Share

Oct 31, 2016

Zorba the Greek


God bless – எல்லோரும் சொல்வது. இப்படிச் சொல்லும்போது சோர்பாவின் பதில். “And the devil too,Boss” சோர்பாவைப்பொருத்தவரை “ God is a clever devil!”நிகோஸ் கசான்ஸாகிஸ் எழுதிய அற்புத நாவல் “ சோர்பா தி க்ரீக்”

மைக்கல் கக்கோயோன்னிஸ் இயக்கத்தில் 1964ல் திரைப்படமானது.

நாவலில் உள்ளவையெல்லாம் படத்தில் வரவில்லை என்று வாசித்தவர்கள் ஏங்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் கசான்ஸாகிஸின் சமுத்திரத்தை சினிமா என்ற சிப்பிக்குள் அடக்க முடியுமா?

இந்த நடை முறை சிரமத்தையும் மீறி முழுமையாக இல்லாவிட்டாலும் “சோர்பா தி க்ரீக்” திருப்தி தரும் வகையில் செய்நேர்த்தியாக திரையில் நெய்யப்பட்டுள்ளது.

ஒரு கிராமத்திலுள்ள தன் சுரங்கத்தில் உழைப்பதற்கு பாசில் ( ஆலன் பேட்ஸ்) என்ற சாதுவான எழுத்தாளன், சோர்பா ( ஆந்தனி க்யின்) என்கிற ஒரு விசித்திர வினோதமான பித்துக்குளியை வேலைக்கு சேர்க்கிறான். சுரங்க வேலை சோர்பாவின் அசாத்திய உழைப்பை துச்சமாக்கி விடுகிறது.

’கோரிக்கையற்றுக் கிடக்குதடா வேரில் பழுத்த பலா’ என்றார் பாரதி தாசன்.
இரண்டு விதவைகள். இருவேறு குண நலன்கள் கொண்ட அம்மணிகள்.பூபுலினா (லிலா கெட்ரொவா) பற்றி அந்தக் கிராமத்தில் உள்ளவன் தன் தலை முடியைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறான்: “ How many hairs I have. She is a widow of the same number of husbands!”
தன் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்ட அந்தப் பெண். அவள் முலைகளைப் பார்த்து சோர்பா சொல்கிறான் : “It is big! But she shakes it well!”
அவள் கணக்குப்படி “ Four times a widow.” தன் முன்னாள் கணவர்கள் பற்றி புல்லரிப்புடன் சோர்பாவிடம் எப்போதும் விவரிப்பவள்.இன்னொரு விதவை பாவ்லோ (ஐரின் பப்பாஸ்) - அந்த கிராமத்தில் எவன் கையிலும் சிக்க மறுப்பவள். அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் அவளை ஒருதலையாக உயிருக்குயிராக காதலிக்கிறான். “ The more she spits, the more he wants her.

இவள் பாசிலுக்கு இளகி விடுகிறாள். பாசில் தயக்கம் நிறைந்தவன்.
சோர்பா மிகுந்த பிரயாசையுடன் பாசிலை அவளுக்கு இணங்கச்சொல்லி வற்புறுத்தும் நிலை. “ Boss! God, who is a clever devil has put a gift in your hands from Paradise.”
But Basil doesn’t want ’trouble’. But Zorba insists upon him “ Boss! Life is trouble, only death is not. To be alive is to undo your belt and look for trouble.”
Basil is an unaffected naïve person?
ச்சே போய்யா என்று சலித்து சோர்பா “ On a deafman’s door, You can knock for ever.”

பாசில் இளகி, பாவ்லோவின் இல்லத்துக்கு சென்று அவளோடு கலக்கும்போது அது அவள் உயிருக்கு உலை வைப்பதாகி விடுகிறதே! ஊரே அவமானப்படுத்தி அவள் கொல்லப்படுகிறாள்.

பாவ்லோவாக நடிக்கும் ஐரின் பப்பாஸ் 1961ல் ’கன்ஸ் ஆஃப் நவ்ரோன்’ படத்தில் நடித்தவர். கிரகெரி பெக், ஆந்தனி க்யின், டேவிட் நிவன் நடித்த இரண்டாம் உலக யுத்தப்படம்.
ஐரின் பப்பாஸ் இன்று 90 வயது கிழவி!


சோர்பா ஜீவனுள்ள ரத்தமும் சதையுமான கதாபாத்திரம்.
“My brain gives me crazy ideas.”
“When my boy Dimitri died I danced. Every body said ‘Zorba is mad’. But only the dancing stops the pain.”
“The age kills the fire inside of a man, he hears death coming.”

சோர்பா பல பெண்களுடன் தொடர்பு கொள்பவன்.
"How can I not love them? Poor weak creatures... and they take so little, a man's hand on their breast, and they give you all they got."
"God has a very big heart but there is one sin he will not forgive..if a woman calls a man to her bed and he will not go..."
தன் மீது மிகுந்த ஈடுபாடு கொள்ளும் பூபுலினாவை உதாசீனப்படுத்துவதில்லை. அவளைத் திருமணம் செய்யவும் தயங்காதவன். பூபுலினாவின் மரணம் எதிர்கொள்ளும் விளைவுகள்.

A great big crazy plan. மரங்களை வெட்டி மலையிலிருந்து கீழிறக்கும் சோர்பாவின் திட்டம் படுதோல்வியில் முடிகிறது.


பாசில் மிகவும் கற்றுத் தேர்ந்த அறிஞன். எழுத்தாளன். பாமரனான சோர்பாவைப் பார்த்து ’கலாச்சாரம் என்றால் என்ன?’ ’விடுதலை என்றால் என்ன?’ என்று திடுக்கிட்டுப்போகிறான். தான் வாசித்த புத்தகங்கள் தராத தரிசனத்தை சோர்பா தருகிறான் எனும் நிலையில் திகைத்துப்போகிறான்.
“ Boss! You’ve got everything except one thing – Madness. A man needs a little madness or else he never dares cut the rope and be free.”
“ Boss! I have never loved a man more than you.”
மனம் தளராத சோர்பா மீண்டும் ஒரு பெரு நகரத்திற்கு ஒரு பெரும்பயணத்திற்கு ஆயத்தமாகி விடுகிறான்.

பாசில் தனக்கு நடனம் கற்பிக்க வேண்டும் என்று சோர்பாவை கேட்கிறான். கொப்பளிக்கும் உற்சாக உத்வேகத்துடன் சோர்பா கிரேக்க சர்டாகி நடனத்தை கற்றுத்தருகிறான். இந்தப் படத்தின் மூலம் இந்த கிரேக்க நாட்டுப்புற நடனம் உலகப் பிரபலமானது.

Both Zorba and Basil laugh at the catastrophe.
வீழ்ச்சி மனித மாட்சிமையை மேலெடுத்துச் செல்லுமா?!
...................................................

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_6441.html

1 comment:

  1. Gabhi, simply gr8. I still remember our college days, having this book in b/w rapper, and satire's the age of reason/ being and Nothingness and on the road / zen and the art of motor cycle maintenance like.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.