, 2022

எக்காலத்திலும் மறவேனே - நாட்டக்குறிஞ்சி

தி.ஜானகிராமன் ' மலர் மஞ்சம்' நாவலில் "எக்காலத்திலும் மறவேனே" நாட்டக்குறிஞ்சி ராக கீர்த்தனை பற்றி எழுதிப்போகிற போக்கில் குறிப்பிட்டிருப்பார்.

T.M. கிருஷ்ணாவின் குரலில் நாட்டக்குறிஞ்சி 
"எக்காலத்திலும் மறவேனே"
விஸ்தாரமாக.

ராமசாமி சிவன் இயற்றிய கீர்த்தனை.

பட்டம்மாளும் அவருடைய தம்பி ஜெயராமனும்
'எக்காலத்திலும் மறவேனே' கீர்த்தனையை பாடி பிரபலமாக்கியவர்கள்.


Apr 6, 2022

செம்மங்குடியின் கரஹரப்ரியா


கரஹரப்ரியா ராகம் செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யருக்கு நெருங்கிய சகா.
சங்கீத ரசிகர்களுக்கு அவர் கரஹரப்ரியா பாடி கேட்பது 
கான சுகம்.
செம்மங்குடி மாதிரி யாரால கரஹரப்ரியா பாட முடியும் என்பது  ஏகோபித்த அபிப்ராயம்.

மணிக்கொடி எழுத்தாளர் பற்றி
"  'மௌனி'ன்ற பேர்ல கதை எழுதிண்டிருந்தானே மணி. அவன் என்னோட கஸின் தான்" என்பார் செம்மங்குடி.

சஞ்சய் சுப்ரமணியத்தின் ஆதர்ஷ குருநாதர்களில் இவரும் ஒருவர் என நினைக்கிறேன்.

தியாகராஜ கீர்த்தனை கரஹரப்ரியா ராக "ராமா நீ சமானமெவரு" 
செம்மங்குடி குரலில்
கேட்க வேண்டும். 

Apr 5, 2022

ராஜம்


S. ராஜம்.

வீணை பாலசந்தரின் மூத்த சகோதரர்.

பன்முக ஆளுமை.

 தியாகராஜ பாகவதரின் "சிவகவி" படத்தில் ராஜம் முதியவராக, வாலிப பையனாக, வேடனாகவும் நடிப்பில் தூள் கிளப்பிய Scene Stealer.
இவருடைய சகோதரி S. ஜெயலட்சுமி சிவகவியில் கதாநாயகி.

 இன்னும் சொல்ல இருக்கிறது.

1934 ல் வெளி வந்த சீதா கல்யாணம் படத்தில் ராஜம் ராமனாகவும் தங்கை ஜெயலட்சுமி சீதையாகவும் இவர்களின் தந்தை சுந்தரம் ஜனகராகவும் நடித்திருந்தனர்.
தம்பி பாலசந்தரும் நடித்தார்.
பாபநாசம் சிவன் கூட இந்த படத்தில் நடித்தாராம்.

ராஜம் வரைந்த ஓவியங்கள் காலண்டர்களில் இடம் பெற்றிருக்கின்றன.

Popular for his painting of Carnatic Trinity.

முதுமைக் காலத்திலும் செயலூக்கத்துடன் இயங்கியவர்.

ராஜம் பாடிய முத்துசாமி தீட்சிதரின் பிலஹரி ராக கீர்த்தனை விசேஷமானது.

கோடீஸ்வர ஐயர் இயற்றிய கீர்த்தனைகள் பலவும் பிரபலமாக ராஜம் தான் காரணம்.

