இளமை மாறா தோற்றம் என்பது ஒரு Myth.
ஆணைப் பொறுத்தவரை 30 வயதிலிருந்து 50 வயது வரை உடற்கூறில் பெரிய மாறுதல் பொதுவாக தெரிவதில்லை.
ஆணைப் பொறுத்தவரை 30 வயதிலிருந்து 50 வயது வரை உடற்கூறில் பெரிய மாறுதல் பொதுவாக தெரிவதில்லை.
நடிகர்கள் இளமை மாறாத் தோற்றம் பற்றி ரசிகர்கள் பிரமிக்கிறார்கள்.
நான் சாமானியன்.
என்னுடைய 39வது வயதில் ஒரு ரயில் பிரயாணத்தின் போது டிக்கட்பரிசோதகர்
எனக்கு 24 வயதுக்கு மேல் இராது என்று தகராறு செய்தார். என் டிக்கெட்டில் ராஜநாயஹம் வயது 39 என்பதை ஆட்சேபித்து, நான் வேறொருவர் டிக்கெட்டில் பயணம் செய்வதாக சாடினார்.

உரத்த குரலில் “ இவருக்கு என்ன வயதிருக்கும்” என்று
அந்த கம்பார்ட்மெண்ட்டில் இருந்தவர்களிடம் கேட்டார். ஒவ்வொருவரும் 24, 25, 26 என்று யூகித்து சொன்னார்கள்.
அந்த கம்பார்ட்மெண்ட்டில் இருந்தவர்களிடம் கேட்டார். ஒவ்வொருவரும் 24, 25, 26 என்று யூகித்து சொன்னார்கள்.
டி.டி.ஆர் “ 39 வயசுன்னு டிக்கெட்ல போட்டிருக்குது. வேறொருவர் டிக்கெட்ல பயணம் பண்றார்”
எனக்கு 39 வயது தான் என்பதை நான் வலியுறுத்தி சொன்னேன். நான் கல்யாணமானவன். எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
எனக்கு 39 வயது தான் என்பதை நான் வலியுறுத்தி சொன்னேன். நான் கல்யாணமானவன். எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
டிக்கெட் பரிசோதகர் அரை மனதாக நகர்ந்து சென்றார்.
என் அருகில் ஒரு பாதிரியார் அமர்ந்திருந்தார். வழுக்கை தலை, தொப்பையுடன் குட்டையாக இருந்தார். அவருடைய வயது 33. அவரை விட நான் ரொம்ப இளையவனாக தோற்றம் தருவதாக இருந்தேன்.
பாதிரியார் சொன்னார் : ”உங்க வயசு 39 என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். நீங்க ஒரு பத்து வயசாவது குறைத்து சொல்லுங்கள்.”
பாதிரியார் சொன்னார் : ”உங்க வயசு 39 என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். நீங்க ஒரு பத்து வயசாவது குறைத்து சொல்லுங்கள்.”
விழுப்புரம் ஸ்டேசனில் ரயில் நின்று கொண்டிருந்த போது டிக்கெட் பரிசோதகர் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த என்னை ஸ்டேசன் மாஸ்டரிடம் காட்டி
“ ஓடுற பாம்புலயே நாம கால எண்ணிடுவோம். இந்த பையன் டிக்கெட்ட காட்டறான். டிக்கட்ல வயசு 39ன்னு போட்டிருக்கு. எப்படி பாருங்க” என்றார் சத்தமாக.
“ ஓடுற பாம்புலயே நாம கால எண்ணிடுவோம். இந்த பையன் டிக்கெட்ட காட்டறான். டிக்கட்ல வயசு 39ன்னு போட்டிருக்கு. எப்படி பாருங்க” என்றார் சத்தமாக.
....................................................
2007ல் ரயிலில் என் அருகில் அமர்ந்திருந்த
பல் டாக்டர் “ Are you married?"
பல் டாக்டர் “ Are you married?"
" yes doctor"
டாக்டர் பதற்றமாகி “ Sorry sir. I have offended you. You look very young. Sorry sorry. I have offended you."
நான் “ It's ok doctor. It's not an offence,it's a compliment."
பல் டாக்டர்கள் பொதுவாக வயதை கண்டு பிடித்து விடுவார்கள் என்று அவர் சொன்னார்.
என் வாழ்வில் நான் தலை முடிக்கு ’டை’ அடித்ததேயில்லை. Aging gracefully.
Get old gracefully.
Get old gracefully.
..................................................
ஒன்றரை வருடம் முன்
திருச்சி பேராசிரியர் காசி மாரியப்பன் வேதனையுடன் கூறிய வார்த்தைகள்
“காலம் எல்லோருக்கும் முகத்தில் கோடு போடும் என்றால் ராஜநாயஹம் முகத்தில் கீறல் போட்டு விட்டது!”
Age cannot wither me nor custom stale my infinite variety??
........................................
“காலம் எல்லோருக்கும் முகத்தில் கோடு போடும் என்றால் ராஜநாயஹம் முகத்தில் கீறல் போட்டு விட்டது!”
Age cannot wither me nor custom stale my infinite variety??
........................................
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.