Share

Nov 3, 2016

கே.பாலாஜி


மோகன்லாலின் மாமனார் கே.பாலாஜி இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் 'திரும்பி பார்க்கிறேன் ' நிகழ்ச்சி
ஜெயா டி.வியில் பேசியதை மறக்க முடியாது.

பாலாஜியின் Method of speaking சிலாகிக்க வேண்டிய விஷயம்.
'You should look gracefully old' என்பதை அவருடைய முதிய தோற்றம் சொல்லாமல் சொல்லியது.
சிவாஜி,ரஜினி,கமல் என்று நாற்பது படங்கள் தயாரித்த பாலாஜி இன்றைய படத்தயாரிப்பு விரையங்களை, நடிகர் நடிகைகளின் கேரவன் வேன் உள்பட வெளிப்படையாக கேள்வி கேட்டார்.
பாலாஜியின் அப்பா கிருஷ்ணமாச்சாரி ஐயங்கார் . கிரிஷ்ணமாச்சாரியின் இரண்டாவது தாரம் மலையாள பெண். இந்த இரண்டாவது தாரத்தின் மகன் தான் பாலாஜி.
இப்படி அபிமான தாரத்தின் மகனாக பிறந்ததால் அனுபவிக்க நேர்ந்த துயரங்களை 'திரும்பி பார்க்கிறேன் ' நிகழ்ச்சியில் பாலாஜி சொன்னார்.
ஜெமினி கணேசனின் உற்ற நண்பர். நாகேஷ் திரையுலகில் நுழைய காரணமானவர் பாலாஜி.
இவருடைய நாடகத்தில் நடித்த ரெஜினா பின் நாகேஷ் மனைவி.
படித்தால் மட்டும் போதுமா வில் சிவாஜிக்கு அண்ணனாக,பலே பாண்டியாவில் கூட சிவாஜியுடன் நடித்திருந்தாலும் ஜெமினி கணேசனின் சிபாரிசில் தான் சிவாஜியை இவர் தயாரிப்பில் நடிக்க வைக்க நெருங்க முடிந்தது. அந்தப் படங்களில் சிவாஜியுடன் பிரதான பாத்திரங்களில் நடித்தார். தான் தயாரிக்காத படங்களிலும் கூட.
நடிகராக திரையில் கதாநாயகனாக , இரண்டாவது கதா நாயகனாக , காமெடியனாக, வில்லனாக (Glamour Villain ! ) நடித்தவர். இவருடைய ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக,ஸ்பஷ்டமாக இருக்கும்.
''What?" என்ற சாதாரண வார்த்தையை என்ன அழகாக உச்சரிப்பார் தெரியுமா!

நரசுஸ் ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாய் வேலை பார்த்துக்கொண்டே 'பிரேமபாசம் ' படத்தில் ஜெமினிக்கு தம்பியாய் நடிக்கும்போது ஜெமினி கணேசனின் மூன்றாவது திருமணத்திற்கு உதவியவர். ஜெமினி - சாவித்திரி சரசத்திற்கு காவல் நின்றவர் பாலாஜி!
ஒப்பனை அறையில் சாவித்திரிக்கு மொக்கை போடும்போது ஜெமினி " டே பாலாஜி ! சாவித்திரி அப்பா வர்ரானா பார்ரா. வந்தா உடனே சிக்னல் கொடு.. "
வேலாயுதம் தன் இரண்டாவது மனைவியாக நடிகை கே.ஆர் விஜயாவை திருமணம் செய்யவும் துணை நின்றவர் தான் பாலாஜி!
பி பி ஸ்ரீனிவாசின் பல ஹிட் பாடல்கள் இவருக்கு கிடைத்தது !
" ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் "
"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ! நெருப்பாய் எரிகிறது "
"பண்ணோடு பிறந்தது கானம். குல பெண்ணோடு பிறந்தது
நாணம் "
" நல்லவன் எனக்கு நானே நல்லவன் "
"பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை "
" ஆதி மனிதன் காதலுக்குப்பின் அடுத்த காதல் இது தான் !"
"உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே நீ சிரிக்காயோ "
" இரவு முடிந்து விடும். முடிந்தால் பொழுது புலர்ந்து விடும் "
ஜெயலலிதா (போராட்டமான தன் அரசியல் சூழலிலும்)
பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் விட்டார். அந்த கண்ணீர் உண்மையிலே சுத்தமானது. அவர் சொன்னது கூட மிகை இல்லை. அவருடைய அண்ணனை இழந்து விட்டார்.
பாலாஜி பற்றி மறுபக்கமாக சில விஷயங்கள் உண்டு.யாருக்கு தான் அப்படி ஒரு மறு பக்கம் இல்லை ?

6 comments:

 1. Dear RPR sir,

  http://tamilindianfilmssecrets.blogspot.in/2016/08/blog-post_91.html

  you've another copy(paste) cat to loath.

  kannan

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Kannan Sir, thank you very much for bringing this loathsome act to my notice. What can we do with such wicked persons?

   Delete
  3. Pretty much nothing I afraid. The least we can do is let that lowlife know that you don't appreciate your work stolen and published in verbatim as if his own.

   He could've at least mentioned your name as the original author beside whatever the crap he writes.

   Kannan

   Delete
 2. https://www.facebook.com/rprajanayahem/posts/1557924741087653?pnref=story

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.