Share

Apr 2, 2022

பூக்குட்டியின் குட்டி புக்கு


பேத்தி பூக்குட்டியிடம்  இந்த 
 அழகிய மிக குட்டியான புத்தகத்தை 'தாத்தாவுக்கு குடு.. தாத்தாவுக்கு புக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், சொன்னா கேளு..குடுத்துடும்மா" என்று கெஞ்சி மன்றாடினேன்.

தலையை மறுக்கும் விதமாக ஆட்டி தன் நெஞ்சில் கை வைத்து அழுத்தமாக பூக்குட்டி பதில்
 " பாப்பாக்கு.. தாத்தாக்கு இல்ல."

பின்னட்டையில் தோரோவின் மேற்கோளுடன் கூடிய எவ்வளவு அழகான குட்டி புத்தகம்.

இரண்டு ஷெல்ஃபிலும் இருக்கிற 
என் அத்தனை நூல்களையும்
" தாத்தா புக்கெல்லாம் உனக்கு தான்.
பெரிய பிள்ளையானப்பறம் நீ படிச்சிக்கலாம்" என்று ஆசை காட்டிப் பார்த்தேன்.

"பாப்பா புக்கு தாத்தாக்கு இல்ல" குட்டி வாளியில் இருந்த புக்க பத்திரமாக பிடித்துக்கொண்டாள்.
Very stubborn child.

மனம் தளராமல் மூன்றாவது சுற்று பேச்சு வார்த்தை நடத்தியதும் தோல்வி தான்.
கல்லு மனசு.

சரி வேறு வழியே இல்லை. அவள் தாத்தாவுக்கு  பலகாரம் செய்ய சமையல் விளையாட்டில் கவனம் செலுத்திய போது 
அந்த புக்க ஆட்டய போட்டுட்டேன்.
 
Mea culpa, mea culpa
  Mea maxima culpa..

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே..

கை மூடி என் நெஞ்சில் பலமாக குத்திக் கொண்டேன்.

"தாத்தா இந்தா" என்று சமைத்ததை சாப்பிட கொடுத்து விட்டு படிப்பதற்காக வாளியை எட்டிப் பார்த்து கூவினாள் "புக்கு, புக்கு " 

ராஜநாயஹம் மனசாட்சி கூப்பாடு: 
"அடப்பாவி, உண்ட வீட்டுக்கு ரெண்டகம்"

"புக்கு காணோம்" கை விரித்து சொல்லி விட்டு 
அடுத்து ஒரு பொம்மையுடன் 
Engage ஆகி விட்டாள் குழந்தை.

அப்பாடா..

Let me give that beautiful 'little   book' to Kirti son Moiez. 
My grandson Moiez.


https://www.facebook.com/100006104256328/posts/3249974488549328/

https://m.facebook.com/story.php?story_fbid=2692118057668310&id=100006104256328

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.