2008ல் என் ப்ளாகில்
எழுதிய பதிவு

'எஸ்.பாலச்சந்தரின் மருமகன் வெங்கடேசன்'
- R.P. ராஜநாயஹம்

எஸ் பாலச்சந்தர் பற்றி எல்லோருக்கும் தெரியும் . அவருடைய அண்ணன் எஸ் ராஜம் பற்றி தெரியமா ? வீணை பாலச்சந்தர் உடன் பிறந்த சகோதரர் எஸ் ராஜமும் எஸ் பாலச்சந்தரின் அக்கா எஸ் ஜெயாவும் அந்த காலத்தில் 1933 ல் "சீதா கல்யாணம் " படத்தில் ராமராகவும் சீதையாகவும் நடித்தனர் .

 1943 ல் எம் கே தியாக ராஜ பாகவதர் நடித்த "சிவகவி " படத்தில் 
எஸ் ராஜம்  பிரமாதமாக நடித்தார் . எஸ் ராஜம் நடிப்பின் முன் எம் கே டி கூட கொஞ்சம் அமுங்கி தான் தெரிவார்.

திருப்பூரில் எஸ் பாலச்சந்தரின் இன்னொரு சகோதரி மகன் வெங்கடேசன் தொழில் அதிபராய் இருக்கிறார் .
தலைமை அரிமா சங்க முன்னாள் தலைவர் ! அரிமா சங்கத்தில் அவரை சந்தித்தேன் . 
"எஸ் ராஜம் இறந்து எத்தனை வருடம் இருக்கும் ?" என்று கேட்டேன் 
." அவர் உயிரோடு தான் இருக்கிறார். நன்றாக இருக்கிறார் ." என்றார் . வெங்கடேசன் சொன்னார் .
" என் அம்மாவை தவிர அவரோடு உடன் பிறந்த அனைவருமே சினிமாவில் நடித்தார்கள் "

எஸ் ராஜம் பற்றி வெங்கடேசன் இன்று சொன்ன சுவாரசியமான தகவல் . "தொண்ணூறு வயதாகிறது .இரண்டு வருடம் முன் வரை டி வி எஸ் 50 ஓட்டுவார் !"

நான் டாலர் சிட்டி லயன்ஸ் கிளப் மெம்பர்.

இங்கே கோவை சூலூரில்
 ஒரு அரிமா உறுப்பினர் வீட்டு திருமண விஷேசம் சென்ற ஆண்டில் சுதந்திர தினத்தன்று நடந்தது . 

சஜூ டேவிட் என்ற உற்சாகமான அந்த நண்பரின் மகள் திருமணத்தை ஒட்டி ஒரு விருந்து . அதில் கலந்து கொள்ள வெங்கடேசன் அவர்களின் காரில் தான் சென்றேன் .

நான் சீர்காழியின் " தேவன் கோயில் மணியோசை " எஸ் பி பி யின் "வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா " சீர்காழியின் மற்றொரு பாடல் " ஓடம் நதியினிலே !ஒருத்தி மட்டும் கரையினிலே " ஆகிய பாடல்களை ஆர்க்கஸ்ட்ராவில் பாடினேன் .

வெங்கடேசன் " கம்பன் ஏமாந்தான் " பாடலை பாடினார் . "நிலாவே வா நில்லாமல் வா" பாடலையும் பாடினார் .

Apr 2, 2022

பூக்குட்டியின் குட்டி புக்கு


பேத்தி பூக்குட்டியிடம்  இந்த 
 அழகிய மிக குட்டியான புத்தகத்தை 'தாத்தாவுக்கு குடு.. தாத்தாவுக்கு புக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், சொன்னா கேளு..குடுத்துடும்மா" என்று கெஞ்சி மன்றாடினேன்.

தலையை மறுக்கும் விதமாக ஆட்டி தன் நெஞ்சில் கை வைத்து அழுத்தமாக பூக்குட்டி பதில்
 " பாப்பாக்கு.. தாத்தாக்கு இல்ல."

பின்னட்டையில் தோரோவின் மேற்கோளுடன் கூடிய எவ்வளவு அழகான குட்டி புத்தகம்.

