S. ராஜம்.
வீணை பாலசந்தரின் மூத்த சகோதரர்.
பன்முக ஆளுமை.
தியாகராஜ பாகவதரின் "சிவகவி" படத்தில் ராஜம் முதியவராக, வாலிப பையனாக, வேடனாகவும் நடிப்பில் தூள் கிளப்பிய Scene Stealer.
இவருடைய சகோதரி S. ஜெயலட்சுமி சிவகவியில் கதாநாயகி.
இன்னும் சொல்ல இருக்கிறது.
1934 ல் வெளி வந்த சீதா கல்யாணம் படத்தில் ராஜம் ராமனாகவும் தங்கை ஜெயலட்சுமி சீதையாகவும் இவர்களின் தந்தை சுந்தரம் ஜனகராகவும் நடித்திருந்தனர்.
தம்பி பாலசந்தரும் நடித்தார்.
பாபநாசம் சிவன் கூட இந்த படத்தில் நடித்தாராம்.
ராஜம் வரைந்த ஓவியங்கள் காலண்டர்களில் இடம் பெற்றிருக்கின்றன.
Popular for his painting of Carnatic Trinity.
முதுமைக் காலத்திலும் செயலூக்கத்துடன் இயங்கியவர்.
ராஜம் பாடிய முத்துசாமி தீட்சிதரின் பிலஹரி ராக கீர்த்தனை விசேஷமானது.
கோடீஸ்வர ஐயர் இயற்றிய கீர்த்தனைகள் பலவும் பிரபலமாக ராஜம் தான் காரணம்.
2008ல் என் ப்ளாகில்
எழுதிய பதிவு
'எஸ்.பாலச்சந்தரின் மருமகன் வெங்கடேசன்'
- R.P. ராஜநாயஹம்
எஸ் பாலச்சந்தர் பற்றி எல்லோருக்கும் தெரியும் . அவருடைய அண்ணன் எஸ் ராஜம் பற்றி தெரியமா ? வீணை பாலச்சந்தர் உடன் பிறந்த சகோதரர் எஸ் ராஜமும் எஸ் பாலச்சந்தரின் அக்கா எஸ் ஜெயாவும் அந்த காலத்தில் 1933 ல் "சீதா கல்யாணம் " படத்தில் ராமராகவும் சீதையாகவும் நடித்தனர் .
1943 ல் எம் கே தியாக ராஜ பாகவதர் நடித்த "சிவகவி " படத்தில்
எஸ் ராஜம் பிரமாதமாக நடித்தார் . எஸ் ராஜம் நடிப்பின் முன் எம் கே டி கூட கொஞ்சம் அமுங்கி தான் தெரிவார்.
திருப்பூரில் எஸ் பாலச்சந்தரின் இன்னொரு சகோதரி மகன் வெங்கடேசன் தொழில் அதிபராய் இருக்கிறார் .
தலைமை அரிமா சங்க முன்னாள் தலைவர் ! அரிமா சங்கத்தில் அவரை சந்தித்தேன் .
"எஸ் ராஜம் இறந்து எத்தனை வருடம் இருக்கும் ?" என்று கேட்டேன்
." அவர் உயிரோடு தான் இருக்கிறார். நன்றாக இருக்கிறார் ." என்றார் . வெங்கடேசன் சொன்னார் .
" என் அம்மாவை தவிர அவரோடு உடன் பிறந்த அனைவருமே சினிமாவில் நடித்தார்கள் "
எஸ் ராஜம் பற்றி வெங்கடேசன் இன்று சொன்ன சுவாரசியமான தகவல் . "தொண்ணூறு வயதாகிறது .இரண்டு வருடம் முன் வரை டி வி எஸ் 50 ஓட்டுவார் !"
நான் டாலர் சிட்டி லயன்ஸ் கிளப் மெம்பர்.
இங்கே கோவை சூலூரில்
ஒரு அரிமா உறுப்பினர் வீட்டு திருமண விஷேசம் சென்ற ஆண்டில் சுதந்திர தினத்தன்று நடந்தது .
சஜூ டேவிட் என்ற உற்சாகமான அந்த நண்பரின் மகள் திருமணத்தை ஒட்டி ஒரு விருந்து . அதில் கலந்து கொள்ள வெங்கடேசன் அவர்களின் காரில் தான் சென்றேன் .
நான் சீர்காழியின் " தேவன் கோயில் மணியோசை " எஸ் பி பி யின் "வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா " சீர்காழியின் மற்றொரு பாடல் " ஓடம் நதியினிலே !ஒருத்தி மட்டும் கரையினிலே " ஆகிய பாடல்களை ஆர்க்கஸ்ட்ராவில் பாடினேன் .
வெங்கடேசன் " கம்பன் ஏமாந்தான் " பாடலை பாடினார் . "நிலாவே வா நில்லாமல் வா" பாடலையும் பாடினார் .
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.