Share

Apr 1, 2022

கி. ரா என்னிடம் கடைசியாக பேசிய பேச்சு

97 வயதான கி. ராஜநாராயணன் குரலில் கொஞ்சம் கூட முதுமையின் சுவடு தெரியாது. 

அவர் போனை எடுத்து குரல் கொடுத்தவுடன்
 "நான் ராஜநாயஹம் பேசுகிறேன்" 
"ஹா! ராஜநாயஹம்..
 நான் ராஜநாராயணன்
 தான் பேசுறேன் "
உற்சாகமான, கனிவான பாசக்குரல். 

வயதிற்கான அடையாளம், சிரமம், ஞாபக பிசகு எதுவுமே இல்லாத தெளிவான இளமைக்குரல். 

தங்கு தடையற்ற நிதான உரையாடல் நிகழ்த்துகிறார். 

 கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்.

தன் எழுத்து பற்றி அதாவது தன்னைப் பற்றியே பேசுவது
 பல பெரிய எழுத்தாளருக்கும் சுகமான சொர்க்கம்.

'இந்த இவள் ' என்ற அவருடைய நாவலையடுத்து இன்னொரு நாவல் எழுதி முடித்திருக்கிறார். 

இந்த புதிய நாவலை அச்சு பிரசுரத்திற்கு கி. ரா கொடுப்பதாக இல்லை. 
பதிப்பகம் மூலமாக வெளிவரும் புத்தகம் அல்ல. 

Byron "Emma letters" பற்றி நினைவு படுத்தினார். 

Byron's early poems to Emma? 

இந்த வருடம் கி. ரா பிறந்த நாளில் புதிய புதினம்  புது விதமாக வாசகர்களுக்கு படிக்க
 கிடைக்க இருக்கிறது. 

அவர் என்னிடம் கடைசியாக பேசிய பேச்சு இது தான்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.