இரண்டு ஷெல்ஃபிலும் இருக்கிற 
என் அத்தனை நூல்களையும்
" தாத்தா புக்கெல்லாம் உனக்கு தான்.
பெரிய பிள்ளையானப்பறம் நீ படிச்சிக்கலாம்" என்று ஆசை காட்டிப் பார்த்தேன்.

"பாப்பா புக்கு தாத்தாக்கு இல்ல" குட்டி வாளியில் இருந்த புக்க பத்திரமாக பிடித்துக்கொண்டாள்.
Very stubborn child.

மனம் தளராமல் மூன்றாவது சுற்று பேச்சு வார்த்தை நடத்தியதும் தோல்வி தான்.
கல்லு மனசு.

சரி வேறு வழியே இல்லை. அவள் தாத்தாவுக்கு  பலகாரம் செய்ய சமையல் விளையாட்டில் கவனம் செலுத்திய போது 
அந்த புக்க ஆட்டய போட்டுட்டேன்.
 
Mea culpa, mea culpa
  Mea maxima culpa..

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே..

கை மூடி என் நெஞ்சில் பலமாக குத்திக் கொண்டேன்.

"தாத்தா இந்தா" என்று சமைத்ததை சாப்பிட கொடுத்து விட்டு படிப்பதற்காக வாளியை எட்டிப் பார்த்து கூவினாள் "புக்கு, புக்கு " 

ராஜநாயஹம் மனசாட்சி கூப்பாடு: 
"அடப்பாவி, உண்ட வீட்டுக்கு ரெண்டகம்"

"புக்கு காணோம்" கை விரித்து சொல்லி விட்டு 
அடுத்து ஒரு பொம்மையுடன் 
Engage ஆகி விட்டாள் குழந்தை.

அப்பாடா..

Let me give that beautiful 'little   book' to Kirti son Moiez. 
My grandson Moiez.


https://www.facebook.com/100006104256328/posts/3249974488549328/

https://m.facebook.com/story.php?story_fbid=2692118057668310&id=100006104256328

Apr 1, 2022

கி. ரா என்னிடம் கடைசியாக பேசிய பேச்சு

97 வயதான கி. ராஜநாராயணன் குரலில் கொஞ்சம் கூட முதுமையின் சுவடு தெரியாது. 

அவர் போனை எடுத்து குரல் கொடுத்தவுடன்
 "நான் ராஜநாயஹம் பேசுகிறேன்" 
"ஹா! ராஜநாயஹம்..
 நான் ராஜநாராயணன்
 தான் பேசுறேன் "
உற்சாகமான, கனிவான பாசக்குரல். 

வயதிற்கான அடையாளம், சிரமம், ஞாபக பிசகு எதுவுமே இல்லாத தெளிவான இளமைக்குரல். 

தங்கு தடையற்ற நிதான உரையாடல் நிகழ்த்துகிறார். 

 கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்.

தன் எழுத்து பற்றி அதாவது தன்னைப் பற்றியே பேசுவது
 பல பெரிய எழுத்தாளருக்கும் சுகமான சொர்க்கம்.

'இந்த இவள் ' என்ற அவருடைய நாவலையடுத்து இன்னொரு நாவல் எழுதி முடித்திருக்கிறார். 

இந்த புதிய நாவலை அச்சு பிரசுரத்திற்கு கி. ரா கொடுப்பதாக இல்லை. 
பதிப்பகம் மூலமாக வெளிவரும் புத்தகம் அல்ல. 

Byron "Emma letters" பற்றி நினைவு படுத்தினார். 

Byron's early poems to Emma? 

இந்த வருடம் கி. ரா பிறந்த நாளில் புதிய புதினம்  புது விதமாக வாசகர்களுக்கு படிக்க
 கிடைக்க இருக்கிறது. 

அவர் என்னிடம் கடைசியாக பேசிய பேச்சு இது தான்.